07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, August 9, 2009

சாமான்யனின் பாவனாதீதம் - 7

சீரியர் கெட்டாலுஞ் சீரியர் சீரியரே!
அல்லாதார் கெட்டால் அங்கென்னாம்? - சீரிய
பொன்னின் குடமுடைந்தாற் பொன்னாரும்; என்னாரும்
மண்ணின் குடம் உடைந்தக் கால்?



பல ஒளவையார்கள், அதுல எதோ ஒரு ஒளவையார் எழுதி வெச்சதுதாங்க இந்த செய்யுள். சீரியர் துன்பத்துக்கு ஆளாயினும் சீரியரே; அவ்விதம் கெட்டவர் துன்பத்துக்கு ஆளாயினும் அவர் கெட்டவரே! அதாவது, பொன் குடம் உடைந்தாலும் பொன்னாவது போலவும், மண் உடைந்து எதற்கும் உதவாமல் போவது போல.

அது மாதிரி, எழுத்தாளர்கள் பொன் குடங்களைப் படைத்திடல் வேண்டும். அவை அங்கீகரிக்கப் பட்டாலும் சரி, அங்கீகரிக்கப் படாவிட்டாலும் சரி, அவை பொன்னானவையே! காலத்தால் அழியாமல் நிற்பவை எவையோ, அவையே வெற்றிப் படைப்புகள்! எண்ணிக்கையில் நிறைய மண் குடங்கள் இருப்பினும், காலத்தின் சுழற்சியில் சிக்குண்டு அவை உடையும் போது, அவற்றின் நிலை என்னவாகும்?!

எம்மைப் பொறுத்த வரையிலும், பதிவுலகம் என்பது எழுத்தின் முதல்நிலை. அதிலிருந்து மேலே செல்கிற படைப்பாளிக்கு, என்றும் நிலைக்கிற பொன் குடம் முடைவது, வணிகத்திற்கு ஏதுவாக அதிக எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு மண் குடம் முடைவது என இரு விபாடங்கள்(options) இருக்கின்றன. அது அவரவர் விருப்பமே ஆயினும், முதல் நிலையிலேயே அதைத் தெரிவு செய்வது நலம் பயக்கும் என்றார் ஒரு நண்பர்.

அந்த நல்ல சிந்தனையோடு, எம்மை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய சக பதிவர்களும், நண்பர்களுமான கீழ்க்கண்டவர்களுக்கு எம் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

cheena (சீனா)






அதிகம் சொல்ல என்னிடம் எதுவும் இல்லை; ஆனால் எழுத வேண்டும் என்கிற ஆவல் நிறைய என்னிடம் இருக்கிறது என்று திறந்த மனதோடு சொல்லி, பதிவுலகில் காலடி எடுத்து வைத்திருக்கும் பதிவர்
தமிழ் காதலன் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம்!


இவர் நம்மில் பலருக்கு பரிச்சயம் ஆனவரே. ஆம், அவர்தான் தம்பி மதிபாலா அவர்கள். அரசியல் கட்டுரைகள் எழுதுகிறார். சமூகத்தின்பால் நாட்டம் கொண்டவர். சமீபத்தில் 200 இடுகைகளைக் கடந்திருக்கிறார். வாழ்த்துகள்!

கொங்குநடையில் கோலோச்சும் செல்வநாயகி அவர்கள். 2006ம் ஆண்டிலிருந்து எழுதி வருபவர். சமீபத்தில் இவர் துவங்கி இருக்கும் அய்யன் எனும் தொடர் இடுகைக்கு இரசிகன் நான். அவருக்கும் நன்றி கலந்த வாழ்த்துகள்!

பணிவுடன்,
பழமைபேசி.
உலகின் தலைசிற்ந்த வீரன், தன்னைத்தானே வெல்பவன்!

6 comments:

  1. அய்யன் தொடர் அருமையிலும் அருமை. அடர்த்தியான வார்த்தைகள், செல்வநாயகி நிறைய எழுதணும்.

    ReplyDelete
  2. பழமைபேசி, சின்ன அம்மிணி,

    எழுத்தில் எந்த திட்டமிடலுமில்லாமல், மாஞ்சு எழுதும் அக்கறையுமில்லாமல் சுத்தித் திரிகிற ஆள் நான். எதோ கனாக்கண்டவளைப் போல திடீரென "அய்யனை" நினைத்துக்கொண்டு ஒருநாள் ஏதோ கிறுக்கி வைத்தேன். அதன் பிறகு அது இப்போது ரெண்டு கதையளவு நகர்ந்ததுகூட நீங்களும், இன்னமும் அத்தொடரை உற்சாகப்படுத்தும் மற்ற நண்பர்களும் சேர்ந்து இழுத்துக்கொண்டு வந்ததுதான். நன்றி.

    ReplyDelete
  3. //பொன் குடம் உடைந்தாலும் பொன்னாவது போலவும், மண் உடைந்து எதற்கும் உதவாமல் போவது போல//
    கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே
    சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.

    //எழுத்தாளர்கள் பொன் குடங்களைப் படைத்திடல் வேண்டும். அவை அங்கீகரிக்கப் பட்டாலும் சரி, அங்கீகரிக்கப் படாவிட்டாலும் சரி//
    வைத்துக்கொண்டா வஞ்சனை செய்கிறோம். வருவதைத்தான் எழுதுகின்றோம்.

    ReplyDelete
  4. @@சின்ன அம்மிணி
    @@திகழ்மிளிர்
    @@செல்வநாயகி

    நன்றிங்க!

    @@சுல்தான்

    வணக்கம் ஐயா! வந்ததை அனைத்தும் எழுதுவது நல்லதே! மண்ணும், மண்ணில் இருக்கும் பொன்னுமாய்! அதை விடுத்து மண் மட்டுமே எளிதென எழுதுவதுதான் தவிர்த்திடல் வேண்டுமென நண்பர் அறிவுறுத்துகிறார்! :-o)

    நன்றிங்க ஐயா!

    ReplyDelete
  5. அன்பின் பழமை பேசி

    அழகாக இடுகை இட்டு பதிவர்களை அறிமுகப் படுத்தி இருக்கிறீர்கள்

    நன்றி கலந்த நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  6. பாரட்டுகள் பழமை.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது