07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, February 26, 2011

என் பொறாமைக்கண்ணில் பட்ட பதிவர்கள்


வணக்கம் மக்களே...

எத்தனையோ வலைப்பூவை பார்க்கிறேன், படிக்கிறேன். ஆனாலும் சில பதிவர்களின் எழுத்துக்களை படிக்கும்போது மட்டும் எப்படித்தான் இந்தமாதிரி எல்லாம் எழுதுறாங்களோ...? கொலையா கொல்றாங்களே... என்றெல்லாம் யோசிக்கத்தோன்றும். அப்படி என்னை பொறாமைப்பட வைத்த சில பதிவர்கள் பற்றிய சிலாகிப்பு இடுகை இது. மிகவும் ரசித்து எழுதுவதால் இந்த ஒரு இடுகையில் மட்டும் படங்களை இணைக்க விரும்புகிறேன்.

1. சேட்டைக்காரன் http://settaikkaran.blogspot.com/
பதிவுலகம் வந்த புதிதில் இருந்தே நான் சேட்டையின் தீவிர விசிறி. ஒரு வரிச்செய்தியை வைத்துக்கொண்டு அதனினை நகைச்சுவை புனைவாக எழுதும் அந்த நடை... சான்ஸே இல்லை. உ.பியில் மாயாவதி செய்த சில்லறைத்தனங்கள் பற்றி எழுதிய காக்கா... காக்கா... என்ற கட்டுரை இதற்கு ஒரு நல்ல உதாரணம். ரயில் பயண அனுபவங்கள் குறித்த இவரது எழுத்துக்களை அதிகமாக ரசிப்பேன். அவ்வாறான பயணங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை பற்றிய பயணத்தில் ஓர் நாள்..! கட்டுரை நெகிழ வைத்தது. அப்பாவின் மேஜைவிளக்கு என்ற பெயரில் எழுதிய புனைவு பிரமாதப்படுத்தியது. அவ்வப்போது நெல்லைத் தமிழ்நடையில் எழுதும் இடுகைகள் மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டும். அப்புறம், சேட்டை டிவியை மறக்க முடியுமா...? இட்ஸ் கிரேட்.

2. கே.ஆர்.பி.செந்தில் http://krpsenthil.blogspot.com/
கடவுளுக்கே பயோடேட்டா எழுதியவர். இவருடனான இணக்கத்தை இவரை சந்திப்பதற்கு முன், சந்தித்த பின் என்று இரண்டாக பிரிக்கலாம். இவரது இடுகைகளை காட்டிலும் இவரையே அதிகம் ரசிக்கிறேன். கே.ஆர்.பி பேச ஆரம்பித்தால் நாள் முழுக்க உட்கார்ந்து கேட்டுக்கொண்டே இருக்கலாம். இவரை சந்தித்தபிறகு ஏற்கனவே படித்த இவரது இடுகைகளை இப்போது மீண்டும் படிக்கிறேன். ஊரே குடியரசு தின வாழ்த்துக்கள் என்று டெம்ப்ளேட் பின்னூட்டங்கள் போட்டுக்கொண்டிருந்த வேளையில் குடியரசுதினக் கொண்டாட்டங்களும் கிழிந்த கோவணங்களும்... என்ற இடுகை எழுதி என் கன்னத்தில் ஒரு அறைவிட்டார். அங்காடித்தெரு படம் பார்த்துவிட்டு ரங்கநாதன் தெரு பற்றி எழுதிய இடுகை நெகிழ்ச்சி.

3. அவிய்ங்க ராசா http://aveenga.blogspot.com/
அது ஒரு கனாக்காலம். அப்போது Followers Widget, Dashboard, தமிழ்மணம் என்று ஏதுமறியாத காலம். ஒருசில வலைப்பூக்களை மட்டும் புக்மார்க் செய்து வைத்திருந்து படிப்பேன். அதிலொன்று அண்ணன் அ.ராசா அவர்களுடையது. கோவாலு, மனைவி என்று இடுகைகளில் வரும் கேரக்டர்களை அதிகம் ரசிப்பேன். போடா கிறுக்குப் பயலே என்று தாய்ப்பாசத்தின் மகத்துவத்தை சொல்லும் இந்த இடுகையை படித்தால் உங்கள் கண்களில் கண்ணீர் துளிர்ப்பதை தவிர்க்க முடியாது. சேட்டைக்காரன் போலவே இவரும் பயணங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை பற்றி பெயர் குறிப்பிட முடியாத ஒரு இடுகை எழுதி அதிர வைத்தார். கொஞ்சம் நகைச்சுவையாக என்று பார்த்தால் ஆத்தா... நான் பிரபல பதிவர் ஆயிட்டேன். என்ற இடுகையை சொல்லலாம். மிஸ் பண்ணிடாதீங்க...

4. கக்கு மாணிக்கம் http://ponmaalaipozhuthu.blogspot.com/
முதன்முதலாக காமன் வெல்த் ஊழல், களவாணிப்பய கல்மாடி பற்றி கல் மாடி சாமியே காப்பாத்து !! என்னும் இடுகையின் மூலம் ஈர்க்கப்பட்டேன். கூட்டு களவாணிகள் என்று உலகநாடுகள் குறித்து எழுதியிருந்த இடுகையும் இவரது தெளிவான சிந்தனையை ரசிக்க வைத்தது. இவரது இடுகைகளைவிட பின்னூட்டங்களை வெகுவாக ரசிப்பேன். சமயங்களில் இவரது சமூக கோப வரிகளை படிக்கும்போது நாமெல்லாம் எதற்காக பதிவுலகில் இருக்கிறோம் என்றெல்லாம் தோன்றும். சில சமயங்களில் இசை பற்றிய இடுகைகள் எழுதுவார். எனினும் நான் ரசிப்பதெல்லாம் அரசியல், சமூகம் சார்ந்த இடுகைகள் தான். இது தவிர்த்து குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் சைனாக்கார சனியன் அஜினோமோட்டோ என்ற இடுகையை கூறலாம்.

5. வெளியூர்க்காரன் சைந்தவி http://veliyoorkaran.blogspot.com/
ஒட்டுமொத்தமாக வெளியூர்க்காரனின் இடுகைகள் எல்லாமே பிரமாதமாக இருக்கும் என்றாலும் சைந்தவி குறித்து எழுதப்பட்ட இடுகைகளின் தீவிர ரசிகன் நான். ஒரு காலத்தில் I love you - by Sainthavi என்ற இந்த இடுகையையும் மீ டூ சைந்தவி...! - சைந்தவி புருஷன் என்ற இந்த இடுகையையும் தினமும் ஒருமுறையாவது எடுத்து மீண்டும் மீண்டும் படிப்பேன். என்ன ஒரு ரொமாண்டிக்கான இடுகைகள். நமக்கொரு சைந்தவி கிடைத்தால் நல்லா இருக்குமே என்று ஏங்கவைக்கும் இடுகைகள் அவை. அப்புறம் ஒருநாள் சைந்தவி கெடைச்சிட்டா... ன்னு ஒரு இடுகை எழுதி மீண்டும் எனது பொறாமைத் தீயை கிளறிவிட்டார். இப்போது அதிகம் எழுதுவதில்லை எனினும் நான் சைந்தவி குறித்த அடுத்த இடுகைக்காக காத்திருக்கிறேன்.

6. வானம்பாடிகள் http://paamaranpakkangal.blogspot.com/
பர்சனலாக இவரைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. அவருக்கும் நான் என்ற ஒருவன் இருப்பதே தெரியாது என்றே எண்ணுகிறேன். ஆனாலும் அவருடைய தீவிர ரசிகன் நான். கேரக்டர் இடுகைகளை அனு அனுவாக ரசித்து படிப்பேன். கேரக்டர் இடுகைகளில் இது, அது என்று எதையும் குறிப்பிட்டுச் சொல்ல மனம் வரவில்லை. கேரக்டர் என்ற லேபிளுக்கு கீழ் இருக்கும் அனைத்துமே பாதுகாத்து வைத்து படிக்க வேண்டியவையே. பின்னர் ஒருநாள் நானும் கேரக்டர் இடுகை ஒன்றினை எழுத முயன்று தோற்றுப்போனேன் என்றே சொல்லவேண்டும். மேலும் பேச்சுவழக்கில் எழுதும் எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

7. எஸ்கா http://yeskha.blogspot.com/
இந்த லிஸ்டில் சேட்டைக்காரனுக்கு அடுத்தபடியாக என்னை அதிகம் ஈர்த்தவர் என்றால் அது எஸ்கா தான். அப்புறம் என்ற ஒரு வார்த்தையின் மகத்துவத்தை நான் உணர்ந்துக்கொண்டதே இவரது இடுகைகளை படிக்க ஆரம்பித்தபின்பு தான். அதன்பிறகு எனது இடுகைகளிலும் ஆங்காங்கே அப்புறம் பயன்படுத்த ஆரம்பித்தேன். அப்பாடா டேட்டா கார்ட்... அப்புறம் சாருவின் "தேகம்" ஒரு இடுகையின் தலைப்பு என்னை அதிகம் கவர்ந்ததென்றால் அது இதுதான். இதிலென்ன இருக்கிறது என்றுகூட சிலருக்கு தோன்றலாம். இவர் எதை எழுதினாலுமே ரசிப்பேன் இருந்தாலும் மைனா - ஒரு புலம்பல்ஸ் என்ற திரை விமர்சன வகையறா இடுகையும், புத்தகக் கண்காட்சி அனுபவங்கள் குறித்து எழுதிய இடுகையும் அதிகம் கவர்ந்தன.

இவரும் தேஜூ உஜ்ஜைனும் ஒருவரே என்று நேற்றுதான் தெரிந்துக்கொண்டேன். உண்மையா எஸ்கா...???

முன்னவர் போலவே இவரும் தீவிர சுஜாதா விசிறி. இவர் எழுதிய கதைகளை எல்லாம் படித்துவிட்டு நாள் முழுக்க அதைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருப்பேன். அவரே இவையெல்லாம் கற்பனையே என்று குறிப்பிட்ட பின்னரும் நிஜவாழ்க்கையில் இப்படியெல்லாம் நடந்தால் எப்படி இருக்கும் என்றெல்லாம் யோசிக்க வைக்கும். ஜடைமாட்டி... என்றொரு கதையின் மூலமாக முதன்முறை எனக்கு அறிமுகமானார் என்றேண்ணுகிறேன். அப்போதிலிருந்து ஜடைமாட்டியை பார்க்கும் போதெல்லாம் அந்தக்கதை தான் நினைவுக்கு வரும். அப்புறம் க்ரிப்டோகிராபியை மையமாக வைத்து எழுதப்பட்ட ஒரு ரகசியம் என்ற சிறுகதையும் அவ்விதமே மனம் கவர்ந்தது. காதலிப்பது எப்படி...? இடுகையும் ஜனரஞ்சகமான வகையில் ரசிக்க வைத்தது.

இன்னும்கூட சிலர் இருக்கிறார்கள் அவர்களைப் பற்றி இங்கே எழுதமுடியாத சூழலில் இருக்கிறேன். பிறிதொரு நாளில் எனது தளத்தில் எழுதுகிறேன்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

61 comments:

 1. அனைவரும் மதிப்பிற்கு உள்ளானவர்கள் அழகாக எழுதி இருக்கீங்க நண்பா வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. பதிவிட்ட அனைத்து பதிவர்களுமே சிறந்த படைப்பாளிகள்... அவர்கள் எழுதிய சிறந்த இடுகைகளுடன் சிறப்பாக பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி பிரபா

  வாழ்த்துக்கள் :)

  ReplyDelete
 3. பதிவிட்ட அனைத்து பதிவர்களுமே சிறந்த படைப்பாளிகள்...

  ReplyDelete
 4. நீங்கள் பொறாமைப்பட்டதில் தவறே இல்லை. அத்தனை பேரின் எழுத்துக்களும் அப்படியே கண்ணில் ஒற்றிக்கொள்கிற மாதிரியான எழுத்து நடை. அதுவும் அந்த 'சைந்தவி' படித்தால் இன்னொரு முறை 'லவ்'வலாம் போல வரும் ஹி..ஹி.. அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 5. அருமையான தொகுப்பு பிரபா...கலக்கிட்டீங்க....

  ReplyDelete
 6. பல தெரிந்த தெரியாத முகங்களும்,
  அறிமுகப்படுத்தும் விதமும் அருமை வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. உண்மையில் தங்கள் குறிப்பிட யாவரும் என்னையும் பிரமிக்கவைத்தவர்கள் தான்..
  குறிப்பாக கே.ஆர்.பி. செந்தில்.
  என்னை மிகவும் கவர்ந்தவர்

  ReplyDelete
 8. நிறைய புக்மார்க் பண்ணியிருக்கிறேன் இன்று, நேரம் கிடைக்கும் போது அலச..

  ReplyDelete
 9. நண்பரே...வலைச்சரத்தில் என்னைப் பற்றி குறிப்பிட்டு பெருமைப்படுத்தி உள்ளீர்கள். உங்களது பெருந்தன்மைக்கும் எனது நன்றிகள். வலைச்சரத்துக்கு எனதுவணக்கங்கள்.

  ReplyDelete
 10. நல்ல எழுத்தாளர்களை அறிமுகம் படுத்திய விதம் அருமை. அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. இவர்களது எல்லாருடைய பதிவையும் படித்திருக்கிறேன்... ரசித்து படிக்கவேண்டிய எழுத்துக்கள்!!!
  தொடர்ந்து அறிமுகப்படுத்துங்கள்.

  ReplyDelete
 12. சிறந்த ஒரு ஆக்கம் ..அருமையான எழுத்துருவாக்கம் ..

  http://myblogonly4youth.blogspot.com/

  ReplyDelete
 13. எல்லோருமே மதிப்பு மிக்க வலைஞர்கள்

  அறிமுகத்திற்கு நன்றி

  ReplyDelete
 14. பெரிய தலைகள் தான் பிரமாதம் .................வாழ்த்துக்கள் ..............

  ReplyDelete
 15. வழக்கம் போல அருமை.

  நீங்கள் சொன்ன ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஸ்டைலை வைத்திருப்பவர்கள்,..

  ReplyDelete
 16. சேட்டை மற்றும் வானம்பாடிகள் இவர்கள் இருவரையும் நான் தவறாமல் வாசிப்பேன் ,செட்டியார் எழுதிய- நகைச்சுவை பதிவுகள் அல்லாத சில நெகிழ்ச்சி பதிவுகள் அட்டகாசமனாவை

  ReplyDelete
 17. அடேங்கப்பா.. கலக்கல். எஸ்கா பத்திரிக்கைத்துறையிலும் சாதனை படைத்தவர். ஆனந்த விகடன் ,குமுதம் -ல் இவர் ஜோக் எழுதும் பாணி சிலாகிக்க வைப்பது. மிகச்சுருக்கமான வார்த்தைகளில் சிரிப்பை வரவைக்க வைப்பவர்.

  ReplyDelete
 18. நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்துப் பதிவர்களும் எனக்கும் பிடித்தமானவர்களே...!

  ReplyDelete
 19. This comment has been removed by the author.

  ReplyDelete
 20. This comment has been removed by the author.

  ReplyDelete
 21. அனைத்து பதிவர்களும் எனக்கும் பிடித்தமானவர்களே,அருமையான பகிர்வு, நன்றி :-)

  ReplyDelete
 22. நல்ல தேர்வு,பாராட்டுக்கள்.

  ReplyDelete
 23. எல்லாமே நம்ம ஆளுங்களா இருக்காங்க...

  ReplyDelete
 24. அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 25. இதுல எனக்கு எஸ்காவை மட்டும்தான் தெரியும், Very Bad, very bad. சீக்கிரம் மத்தவங்களையும் பார்க்கிறேன்.

  ReplyDelete
 26. உண்மையில் "சேட்டைக்காரன் " அவர்களின் லோகோ வை பார்த்துதான் சிரித்துக்கொண்டே உள்ளே வந்தேன். நானும் உங்கள் லிஸ்டில் இருப்பேன் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இனிய அதிர்ச்சி. பெருமையாக உள்ளது. தங்களின் இது போன்ற முற்சிகளால் மேலும் நிறைய நண்பர்கள் இதில் வருவார்கள் என்ற நம்பிக்கை வருகிறது. தற்போது தமிழ் வலைப்பூவில் நல்ல மாற்றங்கள் காணப்படுவது நல்ல அடையாளமாகும். இது தொடர்ந்து, புதிதாக வருபவர்களை ஊக்குவித்து அவர்களையும் இந்த வரிசையில் பின்தொடர செய்ய வேண்டுகிறேன்.
  அனைவருக்கும் நன்றி தோழர்களே.

  ReplyDelete
 27. well presented. Will try to read them all.

  ReplyDelete
 28. I luv all people in ur list ,,,,

  I read them all regularly...

  Happy to know u also like them....

  ReplyDelete
 29. என்னை பற்றி இங்கு குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி..நண்பரே..

  பொறாமை எல்லாம் வேண்டாம் நிறையா படியுங்கள் என்னைவிட அருமையாக எழுதலாம..)))

  நன்றி

  ReplyDelete
 30. ம்ம்ம்ம் எல்லா நல்லா எழுதுபவர்கள்தான்.. சேட்டைக்காரன்,அவியங்க பதிவுகளை மட்டுமே படித்திருக்கிறேன் மற்றவர்களையும் படித்துப்பார்க்கிறேன்.

  ReplyDelete
 31. கே.ஆர்.பி.செந்திலின் பயோடேட்டா சூப்பர்.

  ReplyDelete
 32. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 33. @ சசிகுமார், மாணவன், கே.ஆர்.பி.செந்தில், வேடந்தாங்கல் - கருன், எம் அப்துல் காதர், ரஹீம் கஸாலி, Jaleela Kamal, # கவிதை வீதி # சௌந்தர், வசந்தா நடேசன், சேட்டைக்காரன், ♔ம.தி.சுதா♔, இளம் தூயவன், ஆதவா, இது உங்களுக்கு .., VELU.G, அஞ்சா சிங்கம், jothi, dr suneel krishnan, சி.பி.செந்தில்குமார், பன்னிக்குட்டி ராம்சாமி, deepan, Veliyoorkaran, இரவு வானம், தமிழ்வாசி - Prakash, asiya omar, MANO நாஞ்சில் மனோ, ஆயிஷா, Jayadev Das, கக்கு - மாணிக்கம், vanathy, பார்வையாளன், கணேஷ், Riyas, கார்த்தி

  வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே...

  ReplyDelete
 34. @ கே.ஆர்.பி.செந்தில்
  // மிக்க நன்றி தம்பி.. //

  மத்த விஷயங்களை நேரில் பேசிக்கொள்வோம் அண்ணே...

  ReplyDelete
 35. @ எம் அப்துல் காதர்
  // அதுவும் அந்த 'சைந்தவி' படித்தால் இன்னொரு முறை 'லவ்'வலாம் போல வரும் //

  நீங்களும் சைந்தவியின் விசிறியா.... ஆச்சர்யம்...

  ReplyDelete
 36. @ சேட்டைக்காரன்
  // உங்களது பெருந்தன்மைக்கும் எனது நன்றிகள் //

  இதில் பெருந்தன்மை என்று சொல்வதற்கு ஒன்றுமே இல்லையே...

  ReplyDelete
 37. @ ♔ம.தி.சுதா♔
  அடடே... சோறு ஆறிப்போச்சு அண்ணே... பரவாயில்லையா...

  ReplyDelete
 38. @ dr suneel krishnan
  // செட்டியார் எழுதிய- நகைச்சுவை பதிவுகள் அல்லாத சில நெகிழ்ச்சி பதிவுகள் அட்டகாசமனாவை //

  என்னங்க... இப்படியெல்லாமா அசட்டுத்தனமா எழுத்துப்பிழை பண்றது...

  ReplyDelete
 39. @ சி.பி.செந்தில்குமார்
  // எஸ்கா பத்திரிக்கைத்துறையிலும் சாதனை படைத்தவர். ஆனந்த விகடன் ,குமுதம் -ல் இவர் ஜோக் எழுதும் பாணி சிலாகிக்க வைப்பது. //

  ஓஹோ... இதெல்லாம் வேற இருக்கா தெரியாம போச்சே...

  ReplyDelete
 40. @ deepan
  // This post has been removed by the author. //

  டெலீட் பண்ணும் அளவிற்கு நீங்கள் எந்த பின்னூட்டமும் போட வில்லையே...

  ReplyDelete
 41. @ Veliyoorkaran
  // பார்ரா...! :) //

  பாத்துட்டு தான்னே இருக்கேன்....

  ReplyDelete
 42. @ தமிழ்வாசி - Prakash
  // வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில் //

  சூப்பர்... எதிர்பார்க்கிறேன்...

  ReplyDelete
 43. @ Jayadev Das
  // இதுல எனக்கு எஸ்காவை மட்டும்தான் தெரியும், Very Bad, very bad. சீக்கிரம் மத்தவங்களையும் பார்க்கிறேன். //

  எல்லாருக்கும் என்னுடைய தளத்திலேயே இணைப்பு இருக்கு சார்...

  ReplyDelete
 44. @ கக்கு - மாணிக்கம்
  // தற்போது தமிழ் வலைப்பூவில் நல்ல மாற்றங்கள் காணப்படுவது நல்ல அடையாளமாகும். இது தொடர்ந்து, புதிதாக வருபவர்களை ஊக்குவித்து அவர்களையும் இந்த வரிசையில் பின்தொடர செய்ய வேண்டுகிறேன். //

  செய்துட்டா போச்சு... இப்போ அந்த வரிசையில் கொக்கரக்கோ ன்னு ஒரு பதிவர் வந்திருக்கார்... அருமையா எழுதறார்...

  ReplyDelete
 45. @ கணேஷ்
  // பொறாமை எல்லாம் வேண்டாம் நிறையா படியுங்கள் என்னைவிட அருமையாக எழுதலாம..))) //

  சரி நண்பா படிக்கிறேன்...

  ReplyDelete
 46. கடந்த ஒருவார காலமாக எனக்கு வலைச்சரத்தில் ஆதரவளித்த நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்... எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய சீனா அய்யா அவர்களுக்கும் நன்றிகள்...

  ReplyDelete
 47. பிரபா, ஒரு வார வலைப் பூக்களின் அறிமுகக் கட்டுரைகளைப் படித்தேன், தங்களின் கடுமையான உழைப்பு மற்றும் வாசிப்பு தெரிகிறது. தாமதமான வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 48. அறிமுகத்திற்கு நன்றி பிரபா..தொடர்ந்து கலக்குங்கள்..))

  ReplyDelete
 49. congrats for all

  ReplyDelete
 50. ஏங்க நாங்க எல்லாம் எப்ப லிஸ்ட்ல வரது?

  ReplyDelete
 51. வலைச்சரத்தில் என் பதிவுகளை சிலாகித்து எழுதிய ஃபிலாஸஃபி பிரபாகரனுக்கும், அவற்றை வெளியிட்ட வலைச்சரத்திற்கும் நன்றி.. சில நாட்களுக்கு முன்பு வலைச்சரத்தில் அன்பர் ரஹீம் கஸாலியும் தனக்குப் பிடித்த பத்து பதிவர்களில் ஒருவராக என்னைச்சேர்த்திருந்தார்.. அவருக்கும், வலைச்சரத்தில் என் பெயர் வந்துள்ளதை பார்த்து விட்டு போன் செய்து சொன்ன என் அன்பு நண்பன் சேலம் தேவா வுக்கும் ஆயிரம் நன்றிகள்.. லிஸ்டில் உள்ள பதிவர்களை ஏற்கனவே தெரியும் , எங்களுக்குப்பிடிக்கும் என்று பின்னூட்டத்தில் சொன்ன அனைத்து அன்பர்களுக்கும் நன்றி.. நாங்கள்லாம் எப்போ லிஸ்ட்ல வர்றது என்று ஆதங்கப்படுவோருக்கு வாழ்த்துக்கள். ஆதங்கங்கள் நல்ல படைப்புகளை உருவாக்கும், நீங்களும் விரைவில் வருவீர்கள்.

  // “அப்புறம்” என்ற ஒரு வார்த்தையின் மகத்துவத்தை நான் உணர்ந்துக்கொண்டதே இவரது இடுகைகளை படிக்க ஆரம்பித்தபின்பு தான். //

  என்ன ஃபிலாஸஃபி என்னென்னவோ சொல்றீங்க.. அன்புக்கு நன்றி..

  // அப்பாடா டேட்டா கார்ட்... அப்புறம் சாருவின் "தேகம்" ஒரு இடுகையின் தலைப்பு என்னை அதிகம் கவர்ந்ததென்றால் அது இதுதான். //

  இதெல்லாம் ஒரு தலைப்பா என்று எனக்குத் தோன்றிய தலைப்பு இது..

  // மைனா - ஒரு புலம்பல்ஸ் என்ற திரை விமர்சன வகையறா இடுகையும், புத்தகக் கண்காட்சி அனுபவங்கள் குறித்து எழுதிய இடுகையும் அதிகம் கவர்ந்தன. //

  மைனா - ஒரு புலம்பல்ஸ் - தான் என்னுடைய இடுகைகளில் அதிகம் படிக்கப்பட்ட இடுகை.

  // இவரும் தேஜூ உஜ்ஜைனும் ஒருவரே என்று நேற்றுதான் தெரிந்துக்கொண்டேன். உண்மையா எஸ்கா...??? // உண்மையே.. ஆனால் இது எப்படி உங்களுக்குத் தெரிந்தது.. யாருக்கும் தெரியாமல் ரகசியமாக அல்லவா வைத்திருந்தேன்...?

  // சி.பி.செந்தில்குமார் said...
  அடேங்கப்பா.. கலக்கல். எஸ்கா பத்திரிக்கைத்துறையிலும் சாதனை படைத்தவர். ஆனந்த விகடன் ,குமுதம் -ல் இவர் ஜோக் எழுதும் பாணி சிலாகிக்க வைப்பது. மிகச்சுருக்கமான வார்த்தைகளில் சிரிப்பை வரவைக்க வைப்பவர். //

  செந்தில்.. ஆயிரம் நன்றிகள் அன்புக்கு... ஆனந்த விகடன், குமுதத்தைப்பொறுத்து உங்களைப்பொறுத்த வரை நானெல்லாம் பச்சா... என்னையும் பாராட்டி அங்கங்கே கமெண்ட் போடுகிறீர்களே... நிஜமாவே பெரிய ஆள் தான் நீங்க...

  // Jayadev Das said...
  இதுல எனக்கு எஸ்காவை மட்டும்தான் தெரியும், Very Bad, very bad. சீக்கிரம் மத்தவங்களையும் பார்க்கிறேன். //

  அன்புக்கு நன்றி.. ஜெயதேவ் தாஸ்.... அப்பப்போ நம்ம பதிவுகள்ல பின்னூட்டம் போடுறதுக்கும் நன்றி...

  // எஸ்கா பத்திரிக்கைத்துறையிலும் சாதனை படைத்தவர். ஆனந்த விகடன் ,குமுதம் -ல் இவர் ஜோக் எழுதும் பாணி சிலாகிக்க வைப்பது. //

  ஓஹோ... இதெல்லாம் வேற இருக்கா தெரியாம போச்சே... //

  இப்போ தெரிஞ்சுக்கோங்க பிரபா....

  ReplyDelete
 52. வலைச்சரத்தில் என் பதிவுகளை சிலாகித்து எழுதிய ஃபிலாஸஃபி பிரபாகரனுக்கும், அவற்றை வெளியிட்ட வலைச்சரத்திற்கும் நன்றி.. சில நாட்களுக்கு முன்பு வலைச்சரத்தில் அன்பர் ரஹீம் கஸாலியும் தனக்குப் பிடித்த பத்து பதிவர்களில் ஒருவராக என்னைச்சேர்த்திருந்தார்.. அவருக்கும், வலைச்சரத்தில் என் பெயர் வந்துள்ளதை பார்த்து விட்டு போன் செய்து சொன்ன என் அன்பு நண்பன் சேலம் தேவா வுக்கும் ஆயிரம் நன்றிகள்.. லிஸ்டில் உள்ள பதிவர்களை ஏற்கனவே தெரியும் , எங்களுக்குப்பிடிக்கும் என்று பின்னூட்டத்தில் சொன்ன அனைத்து அன்பர்களுக்கும் நன்றி.. நாங்கள்லாம் எப்போ லிஸ்ட்ல வர்றது என்று ஆதங்கப்படுவோருக்கு வாழ்த்துக்கள். ஆதங்கங்கள் நல்ல படைப்புகளை உருவாக்கும், நீங்களும் விரைவில் வருவீர்கள்.

  // “அப்புறம்” என்ற ஒரு வார்த்தையின் மகத்துவத்தை நான் உணர்ந்துக்கொண்டதே இவரது இடுகைகளை படிக்க ஆரம்பித்தபின்பு தான். //

  என்ன ஃபிலாஸஃபி என்னென்னவோ சொல்றீங்க.. அன்புக்கு நன்றி..

  // அப்பாடா டேட்டா கார்ட்... அப்புறம் சாருவின் "தேகம்" ஒரு இடுகையின் தலைப்பு என்னை அதிகம் கவர்ந்ததென்றால் அது இதுதான். //

  இதெல்லாம் ஒரு தலைப்பா என்று எனக்குத் தோன்றிய தலைப்பு இது..

  // மைனா - ஒரு புலம்பல்ஸ் என்ற திரை விமர்சன வகையறா இடுகையும், புத்தகக் கண்காட்சி அனுபவங்கள் குறித்து எழுதிய இடுகையும் அதிகம் கவர்ந்தன. //

  மைனா - ஒரு புலம்பல்ஸ் - தான் என்னுடைய இடுகைகளில் அதிகம் படிக்கப்பட்ட இடுகை.

  // இவரும் தேஜூ உஜ்ஜைனும் ஒருவரே என்று நேற்றுதான் தெரிந்துக்கொண்டேன். உண்மையா எஸ்கா...??? // உண்மையே.. ஆனால் இது எப்படி உங்களுக்குத் தெரிந்தது.. யாருக்கும் தெரியாமல் ரகசியமாக அல்லவா வைத்திருந்தேன்...?

  // சி.பி.செந்தில்குமார் said...
  அடேங்கப்பா.. கலக்கல். எஸ்கா பத்திரிக்கைத்துறையிலும் சாதனை படைத்தவர். ஆனந்த விகடன் ,குமுதம் -ல் இவர் ஜோக் எழுதும் பாணி சிலாகிக்க வைப்பது. மிகச்சுருக்கமான வார்த்தைகளில் சிரிப்பை வரவைக்க வைப்பவர். //

  செந்தில்.. ஆயிரம் நன்றிகள் அன்புக்கு... ஆனந்த விகடன், குமுதத்தைப்பொறுத்து உங்களைப்பொறுத்த வரை நானெல்லாம் பச்சா... என்னையும் பாராட்டி அங்கங்கே கமெண்ட் போடுகிறீர்களே... நிஜமாவே பெரிய ஆள் தான் நீங்க...

  // Jayadev Das said...
  இதுல எனக்கு எஸ்காவை மட்டும்தான் தெரியும், Very Bad, very bad. சீக்கிரம் மத்தவங்களையும் பார்க்கிறேன். //

  அன்புக்கு நன்றி.. ஜெயதேவ் தாஸ்.... அப்பப்போ நம்ம பதிவுகள்ல பின்னூட்டம் போடுறதுக்கும் நன்றி...

  // எஸ்கா பத்திரிக்கைத்துறையிலும் சாதனை படைத்தவர். ஆனந்த விகடன் ,குமுதம் -ல் இவர் ஜோக் எழுதும் பாணி சிலாகிக்க வைப்பது. //

  ஓஹோ... இதெல்லாம் வேற இருக்கா தெரியாம போச்சே... //

  இப்போ தெரிஞ்சுக்கோங்க பிரபா....

  ReplyDelete
 53. எஸ்கா... நீங்க பச்சா அல்ல பாட்சா.. ஹி ஹி

  ReplyDelete
 54. அறிமுகப்படுத்தும் விதம் அருமை வாழ்த்துக்கள்

  ReplyDelete
 55. தங்களது தேடல் அருமை எனது வாழ்த்துகள்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது