07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, September 29, 2007

சில உபயோகமான சுட்டிகள்

பத்ரி அவர்கள் எழுதிய அன்னிய செலாவனி , ரூபாய் மதிப்பு, பண வீக்கம் பற்றி இந்த பதிவுகள்.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த
குவியும் அன்னியச் செலாவணியை வைத்துக்கொண்டு என்ன செய்வது?
Capital Account Convertibility

********************

CVR எழுதிய.....வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 1
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 2
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 3
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 4
வானத்தில் விரியும் அதிசயங்கள் - பாகம் 5
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 6
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 7
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 8
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 9

பிறகு அவர் எழுதிய போட்டோ எடுப்பது எப்படி?

படம் புடிக்கலாம் வாங்க - பாகம் 1
படம் புடிக்கலாம் வாங்க - பாகம் 2
படம் புடிக்கலாம் வாங்க - பாகம் 3

(டிஸ்கி: எதுக்கு இப்படி தலைப்பை வச்சுட்டு CVR லிங்கை ஒன்னு ஒன்னாக தருகிறாய் மொத்தமாக அவர் பிளாக் URL யை கொடுத்துவிடலாமே ஏன்று அவர் ரசிகர்களிடம் இருந்து கோரிக்கை வரலாம் இருந்தாலும் நானும் இங்க பாதி பக்கத்தையாவது எதையாவது போட்டு ஒப்பேத்தனுமே, அதுக்குதான் CVR ரசிகர்களே, என்னை மன்னித்து விடுங்கள்)

*******************

பொன்வண்டு எழுதிய ATM எப்படி வேலை செய்கிறது என்ற பதிவு

ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா? பகுதி - 1
ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா? பகுதி - 2
ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா? பகுதி - 3
ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா? பகுதி - 4
ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா? பகுதி - 5

*******************

டெல்பின் அவர்கள் எழுதிய இன்ஸுரன்ஸ் பற்றிய பதிவுகள்
மருத்துவ காப்பீடுகள்..
என் பார்வையில்.... மருத்துவ காப்பீடுகள் - 1
என் பார்வையில்...மருத்துவ காப்பீடுகள்.-2

*******************

முத்துலெட்சுமி அவர்கள் எழுதிய தலையைச்சுற்றி ஒளிவட்டம்
மேலும் வாசிக்க...

Friday, September 28, 2007

கவிதைகள் சுட்டி

எனக்கு வராத விசயம் என்றால் அது கவிதை எழுதுவதுதான், காதலிச்சு பார் என்றார்கள் நானும் சரி என்று சொல்லி ஒரு பெண்ணை லவ் செஞ்சேன் என்னை விட சில வயது மூத்தவள் அழகில் நமக்கு சமம் இல்லை என்றாலும் அவளின் கண்களுக்காக அவளை காதலித்தேன் அப்படியும் கவிதை வரவில்லை, பின் அதே காதல் தோல்வியில் முடிந்தாலும் சோக கவிதை வரும் என்றார்கள் சரி என்று என் காதலியை அபிசேக் பட்சனுக்கு விட்டு கொடுத்தேன், அந்த சோகத்திலும் கவிதை வரவில்லை. தண்ணி அடிச்சாலாவது கவிதை வரும் என்றார்கள் நானும் ஒரு புல் பாட்டில் அக்குவா பீனாவை ராவாக அடிச்சேன் கவிதை வரவில்லை உச்சா தான் வந்தது.

கீர்த்தனா அவர்கள் எழுதிய மெலிந்த பல்லியுடனான உரையாடல்! என்ற கவிதை பிடித்தது, மேலும் அவர் எழுதிய கருவறை கவிதையும் என்னை கவர்ந்தது. வலையுலகில் ஒரு வலம் வருவார் என்று நினைத்தேன் என்னமோ தெரியவில்லை சமீப காலமாக எழுதவில்லை, மீண்டும் எழுதினால் நலம்.


உருக உருக கவிதை எழுதுவது (மெழுகு வத்தி இல்லீங்க) கவிதாயினின்னு தனக்குதானே அடை மொழி கொடுத்துகிட்டுபோன மச்சான் திரும்பவில்லை என்ற ரீதியிலேயே கவிதை எழுதும் காயத்ரியின் இந்த கவிதை வெறுமை


அருட்பெருங்கோ அவர்கள் எழுதிய காதல் கூடம் - 5

நவீன் ப்ரகாஷ் இவரின் கவிதைகளும் அதில் வரும் படங்களும் மிக அருமையாக இருக்கும் இவரின் முத்தபூமி ...


முபாராக் என்பவர் எழுதிய கவிதை குஷ்பூ கற்பு பற்றி பேசிய பொழுது நடந்த கூத்துகளின் பொழுது வெளிவந்தது அவரின் சுட்டி கிடைக்கவில்லை
அப்பொழுது எடுத்து வைத்து இருந்தேன் அதை இங்கே கொடுக்கிறேன்.

ஆக்கம் முபாரக்
பண்பாடு எனும் பண்டம்
குனிந்து பெருக்கி
மார்பின் பிளவுகள் காட்டு
உதடு சுழித்து
கண்கள் செருகி
கலவியேற்கும் பாவனை
செய் முந்தானை துறந்து
பைத்தியக்காரியாய் நடி
அப்பனையொத்த நடிகனின்
முதுகில் முலைபிதுங்க
ஏறிக்கொள் வாராந்தரிகளின்
நடுப்பக்கத்தில் குளி
போஸ்டர்களில் தொப்புள்
காட்டு ரசித்து லயித்து
சுயமைதுனம் செய்துகொள்வோம்

கோயில் கட்டுவோம்
எப்போதும் எங்களின்
இச்சைக்குத் தீனியாய்
கிசுகிசுவாய் கிளுகிளுப்பாய்
எதுவாகிலும் செய்

ஆனால் ஒருபோதும் கற்பு
பற்றிக் கருத்துச் சொல்லாதே
எங்கள் பண்பாட்டை கருத்துக்கு
விடமாட்டோம் காற்றில் விட்டாலும் சரி

விடு பட்ட கவி ராஜா, ராணிகள் என்னை மன்னிக்கவும்.

நானும் கவிதை எழுத டிரை செஞ்சு இருக்கிறேன் எப்படி இருக்குன்னு சொல்லுங்க!!!

நடமாடும் ஒரு
கவிதை மற்ற ("வி" "ழு" வாக மாறவில்லை:))
கவிதைகளை தொகுக்கிறதே!!!
அடடே கவிதை!!! (மூனு ஆர்சர்ய குறி)
மேலும் வாசிக்க...

Thursday, September 27, 2007

கதைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்

சின்ன புள்ளயா இருக்கும் பொழுதில் இருந்து கதை கேட்கும் பழக்கம் நம்மை தொற்றிக்கொள்கிறது. வளர வளர அது ஏனே கதை படிக்கும் ஆர்வம் குறைந்து விடுகிறது, அதையும் மீறி சில கதைகள்தலைப்பாலோ அல்லது ஆசிரியரி அறிமுகத்தாலோ படிக்க நேரும் பொழ்து அந்த கதை நம்மை கவர்ந்து விடுகிறதுஅப்படி என்னை கவர்ந்த சில கதைகள்.

கதையோ அல்லது கட்டுரையோ எழுதும் ஆசிரியரின் வெற்றி என்பது அது கற்பனையா அல்லதுநிஜமா, அய்யய்யோ இது நிஜமாக இருக்க கூடாது என்று படிக்கும் வாசகனை பதை பதைக்க செய்யவேண்டும் அப்படி என்னை செய்தது அய்யனார் எழுதிய நீ என்னை விட்டுப் போயிருக்க வேண்டாம் ஹேமா! என்ற பதிவை படித்து அதைவிட்டு வெளியில் வர ரொம்ப நேரம் ஆனது. (வழி தெரியமல் சுத்திக்கிட்டு இருந்தனா என்று கேட்க கூடாது).

விடைபெறும் வேளையில் அன்பான வார்த்தைகளையே பேசுங்கள். ஒரு வேளை இதுவே நம் கடைசி சந்திப்பாகவும் இருக்கலாம்..! என்று தன் வலை பதிவில் எழுதி இருக்கும் வார்த்தைகள் நம்மை ஒரு நிமிடம் சிந்திக்க வைக்கும். இவர் ஸ்டாராக இருக்கும் பொழுதுதான் இவரின் பிளாக்கை பார்த்தேன், இத்தனை நாட்களாக இவரை மிஸ் செய்து விட்டோமேஎன்று வருந்தும் அளவுக்கு இவரின் எழுத்துக்கள் இருக்கு. இவர் எழுதிய குப்பமுத்து குதிரை..!


அடுத்து ஜெஸில்லா எழுதிய விட்டு விலகி நின்று... ஏதோ நம் தோழியின் கதை போல் இருப்பதாலோ என்னவோ பிடித்து போனது.


சிறுகதை செம்மல், சிந்தனை சிற்பி , வலையுலக பீம் பாய் (இப்படி எல்லாம் போடவில்லை என்றால் அடி விழும் அதுக்காகதான்)அவரிடம் சொன்னேன் உன் கதையை வலைசரத்தில் லிங் கொடுக்க போகிறேன் என்று அதற்கு அவர் சொன்னார் சும்மா கதை மட்டும் நல்ல கதை என்று போட்டு விடாதே தம்பியோட அருமை பெருமை எல்லாம் சொல் என்றார் இல்லை அடுத்த முறை பார்க்கும் பொழுதுகையை ஒடித்துவிடுவேன் என்று வேறு மிரட்டினார் அதுக்காகதான் மேலே இருக்கும் பில்டப் எல்லாம்.

இவர் எழுதிய பூனைகளுடன் உறங்கும் கோபால்
மேலும் வாசிக்க...

Tuesday, September 25, 2007

சீரியஸ் பதிவர்கள் & கும்மி பதிவர்கள்

எனக்கு ரொம்ப சீரியசான விசயம், அல்லது அழுகாச்சி காவியம் என்றாலே நாம அந்த பக்கத்துக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டு, நம் பணி கும்மியும் கும்மி சார்ந்த மக்களுமே என்று ஒதுங்கிவிடுவது நம் இயல்பு.

வலையுலகில் கும்மி, மொக்கை மக்கள் அடிக்கடி சொல்வது எங்களுக்கு சீரியசாக எழுத வரும் ஆனால் சீரியஸாக எழுதும் மக்களே உங்களுக்கு நகைசுவை யாக எழுத வராது, ஒருவரை சிரிக்க வைப்பது என்பது மிகவும் கஷ்டமான காரியம், அப்படி இப்படி என்று பில்டப் கொடுப்பார்கள்.

ஆனால் அப்படி சீரியசான நண்பர்கள் சிலர் செம காமெடியாகவும் எழுத வரும் என்று நிருபித்து இருக்கிறார்கள் ஆகையால் அப்படி பட்ட சீரியசான ஆட்கள் எழுதிய நகைசுவை பதிவுகளை முதலில் பார்ப்போம்.

ரொம்ப சீரியசான அரசியல் விவாதங்களிலும், சூடான இடுகைகளிலும் மட்டுமே இவரை பார்கலாம்அப்படியா பட்ட குழலி அவர்கள் எழுதிய புரட்சி நாளை காலை எட்டரை மணிக்கு வருது படிக்கும் அனைவரையும் சிரிக்கவைத்தது.

அடுத்து பின்நவீனத்துவ ஆள் புரியாத கவிதைகளை போட்டு கலக்கும்(வயிற்றை), கலங்க (மூலையை) வைக்கும் கட்டுடைக்கும் ஆள் சுகுணாதிவாகர் எழுதிய "சீரியசாக எழுதுவது எப்படி? - கும்மிப்பதிவாளர்களின் அவசரக்கூட்டம்" இதை படித்தால் சிரிக்காத ஆள் கூட நிச்சயம் சிரித்துவிடுவார்கள்.

வரவனையான் எழுதிய "யார் வீடு " (இவரு எப்ப சீரியஸ் எப்ப காமெடி செய்வார் என்று ஒன்னுமே புரியமாட்டேங்குது. ரன் அவுட் டவுட்டா இருந்தா அதன் பலனை பேட்ஸ் மேனுக்கு கொடுப்பது போல், இங்கு வரவனையானை சேர்த்து விட்டேன்)

அடுத்து செந்தழல் ரவி எழுதிய டாஸ்மாக்கில் பின்னவீனத்துவ எதிர் அழகியல் 'கவிஜ'ர்கள் (என்னது நான் சீரியசான ஆளா என்று என்னை அவர் அடிக்க வந்தாலும் வரலாம் அவர் கடைசியாக எப்பொழுதுமொக்கை பதிவு போட்டார் என்றே அவருக்கே மறந்து போய் இருக்கும். அதனால் தான் அவர சீரியசான ஆட்கள்லிஸ்டில் சேர்த்தாச்சு.(திரும்ப பழைய பார்முக்கு வரவேண்டுகிறேன்).

அடுத்து இவர்களை எல்லாம் விட மிகவும் சீரியஸான ஆள் ஒருவர் இருக்கிறார் , அவர் செம டென்சன் பார்ட்டி திடிர் என்று பயங்கர சீரியஸ் ஆகிவிடுவார், சோ மரியாதையாக சார் என்றே சொல்வோம், சார் பயங்கர சீரியஸ் எப்ப பார்த்தாலும் உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு தான் இருப்பார். அவரு செஞ்ச லொள்ள பாருங்க அவரு பேரை கூட சொல்ல பயமாக இருக்கு. அதான் பேரை சொல்லவில்லை. பதிவை பாருங்க.


**********************

அடுத்து நம் மக்கள் அதாங்க மொக்கை பதிவர்கள் போட்டு தாக்கி கண்ணில் நீர் வரும் படி சிரிக்க செய்தஆட்கள் பற்றி பார்கலாம்.

முதலில் கலாய்த்தல், நக்கல் என்றாலே வலையுலகில் நினைவுக்கு வருபவர் நம்ம சிபிதான். அவர் பால பாரதி பற்றி எழுதிய நரசிம்ம ராவ் போன்ற ஆட்களையே சிரிக்க வச்சிடும். பாலபாரதி : சும்மா கேட்டவுடன் அதிருதில்ல!

அடுத்து நம்ம தேவ் எழுதிய எம்.ஜி,ஆரையே எதிர்த்தவன்டா இந்த ஆபிசர் என்ற பதிவு.

நம்ம லக்கி எழுதிய தமிழ்மணம் – இந்த வாரம்

அபிஅப்பாவோட 'அஞ்சு ஜார்ஜும் அபிபாப்பாவும்' இவரு பேச்சும் அதே போல் இருக்கும், ஆளும் நாகேஷ் மாதிரிதான் இருப்பார் அதனால் இவரை பார்த்தாலே சிரிப்பு வரும், ஒரு முறை மீசையை எடுத்துவிட்டு அவர் முகத்தை குளோசப்பில் காட்டினார் அன்னைக்கு அழுகையே வந்துச்சுன்னா பார்த்துகுங்களேன் ஆள் எப்படி இருப்பாருன்னு அன்னைக்கு தேம்பி தேம்பி அழும் பொழுதுதான் நண்பர் கொடுத்த லிங் அது.


கண்மணியோட 'ச்சுப்ரமணிக்கு இனிஷியல்' இப்படி நிறைய பேர சொல்லிக்கிட்டே போகலாம்.

தம்பி கோபி எழுதிய நாங்களும் ஓட்டுவோம்ல.... பதிவு கொசுவத்திதான் ஆனா தம்பி எழுதியவிதம் கமெடியாகவும் அதே சமயம் நம்மளையும் கொசுவத்தி சுத்தவச்சுடுச்சு!!!

ஆனா பாருங்க நாம எல்லாம் படிச்சோமா மறந்தோமா, பிட் வச்சு அடிச்சு பாஸ் செஞ்சோமா என்று இருக்கிற ஆளுங்க, அப்படி பட்ட நான் மறக்காம நினைவில் வைத்து இம்புட்டு பேரு லிங் கொடுத்து இருக்கிறேன் என்று நினைக்கும் பொழுது என்னையே நம்ப முடியவில்லை.

உங்களுக்கு தெரிந்த சூப்பர் காமெடி பதிவு இருந்தா சொல்லுங்களேன்!!!
மேலும் வாசிக்க...

Monday, September 24, 2007

கோவி.கண்ணன் அவர்களுக்கு கண்டனம்

வணக்கம் வணக்கம் வணக்கம்...



கொக்கரக்கோ கும்மாங்கோ!!!( ஆமாங்க மூன்று முறை வணக்கம் சொன்ன பிறகு சிட்டி பாபு இப்படிதான் சொல்லுவாரு) வாங்க இப்ப டக்குன்னு நிகழ்சிக்கு போய்டலாம்!!!



இதுக்கு முன்னாடி வலை சரம் தொடுத்த கோவி.கண்ணன் பக்தி மாலை, தமிழ்மாலை, சிறுகதை மாலை, கதம்பமாலை, கவிதை மாலை என வண்ணமாலைகளைத் தொடுத்து என்னை கலவர படுத்திவிட்டார்.





என்னை தொடுக்க சொன்னா என்ன செய்வது...

இப்படி ஒரு நிலைக்கு என்னை ஆளாக்கிய கோவி.கண்ணன் அவர்களுக்கு கண்டனம் சொல்லாமல் என்ன சொல்வது.

இருந்தாலும் விடமாட்டோம்ல!!

முதல் பதிவு அறிமுக பதிவாக இருக்கட்டும் என்றார்கள், மேலே இருக்கும் படம் அறிமுகம் போதுமா இல்ல கொஞ்சம் வேண்டுமா?

சும்மா மத்தவங்களை கலாய்சே பொழுதை கழித்துக்கொண்டு இருக்கேன், எல்லா பதிவும் அப்படிதான் போட்டு இருக்கேன்.

நம்ம ஊர் அரசியல்வாதி முதல் புஷ் வரையும், கிரிக்கெட், நம் வலை பதிவர்கள் என்று அனைவரையும் கலாய்த்து தான் வண்டி ஓடிக்கிட்டு இருக்கு. இதுல அதிகமாக நான் கலாய்பது நம்ம அய்யனாரைதான் மனுசன் ரொம்ப நல்லவர் ஏதும் சொல்லமாட்டார்.

முதன் முதலில் அவரை கலாய்த்தது துபாயில் ஒரு ஜாலி கவிதை திருவிழா!!!

அதுபோல் சொந்தமாக ஒரு வரியில் கவிதை எழுத வராது ஆனா எதிர் கவுஜ அல்லது எதிர் பாட்டு என்றால் சூப்பராக வரும்.

ஆனா யாரும் மனம் வருந்தும் படி இதுவரை செய்தது இல்லை!!!

இந்த வாரம் என்ன இங்க தொடுக்க போகிறேன் என்றால் நான் ரசித்த காமெடி, கதை, கவிதை அம்புட்டுதேன்!!!

மேலும் வாசிக்க...

வண்ணம் தந்த காலம், வரப்போகும் குசும்பு

பக்தி மாலை, தமிழ்மாலை, சிறுகதை மாலை, கதம்பமாலை, கவிதை மாலை என வண்ணமாலைகளைத் தொடுத்து கோவி.கண்ணன் தமிழ் வலைப்பூக்களை வலைமாலையாக கட்டித் தந்து விட்டார்.

உதாரணக் கவிதைகளும் தமிழாய்வுக் கட்டுரையின் சாரமும் சிறப்பைக் கூட்டின.முக்கியமான தவறவிடக்கூடாத இடுகைகளை அடையாளம் காட்டித் தொகுத்ததுள்ளார்.

தொடுப்புகளைத் தந்ததோடு அருமையான விளக்கவுரைகளும் தந்து விரிவான கட்டுரைகளாகவே சரத்தில் பகிர்ந்தமைக்கு நன்றி.

இன்று முதல் வலைச்சரம் தொடுக்க வருகிறார் வலையுலகின் புதிய குசும்பன். கொலைவெறிக் கவிஜர்கள், அனானிகள் முன்னேற்றக் கழகம், கும்மியடிப்போர் மும்னேற்றக் கழகங்களின் தீவிர உறுப்பினரான குசும்பன் வலைச்சரத்தில் என்ன குசும்பு வைத்திருக்கிறாரோ? வாருங்கள் அவரையே கேட்போம்.
மேலும் வாசிக்க...

Sunday, September 23, 2007

வண்ண மாலை 5 - கவி(தை) மாலை !

புரிதல்கள் அல்லது தகவல் பரிமாற்றம், அறிவு சார் பரிமாற்றம் என்பதை மக்கள் மன்றத்தின் முன்வைப்பதில் 'படம்' போட்டு விளக்குவது முதன்மையானது. கார்டூன்கள் எனப்படும் கேலிச்சித்திரங்கள் புகழ்பெற்றதற்குக் காரணம் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்னும் உத்தி. அதற்கு அடுத்த நிலையில் இருப்பவை கவிதைகள் கவிதைகள் இயற்கையை, சமூக அவலங்களை, நடப்புகளை, உறவுகளை சிறிய வடிவத்திற்குள் பொருள்பட செதுக்கி வெளிக் கொணருபவை, அதன் பிறகு கட்டுரைகள், சொற்பொழிவுகள்.

மற்றவற்றைவிட நான் ரசிப்பது, நேசிப்பது கவிதைகளைத்தான். உணர்வுகளும், மொழியும் ஒரு சேர இருப்பதால் கவிதைகள் என்றுமே உணர்வு பூர்வமானவை, மொழிகளின் ஆதாரமானவை. உலக மொழிகள் தம்மை புதிப்பித்துக் கொள்ளும் போது புதினங்கள் தோன்றுகின்றன. அப்படி தோன்றிய புதினங்கள் மூலம் மொழி வளர்சிக்கு ஊற்றாக அமைந்துவிடுகின்றன. புதினங்களை தோற்றுவித்து வளரும் உலக மொழிகளுள் ஒன்றானதும், இந்திய மொழிகளுக்குள் முதன்மையானதும் நம் தமிழ் மொழிக்கு அதில் என்றுமே நிலையான இடம் உண்டு.

செய்யுள், மரபுகவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ எனப்படும் குறும்பா போன்றவை எண்ணில் அடங்காவண்ணம் தமிழ் அன்னையின் மலர்படுக்கையாகவே கிடக்கின்றன. நாள்தோறும் வண்ணப் பூக்கள் போல் கவிக் கொத்துகளாக அவை மலந்து கொண்டே இருக்கின்றன.

80 களில் புதுக்கவிதை புதிய வடிவம் பெற்றது அதற்கு முன்பும் இருந்தது ஆனால் கவனம் பெறவில்லை. புலவர்கள் நா.காமராசன், மு.மேத்தா, அப்துல்ரகுமான், முத்துலிங்கம், வைரமுத்து,வாலி மற்றும் பலருடைய கவிதைகள் தமிழர்களை கவிதையின் பக்கம் திரும்ப வைத்தது.

ந.காமராசன் எழுதிய விளைமகளிர் பற்றிய கவிதையின் சில வரிகள் என்றும் நினைவில் நிற்கிறது.

'நாங்கள் ஆடை வாங்குவதற்காக நிர்வாணத்தை விற்கிறோம் ! "
"நாங்கள் மன்மத அச்சகத்தின் மலிவு பதிப்புகள் ! "

என்பது போன்ற சுடும் வரிகளுக்குச் சொந்தக்காரர் அவர். மற்றவர்களைப் பற்றியும் சொல்லிக் கொண்டே போக முடியும்.

அது போல ஹைக்கூ கவிதைகள் ஊசி வெடிபோல சுருக்கென்று தைக்கும். நானும் சில ஹைக்கூ கவிதைகளை எழுதி இருக்கிறேன்.

"மார்கழி மாத கடுங்குளிரில், வெள்ளை மாவெடுத்து
புள்ளியும் பூவுமின்றி
தன் கோலத்தைப் போட்டுக் காட்டினால் விதவைத்தாய்"

பூவும் பொட்டுமின்றி இருக்கும் தன்னுடைய நிலையை கோலத்தின் மூலம் வரைந்து காட்டுகிறாள் என்ற மறைபொருளுடன் அது அமைந்தது. மற்றுமொரு கவிதை அதே போன்றுதான்

"அப்பாவுக்கு அருகில் படமாக சேர்ந்ததும்
இன்றுதான் என் அம்மா
மீண்டும் மங்களகரமாக மாறி இருக்கிறாள்"


நம் நாட்டில் விதவை என்பது சாபக்கேடான ஒன்றாக இருக்கிறது. கணவனை இழந்த பெண்களுக்கு மறுமணம் செய்து வைப்பதில்லை என்ற சோகம் ஒருபக்கம் இருந்தாலும், அவளின் தோற்றத்தையே மாற்றி வைத்து முடக்கிப் போட்டு வைத்திருந்திருக்கிறார்கள் என்பதை நினைக்கையில் கொடுமையாக இருக்கிறது. அதைத்தான் சொல்ல முயன்றேன். அப்பா இறந்த பிறகு பொட்டையும் பூவையும் இழந்தவள், உயிருடன் இருந்த போது கிடைக்காத ஒன்று அவள் இறந்த பிறகு மீண்டும் ஒட்டிக் கொள்கிறது. தற்பொழுது இந்நிலை அவ்வளவாக இல்லை என்பது, நம் வாழும் காலத்தில் உணர்ந்து கொள்ளும் வகையில் நடந்த நல்மாற்றம். விதவைகள் மறுவாழ்வும், பெண் கல்வியும் இந்திய சமூகத்திற்கு இன்றியமையாதவைகள்.

பதிவுலகில் என்னைக் கவர்ந்த கவிஞர் பலர், அவற்றில் பிச்சனிக்காடு இளங்கோ போன்ற சிலர் தமிழ்மணத்திற்கு வெளியிலும் இருக்கிறார்கள். அவர்களை தின்னை, பதிவுகள், தமிழோவியம் போன்ற இணைய இதழ்களில் வாசிக்கிறேன்.

தமிழ்மணப் பதிவர்களில் ப்ரியன், அருட்பெருங்கோ ஆகியவர்களில் எல்லா கவிதைகளுமே சிறப்பாக இருக்கும், எனவே குறிப்பிட்டு சொல்வதை தவிர்கிறேன். தமிழ்நிதி அவர்கள் எழுதிய கற்பின் இருப்பு, ஆண்மை மற்றும் அவருடைய பல கவிதைகள் கண்ணுள் புகுந்து மனதை எரிக்கும் ஆற்றல் பெற்ற தீப்பிழம்புகள். ஆண்களும் பிரசவிக்கிறார்கள் ... உண்மைதான்.... இளாவின் ஜனனம் என்னவென்று தெரிந்து கொள்ளலாம். சுகுனா திவாகரின் ஆசிட் கவிதைகள் கண்ணையும் பொசுக்கும். கை கொடுக்கும் கை எது ? கொடுப்பவர் எவர் பெற்றவர் எவர் ? அசைப்போட்டு கொண்டு இருக்கிறார் விஎஸ்கே ஐயா. கொல்லிமலைச் சாரலில் என் எஸ் ஜெயகுமார் - புதிய பதிவர்களில் சிறப்பாக புதுக்கவிதை புனைபவரில் குறிப்பிடதக்கவர். இதைத்தவிர எனது மற்ற இரு நண்பர்களான பெண்ணிய கவிதைகள் எழுதும் / வெளியிடும், சுகிர்தராணி புகழ் மகி என்கிற பெ.மகேந்திரன், நாமக்கல் சிபியார் ஆகியோரும், ஆசிப் மீரான் அவர்களும் நல்ல கொலைவெறி கவிஜையாளர்கள்.



வலைச்சரத்தில் நான் தொகுத்தவை அனைத்தும் எனக்கு நினனவுக்கு வந்தவற்றில் சில வலைப்பூக்கள். இத்துடன் எனது வலைச்சர தொகுப்பு நிறைவுறுகிறது. இது சிறந்த வலைப்பதிவுகள் எது என்பதற்கான அளவுகோள் அல்ல மறாக சில பரிந்துரைகள் மட்டுமே. வாய்பளித்த பொன்ஸ் மற்றும் வலைச்சரம் குழுவினருக்கும், வலைச்சர வாசகர்களுக்கும், பின்னூட்டத்தில் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு பாராட்டிய பதிவுலக அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. அடுத்து வரும் வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்


மேலும் வாசிக்க...

Friday, September 21, 2007

வண்ண மாலை 4 - கதம்ப மாலை !

வலைச்சரத்திற்கு எழுதுவதற்காக முன்பே இடுகையை எழுதி வைக்காததால் எழுதி வெளியிடுவதற்கு சிறிது தாமதம் ஏற்பட்டுவிட்டது. நிறங்கள் தனித்தனியே அழகு என்றாலும் வானவில் போல் சேர்ந்திருந்தால் அதுவும் தனித்துவமான அழகுதான். இவை எப்போதாவது (அபூர்வமாக ) இருந்தால் அவற்றை நுகர(ரசிக்க) முடியும். மலர்தோட்டம் என்றால் பல மலர்களும் இருந்தால் தான் அதற்கு சிறப்பு. இருந்தாலும் நமக்கு அவற்றில் ஒன்று அல்லது மேலும் சிலது பிடித்தமாக இருக்கும். நான் வாசித்த வலைப்பூக்களில் புதிய வரவாக வந்து மறைந்த வலைப்பூ சித்தூர் முருகேசனின் கவிதை07 என்ற வலைப்பூ வேறுபட்டி இருந்தது.

உள்ளே சென்று படித்தேன். இவர் இன்னொரு இராமர் பிள்ளையோ என்று வியப்படைய வைத்துவிட்டார். :) சித்தூர் முருகேசனா ? அல்லது பீட்டர் முருகேசனா ? என்று கூட நினைக்க வைத்துவிட்டார்.
இந்தியாவின் எல்ல பிரச்சினைகளுக்கும் தீர்வாக ஆப்பரேஷன் இந்தியா 2000 என்ற திட்டத்தை தீட்டினேன். என்று ஒரு கட்டுரையை எழுதி அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறார், சித்தூரை சேர்ந்த தமிழர் என்றே நினைக்கிறேன் அதனால் ஆந்திர அரசியலும், தமிழக அரசியலும் நன்கு தெரிந்திருக்கிறது. பெட்டிசன் போட்டு போட்டு பெயர் பெற்றவர்போல் அவர் இடுகைகளை படித்தும் தெரிந்தது. இவர் சொல்வதெல்லாம் உண்மையா ? என்று நம்புவதற்கு கடினாமாக இருந்தாலும் சிலரின் சித்தாந்தங்களை அலட்சியப்படுத்தாமல் பார்த்தால் அவை உண்மையாக கூட இருக்கலாம். சித்தூர் முருகேசனின் இடுகைகள் அப்படிதான் இருக்கிறது. சோதிடத்தில் வல்லவர் என்று சொல்கிறார் கூடவே பெரியாரையும் போற்றுகிறார். அரசியல் வாதிகளை வெளுத்து வாங்கி இருக்கிறார். நிறையதகவல் இருக்கிறது. நிலாச்சாரல் வாசகர்களால் அறியப் (பரிச்சிய) பட்டவராம். தமிழ்மணத்தில் இவர் பதிந்திருந்தாலும் கருவிபட்டையை இவர் பதிவு டெம்ளேட்டில் சேர்க்காததால் இவரது இடுகைகளை கண்ணுறும் நல்வாய்ப்பு (தரிசிக்கும் பாக்கியம்) உங்களுக்கெல்லாம் கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன் :)

மொழியும் நிலமும் - ஜமாலன் மற்றொரு புதிய பதிவர் முற்போக்கு சிந்தனையின் தாக்கம் கொண்டவர். அவற்றில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு அவர் எழுதுவது அனைத்தும் தரமான இடுகைகளாக உறுதியாக (நிச்சயம்) தெரியும்.

தமிழ்மணம் சாராத மற்றொருபதிவர்
பிரதாப் குமார் சி அவரது நாஞ்சில் மைந்தன் வலைப்பூ. தேன் கூடு வழியாக படித்த பதிவு அது. விலங்குகளை எப்படிப் படம் எடுக்கிறார்கள்? , 'கலைவாணர் என்னும் பகுத்தறிவாளன்' போன்ற பலவகை இடுகைகளை எழுதி இருக்கிறார்.

வானொலி அறிவிப்பாளர் யாழ் சுதாகர் இவர் தனித்தனியாக பல வலைப்பூக்களை வைத்திருக்கிறார். அத்தனையும் திரை இசை பாடல்கள், பழம்பெரும் நடிகர்கள், அறிவிப்பாளர்கள் பற்றியங்களை கொண்டுள்ளது. MP3 பாடல்கள் தொகுப்புகளாக ஆக்கி அதில் தனது எண்ணங்களையும் சேர்த்து சுவைபட ஆக்கி வைத்திருக்கிறார்.

மற்றும் புதிய பதிவர்களான ஜெகதீசனின் ஒரு தமிழனின் குரல்(றள்) , பாரி.அரசின் சிந்தனை பூக்கள் மற்றும் நன்றாக ஆடிக்கொண்டிருக்கும் ரத்னேஷ் போன்றவர்களின் இடுகைகள் மாறுபட்ட எழுத்துக்களாக உள்ளது. இன்னும் குறிப்பிட்டு சொல்லிக் கொண்டே செல்ல முடியும் அடுத்து வலைச்சரம் எழுதுபவர்களுக்கும் விட்டுவைக்கனுமே :-)
மேலும் வாசிக்க...

Thursday, September 20, 2007

வண்ண மாலை 3 - சிறுகதை மாலை

சிறுகதைகள் என்றால் அதற்கு ஆரம்பமும், முடிவும் உண்டு என்பது தான் அதன் வடிவம் இல்லை என நான் சிறுகதைகள் படித்த அளவில் புரிந்து கொண்டிருக்கிறேன். சிறுகதைகள் நிகழ்வுகளை அதன் வரிசையில் எளிமையாக்கி தரும் கற்பனை அல்லது நடந்தவை என்ற அளவில் இருக்கின்றன என்பது அதன் இலக்கணம் என்று கொள்ளலாம். சிறுகதையின் சிற்பி புதுமை பித்தனை வாசிக்காத சிறுகதை அன்பர்கள் (பிரியர்கள்) இருக்க முடியாது. புதுமை பித்தன் சிறுகதைகளை, கல்கியின் பொன்னியின் செல்வன், சாண்டில்யனின் கடல்புறா, யவன ராணி வாசித்திருக்கிறேன் என்பதை வெளியில் சொல்வதும் கூட பெருமையாக சிலர் நினைக்கும் அளவுக்கு அதன் தாக்கம் இருக்கிறது மற்றும் அந்த அளவுக்கு அவை சுவைபட எழுதப்பட்டு பேசப்பட்டவைகள். தமிழிலக்கியத்தில் மொழிப்பெயர்க்கப்படாத பெரும் காதைகள் என்றால் அது சமண / பவுத்தர்கள் எழுதப்பட்ட ஐம்பெரும் காப்பியங்கள் மட்டுமே. குண்டலகேசி என்னும் பவுத்த காதையும், நீல கேசி என்னும் சமண காதையும் ஒன்றை ஒன்று சாடுவதற்காக ஏற்பட்டவை. அதாவது ஒரு தத்துவத்திலிருந்து வேறு ஒன்றை சாடுவதற்கு வெறும் தத்துவ கோட்பாடுகள் மட்டும் போதாது என்பதற்காக ஒன்றைவிட ஒன்று உயர்ந்தது என்று காட்டவும் கதை பின்னனிகள் தேவைப்பட்டு இருக்கிறது என்பதற்காக இதைச் சொல்கிறேன்.

இன்றைய சிறுகதைகள் எதோ ஒரு கருப்பொருளைத் தாங்கிவந்தாலும் வட்டார வழக்கு, அவ்வட்டார பண்பாடு ஆகியவற்றைக் காட்டும் கண்ணாடியாக இழைக்கப்பட்டு இருந்தால் அவ்வகை எழுத்தர்கள் சிறுகதை எழுதுவதில் சாதனை படைப்பர். நமக்கு முந்திய தலைமுறைகளில் கு.ப.ரா, கி.ரா, பிரபஞ்சன், சு.சமுத்திரம் மற்றும் பலர் அவ்வகை ஆக்கங்களை படைத்து ஆவணமாக ஆக்கி வைத்திருக்கின்றனர். சிறுகதை எழுதுவது கடினமானதல்ல பாதிப்புகளையோ, தீர்வுகளையோ, நிகழ்வுகளையோ பாத்திரங்களை வைத்து படிப்பவர்களின் மனதில் அசைக்க விடுவதுதான் சிறுகதைகள். தூங்கிக் கொண்டிருக்கும் பாத்திரங்கள் நாம் படிக்க ஆரம்பிக்கும் போது எழுந்து படித்து முடிந்தவுடன் தூங்கிவிடும். அவை உணர்வுகளை தூண்டியிருந்தால் அவை நமது நினைவுகளில் அடிக்கடி வரும் கனாவாக மாறிப்போகும்.

கதை கேட்கும் அல்லது சொல்லும் ஆர்வம் நம் தமிழர்களுக்கு இருக்கும் தனிப்பட்ட குணம். பாட்டி சொன்ன கதைகள் முதல் வில்லிபாரதம் வரை எதோ ஒன்றை எல்லோருமே கேட்டு இருப்போம். நமது கதை கேட்கும் ஆர்வங்களை நம்பியே நெடும்தொடர்கள் ( மெகா சீரியலுக்கு புதிய சொல் நன்றி கலைஞர் டிவி) நமது வீட்டு கூடத்திற்கு வந்துவிட்டன. பொழுது போக்கு என்பதற்கு பதில் பொழுதே அதனாலேயே போகிறது என்ற அளவுக்கு கதை ஆர்வம் வந்துவிட்டதோ என்று நினைக்கும் அளவுக்கு சென்றுவிட்டது கவலைக்குறிய பற்றியம் தான். அக்கம் பக்கத்து கதைகளை கேட்டு குடும்பத்துக்குள் உரசல் வருவதைப்போல் நெடும்தொடரால் உடனடி பாதிப்பு வராது :). எல்லாமுமே ஒரு கட்டத்தில் திகட்டிவிடும் என்பதால் இது தற்காலிகம் என்றே கொள்வோம்.

எனது வலைப்பூவில் எழுதுவது போல் கட்டுரையாகி போய்விட்டது :). வலைச்சரத்தில் படித்ததில் பிடித்த இடுகைகளை வகைப்படுத்த வேண்டும். இல்லையென்றால் தும்பிகையால் தூக்கி ஒருவர் மிதித்துவிடுவார். ஜூட்.

சிறுகதை பதிவு எழுத்தர்களில் வட்டார வழக்குடன் எழுதுபவர் பலர், குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால்
நிலா அக்கா, முட்டம் சின்னப்பதாஸ் சிறில் அலெக்ஸ், ஆழியூரான் போன்றோர் தான் நினைவுக்கு உடனே வருகின்றனர். குப்புசாமி செல்ல முத்துவின் அண்ணியின் அணைப்பில் அதே போன்று நான் எழுதிய பாண்டிபஜார் கடை போன்றவற்றை படித்து பலர் வியர்(ந்)த்திருக்கிறார்கள் :), வினையூக்கி, மெலட்டூர்.இரா.நடராஜன் ஆகியோர் சிறுகதைகளை எழுதி குவிக்கிறார்கள். விவசாயி இளா, நாமக்கல் சிபி, லக்கி லுக் மற்றும் செந்தழல் ரவியின் கதைகளை படிக்கும் போது சிறுகதைகளில் கூட மொக்கை உத்தி பயன்படுத்தப்பட்டுள்ள புதிய சாதனைகளை அறிந்து கொள்ளலாம். :) மற்ற சிறுகதை பதிவுகள் உடனடியாக நினைவு வரவில்லை. நண்பர்கள் பொருத்தருள்க.
மேலும் வாசிக்க...

Wednesday, September 19, 2007

வண்ண மாலை 2 - தமிழ் மாலை

எந்த இனத்தில் பிறந்தாலும் தாய் மொழிபற்று என்பது இல்லாதிருக்க முடியாது, எழுத்து இல்லாத பல மொழிகளும் தங்கள் மொழி பெருமையை இழக்கக் கூடாதென்று ஆங்கில எழுத்தைக் கொண்டு எழுத பழகி இலக்கியங்களுக்காகவும், தொடர்பு ஆவணங்களுக்காகவும் அவற்றை பயன்படுத்தி வருகின்றன. தோன்றிய காலம் அறிய முடியாத நமது தமிழ் மொழியின் பெருமையை வெளிநாட்டில் இருந்து கிருத்துவ மதம் பரப்ப வந்த பாதிரிமார்கள் ஆராய்ந்து சொல்லி இருக்காவிட்டால் நமது மொழி சென்ற நூற்றாண்டில் காணாது போயிருக்கும் அல்லது மலையாளம் போன்று உயிரை (சொற்களையும்) உடலையும் ( எழுத்துக்களையும்) இழந்திருக்கும். நல்ல வேலை காப்பாற்றப்பட்டு நம்கையில் இருக்கிறது. அதை பாதுகாப்புடன் மேலும் வளர்த்து, வளம் சேர்த்து அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைப்பது நம் கடமை.

பதிவுகள் எழுத ஆரம்பிக்கும் முன் எனக்கு தமிழ் மொழி பிடிக்கும், ஆனால் அதன் தொண்மையோ, பெருமையோ எதுவும் தெரியாது இருந்தது. 'தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா' என்ற பொதுவான தமிழின உணர்வு மட்டும் இருந்தது. தேவநேய பாவாணர் மற்றும் பல தமிழறிஞர்களின் நூல்களை படிக்க ஆரம்பித்ததும் தான் தமிழின் பெருமையே தெரிய ஆரம்பித்தது. பலபற்றியங்களில் எழுதினாலும் தமிழ் குறித்து எழுதும் போது எனது கட்டுரைகள் எனக்கு உண்மையான மன நிறைவை தருகின்றன.

இறந்து போன மொழிகளை எந்த மொழியிலாவது ஒட்டவைத்து ஒட்டுண்ணியாக வளர்க்க முடியுமா ? நாள் தோறும் கடவுள் காதில் போட்டு வைத்தாலாவது சிதையாது இருக்குமோ என்று அவற்றின் பற்றாளர்கள் நினைக்கும் போது, உண்மையிலேயே தத்துவங்கள், இலக்கியங்கள், புதினங்கள் என அனைத்தையும் இளமை மாறாது வைத்திருக்கும் தமிழை பொறாமையால் அவர்கள் தூற்றத் துவங்கும் போது நாம் ஏன் சரியான பதிலடி கொடுக்கக் கூடாது என முற்படுவது தேவையற்றதுதான். தூற்றுபவர்களை புறம் தள்ளுவோம். நம்மொழியை வளர்த்து ஏற்றம் பெறுவோம். ஆங்கிலத்துக்கு அடுத்த இடத்தில் தமிழ்வலைப் பக்கங்கள் இருப்பது நமக்கு பெருமைதருவதாகும். 'மெல்லத் தமிழினி சாகுமோ அச்சம்' இனி தேவை இல்லை 'தமிழ்தம் வளர்ச்சியில் அணை போட இனி எவருண்டு ?' என்று காட்டுவோம்.


தமிழாராய்ச்சிக் கட்டுரைகளை முதன் முதலில் வலைப்பதிவுகளில் படித்தேன் என்றால் அது நம் மதிப்பிற்குரிய வளவு இராமகி ஐயாவின் பதிவுகளைத்தான். முன்றாண்டுகளுக்கு மேலாக எழுதி குவித்திருக்கும் கட்டுரைகளைப் பார்க்கையில் வேற்று மொழிகளுக்கு வேராக போன தமிழ் சொல் திரும்பவும் உருமாறி திரும்பி இருக்கிறது என்று கண்டு கொண்டேன். தமிழ் கூட்டுச் சொற்களான அப்பும் இழிதலும் ஒற்றைச் சொல்லாக வடமொழியில் அபிஷேகமாகி மீண்டும் தமிழில் அபிடேகம் என்று திரிந்து போனதும், அபிடேகம் வடசொல் என கருதி அதற்கு முழுக்கு போட்டுவிட்டு 'குடமுழுக்கை' புதிய தனித் தமிழ் ஆக்கிக் கொண்டது போன்ற பல சுவையான தகவல்களையும், பாவாணருக்கு முற்றிலும் மாறுபட்டு புதிய சிந்தனைகளில் இராமகி ஐய பல வட சொல் மற்றும் ஆங்கில சொற்களுக்கு தமிழ் வேர்ச் சொல் கண்டுள்ளார் ( காட்டு : தமிழ்: காசு > ஆங்கிலம் : கேஷ் ). இராமகி ஐயாவின் இடுகைகள் அனைத்தும் தமிழார்வளர்களும், தமிழ் பற்றாளர்களும், தமிழன்பர்கள் அனைவரும் படிக்க வேண்டிய ஆழ்ந்த பற்றியங்களை ( விசயம்) கொண்டது.

முனைவர் மு.இளங்கோவன் அவர்களுடைய வலைப்பூக்களில் தமிழ் குறித்த பல இடுகைகள் தகவல் களஞ்சியங்களாக இருக்கின்றன. மேலும் அவரது வலைப்பூவில் பல தமிழாய்வளர்கள், ஆராய்ச்சியாளர்கள், பற்றாளர்கள், சிந்தனையாளர்கள் பற்றிய கட்டுரைகள் பல இடம் பெற்று இருக்கின்றன. கால்டு வெல் ஐயா அவர்களைப் பற்றி மிக அழகான கட்டுரை வரைந்து தொகுத்துள்ளார். தமிழ் தேனிக்கள் மொய்யக் கூடிய வலைப்பூக்களில் தமக்கென தனி அடையாளத்தை வைத்திருக்கிறார் இளங்கோவன் ஐயா.

மற்றும் எனது நண்பர்களான 'சொல்லின்' செல்வர்கள் மகரந்தம் ஜி.ராகவன் மற்றும் கூடல் குமரன் ஆகியோரின் தமிழ் சொல் மீள் அறிமுக ஆக்கங்கள் சிறப்பானவை. நானும் அதே வலைப்பூவில் சில ஆக்கங்களை எழுதி இருக்கிறேன்.

மேலும் பதிவர் ஜெகத் மற்றும் குமரிமைந்தன் ஆகியோர் தமிழர் பண்பாடு குறித்து மிக்கவையாகவே ( அதிகமாகவே) எழுதி வருகின்றனர்.
மேலும் வாசிக்க...

வண்ண மாலை 1 - பக்தி மாலை

நம்பிக்கையா ? மூட நம்பிக்கையா ? என்ற ஆராயாமல் பார்த்தால் பக்தி கூட தன்னலமற்றது என்று சொல்ல முடியும். இறைவன் என்ற பெயருடன் தொடர்புபடுத்தி எல்லோரையுமே ஒரு குடும்பமாக அடக்கிவிட முடியும் என்று நினைப்பதால் பக்திக்கு மவுசு என்றுமே உண்டு. மதங்களை ஏற்படுத்திக் கொள்ளாவிட்டால், மதத்தின் பின்னால் நிற்காவிட்டால் பக்தியை குறை சொல்ல எவருமே தேவைபட்டு இருக்க மாட்டார்கள். எனவே மதம் என்ற ஒற்றை சொல்லுக்குள் கட்டிவைத்து சுறுக்குவதை தவிர்த்துப் பார்த்தால் பக்தி உன்னதமான உணர்வுதான். எல்லா மதங்களும் இறைவனால் ஏற்படுத்தப்பட்டது என்பதை நிராகரித்தாலும் எல்லா மதமும் இறைத்தத்துவம் ஒன்றை வைத்துக் கொண்டிருக்கின்றன என்பதால் மதங்களைச் சாடும் போது கூடவே இறைவுணர்வையும் சாட வேண்டிய கட்டாயத்திற்கு மதநம்பிக்கைக்கு எதிரானவர்கள் தள்ளப்படுகிறார்கள்.

நான் பக்திக்கு எதிரானவன் அல்ல. மூடநம்பிக்கைக்கும், மதவெறிகளுக்கும் எதிரானவன் என்று சொன்னால் 'ஆம்' என்று சொல்வதில் தயக்கம் இல்லை. மதங்கள் காட்டும் இறைவனைத் தானே துதிக்கிறார்கள் என்று நினைத்தாலும் சிலரின் இறைவுணர்வு என்பது மதங்களைக் கடந்தே இருக்கிறது என்பதையும் அறிந்து அவர்களை பாராட்டுகிறேன். அதற்காகவே அவர்களுடன் தனிப்பட்ட நட்பும் கொள்கிறேன். அவர்களது மெய்சிலிர்பை வியந்திருக்கிறேன். பக்தியை அறியாமை என்று சொல்லிவிடவும் முடியாது எதோ ஒன்றின் பால் பற்று கொண்டு சகோதரத்துவத்திற்கு பாடபட முயல்கிறார்கள் என்றும் பக்தியை விட்டுவிட முடியாது என்பதால் சில சமயங்களில் மதநம்பிக்கைக்கு முட்டுக் கொடுக்கிறார்கள் என்று கடிந்து கொள்வதும் உண்டு. பக்தி அவர்களை சூழ்நிலை கைதியாக்கி வைத்திருக்கிறது என்று ஆறுதல் பட்டுக் கொள்வேன். மூடநம்பிக்கை முட்டுக் கொடுப்பவர்களிடம் உண்மையான பக்தி என்பது இல்லை என்பதையும், சிலர் மாற்றுமதக் நம்பிக்கையை தூற்றுவதையே தொழிலாக கொண்டிருக்கிறார்கள் அவர்களிடம் இருப்பது பக்தி என்ற பெயரில் பகல் வேசம் போட்ட மதவெறிதான். நமது பதிவர்கள் பக்தி ரசம் சொட்ட சொட்ட எழுதுபவர்கள் அனைவருமே மூடநம்பிக்கைக்கு முட்டுக் கொடுப்பது இல்லை. அப்படி சில பதிவர்களின் சில இடுகைகளை பக்தி மாலை ஆக்கித் தருகிறேன். முதலில் பக்தி என்றால் பக்திதானே என்று நினைத்திருக்கிறேன். பின்பு நிறைய இடுகைகளை படித்ததும் தெரிந்தது இங்கும் சைவம் / வைணவம் என்று எல்லைக்குள் நின்று எழுதுகிறார்கள் சில சமயங்களில் மாற்றாகவும் எழுதுகிறார்கள்.


பெருமாளுக்கே கொசுவர்த்தி கொளுத்தி வைத்த பிரகலாதன் : நம்ம கே.ஆர்.எஸ் தாங்க அவர். எனக்கு தெரிந்து இவர் எவரையும் ஒரு சொல் கூட கடிந்து கொண்டதை படித்தது இல்லை. 2005ல் வலைப்பதிவு ஆரம்பித்திருப்பதாக ப்ரொபைல் சொல்கிறது. இவர் கோகுலத்தில் நுழைந்தது 2006ல் நிறைய காலடி தடங்களை பதித்தது போல் இடுகைகளை பதித்து இருக்கிறார். கே ஆர் எஸ் நிறைய வைணவ சார்பு இடுகைகளை இட்டிருந்தாலும் முருகன் பாடல்களை அவ்வப்போது நிறைய தகவல்களை தருகிறார். இவர் எழுதிய அனைத்துமே சிறப்பானவை தான். குறிப்பாக புதிரா புனிதாமா என்ற தலைப்பில் சிந்தனை தூண்டும் கேள்விகளுடன் சிறப்பாக எழுதி இருப்பார். திராவிட வேதம்! தமிழ் மறை நாதம்! படித்துப் பாருங்கள் சுவையாக இருக்கும். இவரின் தமிழ் மற்றும் வடமொழி, தெலுங்கு புலமைகள் இவரின் தனித் திறமையாகவே இருக்கிறது. இவரும் வைணவம் சார்ந்த பக்தி இலக்கியங்களையே பெருவாரியாக எழுதிக் குவிக்கிறார்.


பதிவர் சங்கர் குமார் (அ) விஎஸ்கே ஐயா : இவரைப்பற்றி பலருக்கும் தெரியும், நான் பதிவுலகில் நுழைந்த போது இவர் பதிவில் வைத்திருந்த முருகன் படம் வெகுவாக என்னை ஈர்த்தது, அதன் பிறகு அவரது பதிவுகளை படிக்க ஆரம்பித்ததும் தமிழ் இவரிடம் துள்ளிவிளையாடுவதை அறிந்து கொண்டேன். இவரது இடுகைகள் பெரும்பகுதி சைவம் சார்ந்த பக்தி பாடல்களுக்கு பொருள் விளக்கம் தருகிறார். குறிப்பாக திருப்புகழ் மற்றும் முருகன் தொடர்புடைய பாடல்கள், மாரியம்மன் போன்ற நாட்டார் தெய்வங்களுக்கான பாடல்களை அந்தந்த திருநாளில் நினைவு வைத்து எழுதிப் போடுகிறார். பிராமணராக இருந்தாலும் பிராமண சங்கத்தில் சேராது , அமெரிக்க தமிழ்ச்சங்கத்தில் நான்கு ஆண்டுகள் தலைமை பொறுப்பேற்று இருக்கிறார்.இசைஞானியின் திருவாசகம் உருவாக முதன்மை பங்காற்றி பொருள் செலவில் கையை சுட்டுக் கொண்டு இருக்கிறார் :). எனது நண்பர் என்பதால் இதற்கு மேல் சொன்னால் புகழ்ச்சியாக போய்விடும் :)

பதிவர் குமரன் : வலைப்பூக்களை மலைப்பூக்கள் அளவுக்கு பூக்க வைத்து ஏறத்தாழ 25 க்கும் மேற்பட்ட தனித்தனி வலைப்பூக்களை வைத்திருந்து வகைப்படுத்தி இவர் எழுதுவதைப் படிக்கும் போது வியப்பு வருகிறது. இவர் ஒரு கதை சொல்லியும் கூட, சிறிய கதைகள் மூலம் பக்தி இலக்கியங்களை எளிதில் விளங்க வைப்பவர். இவர் 90 விழுக்காடு வைணவம் பற்றிய பாடல்களுக்கு விளக்கம் சொல்லி வருகிறார். தமிழ் ஆர்வலர் என்ற வரிசையில் இவருகென்று தனி இடம் உண்டு. பின்னூட்டங்களுக்கு மிக தெளிவாக இவர் மறுமொழி இடுவதை பலநேரங்களில் பார்த்து வியந்திருக்கிறேன்.

ஞான வெட்டியான் ஐயா : உடல்நிலையையும் பொருட்படுத்தாது,, சித்தர் பாடல்கள் பலவற்றை ஆவனப்படுத்தி அவற்றிற்கு எளிய விளக்கங்களை கொடுத்து இருக்கிறார்.

பதிவர் ஜிராகவன் : வலையுலக வாரியார் என்றே இவருக்கு மற்றொரு பெயர் இருக்கிறது, இளைஞர் முற்போக்கான கருத்துக்களை எவருக்கும் பயமின்றி எடுத்து சொல்லும் நக்கீரர். நாளும் திருநீறு அணிந்ததலும் 'மாட்டு சாணி என்றாலும் அதுவும் ஒரு மலம் தானே' என இவர் அண்மையில் விடுத்த அதிரடி பின்னூட்டம் வியப்பில் ஆழ்த்தியது. முருகன் பாடல்களை மிக அழகாக இலக்கிய கட்டுரையாக்குவதை படித்து மகிழ்ந்திருக்கிறேன். இவரின் தமிழ்பற்றும் என்னை நெகிழ்வுறச் செய்கிறது. வழிபாட்டு முறைகள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் அளவுக்கு மாற்றம் ஏற்பட வேண்டும் வெளிப்படையாக கருத்து சொல்லுபவர் .

மற்ற பதிவர்களான வெட்டிப்பயல் பாலாஜி, பாதிவுலக பித்தாநன்ந்தா நாமக்கல் சிபி மற்றும் மதிப்பிற்குறிய சுப்பையா வாத்தியார் ஐயா போன்றோரும் பெண்களில் குறிப்பாக கீதா சாம்பசிவம் அம்மாவும், சித்திர ராமாயணம் வழங்கிய வல்லி சிம்ஹன் அம்மாவும் சிறப்பாக ஆன்மிக பதிவர்களாக உலா வருகிறார்கள்.


இந்து மதம் தவிர்த்து பிற பக்தி மாலைகள் கடந்த ஓராண்டில் குறிப்பிடதக்க அளவில் பதிவில் இடம் பெறவில்லை. மாற்று மதத்து சகோதரர்கள் அவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும்.
மேலும் வாசிக்க...

Monday, September 17, 2007

மாலை வண்ண மாலை...

ஒருவார கால வலைச்சர ஆசிரியர் பணிக்கு அழைப்பு அனுப்பிய வலைச்சரம் குழுவினருக்கு நன்றி. வலைச்சரம் என்பது எனது பார்வையில் வலைச்சரத்தின் ஆசிரியராக இருக்கும் வலைப்பதிவாளர் ஒருவர் தமக்கு பிடித்த வலைப்பதிவுகளை தொகுத்து வழங்குவது என்பதாக இதுவரை கண்டு கொண்டதில் இருந்து தெரிகிறது. எனவே குறிபிட்ட இந்த மாலை தொடுப்பில் இருப்பதை தனிப்பட்ட பதிவரைக் கவர்ந்த ஆக்கங்கள் என்ற அளவில் மட்டுமே பார்க்கலாம் மற்றபடி சிலபதிவுகளுக்கு கொடுக்கும் சர்டிபிகேட் என்று கொள்ள முடியாத படித்ததில் பிடித்த ரகமான தொகுப்பு என்று கொள்ளலாம். அந்த வகையில் சிலர் பூக்களை சர(ள)மாக மிக அழகாக தொகுத்து வழங்கினார்கள். அந்த வகையில் நான் படித்து மகிழந்த வலைச்சர தொகுப்பில் ஆசிரியர் சுப்பையா அவர்களின் வலைச்சரம் மிக அழகாக தொகுக்கப்பட்டு இருந்தது. தமக்கு கொடுப்பட்ட பணியை மிக அழகாக செய்திருந்தார். அது போல் பல்வேறு ஆசிரியர்களின் தொகுப்புகள் தோரணமாக வலைச்சர மேடையை அலங்கரித்திருக்கிறது.

நான்கு வாரத்திற்கு முன்பு தமிழ் மணத்தில் நட்சத்திரமாக இருந்ததால் திரும்பவும் மற்றொரு ஒருவார கால தொகுப்பிற்கு பொறுப்பு ஏற்பது கொஞ்சம் அயர்சியாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் தமிழமண நட்சத்திரம் போல் வாரம் முழுவதும் புதிய இடுகைகளை எழுத வேண்டிய தேவை இங்கு இல்லை என்பதாலும், ஏற்கனவே எழுதிவைத்து ஒப்பிக்க வேண்டிய ஒரு நிலையும் தேவை இல்லை என்பதாலும், எப்படியும் வாரத்திற்கு ஏழுபதிவுகள் என எதையாவது எழுதி போட்டு 'நச்'சமுடிவதால் இந்த பணி கடினமாக இருக்காது என்றே நினைக்கிறேன். சித்தரமும் கைப்பழக்கம்.. பதிவு எழுதுவது ஒரு மயக்கம்...எழுதி பழகிவிட்டால் கை அரிப்பை நிறுத்த முடியாது என்ற உன்னத நிலையை பலரும் அடைந்திருப்பது போலவே நானும் அடைந்திருக்கிறேன் :))

இந்த ஒருவார ஆசிரியர் பணியில் 'வண்ண மாலை' என்ற தொகுப்பில் ஒவ்வொன்றாக தருகிறேன். உடன் பதிவர்கள் அனைவரும் அணிந்து மகிழ வேண்டும். வாய்பளித்த வலைச்சரம் குழுவினருக்கும், நம் பதிவுகலக கொள்கை சார் பதிவர், சாராத பதிவ நண்பர்கள் அனைவருக்கும் உடன் (சக) பதிவர் என்ற முறையில் முன்கூட்டிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

வண்ண மாலை ... வானவில்லின் வர்ண ஜாலம் [வருண ஜாலம் அல்ல :)] ஆரம்பம்.





அன்புடன்,

கோவி.கண்ணன்
மேலும் வாசிக்க...

மூன்றில் ஐந்தும், காலங்களின் கோலங்களும்...

தனது குறிப்பிடத்தகுந்த பதிவுகளை நினைவு படுத்தி ஆரம்பித்த ஜி இரண்டாவது இடுகையில் நகைச்சுவைப் பதிவுகள், பெண் பதிவர்கள், இதயம் தொட்ட சிறுகதைகள் என மூன்று சரங்களை ஒரே மாலையில் தொகுத்து விட்டார். அடுத்து வகைப்படுத்தாதவை என்று ஒரு கதம்பமாலையும் தொடுத்துத் தந்தார். மூன்றே இடுகையில் நிறுத்தி விட்டாலும் ஐந்தின் சாரம் அவற்றில் தந்து மகிழ்வித்தார்.

இரண்டு மாதமாக பதிவே எழுதாமல் இருந்தாலும் வலைச்சரத்திற்கென சரம் தொடுத்துத் தொகுத்த ஜி க்கு நன்றி...

அடுத்ததாக வலைச்சரம் தொடுக்க வருபவர் சிங்கை சிங்கம். காலங்களில் கோலமிட்டுக் கொண்டிருக்கும் கோவி.கண்ணன் வலைச்சரம் தொடுக்க வருகிறார். எண்ணக் கவிதையில் வண்ணக்கோலமிடும் கண்ணன் வலைச்சரத்தில் வனைந்து தரும் கதம்பமாலைகளை வாசிக்கலாம் வாருங்கள்.
மேலும் வாசிக்க...

Friday, September 14, 2007

வகைப்படுத்தாதவை...

அரசியல், சினிமா, கதை, கவிதை, ஆன்மீகம், பெண்ணியம், போட்டி, பாடல்கள், அனுபவம், அறிவியல், தத்துவம், செய்முறை விளக்கம் என்று பல துறைகளில் பல பதிவர்கள் எழுதுகிறார்கள். சண்டை, வாக்குவாதம், நட்பு என்று பல கோணல்களில் பதிவர் வட்டம் விரிந்து கிடக்கிறது.

நான் எழுத‌ ஆர‌ம்பித்த‌ கால‌த்தில் எழுதிக் கொண்டிருந்த‌ சில‌ ப‌திவ‌ர்க‌ளை இப்போது காண‌வில்லை. அவ‌ர்க‌ளுள் ஒருவ‌ர் ம‌ன‌சுக்குள் ம‌த்தாப்பு திவ்யா. சிறுக‌தைக‌ளும், தொட‌ர்க‌தைக‌ளும் எழுதிக் கொண்டிருந்த‌வ‌ர் பெண்க‌ளை க‌வ‌ர்வ‌து எப்படி? போன்ற‌ சில‌ ப‌திவுக‌ளையும் எழுதி திருமணமான, ஆகாத ஆண்களுக்குப் பல குறிப்புகளை வழங்கிவந்த அவர் சென்ற வருட இறுதியில் பதிவுலகை விட்டுச் சென்றவர்தான் இன்னமும் திரும்பவே இல்லை.

வானிலை மாற்றம்போல், தமிழ் பதிவுலகில் அவ்வபோது சலனத்தை ஏற்படுத்திச் செல்லும் சிலப் பதிவுகள், அதனைத் தொடர்ந்துப் பல பதிவுகள் வர காரணமாக இருக்கும். கவிதாவின் "ஆண்கள் என்ற மிருகங்கள்", பாலபாரதியின் ஒளிந்து ஒலிக்கும் சாதியக் குரல் போன்ற பதிவுகள் அப்போதைய பலப் பதிவுகளுக்குக் காரணமாக அமைந்தது.

"அந்த" மாதிரி விசயங்களை தொடுவதற்கும் அதனை கையாள்வதற்கும் தமிழ் பதிவர்களுக்கு தனியாக தைரியம் வேண்டும். மூத்தப் பதிவரான ஜி.ராகவன் தன்னுடைய கள்ளியிலும் பால் தொடர் கதையில் இதனை அருமையாகக் கையாண்டிருப்பார். அதே போல் சிறுகதைகளுக்கென்ற ஆர்வத்தைத் தூண்டும் தனித்திறமையைத் தன்னகத்தேக் கொண்டிருக்கும் குப்புசாமி செல்லமுத்துவின் "அண்ணியின் அரவணைப்பில்" கதை பிரமிப்பைத் தரும் ஒன்று.

வானுக்குள் விரியும் அதிசயங்கள், படம் எடுக்கலாம் வாங்க போன்ற பலக் கருத்துள்ள பதிவுகளை எழுதி வருகிறாட் சி.வி.ஆர்.

பாலபாரதியை கலாய்க்கும் பா.க.ச, கைப்புள்ளையை கலாய்க்கும் சங்கம் தவிர்த்து, கவுண்டரின் டெவில் ஷோவையும் பதிவர்களைக் கலாய்க்கும் ஒரு உத்தியாகக் கண்டது தமிழ் பதிவுலகம். ராமின் வெட்டுகாரு செப்பண்டி, வெட்டியின் ர.ரா போன்ற பதிவுகளில் தனிமனித கலாய்த்தலின் நகைச்சுவையைப் பார்க்கலாம்.

இலங்கைத் தமிழர்கள் அவர்களது பேச்சு நடையில் எழுதுவது போல் வட்டார வழக்கில் எழுதுபவர் என்றால் உடனே ஞாபகத்துக்கு வருபவர் ஆசிப் அண்ணாச்சி. அவரது எழுத்துக்களின் நையாண்டி அனைவரையும் சிரிக்க வைக்கும்.

சில நேரங்களில் பதிவுகளையும் மிஞ்சும் அளவிற்கு அதற்கு வரும் பின்னூட்டங்கள் மிகவும் ரசிக்க வைப்பதாக இருக்கும். தம்பியின் எதிர்பால் ஈர்ப்பு பதிவுக்கு வந்தப் பின்னூட்டங்கள் பார்த்தாலே புரியும். மின்னுது மின்னலின் தலைமையில் கும்மிப் பின்னூட்டங்களும் சில நேரங்களில் சிரிக்க வைப்பதாக இருக்கும். கும்மிக்கென்று தனிப் பதிவே ஆரம்பித்தார்கள் என்றால் கும்மியின் மகிமை புரியும்.

தமிழ்மணம், தேன்கூடு போன்ற திரட்டிகளில் இணையாமல் தனியாக பதிவெழுதி வரும் சிலப் பதிவர்களும் நல்லப் பல பதிவுகளை தமிழ் பதிவுலகிற்குத் தந்திருக்கிறார்கள். ட்ரீம்ஸ் என்ற பதிவர் கவிதைகளில் மட்டுமல்லாமல் கவிதை எழுத குறிப்புகள், தத்துவம் என்று பலப் பதிவுகளை எழுதியுள்ளார். அதே பதிவர் வட்டத்தில் இருக்கும் பொற்கொடி, அம்பி போன்ற‌ பதிவரின் பதிவுகள் மிகவும் நகைச்சுவையாக இருக்கும். தனியாக இயங்கும் பதிவர்கள் அவர்களுக்கென்று ஒரு தனி வட்டம் அமைத்ததுமட்டுமல்லாமல் ப்ளாக் யூனியன் என்ற ஒரு கூட்டுப் பதிவும் ஏற்படுத்தி எழுதி வருகிறார்கள். நானும் அந்த யூனியன்ல இருக்கேன் :)

இதுக்கு மேல உங்கள கஷ்டபடுத்த விரும்பல. அதுனால இத்தோட நிறுத்திக்கிறேன்.
மேலும் வாசிக்க...

Wednesday, September 12, 2007

வகைப்படுத்தியவை...

நகைச்சுவைப் பதிவுகள்:

பதிவெழுத ஆரம்பித்த புதிதில் வெட்டிப்பயலின் பதிவுகளில் ஈர்க்கப்பட்டு, அவரது அனைத்துப் பதிவுகளையும் புரட்டி புரட்டிப் பார்த்தேன். அதில் எத்தனையோ நகைச்சுவைப் பதிவுகளி இருந்தாலும் சில மிகவும் ரசிக்க வைத்தது.

கவுண்டமணியின் பரம ரசிகரான வெட்டி, கவுண்டரையும், செந்திலையும் கணினி துறை ஊழியர்களாக அறிமுகப்படுத்தி அசத்தியிருக்கும் "கம்ப்யூட்டர்க் காரன்" தொடர் மிகவும் ரசிக்க வைத்த ஒன்று.

அதைப் போல தன் நண்பர் ஒருவரின் நகைச்சுவை அனுபவங்களை "கோழியின் அட்டகாசங்கள்" என்று தொடராக வெளியிட்டப் பதிவுகளும் அருமை.

தான் தமிழ்மண நட்சத்திரமாக இருந்தபொழுது, கவுண்டரைக் கொண்டு சினிமா நடிகர்களைக் கலாய்த்து ஒரு புதிய கலாய்த்தல் அத்தியாத்தையைத் தொடங்கி வைத்தார் "கவுண்டரின் டெவில் ஷோ" என்ற தொடரின் மூலம்.

பதிவர் தம்பியின் பழைய பதிவுகளைப் புரட்டியபோது, அவரது சின்ன வயசு அனுபவங்களை "வாலிப வயசு" என்ற தொடரில் குறிப்பிட்டுருந்தார். அந்த தொடரும் நகைச்சுவைப் பதிவுகளின் ஒரு முக்கிய எடுத்துக்காட்டு.

நகைச்சுவை என்றாலே உடனே ஞாபகத்துக்கு வரும் இன்னொரு பதிவர் அபிஅப்பா. ஆரம்பத்தில் அவரது பின்னூட்டங்களை சில இடங்களில் பார்த்திருக்கிறேன். திடீரென நகைச்சுவைச் சரவெடிக் கொளுத்தி பதிவுலகில் தனக்கென ஒரு பெயரை மிகவும் வேகமாக எட்டிப் பிடித்தார்.

அவரதுப் பதிவுகளில் சில‌

அஞ்சு ஜார்ஜும் அபி பாப்பாவும்
பத்மா சும்பரமணியம் போட்டிக்குத் தயாரா?
நாந்தான் பத்த வச்சேன்.
இன்னும் பல...

தேவின் எழுத்துக்களில் மிகவும் பிரமித்துப் போனவன் நான். அவரது நகைச்சுவைப் பதிவுகளின் நடை மிகவும் அருமையாக இருக்கும். அவரது ஆபிஸர் தொடரோ, சங்கத்தின் கைப்பிள்ளை கலாய்த்தல் பதிவுகளோ, சிரிக்க, சிரிக்க வைக்க மட்டுமே செய்யும்.

நகைச்சுவைக்கென்றே தனியாக பதிவுகள் வெளியிட்டு வரும் வருத்தப்படாத வாலிபர்கள் சங்கத்தின் பதிவுகளை ஒன்றிரண்டுப் பதிவுகளைக் குறிப்பிட்டு கூற முடியாது. கூட்டுப் பதிவு என்பதால் அதில் வரும் பெரும்பான்மையானப் பதிவுகள் நகைச்சுவை மிக்கவை. அதிலும் கைப்பிள்ளையை மையமாக வைத்து வரும் பதிவுகளெல்லாம் நகைச்சுவைப் பட்டியலின் தலையங்கமாய் இருக்கும்.

நகைச்சுவை உணர்வில் பெண்களும் சலைத்தவர்கள் இல்லை என்று நிரூபித்து வரும் பயமறியா பாவையர்கள் சங்கத்தின் நகைச்சுவைப் பதிவுகளும் படிக்கும் சில நேரத்தில் நமது மனசை லேசாக்கி விடும்.

இன்னும் ஏராளமாக நகைச்சுவைப் பதிவுகள் இருக்கின்றன். இப்போதைக்கு ஞாபகத்தில் இருந்தது மட்டுமே இந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.

பெண் பதிவர்கள்:

தமிழ் பதிவுலகில் பரதரப்பட்ட பெண் பதிவர்கள் இருகின்றனர். அதில் சிலப் பெண் பதிவர்களின் பதிவுகளை மட்டுமே நான் வாசித்திருக்கிறேன். அவற்றுள் சில.

நகைச்சுவைப் பதிவெழுதவே அவதாரம் எடுத்ததுபோல் கிட்டத்தட்ட தன்னுடைய அனைத்துப் பதிவுகளிலும் நகைச்சுவை உணர்வுகளைக் கொட்டிக் கொடுத்தவர் பதிவர் கண்மணி. சுப்ரமணி, பிச்சுமணி, கிச்சுமணி, அம்புஜம் மாமி என்ற புதிதாக பல வேடங்கள் உருவாக்கி அவர்களை மையமாக வைத்து எழுதிய அனைத்துப் பதிவுகளும் சிரிக்க வைக்கும்.

இம்சை அரசி என்ற பெயர் வித்தியாசமாக இருக்கவே அவருடையப் பதிவுகளை வாசிக்க ஆரம்பித்தேன். அதில் "என் சோகக் கதைய கேளு தாய்க்குலமே" பதிவின் கடைசி வரியில் வாய்விட்டு சிரித்தே விட்டேன். கவிதை, கதை என்ற பல பரிமாணங்கள் கொண்ட இவர் ஒரு நாவலாசிரியர் என்பதும் பதிவுலகம் அறிந்த ஒன்று.

தமிழ்நாட்டில் பிறந்தவர்கள் பல பேர் தமிழை மறந்து திரியும் வேளையில், மலேசியாவில் பிறந்து வளர்ந்து, தமிழில் பதிவெழுதுகிறார் மை ஃபிரண்ட். வ.வா. சங்கத்தின் போட்டிக்காக எழுதிய தொடர் மிகவும் நன்றாக இருந்தது.

பலக் கவிதைப் போட்டிகளில் வெற்றுப்பெற்றுள்ள வேதா கவிதைக்கென்று தனியாக ஒரு பதிவையையே உருவாக்கி எழுதி வருகிறார்.

மின்னல் வேகத்தில் பதிவெழுதும் காயத்ரி கவிதையில் மட்டுமல்ல, நகைச்சுவைப் பதிவிலும் கலக்குவார். அவருடைய பரட்டைப் படத்தின் விமர்சனத்தைப் பார்த்தாலே தெரியும்.

யாருக்காவது பிறந்தநாள்னா, வாழ்த்து சங்கத்துல மட்டுமில்ல, ஜி3யுடைய பதிவுலையும் நீங்க வாழ்த்துப் பதிவு பாக்கலாம்.

இதயம் தொட்ட சிறுகதைகள்:

பத்திரிக்கைகளில் வரும் சிறுகதைகளையும் முஞ்சும் பல சிறுகதைகளை தமிழ் பதிவர்கள் எழுதியிருக்கிறார்கள். அவற்றுள் இப்போது என் நினைவில் வந்த சில.

கப்பிப் பயலின் எழுத்தில் ஒரு பழுத்த எழுத்தாளனின் நடைத் தெரியும். அவரின் பல சிறுகதைகளை ரசித்துப் படித்துள்ளேன். அவற்றும் இறப்பும் இறப்பு சார்ந்ததும் கதை கண்களங்க வைத்த ஒன்று.

இதயம் தொடும் பல சிறுகதைகளை பதிவர் தம்பி எழுதியுள்ளார். அவர் எழுத்துக்களில் எனக்கு மிகவும் பிடித்ததே, சின்ன சின்ன விசயங்களையும் விவரிக்கும் அவரது திறன். அவரது மாணிக்கம் பொண்டாட்டி, அன்பின் நிராகரிப்புகள் சில எடுத்துக்காட்டுகள்.

அப்பாவின் காதலை மையமாக வைத்து எழுதிய இம்சையரசியின் காலம் கரைந்தாலும் கதையும் இதயம் தொடும் ஓர் அருமையான கதை.

இறந்து போன ஓர் சொந்தத்தின் நினைவுகளை எடுத்தியம்பும் வகையில் ராம் எழுதிய மாணிக்க மலர் சிறுகதை.

இவ்வளவுதாங்க இப்போதைக்கு ஞாபகத்துல இருக்குது. பதிவுலகோடு தற்போது அதிக தொடர்பில்லாத காரணத்தால் நிறைய பதிவுகள் நினைவில் இல்லை. அதனால சின்னப் பையன்னு மன்னிச்சு விட்டுடுங்க. :)
மேலும் வாசிக்க...

Monday, September 10, 2007

வலைச்சரம் வழியாக திரும்பவும் பதிவுலகில்...

வலைச்சரவெடி கொளுத்த என்னைய இந்த வாரத்துக்குக் கூப்டுருக்காங்க. கிராமத்து முக்குல பம்பரம் விட்டுக்கிட்டு இருந்த பயல, சர்வதேச மைதானத்துல கிரிக்கெட் விளையாட விட்டா எப்படி இருக்குமோ, அப்படித்தான் நானும் இப்ப இருக்கேன்.

பதிவு ஆரம்பிச்ச புதுசுல முழு நேரமும் பதிவெழுதி, படிச்சிட்டு இருந்த நான், அப்புறம் வேலைச் சுமையும், இணைய வசதியின்மையும் காரணமாக ஒரு சின்ன வட்டம் போட்டு அத மட்டும் படிச்சிட்டு, அப்பப்ப பதிவும் எழுதிட்டு வந்தேன். இப்ப ஒரு இரண்டு மாத காலமா அதுவும இல்ல. சுத்தமா பதிவு பக்கமே இப்ப வர்றதில்லை. மூன்று மாசத்துக்கு முன்னமே வலைச்சரம் தொடுக்க அழைப்பு வந்ததால, இதையாவது எழுதிடலாம்னு முடிவுப் பண்ணி எழுதிட்டு இருக்கேன்.

ஆரம்ப பதிவ ஒரு அறிமுகப் பதிவா எழுதச் சொன்னதால, இந்தப் பதிவு ஒரு தற்பெருமை பதிவு :)

நான் எப்படி பதிவெழுத ஆரம்பிச்சேன்னு என்னுடைய இருபத்தைந்தாவது பதிவுல சொல்லிருக்கேன்.

நான் எழுதுன பதிவுகளிலேயே எனக்கும் பிடித்த, பதிவு நண்பர்களும் பாராட்டிய சிலப் பதிவுகளின் சுட்டியை இங்க தர்றேன்

ஏ.ஆர். ரகுமானின் இசையில் வெளிவந்த ஒரு சீனப் பாடல் இணையத்தில் கிடைத்த போது, அதற்கு தமிழில் பாடல் எழுதலாம் என்று நினைத்து எழுதிய வரிகள்

அப்போதைய தேன்கூடுப் போட்டிக்காக எழுதிய ஒரு சிறுகதை. நானே மிகவும் ரசித்து எழுதிய கதை.

வ‌.வா. சங்கத்தின் பதிவுகளைப் படித்து சிரித்து மகிழ்ந்து நானும் கைப்புள்ளையை மையமாக வைத்து ஒரு பதிவு எழுதினேன்.

லொல்லு சபா நடையில் ஏதாவது ஒரு படத்தைக் கலாய்க்க வேண்டுமென்று தேடியபோது அப்போதைய சமீபத்தில் பார்த்த வல்லவன் படம் மூளையைக் குடைய அதனை வைத்து எழுதிய பதிவு.

வெயில் படம் பார்த்தத் தாக்கத்தில் சின்ன வயசு விளையாட்டு ஞாபகங்கள் நினைவில ஆட அதையே ஓர் பதிவாகப் போட்டேன்.

கிராம நடையில் ஒரு சோகக் கதையைச் சொல்லலாம் என்று ஒரு கருவைத் தேர்ந்தெடுத்து, அன்றைய தமிழ் பதிவுச் சூழலுக்கு ஏற்றவாறு தலைப்பிட்டு வெளியிட்டக் கதை.

அப்போதைய சிக்காகோப் பயணப் பதிவு.

பதிவுலகில் என்னுடைய முதல் காதல் கவிதை.

கல்லூரி நாட்களில் காப்பக குழந்தைகளோடு கொண்டாடிய புது வருட கொண்டாட்டத்தின் நினைவலைகள்.

ஒரு காதல் கதை.

நகைச்சுவை நடையில் எழுதிய லாஜிக்கில்லாத ஓர் கதை.

அமெரிக்காவில் நடைப்பெற்ற பொங்கல் திருநாள் விழாவிற்கு சென்றபோது விளைந்தப் பதிவு.

எயிட்ஸால் பாதிக்கப்பட்டக் குழந்தைகளைப் பார்க்கச் சென்ற போது ஏற்பட்ட வலியில் எழுதியக் கவிதை.

கூகுல் ரீடரைப் பற்றிய ஓர் அறிமுகப் பதிவு.

முன்னச் சொன்னச் சீனப் பாடலின் ஒலிவடிவம். மருதத்தின் குரலில்

இந்தியா திரும்பியபோது அமேரிக்க மாப்பிள்ளைகளின் அமர்க்களங்களைப் பற்றிய ஓரு நகைச்சுவைப் பதிவு.

திருநெல்வேலி பக்கம் நடைபெறும் அறுவாச் சண்டையை மையமாக வைத்து எழுதிய கதை.

இன்றைய இளைஞர்கள் (நேற்றைய இளைஞர்களும் இப்படித்தான்) மனதில் எப்போதும் குடியிருக்கும் கவிதை.

சுற்றுலாச் சென்றபோது எடுத்தப் புகைப்படங்கள்.

இதோட என்னுடைய தற்பெருமை பதிவ முடிச்சிக்கிறேன். அடுத்தப் பதிவுல சந்திக்கலாம்.
மேலும் வாசிக்க...

தொடரும் சரம் தொடுக்கும் சரம்

அவசரமாகப் பொறுப்பேற்றுக் கொண்டு அமைதியாகத் தொடங்கி அதிரடியாகப் பதிவுகள் இட்டு வலைச்சர வாரத்தை வசந்தமாக்கிய பிரின்சு (பெரியார்) நேரம் போதவில்லையென்று இன்னும் தன் பதிவில் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

அவரது முதல் சரத்தில் இருந்த வாசகம்
"ஒரு கட்டுரை போட்டுட்டேன். இன்னும் ரெண்டுதானே பாக்கி....!"
வலைச்சர விதிகளில் குறைந்த பட்ச தேவையாக மூன்று இடுகைகள் இட வேண்டும் என்று சொல்லி இருக்கிறோம். அதிக பட்சம் எத்தனை வேண்டுமானாலும் அந்த வாரத்தில் இடலாம். இவர் இப்படி கேட்டதால் மூன்று தான் இடுவார் போல என்று நினைத்து விட்டது முதல் தப்பு ;)

மெதுவாக ஆரம்பித்த அவரது சரம் வேகமாகத் தொடர்ந்து இன்னும் - அங்கே தொடர்ந்து கொண்டிருக்கிறது. நல்லதொரு வலைச்சர வாரம். அவரது ஆர்வத்திற்கும் அர்ப்பணிப்புக்கும் நன்றி.

அடுத்ததாக வலைச்சரம் தொடுக்க வருபவர் பெயரிலிலேயே தனித்த அடையாளம் காட்டுபவர்களில் இன்னொருவரான - ஜி. சரம் தொடுப்பதிலும் அந்த வித்தியாசம் எதிர்பார்க்கலாம். வலைச்சர வாரத்தில் வெயிலில் மழை பொழிய இதோ வருகிறார் ஜி...
மேலும் வாசிக்க...

புதியவர்களின் அவசர உதவிக்கு...

இன்னும் சில தொகுப்புகள் தான். அதிகம் அறிமுகம் இல்லாவிட்டாலும் இணைப்புச் சுட்டி கண்டிப்பாக உண்டு!

திடீர், திடீரென நண்பர்கள் சிலர் ஏதாவதொரு எழுத்தைச் சொல்லி இதில் ஒரு தமிழ் பெயர் சொல்லுங்கள் என்று கேட்பார்கள். அந்த நேரத்தில் மலேசியா பாரி அவர்களின் தொகுப்பையோ, திருவெறும்பூர் அரசெழிலன் அவர்களின் தொகுப்பையோ தேடிக் கொண்டிருக்க முடியாது. இணையத்தில் இருந்தால் சொல்லிவிடலாமே என்று யோசித்துக் கொண்டிருந்தபோது அண்ணன் வரவனையான் தன் பதிவிலும் இதன் முக்கியத்துவத்தைப் பற்றி எழுத, அதேநேரம் நண்பர் ஒருவர் இட்ட பதிவில் சுட்டி கொடுத்திருந்தார். மிகவும் பயனுடைய இந்த சுட்டியை பத்திரப்படுட்திவிட்டேன். சுட்டி கொடுத்தவரை விட்டுவிட்டேன். நான் பெயர் மறந்த தோழருக்கு நன்றி! (அப்புறம் என் பெயரைப் பற்றிக் கவலைப்படுபவர்களுக்கு, எங்கப்பாவுக்கு அந்தக் காலத்தில இந்த சுட்டி கிடைக்கலையாம், அதுதான் நான் பிறருக்கு உதவுறேன்)

இணைய வானொலிகளுக்கான இணைப்புச் சுட்டி கொடுத்த பொன்வண்டுக்கு நன்றி!

ஓர்குட்-டைத் தமிழில் மாத்திக்கலாமாம்ல...

தமிழ்நெட் 99: புதியவர்களுக்கு (எனக்கும் சேர்த்துதான்)

எ-கலப்பை நிறுவ முடியாதவர்களுக்கு சயந்தனின் இந்தப் பக்கத்தில் வலது கோடியில் சென்றும் தட்டச்சலாம். எந்த மென்பொருளும் நிறுவ வேண்டியதில்லை.

விதம் விதமான யூனிக்கோடு எழுத்துருக்கள் தரவிறக்க.
மேலும் வாசிக்க...

எனது கோப்பிலிருந்து...

நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. கொடுக்கப்பட்ட பணியை கொஞ்சமாவது பொறுப்போடு செய்ய வேண்டிய அவசரத்தில் இருக்கிறேன். அதனால் கூடிய மட்டும் நான் முக்கியமாகக் கருதியவை அனைத்தையும் பதிந்து விடுகிறேன்.

காரைக்குடி நகரில் பிறந்து, பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே வளர்ந்து, ஊரை பெரிதாக சுற்றியவன் இல்லை என்றாலும் என் ஊரைப் பிரிந்து இருப்பது என்றால் ஒரு மாதத்திற்கு மேல் தாங்கமுடியவில்லை; ஊருக்கு ஓடிப்போய்விடுகிறேன். கொஞ்சம் சம்பாதித்துவிட்டு திரும்ப என் ஊருக்குள் சென்று பதுங்கிக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் நினைத்துக் கொள்வேன். நமக்கே இப்படி என்றால் வெளிநாட்டுக்கு சென்று நீண்ட காலமாக நல்ல பணியில் இருப்பவர்களெல்லாம் சொந்த நாடு திரும்புவதற்கு எப்படி ஆசைப்படுவார்கள்? அல்லது, அந்த நாட்டின் சுகபோக வாழ்க்கையை விட்டு வசதிகளற்ற சொந்த ஊருக்கு எப்படி திரும்புவார்கள்? என்றெல்லாம் என்னுள் கேள்விகள் எழும். அந்தக் கேள்விகளுக்கு விடை சொன்னது இந்தப் பதிவுதான். அப்படி வாழ்வோரின் பின்னூட்டங்களும் கூட படிக்க வேண்டியவை. நாடு விட்டுச் செல்லுதல் உணர்வில் எத்தனை மாறுதலைக் கொடுக்கிறது... நான் செத்தாலும் என்னை என் ஊரில் புதையுங்கள் என்பதும், என் சாம்பலையாவது என் ஊரில் சேர்த்து விடுங்கள் என்றெல்லாம் விரும்புவது இப்படித்தானே! இந்த நேரத்தில் நாம் ஈழம் விட்டு புலம்பெயர்ந்து வாழும் எம் சொந்தங்களை நினைக்காமல் இருக்கமுடியவில்லை.எல்லா இரவுகளும் விடியும்! நம்பிக்கை இருக்கிறது.

ஷில்பா ஷெட்டியின் உள்ளாடைக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருந்த இந்திய மானத்தை இந்திய ஊடகங்களெல்லாம் தேடிக் கொண்டிருந்தபோது ஷில்பா ஷெட்டி தேசத்தின் அவமானம் என்று உரத்த குரலோடு சொல்லி விளையாட்டு வீராங்கணை சாந்திக்கு இப்படி ஏன் யாரும் குரல் கொடுக்கவில்லை என்ற கேள்வியை எழுப்பி ஊடகங்களை மிதித்து நடந்த நடைவண்டி!

சட்டம் போட்டும்... கட்டாயம் என்று அறிவித்ததும்... இன்னும் முரண்டு பிடித்துக் கொண்டு இருக்கும் பிரச்சினை. பொதுவுடைமைத் தோழர்கள் இது போல சில விசயங்களில் எப்படி மக்கள் விரோத, தங்கள் கோரிக்கைக்கே முரண்பாடான விசயங்களைக் கையில் எடுக்கிறார்களோ தெரியவில்லை. விலைவாசி உயர்வு என்று ஒருபக்கம் போராட்டம். தொழிற்சங்கங்களைத் தக்க வைத்துக் கொள்ள ஆட்டோ கட்டணத்தைக் குறைக்கக்கூடாது என்று கோரிக்கை வைத்தால் கூடப் பரவாயில்லை. 'மீட்டர் போடு' என்று கட்டாயப்படுத்தக்கூடாது என்று சென்னையில் போராட்டம் வைக்கிறார்கள். நாடு முழுக்க ஒரே விலை விற்கக்கூடிய பெட்ரோலை காரணம் காட்டி இங்கு மட்டும் அலும்பு கூட்டும் ஆட்டோ பற்றிய வேதனை.

ராணுவத்தின் மீதான புனிதபிம்பம் வலிந்து அரசுகளால் திணிக்கப்படுவது. தேசப்பற்றின் அடையாளமாகக் காட்டப்படும் ராணுவத்தில் நிகழும் அவலங்கள் வெளிப்படுவதை அரசுகள் விரும்புவதில்லை. ஆனால் இந்திய ராணுவத்தின் ஈழ அத்துமீறல்கள், மிஸோரம் மனித உரிமை மீறல்களையும் தாண்டி, ராணுவத்துக்குள்ளேயே நிகழும் தற்கொலைகளும், கொலைகளும் அந்த பிம்பத்தை உடைத்தெறிகின்றன. இது நேரடியாக வலைப்பூவுக்காக எழுதப்படவில்லையாயினும் நல்ல பதிவு. அதே வலைஞரின் 'தியாகியாக்கப்பட்ட சர்வாதிகாரி' படிக்கலாம்.

இந்த வரிசையில் பாமரன்! பாமரனைச் சொல்லாமல் நான் ரசித்தவை நிறைவு பெறாது. கோவையின் குறும்பு வார்த்தைகளால், நக்கலடிப்பதும், சவுக்கைச் சொடுக்குவதும், உருகும் வார்த்தைகளால் விசயங்களைப் பதிய வைப்பதிலும் பாமரனின் லாவகம் அவருக்குத்தான் வரும். அவரது சேகுவேரா பற்றிய தோழிக்குக் கடிதம் தான் என்னை சேயின் பக்கம் அதிகம் கவனம் கொள்ள வைத்தது. குமுதம், விகடன், தினமலர் என்று வெகுஜன ஊடகங்களில் இவரது எழுத்துகள் வருவது இன்னும் பலரை இந்தக் கருத்து சென்றடைய உதவுகிறது. அவருக்கென தனி வாசகர் வட்டமும் இருப்பதால் வணிக இதழ்கள் அவர் எழுதுவதை வரவேற்கின்றன. தீராநதியில் அவர் எழுதிய 'தெருவோரக் குறிப்புகள்'-இல் 'கன்விக்டட் வார்டன்கள்' பற்றிய கட்டுரையை பள்ளி, பள்ளியாக ஏறி துண்டறிக்கையாகக் கொடுக்கவேண்டும். அவரின் எழுத்துகள் வலைப்பூவில் வந்திருப்பதும், அவரும் வலை தளங்களில் கவனம் செலுத்துவதும் வரவேற்கத்தக்கது. தொடர்ந்து அனைவரும் படிக்க வேண்டிய வலைப்பூ பாமரனுடையது!

பட்டியல் தொடரும்...
மேலும் வாசிக்க...

Sunday, September 9, 2007

நெஞ்சை உருக்கும் உலகத் திரைப்படங்கள்

வலைச்சரத்தின் 150-வது இடுகையை எழுதுவது பெரும் மகிழ்ச்சி!

ஒரு திரைப்படக் கல்லூரி மாணவனாக சேரும் முன்பே உலகத் திரைப்படங்களின்பால் ஈர்ப்பு இருந்தது எனக்கு.ஜெர்மானிய "மாக்ஸ் முல்லர் பவனும்", பிரெஞ்சு கலாச்சார மய்யமான "AFM"-ம் சென்னை வந்த புதிதில் நான் அதிகம் செல்லும் இடங்கள். அங்கே திரையிடப்படும் திரைப்படங்களை ஆளில்லாத அரங்குகளிலோ, அல்லது கட்டுக்கடங்கா கூட்டத்துடனோ பார்த்து மகிழ்ந்திருக்கிறேன்.
திரைப்படக்கல்லூரியில் நுழைந்த பிறகு வாரம் ஒரு உலகப் படம், அதைப் பற்றியே பேசிக்கொண்டிருக்க சுற்றிலும் நண்பர்கள், பேராசிரியர்கள், வருடம் இரண்டு முறை திரைப்பட விழாக்கள்(ICAF- சென்னை, IFFI - கோவா), அவ்வப்போது சிறப்புத் திரைப்பட விழாக்கள், சத்யம் திரையரங்கும் தமிழ்நாடு திரைப்பட இயக்கமும் இணைந்து வழங்கிய 100 Years of World Cinema, பாரிமுனையின் DVD பஜார் என்று எனது உலகசினிமாவின் விரிவு இருந்தது.

நல்ல திரைப்படங்களை அனைவரையும் ரசிக்க வைக்க வேண்டுமென்ற நோக்கில் விரைவில் உருவாக இருக்கிறது 'கறுப்புத்திரை' என்ற இன்னொரு திரையிடல் அமைப்பு!

நான் ரசித்த திரைப்படங்களையும், ரசிக்க வேண்டிய திரைப்படங்கலையும் பற்றி எழுதிக் கொண்டிருக்கும் இந்த பதிவர்கள் முக்கியமானவர்கள். இதில் இன்னும் சீரியஸாக எழுதக் கூடியவர்கள் விடுபட்டிருக்கலாம். முதலிலிருந்துதான் தொடங்க வேண்டும். அதற்குப் பிறகு தேடல் தானே அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும்.

"சினிமா பேரடைஸோ" , எல் போஸ்டினோ(The Postman) போன்ற திரைப்படங்களில் நான் ரசித்துப் பார்த்த நடிகர் பிலிப்- அவர்களின் மறைவை ஒட்டி எழுதப்பட்ட பதிவு... பிலிப் பல கோணங்களில் வயதான் நமது சிவாஜி போலவே இருப்பார். அவரது வெளிப்பாடுகளும், மெய்ப்பாடுகளும் பலமுறை எனக்கு சிவாஜியை நினைவுபடுத்தியிருக்கிறது.

ஆப்கானிஸ்தானின் தாலிபான் ஆட்சியில் மதவாதக் கொடுமைகளின் ஒரு சிறிய வெளிப்பாடு ஒசாமா.

நமக்கேன் வம்பு என்றில்லாத ஒருவரின் மீது சமூகத்திற்கு எழும் எதிர்ப்புணர்வு.
இந்தத் தளத்தின் ஹயாத், கார்ப்பொரேட் விமர்சனங்கள் குறிப்பிடத்தக்கவை.

உலகத்திரைப்படங்களைப் பற்றிய அறிமுகம் தரும் தொடர்

1990-களுக்குப் பிறகு உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த ஈரானிய சினிமாக்கள் பற்றிய அறிமுகம்.

அல்வாசிட்டி விஜய்யின் உலக சினிமா பார்வை ரசிக்கத்தக்கது. marooned in iraq பற்றிய விஜயின் பதிவு..

இவர்களின் இந்தப் பதிவு மட்டுமல்லாமல் உலகசினிமா பற்றிய அனைத்துப் பதிவுகளும் படிக்கப் பட வேண்டியவையே. வாய்ப்பிருந்தால் இதே தொகுப்பின் இரண்டாம் பாகமும் இடுகிறேன்.
மேலும் வாசிக்க...

Saturday, September 8, 2007

நான் பரிமாறிய பதார்த்தங்கள்-2

நான் பரிமாறிய பதார்த்தங்களின் முதல் அமர்வை ரசித்திருப்பீர்கள் என்று மூட நம்பிக்க கொள்கிறேன். (ஏம்ப்பா இன்னும் யாரும் படிக்கலையா? இதுக்குத்தன் சனி, ஞாயிறுகள்ல பதிவு போடக்கூடாதுன்னு சொல்றது.) சரி, அடுத்த அமர்வு!


மலேசியாவைச் சேர்ந்த சுயமரியாதைக்காரர் அ.சி.சுப்பையா எழுதி அன்றைய அரசுகளால் தடை செய்யப்பட்ட "சுந்தரமூர்த்தி நாயனார் கிரிமினல் கேஸ்"- இந்துமதக் கடவுள்களை கூண்டில் நிறுத்திய அற்புதமான நூல். அதைப் போன்று நல்ல கற்பனை வளத்துடன் எழுதப்பட்ட சிந்தாநதியின் படைப்பு. நான்கு பாகமாக இணையத்தில் (1) (2) (3) (4) வந்த இந்த சிறுகதை, உண்மை மார்ச் 1-15, 2007 இதழில் வெளியிடப்பட்டது.


குழலியின் 'பெரியார்' திரைப்பட விமர்சனம் சுருக்கி "உணர்ச்சி காவியப் பதிவு" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது.(உண்மை மே 16-31, 2007). இது முழுமையாக விடுதலையிலும் வெளியிடப்பட்டது.


"அம்பலமானது கோக் பயங்கரம்" என்ற பவானந்தியின் கட்டுரைக்காக நாங்கள் செய்த அதிரடி ஆய்வு, அநேகமாக நான் பதிந்த முதல் வலைப்பூ இதுவாகத்தான் இருக்கும். இதுவரை சுமார் 42000 பேர் youtube-இல் பார்த்து அதிலும் அமெரிக்கர்கள் ஆங்கில கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை செய்த வீடியோ காட்சி அடங்கிய பதிவு. (அவர் தனியாக வலைப் பதிய இருப்பதால் விரைவில் இந்தப் பதிவு என்னிடமிருந்து பிரியக்கூடும்.)

அந்தா இந்தா என்று ஆட்டம் காட்டிக் கொண்டிருந்த கோக் தடை விவகாரத்தை விரைவுபடுத்த வலியுறுத்திய "தலைமுறைய முடமாக்கும் குளிர்பானங்கள்" என்ற இந்தப் பதிவு வெளியிடப்பட்டபோது தவறுதலாக எழுதியவரின் பெயர் உண்மையில் விடுபட்டுவிட்டது.(உண்மை ஜூன் 16-31, 2007)

"நோ கமெண்ட்ஸ்" என்று லக்கி பதிவிட்ட இலங்கை ராணுவத்தின் ஒப்புதல் வாக்குமூலம்.

இவைதவிர.... பெரியார் பிஞ்சு இதழில் பயன்படுத்திய அண்ணன் பாலபாரதியின் படைப்பு.. என்ன செடி இது?

வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன் என்ற வளரும் நகைச்சுவை எழுத்தாளர் மற்றும் கவிஞரின் ராமர் பாலம் குழுவினருக்குக் கடிதம் விடுதலை ஞாயிறு மலரில் வெளிவந்தது. (நேரில் ஆளைப் பார்த்தால் இவரா இப்படி எழுதுகிறார் என்று அய்யப்பட வைக்கும் அளவுக்கு அமைதியான முகம். ஆனால் அருமையான குணத்தவர் கவுதமன்)

சரி, இன்னும் 41 மணிநேரம் தான் இருக்கு... திங்கள் காலை 10 மணி வரை நேரமிருக்கு... விடமாட்டேன்... விடமாட்டேன், இந்த வாய்ப்பை!
மேலும் வாசிக்க...

Friday, September 7, 2007

நான் பரிமாறிய பதார்த்தங்கள்-1

உப்புமா கிண்டினதோட காணாமல் போயிட்டானே! ஊசிப்போச்சுடா சீக்கிரம் வா-ன்னு எல்லாரும் கூப்பிடுற அளவுக்கு ஆகிப்போச்சு... ரெண்டு நாளா ஆணி புடுங்குற வேலை! மறுமொழிகளில் என் மேல நம்பிக்கை வச்சு வாழ்த்தி(!?)க் கூப்பிட்ட அனைவருக்கும் நன்றிங்க! உப்புமாவோட சுவையைப்பற்றி காசிலிங்கம் அவர்கள் எழுதிய பதிவுக்கு ஒரு சுட்டி கொடுத்து அவரே சரம் தொடுக்கிற பணியில உதவியிருக்காரு! அவருக்கும் நன்றி!

வலைப்பூக்களை வாசிக்க ஆரம்பித்த பிறகு அதில் என்னைக் கவர்ந்த விசயங்களைத் தொகுத்து வைத்ததோடு மட்டுமல்லாமல், 'உண்மை' இதழிலும் அவற்றைப் பிரசுரித்து வலைப்பூக்களைப் பற்றிய அறிமுகத்தை எங்கள் வாசாகர்களுக்கு வழங்க விரும்பினேன். வலைப்பூக்களில் நமக்கே நமக்கு என்று இடம் இருந்தாலும் அச்சு ஊடகத்தில் வெளிவருவதும், யாரோ ஒருவர் நம்முடைய படைப்பை சிறந்ததென்று தேர்ந்தெடுத்து வெளியிடுவதும் பெரும் மகிழ்ச்சிதானே! யாரோ சமைத்து நான் பரிமாறிய பதார்த்தங்களை ('உண்மை'யில் வெளிவந்த வலைஞர்களின் படைப்புகளை) இங்கு பட்டியலிடுகிறேன்.

சமா.இளவரசனின் இந்தக் கட்டுரை பல இடங்களிலும் மீண்டும் பதிக்கப்பட்டது. தங்களுக்கெதிரான எதன்மீதும் காகித அம்புகளால் போர்தொடுத்துக் கொண்டிருந்த பார்ப்பனர்களின் புதிய குருஷேத்திரமாக இணையம் மாறிவிடுமோ என்ற எச்சரிக்கையின் காரணமாக உண்மையில் எழுதப்பட்ட கட்டுரை. பிறகு வலைப்பதிவாக இடப்பட்டது.

ஊடகங்களில் உயர்ஜாதியினரின் ஆதிக்கம் அதிகம் இருப்பதை ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டி, அப்படியிருப்பின் அவற்றில் சமூக நீதிக்கெதிரான குரல் தானே ஒலிக்கும் என்பதனை தெளிவுபடுத்திய சுந்தரவடிவேல் அவர்களின் கட்டுரை 2007 அக்டோபர் 16-31 உண்மை இதழில் வெளிவந்தது.

ராமேஸ்வரத்தில் ஆர்.எஸ்.எஸ்-ன் நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்பது நான் நன்கு அறிந்ததே. திராவிடர் கழக மாநாட்டு அலுவலகத்தைத் தாக்கி, அதன் பின்னும் மாநாட்டிற்கு ஒத்துழைத்த ரிக்சாகாரரை தாக்கிய 1980-களில் இருந்து, திராவிடர் கழக மாவட்டத் தலைவர் அண்ணன் சிகாமணி அவர்களை பாம்பன் பாலத்தின் நடு வழியில் அரிவாள் கொண்டு தலையில் வெட்டி, அரை மயக்க நிலையில் அவர் காவல் நிலைய வாசலில் வந்து விழுந்த 1990, தி.க. பிரச்சாரக் கூட்டத்தில் வந்து கலகம் செய்த 2000 வரைக்கும், ஏன் இன்றைய ராமன் பால விவகாரம் வரை, வடநாட்டுக் காசு ஆர்.எஸ்.எஸ்.-சை அங்கு எப்படி வளர்த்திருக்கிறது என்பதை தொடர்ந்து கவனித்தே வருகிறேன். இதோ ராமேஸ்வரம் மண்ணின் மைந்தரும், ஆர்.எஸ்.எஸ்.சில் பயிற்சி எடுத்தவருமான பாலபாரதி (இப்படிச் சொல்லி பா.க.ச தலையை அசிங்கப்படித்திட்டியேடா..பிரின்சு) அவர்களின் "பிஞ்சுகளைக் குறிவைக்கும் மதவாதம்" (டிசம்பர் 1-15, 2006 உண்மை)

வரதட்சணை வாங்குவதை குடும்பத்தின் பேர்சொல்லி அனுமதிக்கும் பொறுப்பற்றதனத்தை (எஸ்கேப்பிசத்தை) சாடிய பொன்ஸ்-ன் "இலவசமாய் ஏதுமில்லை" சிறுகதை. (உண்மை டிசம்பர் 16-31, 2006)

தனது வெப் ஈழம் இணையதளத்தின் மூலம் பகுத்தறிவுக் கருத்துகளையும், ஈழச்செய்திகளையும் பகிர்ந்து வந்த தோழர் வி.சபேசன் அவர்களின் படைப்புகள் அவ்வப்போது உண்மையில் வெளியிடப்பட்டிருக்கின்றன. அவற்றில் சில "பெண்களை இழிவுபடுத்தும் ஜோதிடம்" (உண்மை பிப்ரவரி 16-28, 2007 & எனது பதிவில்..)

பெண்னடிமைச் சின்னமான தாலி உருவானது பற்றிய குறுங்கதை (உண்மை மார்ச் 1-15, 2007)

இதன் அடுத்த பாகம் இன்னிக்கே போட்டுறேங்க. அப்புறம் இன்னிக்கு காலையில கூட உப்புமா தான் சாப்பிட்டேன். நிஜம்மா!
மேலும் வாசிக்க...

Monday, September 3, 2007

நான் ரவா உப்புமா மாதிரி!

'அழகன்' படம் பார்த்திருக்கிறீர்களா? அதில் பானுப்பிரியாவின் மேடை ஆடல்பாடலை பாராட்ட வரும் மம்முட்டி மேடையில "நான் ரவா உப்புமா மாதிரி"ன்னு பேச்சை ஆரம்பிப்பார். 'ஹோட்டல்-ல சரக்கு தீர்ந்துடுச்சுன்னா அவசரத்துக்கு ரவா உப்புமா போட்டு சமாளிப்பாங்க. நானும் அந்த மாதிரிதான். தலைமை தாங்க ஆளில்லைன்னு என்னை பிடிச்சுகிட்டு வந்துட்டாங்க. ஆனா ரவா உப்புமாவும் சில சமயம் நல்லா இருக்கும்'பார். இப்ப நானும் அதே மாதிரிதான்.

நான் தான் வழக்கமா பொன்ஸ் அக்காவுக்கு போன் பண்ணியோ மெயில் அனுப்பிச்சோ ப்ளாக்-ல இந்த பிரச்சினை என்ன தீர்வுன்னு கேட்டுகிட்டிருப்பேன். ஆனா திடீர்னு வராது வந்த மாமணி மாதிரி அவங்க கிட்டயிருந்து கூகிள்-ல அழைப்பு!

"இந்த வாரம் ப்ரீயா இருக்கீங்களா?" பொன்ஸ் அக்கா கேட்டார்.

"இதென்ன கேள்வி... நீ எப்ப வேலை பார்த்துக்கிட்டிருந்த?" என்னைப் பார்த்துக் கேட்டான் தம்பி புருனோ.

"அடுத்த வாரம் எழுத ஆள் தேவை... குறுகிய காலம்... அதான் உங்களைக் கேட்கலாம்னு நினைச்சேன்."

"சரி, பழைய வலைச்சரங்கள் பார்த்துட்டு சொல்றேன்." என்றேன்.
"ஏற்கனவே உன்னையும் கம்ப்யூட்டரையும் பிரிச்சு வைக்க வேண்டியதாயிருக்கு. இந்த லட்சணத்தில் வலைச்சரம் ஒரு வாரத்துக்கா...சுத்தம்.. நீ கிட... நான் போய் சாப்பிடப்போறேன்" என்று கிளம்பிவிட்டான் தம்பி.

என்னுடைய பழைய புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தபோதுதான், நான் இந்த வலைப்பதிவர் குடும்பத்துக்குள் வந்து ஓராண்டு நிறைவடைகிறதுங்கிறதே எனக்குத் தெரிந்தது. அதை ஒட்டி ஒரு பதிவு போடனும்னு நினைச்சுகிட்டு இருந்தப்போதான் பொன்ஸக்காவோட அழைப்பும் வந்தது.. சரி, நம்மளோட ஆண்டுவிழாவை வலைச்சர வாரமா அறிவிச்சிருக்காங்க போலிருக்குன்னு சந்தோசமா ஒத்துக்கிட்டேன்.

ஒப்புக் கொண்டதும், பழைய சரங்களையெல்லாம் ஒருதடவை முகர்ந்து பார்த்தேன். எல்லாம் நல்லாத் தான் கட்டியிருக்காங்க. சரி, நம்முளும் ஆட்டத்தை ஆரம்பிப்போம்னு வந்துட்டேன். இந்த சரம் மணக்கிறதும் இல்லாததும் நான் கட்டுற பூக்களைப் பொறுத்துதான் இருக்கு. இப்பவெல்லாம் நார் வச்சு யாரும் கட்டுறதில்லைங்கிறதால் ஒரு நூலாக இருந்து என் பணியைத் தொடங்குகிறேன். நிச்சயம் முப்புரி நூல் இல்லை...

தொகுப்பாசிரியர் பணி நமக்கொன்னும் புதுசு இல்லைன்னாலும், மேசையில கிடைக்கிறதை தொகுப்பதற்கும், தேடித் தேடித் தொகுப்பதற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. நமக்குப் பிடிச்சு படிச்சதை எல்லோரும் குறிச்சு வச்சிருப்போமுன்னு சொல்ல முடியாது. ஏதோ கொஞ்சம் "notable sites"னு ஒரு பட்டியல் வச்சிருக்கேன். ஆனாலும் அதில் வலைப்பூக்கள் கொஞ்சம் தான். மற்றதெல்லாம் படிச்சு வாழ்த்திட்டு வந்ததோட சரி. தேடிப் பிடிச்சு தொகுக்க முயல்கிறேன்.
ஒரு பேராசிரியருக்குப் பிறகு இந்த மாணவனுக்குக் கிடைத்திருக்கிறது வாய்ப்பு! எல்லாத் தரப்பிலயும் தேர்ந்தெடுக்குறதுக்கு முன்னாடி உங்க கிட்ட இருக்குற சரக்கைக் கொஞ்சம் காட்டுங்கன்னு வலைச்சர வழிகாட்டியில் சொல்லியிருக்காங்க...அதனால் இப்போ என் பக்கம் இருந்து ஆரம்பிக்கிறேன். இந்தியாவில் இருந்துகிட்டு இரவு நேரத்தில்தான் பதிவுகள் போடுறேன்கிறதால பல பதிவுகள் காலைக்குளேயே இன்றைய இடுகைகளில் கீழ போயி, கவனம் பெறாமல் போயிடுறது உண்டு. அதனால அதிகம் படிக்கப்பட்ட பக்கங்களைவிட எல்லோரும் படிக்கணும்-னு நான் நினைச்சு பலர் படிக்கவிட்ட பதிவுகளைத் தொகுத்து தரலாம்-னு நினைக்கிறேன்.
ண்மையிலதான் ஆங்கிள், லென்சுன்னு பிலிம்/ டிஜிட்டல் காட்டுறாங்க தமிழில் புகைப்படக்கலை பதிவுல...ஆனா வலையுலகுக்கு வந்து நாலாவது நாள் நான் போட்ட பதிவு- லோ ஆங்கிள் மற்றும் பயன்பாடுகள் பற்றி!

ராக் போர் நடந்த போது, ரத்தக்கொதிப்பு(!)ல நான் எழுதின ஒன்னுக்குக் கீழ ஒன்னு(அதாங்க கவிதை). ரசனைக்காக வைரமுத்து குரல்-ல படிச்சுப் பார்க்கிறது உங்க சாமர்த்தியம். ஆனால் இது அனைவரின் குரலாய் இருக்கணும்கிறதுதான் என்னோட ஆசை.

நான் ரொம்ப ரசிச்ச ஆயிரத்தில் ஒருவனை திரையில் பார்த்த அனுபவம்.

மெரிக்காவோட நிமிட்சு கப்பல் வந்து போனப்போ, அதோட சேர்ந்து கப்பலேறிப்போன நம்ம மானத்தைப் பற்றி எங்கள் தங்கம் பாணியில எங்களோட 'இனநலம் இசைக்குழு' உருவாக்கின கதாகலட்சேபம்.
பலரால் படிக்கப்பட்ட கட்டுரைகளையும் இப்பவே தந்தால் பழைய நிலைமைதான் மேற்கண்ட கட்டுரைகளுக்கும்!

அதனால் அது இன்னொரு சமயத்தில்...

யாம் பெற்ற இன்பம் நீவீரும் பெற என்னுடைய தொகுப்பு தொடரும்.....

இது அறிவிப்பு அல்ல;
எச்சரிக்கை!
பொறுப்பாசிரியருக்கு:பொன்ஸ்அக்கா, ஒரு கட்டுரை போட்டுட்டேன். இன்னும் ரெண்டுதானே பாக்கி....!
பதிப்பாசிரியருக்கு: பதிப்புல எந்த பாதிப்பும் இல்லாம இருந்தா சரி!
மேலும் வாசிக்க...

அடுத்தது பெரியார்॥

ஆரம்பத்தில், "நான் ஒரு சோம்பேறி" என்ற முன்னுரையுடன் தொடங்கிவிட்டு மழையாக இடுகைகளைப் பொழிந்துவிட்டார் தருமி. நகைச்சுவைப்பதிவர்கள், உப்புமா, டாப் இரண்டு, துக்கடா என்று பலவித தலைப்புகளிலும் எழுதியிருக்கும் பேராசிரியர், கொஞ்சம் அதிக சுட்டிகளை இணைத்திருக்கலாம். உங்களிடம் இருக்கும் தரவுகளுக்கு, கூகிள் ப்ளாக் தேடலில் சுலபமாக அகப்பட்டிருக்குமே தருமி?

இந்த வாரம் எழுத ஒப்புக் கொண்டவர் திடீரென்று அதிக வேலை என்று ஜகா வாங்கிவிட, அவசர அவசரமாக ஒரே நாளில் கேட்டு, ஒப்புக் கொண்டவர் புதிய பதிவர். அதிகம் பதிவுகளில் செயல்படாவிட்டாலும் வரும் போதெல்லாம் அதிரடியாக ஆணித்தரமான கருத்துகளுடன் எழுதும் பிரின்ஸ் என்னார் சமா தான் இந்தவார வலைச்சர ஆசிரியர். பிரின்ஸ் பெரியாரின் வாரம் பதிவுலகின் பல புதிய பக்கங்களை வெளிச்சமிட்டு காட்டும் என்று நம்புகிறோம்
மேலும் வாசிக்க...

Sunday, September 2, 2007

(கண்ணீர் மல்க) விடை பெறுகிறேன்.

தருமி: ஹலோ ..!

பொன்ஸ்: உங்கள இந்த வாரத்துக்கு ஆசிரியரா இருக்கச் சொன்னேன்; இருந்திட்டீங்க.

தருமி: ஆமாங்க; ரொம்பவே நன்றிங்க.

பொன்ஸ்: அதெல்லாம் இருக்கட்டும்; ஏறக்குறைய உங்க டைம் முடிஞ்சி போச்சே. என்ன இன்னும் இந்தப் பக்கம் சுத்திக்கிட்டு இருக்கீங்க?

தருமி: இல்லீங்க பொன்ஸ். சும்மா அப்படியே ..

பொன்ஸ்: உங்க வேலை இன்னும் முடியலையா .. போதும் போதும் எழுதுனது ...

தருமி: இல்லீங்க .. சும்மா ஒரு நன்றி சொல்லிட்டுப் போலாம்னு இந்தப் பக்கம் வந்தேன்.

பொன்ஸ்: யாருக்கு எனக்கா?

தருமி: உங்களுக்கும் தான்; வலைச்சரத்துக்கும்தான். அதோடு ..

பொன்ஸ்: எத்தனை தடவை அய்யா நன்றி சொல்லுவீங்க. எழுதி அறுத்தது பத்தாதுன்னு இது வேறயா? இடத்தைக் காலி பண்ணுங்க... இருக்க இடம் கொடுத்தா அப்டியே ..

தருமி: ஒண்ணும் இல்லீங்க. நம்ம மக்கள்ஸ்க்கு நன்றி சொல்லிட்டுப் போலாம்னு வந்தேன்.

பொன்ஸ்: அதெல்லாம் தேவையா? மொத்தம் உங்க பதிவுகளுக்கு வந்ததே இதுவரை எண்ணி 36 28 ஆளுக. ஏதோ வந்து பாத்துட்டு போயிருக்காங்க. விடுங்களேன் அவங்களை. கட்டாயம் ஒவ்வொருத்தரா கூப்பிட்டு அவங்களுக்கு நன்றி சொல்லித்தான் ஆகணுமா?

தருமி: ஆமாங்க ..அதான மரியாதைங்க...

பொன்ஸ்: சரி...சரி .. டைம் வேஸ்ட் பண்ணாம சீக்கிரம் சொல்லவேண்டியதைச் சொல்லிட்டு மூட்டையைக் கட்டுங்க ... இதுக்குத்தான் இந்த வயசானதுகளை ஆட்டைக்குக் கூப்பிடக்கூடாதுன்றது. சும்மா நொய் .. நொய் அப்டின்னுட்டு..

தருமி: அனைத்துத் தமிழ் கூறு நல்லுலகின் பதிவர் பெருமக்களே!

பொன்ஸ்: (மனசுக்குள்) வந்து இவரு எழுத்தை வாசிச்சது பதிவுகளைப் பார்த்தது மொத்தமே 28 பேர். இதில இவர் எல்லாத்துக்கும் நன்றி கூறணுமாம் .. என்ன பில்டப்போ .. என்ன இதுவோ ..!

தருமி: (தொடர்கிறார்) சில பேர் பெயரை மட்டும் குறிப்பிட்டு எழுதுனதுக்கு மாப்பு கேட்டுக்கிறேன். அதுக்கு ரெண்டு காரணம்: ஒண்ணு - நான் வாசிக்கிறது - வாசிக்கிறது அப்டின்றதை விட 'மேய்றது' - மேலாப்ல தான். அதாவது நுனிப்புல்தான். அதுனால கொஞ்ச ஆளுக பதிவுமட்டும்தான் தெரியும். அதில உள்ள ஆளுகள செலக்ட் பண்ணிச் சொல்லியிருக்கேன்.

ரெண்டு, நமக்கு ரொம்ப வேண்டப் பட்டவங்களையெல்லாம் பத்தி எழுதலை. ஏன்னா அதெல்லாம் நல்லா இருக்காதில்லையா .. நம்ம பேரு வரலைன்னு யாரும் நெனச்சீங்கன்னா அவங்கெல்லாம் இந்த ரெண்டாவது category-ல இருக்கிறதா நினச்சுக்கங்க .. சரியா..

மறுபடியும் எல்லாருக்கும் ரொம்ப நன்றி.

பொன்ஸ்: ஒருவழியா முடிச்சாச்சா? அது என்ன கண்ணீர் மல்க விடை பெறுகுரீங்க?

தருமி: சும்மா ஒரு பில்டப்புதான். அப்படித்தான எல்லோரும் வழக்கமா சொல்லுவாங்க.

பொண்ஸ்: ஆக ஒண்ணும் ஒரிஜினல் கிடையாது. ம்ம்..ம் ..

தருமி: அப்போ, விடை வாங்கிக்கிறேனுங்க ...


பொன்ஸ்: ம்ம்... ம்ம்.. அப்பாடா !!ஆள விடு, சாமி !
மேலும் வாசிக்க...

உப்புமா.. மொக்கை ... கும்மி....

இவைகளுக்கு definition எல்லாம் கேட்ராதீங்கப்பு. அதான் நமக்கெல்லாம் தெரிஞ்ச விஷயங்கள்தானே..


ஆனாலும் ஒரு சின்ன முயற்சி: முதலிரண்டும் பதிவுகளின் தன்மை, அடக்கம் பற்றியது. மூன்றாவதோ வரும் பின்னூட்டங்களின் தொகுப்பும், எண்ணிக்கையும் பற்றியது.

அப்பாடா … விளக்கியாச்சி.


சத்துள்ள பொருள் பொதிவான பதிவுகளை எழுதி தமிழ்கூறு நல்லுலகம் உய்விக்கப் பட வேண்டும்; தமிழை, தமிழ் பதிவுலகத்தை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்த வேண்டுமென்பதில் எனக்கும் ஆசை உண்டு. ஆனாலும் எல்லோரும் அப்படி எழுத ஆரம்பித்தால் .. எழுதியவர்கள் மட்டுமே வாசிக்கும்படியாகலாம். Tastes differ என்பார்கள். Variety is the spice of life என்பதும் உண்மை. ஒரு முறை சொன்னதுண்டு. தமிழ் சசியின் கட்டுரைகள் ஒரு கல்லூரிப் பாடப் புத்தகத்தின் தரத்திற்கு முழுத்தயாரிப்பில் எழுதப்படும் கட்டரைகள். மிகவும் பாராட்டப் படவேண்டிய காரியம். அது ஒரு வழியில் சிறப்பு வாய்ந்ததென்றால், காசியின் ‘உன் கோடு என் கோடு; யூனிக்கோடு’ என்ற கட்டுரை (இதன் உரல் தெரியவில்லை; தெரிந்தவர்கள் சொல்லுங்கள். ஏற்றிவிடலாம்.) பள்ளிப்புத்தகங்கள் இந்த நடையில், முறையில் எழுதப்பட்டால் பிள்ளைகள் படிப்பதில் முழு ஆர்வத்தோடு ஈடுபடுவார்கள் என்பது திண்ணம். நான் இணையத்தில் இணைந்தபோது இந்தக் கட்டுரையை வாசித்து அதன் சிறப்பை என் உடன் ஆசிரியர்களிடம் பேசியது உண்டு. இதுபோல் எழுதுவதற்கு பலரும் இருக்கின்றனர். இது பதிவுகளின் ஒரு பக்கம்.


மற்றொரு பக்கம்தான் இந்த உப்புமா, மொக்கைப் பதிவுகள். இவைகள் தரும் lighter moments are thoroughly enjoyable. என்னதானிருந்தாலும் ஊறுகாய் சாப்பாடு ஆகமுடியாதுதான். இருந்தாலும் அம்மா ஊட்டாததை மாவடு ஊட்டுமாமே, அதே போல் இணையத்தில் இந்தப் பதிவுகள் தனக்கென்று ஓரிடம் பிடித்துவிட்டன. அவைகளும் செழித்து வளரணும். அதுதான் முழுமையான வளர்ச்சிக்கு வித்திடும் என்பது என் கருத்து.


உப்புமா என்றதுமே டக்குன்னு மனசில உடனே வர்ரது பெனாத்தல் சுரேஷும், கொத்ஸும்தான். அதிலும் முதல்வர் டெக்னிகல் உப்புமா தயாரிப்பதில் வல்லுனர். அவரின் உப்புமாவும் நல்லா இருக்கும்; அதை flash மூலம் தருவதற்கு என் தனிப் பாராட்டு.


கொத்ஸ், நினச்சா ஒரு உப்புமாவோடு வந்து நிற்பார். உலகமெல்லாம் சுத்திக்கிட்டு இருக்கேன் அப்டிம்பார்; திடீர்னு ஒரு பதிவு வரும் - செம உப்புமாவாக. ஆனாலும் விக்கிப் பசங்கள் மூலம் அவர் செய்துவரும் சேவை மிகவும் பாராட்டுக்குரியது. அப்பதிவை கொஞ்சம் தூங்க விட்டுருப்பதில் எனக்கு வருத்தமே.


அடுத்து மொக்கப் பதிவுகளும், மொக்கைப் பதிவர்களும். நமக்கெல்லாம் சொல்லாமல் புரிந்துவிடுகிற இந்த மொக்கப் பதிவுகள் என்னவென்று பதிவரல்லாதாருக்கு லக்கிலுக் சென்ற பட்டறையில் விளக்குவதற்குள் பட்ட பாடு … பாவம். சில விஷயங்கள் இப்படித்தான். ரசிக்கணும்; ஆராயப் படக்கூடாது.இதன் தனிச் சிறப்பென்று கருதப் படுவது ஏதெனில், பின்னூட்டமிடுவோர் தங்களுக்கு தாங்களே இட்டுக் கொள்ளும் பெயர்கள். ஒருவர் ‘கும்மி தெரிந்தவன்’ என்று ஒரு பெயரில பின்னூட்டம் இட்டால் அடுத்தவர் உடனே ‘கும்ம தெரியாதவன்’ என்று போட்டு ரெண்டுமணி நேரத்தில 100 பின்னூட்டம் தாண்டுவதற்கான ஒரு டெக்னிக்.


சர்வேசன் நடத்திய சர்வேயில் சிறந்த மொக்கைப் பதிவராக நான் ஓட்டுப் போட்ட சிபிதான் என்னைப் பொறுத்தவரையில் மனசில நிக்கிறார். (அந்த தேர்தல் முடிவும் தெரியலை.)



வளர்க உப்புமா … மொக்கை ... கும்மி ….
மேலும் வாசிக்க...

Saturday, September 1, 2007

பல பதிவர்களில் சில பதிவர்கள்…

‘ஆணி புடுங்குற இடத்தில எல்லாரும் என்னை ஒரு மாதிரி பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க; அப்படி ரொம்ப தமாஸா இருந்தது உங்க பதிவு.’

‘சிரிச்சி சிரிச்சி வயிறு வலிச்சிருச்சி.’

இப்படியெல்லாம் சில பதிவுகளுக்குப் பின்னூட்டம் பார்த்த போது இந்த மக்கள் ரொம்ப ஓவரா ரியாக்ஷன் கொடுக்கிறாங்களா, இல்ல நமக்குத்தான் நகைச்சுவையுணர்வு இல்லையோன்னு ஒரு சந்தேகம் இருந்துக்கிட்டே இருந்தது. அதை முதலில் உடைத்தது வரவனையின் ட்ரவுசர் பாண்டி ரவுசுதான். அன்னைக்கி தனியா உக்காந்துகிட்டு திடீர்னு இருந்தாப்போல சிரிச்சதைப் பார்த்து பயந்துபோய் தங்கமணி என்னன்னு பதறிப் போய் ஓடி (?) வந்து கேட்டது இன்னொரு கிரியாஊக்கியா செயல்பட்டுது. ஆனா இப்ப, அப்படி இருந்த வரவனையான் இப்படி ஆயிட்டாரேன்னு ஒரு வருத்தம்தான்.


அங்க ஒண்ணு இங்க ஒண்ணுன்னு இருந்துகிட்டு இருந்த நகைச்சுவைப் பதிவுகள் திடீர்னு வைகை ஆத்து வெள்ளம் மாதிரி இப்பல்லாம் கரை புரண்டு ஓடுதுன்னா அதுக்கு (எனக்குத் தெரிந்தவரை) இரண்டு குழுக்கள் காரணம். ஒண்ணு – வ.வா.ச. அடுத்தது பா.கு. –அதாங்க பாசக்காரக் குடும்பம். அதிலும் செலக்டிவா சொல்லணும்னா – மொதல்ல - அபி அப்பா. எந்தப் பதிவைத் தேர்ந்தெடுத்து இங்க கொடுக்கலாம்னு நினச்சா அனுமார் வால் மாதிரி நீண்டுகிட்டு போகுது. சும்மா சொல்லக் கூடாது மனுஷனை – ரொம்பவே இயல்பான நகைச்சுவை. பிடிச்சதில இருந்து ரெண்டே பதிவுகள்:
பாரதிக்கும் பாரதமாதாவுக்கும் என்ன பிரச்சனை?

துபாயில் 1 மணி நேரம் டைம் பாஸுக்கு 2 திர்காம்!!! – நல்ல ‘வாலுத்தனம்’ இந்தப் பதிவு. அவரது நடராஜும் இதுபோன்ற நகைச்சுவையுணர்வோடு அபியோடு சேர்ந்து வளர வாழ்த்துக்கள்.

பாசக்காரக் குடும்பத்தின் தானைத்தலைவி, கொ.ப.ச., அம்புஜம் மாமியின் ஏஜண்ட் – all rolled into one – கண்மணி. இருக்கிறதில பிடிச்சதுன்னா, மாமி கண்மணியின் ரங்கமணிகூட ஸ்கூட்டர்ல போய்..பெரியார் சிலைகிட்ட .. அந்தப் பதிவுதான். (பதிவின் லின்க் கிடைக்கலை; சொன்னால் போட்டுரலாம்சொன்னாங்க; போட்டாச்சு !) ஆனா மொதல்ல படிச்சு எங்க குடும்பம் இம்ப்ரெஸ் ஆனது - ச்சுப்பிரமணிக்கு என்ன இனிஷியல்?

ஆனந்தம் காலனியில் அல்வாத் திருடன்.....இதுவும் அவரின் ஒரு நல்ல நகைச்சுவைப்பதிவு.


அடுத்து பாசக்காரக் குடும்பத்தின் இளையமகன், செல்லப்பிள்ளை குசும்பன். இவரது கடைசிப் பதிவு சரியான நேரத்தில் வந்து இன்னும் சக்கைப்போடு போடும் பதிவு: சாதி மத சண்டைகளுக்கு எதிராக தமிழ் பதிவர்களே ஒன்று சேருங்கள்.


நகைச்சுவையில் இப்படி தூள் கிளப்பும் மக்கள்ஸ் இப்போ நிறைய வந்துக்கிட்டே இருக்காங்க. ரொம்ப சந்தோஷமான காரியம் இது. லைட் ரீடிங் அப்டின்னு சொல்றது மாதிரியான பதிவுகள் பதிவுலகத்துக்குத் தேவையான ஒரு ventilation. இறுக்கமான சூழலில் தென்றலாய் வரும் இப்பதிவுகள் மேலும் பெருகட்டுமே!

தலைப்பில் சொன்னது மாதிரி பலர் இருந்தாலும் சிலரைப் பற்றி மட்டுமே குறிப்பிட்டுள்ளேன். காரணம் தெரியவேண்டுமானால் என் வலைச்சர முதல் பதிவில் என்னைப் பற்றி நானே சொல்லியுள்ளதை வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள் ...



இன்னும் வருவேன் (என்று நினைக்கிறேன்!)…….
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது