07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, May 26, 2011

சேலம் ஸ்பெஷல்..!!

சேலம் பல நல்ல தலைவர்களையும்,அறிஞர்களையும் தமிழகத்திற்கு தந்த ஊர்.இப்போதும் என்னைப்போன்ற சகலகலா வித்தகர்களை (?!)மதிக்கும் ஊர்.(ஆரம்பிச்சிட்டான்...) சேலத்தின் பெருமையை என்னுடைய தளத்தில் ஏற்கனவே சிறிதளவு பதிவு செய்துள்ளேன்.

சேலத்தில் இருந்தும்,சேலத்தில் பிறந்து இப்போது மற்ற ஊர்களில் இருந்து கொண்டு பதிவிடும் சில நல்ல பதிவர்களை இன்று வலைச்சரத்தில் தொடுக்கிறேன்.

"கைப்புண்ணுக்கு எதற்கு கண்ணாடி"(உதாரணத்த பாரு) என்பது போல் சேலத்தின் தன்னிகரில்லா பதிவர், மண்ணின் மைந்தன், உலகப்புகழ் பெற்ற "VAS" சங்கத்தின் நிரந்தர தலைவர், மாண்புமிகு. உயர்திரு. "கோகுலத்தில் சூரியன்" வெங்கட் அவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை என்று நினைக்கிறேன்.(இவ்ளோ சொல்லியிருக்கோம்...ஒரு பிரியாணியாச்சும் வாங்கிதருவாரு)இவரின் சமூகநலன் , அரசியல் , தொழில்நுட்பம் , என்று எந்த துறைகளையும் விடாமல் பல பயனுள்ள பதிவுகளை எழுதிவருகிறார்.இந்த பதிவுகளால் கவரப்பட்டுதான் நான் பதிவுலகுக்கு கீபோர்டில் கையை வைத்தேன்.(இப்படி எத்தன பேர உருவாக்குனாரோ... பாவம் பதிவுலகம்)என்னை பதிவுலகத்திற்கு வரவைத்த அவருக்கு உங்கள் நன்றிகளையும்,பாராட்டுகளையும் தனி மின்னஞ்சலிலோ,அவருடைய தளத்திலோ தெரிவிக்குமாறு கேட்டுக்கொல்கிறேன்.

இப்படி பதிவுலகத்தில் நுழைந்து நான் வேகமாக முன்னேறும்போதுதான்(?!)என் பள்ளிகால தோழன்,நீயா நானா புகழ், எஸ்காவுடைய வலைத்தளத்தின் அறிமுகம் எனக்கு கிடைத்தது.கல்வித்துறையில் பணிபுரியும் இவரின் வலைதளத்தில் சமகால நிகழ்வுகளை சுஜாதா பாணி நகைச்சுவையில் எழுதியிருக்கும் பதிவுகள் அனைத்தும் ரசிக்கத்தக்கவை.அபார நினைவாற்றல் கொண்டவர்.யூத்புல்விகடன்,உயிர்மை,மற்றும் அனைத்து வார பத்திரிக்கைகளிலும் புனைபெயர்களில் நகைச்சுவை துணுக்குகளை பல வருடங்களாக எழுதி வருகிறார்.கவிதைகளுக்காக ஒரு தனி வலைத்தளம் நடத்துகிறார்.அனைத்து கவிதைகளும் அருமையாக இருக்கும்.

சேலத்தில் பிறந்து இப்போது தலைநகரில் மருத்துவதுறை சார்ந்த ஆராய்ச்சி விஞ்ஞானியாக பணிபுரியும் அண்ணன் கலாநேசனின் சோமாயணம் வலைத்தளம் கவிதைப்பிரியர்களுக்கு ஒரு புகலிடம் என்று சொன்னால் மிகையில்லை.அவ்வப்போது இந்தியபண்டிகைகள், சமூகம் குறித்த பதிவுகளையும் அழகாக எழுதியுள்ளார்."கட்டையிலே வேகயிலும் கட்டாயம் சோதி... என் கண்களிலே கனலுமடி கவிதையெனும் ஜோதி" என்னும் இவரின் முகவுரை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.கவியரங்களில் கவிதை படிப்பவர்கள் ஒரு பத்தியை இருமுறை படிப்பதன் காரணம் புரியாதவர்களுக்கு புரிவதற்கு என்று நான் நினைப்பது உண்டு.ஆனால்,இவர் கவிதைகள் ஒருமுறை படித்தாலே புரியும்வகையில் எளிமையான,ஆனால் அருமையான கவிதைகள்.

பதிவுலகத்தில் அதிகம்பேர் அறிந்த அண்ணன் எல்.கே எனப்படும் கார்த்திக் லட்சுமி நரசிம்ஹன் அவர்களுடைய பாகீரதி வலைப்பூவை தெரியாதவர்கள் குறைவு.ஆன்மிகம், தொழில்நுட்பம், தொடர்கதைகள், மற்றும் சேலத்தின் பெருமைகளை சொல்லும் இவருடைய பதிவுகள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

சேலத்தை சேர்ந்த ரங்கன் என்பவருடைய நான் புதுமையானவன் வலைதளத்தில் புதுமையான சிந்தனைகள் கொண்ட பதிவுகள் நிறைய உள்ளது.இவருடைய பார்வை வித்தியாசமாக இருப்பதால் வலைப்பூவின் பெயர் பொருத்தமாக உள்ளது.

தினேஷ்ரவிக்குமாரின் வசந்த கவிதை மற்றும் வசந்தகால பறவை என்னும்  இரண்டு கவிதை தளங்களிலும் நல்ல கவிதைகள் வாசிக்க கிடைக்கிறது.இந்த நண்பர்களை பற்றிய கவிதை எனக்கு பிடிக்கிறது. உங்களுக்கு..?!

செந்தில்குமார் என்பவருடைய நான் என்றால் என்ன என்ற வலைப்பூவில் ஹைக்கூ வடிவை கொண்ட கவிதைகளும் அவருடைய அனுபவங்களையும் அழகாக நம்மிடம் பகிர்கிறார்.

மணிகண்டபிரபு அவர்களின் சிகரத்தை நோக்கி எனும் வலைப்பூவில் அரசியல் பதிவுகள் அருமை.குறிப்பாக இந்த பதிவு அரசியல்வியாதிகளுக்கு சாட்டையடி.

பார்த்தசாரதி அவர்களின் மூன்றாவது கண் வலைப்பூவில் கவிதைகளும் சில்பான்ஸோ என்ற பெயரில் நகைச்சுவை துணுக்குகளும் ஒளிஒவியம் என்ற லேபிளில் இவரின் புகைப்படகலை ஆர்வமும் பளிச்சிடுகின்றன.

சேலம்வசந்த் அவர்களின் இந்த சேலம் பற்றிய பதிவு என்னையும் திரும்பி பார்க்க வைக்கிறது.

ஸ்ரீ என்னும் திரு அவர்களின் திரு(வின்) விளையாடல் வலைப்பூவில் அவருடைய திருவிளையாடல்கள் படிக்க சுவாரஸ்யமாக உள்ளது.

சேலத்திலிருந்து புதுவரவாக கிச்சா என்பவரின் சம்திங் சம்திங்க் என்ற வலைத்தளம் தலைப்பிலேயே அசத்துகிறது. அரசியல் நையாண்டி நயமாக வருகிறது இவருக்கு.பதிவுலகில் மின்னப்போகும் ஒரு நட்சத்திரம்.

Last But Not Least. உலகப்புகழ் பெறப்போகும்,தன் எழுத்துகளுக்கு எதிர்காலத்தில் புக்கர் விருது,சாகித்ய அகாடமி விருதுகள் பெறப்போகும் வெளிஉலகத்துக்கு தன்னை அடையாளம் காட்ட விரும்பாத சேலத்தின் சிறந்த பதிவரான இவரின் வலைப்பூவையும் ஒருமுறை பார்த்து உங்கள் அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள்.

18 comments:

 1. கடைசியல வெச்சாம் பாரு ட்விஸ்ட்டு....

  ReplyDelete
 2. சொந்த ஊர்காரவுங்களை காட்டிக் கொடுத்தவிதம் அருமை.:)

  ReplyDelete
 3. அறிமுகப்படுத்திய விதம் நல்லா இருக்கு.

  ReplyDelete
 4. >>என்பது போல் சேலத்தின் தன்னிகரில்லா பதிவர், மண்ணின் மைந்தன், உலகப்புகழ் பெற்ற "VAS" சங்கத்தின் நிரந்தர தலைவர், மாண்புமிகு. உயர்திரு. "கோகுலத்தில் சூரியன்" வெங்கட் அவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

  ஹி ஹி ஹி

  ReplyDelete
 5. அறிமுகங்கள் நன்று

  ReplyDelete
 6. >>பதிவுலகத்தில் அதிகம்பேர் அறிந்த அண்ணன் எல்.கே எனப்படும் கார்த்திக் லட்சுமி நரசிம்ஹன் அவர்களுடைய பாகீரதி வலைப்பூவை தெரியாதவர்கள் குறைவு.ஆன்மிகம், தொழில்நுட்பம், தொடர்கதைகள், மற்றும் சேலத்தின் பெருமைகளை சொல்லும் இவருடைய பதிவுகள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

  பெரியப்பா எல் கே இப்படி எழுதுன்னு மிரட்னாரா? ஹா ஹா

  ReplyDelete
 7. மக்கா நம்ம ஊரு ஆளுங்க இத்தனை பேரு இருக்காங்களா ? கூட்டுடா சபையை ஆரம்பிப்போம் சங்கத்தை

  ReplyDelete
 8. சித்தப்பு , தேவா வலைச்சரத்தில் எழுதுவதை இன்னிக்குதான் பாக்கறேன். இந்த மாதிரி புரளி கிளப்பினா அப்புறம் நடக்கறதே வேற

  ReplyDelete
 9. தம்பி யாருப்பா அது சேலம் தேவா

  ReplyDelete
 10. நிறைய பதிவர்களை அறிமுகம் செய்துல்லிர்கள் நன்றி

  ReplyDelete
 11. அறிமுகத்திற்கு நன்றி சேலம் தேவா அவர்களே

  ReplyDelete
 12. // (இவ்ளோ சொல்லியிருக்கோம்...
  ஒரு பிரியாணியாச்சும் வாங்கிதருவாரு) //

  அப்ப இவ்ளோவும் சொன்னது,
  அன்னிக்கு நான் வாங்கி குடுத்த
  சில்லி சிக்கனுக்காக இல்லையா..?
  அவ்வ்வ்வ்வ்..!

  ReplyDelete
 13. // என்னை பதிவுலகத்திற்கு வரவைத்த
  அவருக்கு உங்கள் நன்றிகளையும்,
  பாராட்டுகளையும் தனி மின்னஞ்சலிலோ,
  அவருடைய தளத்திலோ தெரிவிக்குமாறு
  கேட்டுக்கொல்கிறேன்.//

  ஆஹா.. கொஞ்சம் விட்டா அட்ரஸ்
  குடுத்து ஆட்டோல ஆளுங்களை
  அனுப்புவாரு போல இருக்கு..!!

  ReplyDelete
 14. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 15. அன்பின் தேவா - சேலத்து மாம்பழங்கள் அருமை = சென்று படிக்கிறேன். இறுதியில் அறிமுகப்படுத்தப் பட்ட முக்கியமானவரின் வீட்டிற்கும் செல்கிறேன். நல்வாழ்த்துகள் தேவா - நட்புடன் சீனா

  ReplyDelete
 16. நன்றி தேவா. நம்ம ஊரில் இருந்து பல புதியவர்கள் அறிமுகத்திற்கு நன்றி. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 17. பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி..!!

  ReplyDelete
 18. என்னை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி தேவா!!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது