07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, October 22, 2008

குட்டிக் குட்டிக் கதைப் பூக்கள்!!!

கதை எழுதுவது ஒரு கலை.

நிறைய சமயங்களில் நல்ல கதை கூட எழுதிய விதத்தினால் அடிபட்டுப் போவதுண்டு.

கருத்தில்லாத கதைகள் கூட சமயங்களில் எழுதிய நடையினால் மின்னுவதுண்டு.

அவரவர்க்கென்று எழுத ஒரு தனி ஸ்டையில் நம்மை அறியாமலேயே உருவாகிவிடும்.

பிறகு அதைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அதையே பின்பற்ற வேண்டியதிருக்கும்.

சில காலம் முன்னால் எழுத்தாளர்கள் அவர்களுக்கென்று கதாநாயகிகளும், கதாநாயகர்களும், காமெடியர்களும் கூட தனியாக உருவக்கிக் கொண்டார்கள்.

அவற்றில் எழுத்தாளர்கள் சுபா-வின் "வைஜயந்தி,நரேன்!"

ராஜேஷ்குமாரின் ரூபலா,விவேக்,

சுஜாதா-வின் கணேஷ்,வசந்த்

பட்டுக்கோட்டை பிரபாகரின் "பரத், சுசீலா"
இவர்களெல்லாம் மறக்க முடியாத ஜோடிகள்.

தனி பாணி உருவாக்கிக் கொள்வது ஒரு தனி வித்தைதான்.

அதெல்லாம் கதாசிரியர்களின் கவலை...

நமக்கெல்லாம் எதற்கு????

நல்ல நல்ல கதைகளாகத் தேடிப் பிடித்துப் படித்தால் போதாதா??

அந்த வகையில் நான் தேடிப் பிடித்துப் படித்த கதை வலைப் பூக்கள்.....

ஜென் கதைகளுக்கு....தினம் ஒரு ஜென் கதை....

(Wired) என்ற அமெரிக்க மாத இதழில் வெளிவந்த ஆறு வார்த்தை கதைகளின் மொழி பெயர்ப்பு இந்தப் பதிவில் அங்குமிங்கும்

அப்புறம் குட்டி குட்டியாய் ....அழகான கருத்துள்ள கதைகள் இங்கே...

குட்டிக் குட்டிக் கவிதையாளர் தபூ ஷங்கரின் கதைத் தொகுப்பு......இது ஆச்சரியமான வலைப் பதிவு....

உங்க வீட்டு செல்லக் குட்டீஸ்களுக்கு டிஜிட்டல் கதைகள் ஒளி ஒலி வடிவில் இங்கே...
அழகோ அழகு......புதுவண்டே!!!

அப்புறம் இங்கே கொஞ்சம் நெடுங்கதைகள் பானுவாசன் தருகிறார்...

இன்னிக்குக் கதையும் முடிஞ்சுது......கத்தரிக்காயும் காய்ச்சது!!!
நாளைக்குப் பார்க்கலாமா???

3 comments:

  1. அருமையான தொகுப்பு

    எப்பொழுதே படித்ததது
    இந்த
    நொடி க(வி)தை

    //அகரவரிசைப் பட்டியலில் அவன் பெயர் இல்லை.


    தேர்ச்சிப் பெறாதவனைப் பெற்றெடுத்தோர் மனம் உடைந்தனர்.

    அப்பா அடித்தார். அம்மா தடுத்தாள், புலம்பினாள்.


    ஒரு முடிவுடன் கிளம்பினான்.

    சினிமாவில் சேர சென்னைக்குச் சீட்டெடுத்தான்.


    அடுத்த நாள் தினசரியில் விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் பட்டியல் வெளிவந்தது.//

    ஒளியவன் அவர்கள் கூட தன்
    கவிதைக்குள்
    கதை
    சொல்லும் அழகே தனி

    ReplyDelete
  2. திகழ்மிளிர் said...
    //அருமையான தொகுப்பு//

    நன்றி..திகழ்மிளிர்.

    //ஒளியவன் அவர்கள் கூட தன்
    கவிதைக்குள்
    கதை
    சொல்லும் அழகே தனி//

    ஒளியவன் கவிதைக்குள்
    கதை
    சொல்லும் அழகே தனிதான்...
    நானும் படித்திருக்கிறேன்.
    அன்புடன் அருணா

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது