இந்த முறை நவராத்திரியில் ஒரே ஒரு வெள்ளிக்கிழமை தான்! கோயில்களில் கூட்டம் நெரியும்! நாம் நவராத்திரி நாயகியரை இங்கேயே தரிசிப்போம்!
என் அம்மாவுக்காக, பாரதியாரின் இன்னுமொரு நவராத்திரிப் பாட்டு இன்று இதோ: (இல்லையென்றால் உம்மாச்சி கண்ணைக் குத்தாட்டாலும் என் அம்மா என்னைத் திட்டுவார்! பாட்டு மூன்று தேவியரையும் குறித்துப் பாடுவதால், கொஞ்சம் நீளம்!)
தலைப்பைப் பார்த்து, திருப்பி நேற்றைய கனவுக்குப் போய் விட்டேனோ என்று எண்ணி விடாதீர்கள். அந்தக் கனவு மெய்ப்பட்டால் நன்றாகத் தான் இருக்கும்! இன்றைய என் பதிவர்களைப் பற்றிப் பார்ப்போம்! ஒவ்வொருவர் வலைப்பூ எழுதும் போதும் தம்மிடம் மற்றவர்களுடன் பகிரத்தக்க விஷயங்கள் இருக்கிறது என்ற நம்பிக்கையில் தான் எழுதுகிறார்கள். எழுதும் ஒவ்வொருவருக்கும் கனவு இருக்கும்! அவரவர் கனவு கட்டாயம் மெய்ப்பட வேண்டும் என்று எல்லாவற்றுக்கும் மேலான பரம்பொருளை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். நன்மையே நினைத்தும் செய்தும் வந்தால், நல்ல கனவெல்லாம் பலிக்கும் என்பதை அனுபவபூர்வமாக நம்மில் பலர் உணர்ந்தும் இருப்போம்!
முதலில் யாரைப் பற்றிப் பதியலாம் என்று 'உட்கார்ந்து யோசித்த' போது, மனங்கவரும் நடிகர் நாகேஷின் படத்தை அடையாளமாக வைத்திருக்கும் சேட்டைக்காரன் நினைவு வந்தது! 'இங்குள்ள மொக்கைகளைப் படிப்பதால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பல்ல!' என்று சொல்வதைத் தாண்டி தைரியமாக உள்ளே நுழையலாம்! பொருத்தமாக அன்னை காளிகாம்பாள் பற்றி அவர் எழுதிய பாடல்கள் அழகு! அவருடைய 'சேட்டை' பதிவுகளுக்கு அறிமுகமே தேவையில்லை! சமீபத்தியது அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!
'நட்பு என்னும் மந்திரச் சொல் எனக்கும் தெரியும், உச்சரித்ததும் வாய்க்கிறது பேரானந்தம், என்றும் அழியாமல் கூடவே துணை நின்று !' - யாரைப் பற்றிச் சொல்கிறேன் என்று கண்டுபிடித்திருப்பீர்கள் - பத்திரிகை உலகிலே எழுத்தாளராகப் பிரபலம் ஆன ரிஷபன் - அவர் பதிவுகள் அத்தனையுமே அருமை! - கதையாகட்டும், கவிதையாகட்டும், ஒரு ரிஷபன் டச்சோடு இருக்கும்! சமீபத்திய அவர் இடுகைகள் - குட்டி நாய் சிறுகதை - இதில் யார் பரிதாபத்துக்குரியவர்? அன்பின் மொழி - கவிதை - கவிதை!!
கற்றலும் கேட்டலும் என்று அழகுப் பெயரில் வலைப்பூ வைத்திருக்கும் ராஜி, எழுத்தின் பல துறைகளிலும் எழுதுகிறார்; கதை, கட்டுரை, ஆன்மிகம் என்று எழுதி வந்த இவர், கவிதைகளிலும் ஜமாய்க்கிறார்! பல வருடங்களுக்கு முன் வீதியில் வந்த மிட்டாய்க்காரர்கள் போன்ற தொலைந்த தொழிலாளிக்கு வருந்தும் அவருடைய ஒரு கவிதை! உறவுகளைப் பற்றி நெகிழச் செய்யும் ஒரு கதை! அழகில்லாத ஓவியமா-இதில் ஜெய்ப்பூர் ஓவியங்களை ரசிக்கலாம்!
அய்யம்மாளின் அழகுத் தமிழ் நினைவலை - இந்த வலைப்பூவில் எழுதி வரும் அய்யம்மாள் ஒரு புதிய பதிவர்! சில சமையல் குறிப்புகள் எழுதியிருக்கிறார். பூரண கொழுக்கட்டையும் உண்டு; பொள்ளாச்சி சிக்கன் பிரியாணியும் உண்டு இவர் இடுகைகளில்! இவர் ‘தெய்வகுளத்து காளியம்மன்’ என்ற பெயரில் ஒரு கோவிலைப் பற்றியும் அழகாகப் பகிர்ந்திருக்கிறார்.
'ஃப்ரீயா ஒரு இடம் கெடைச்சா விடுவோமா... ஆரம்பிச்சுட்டோம்ல்ல ப்ளாக்க... ' என்று அதிரடியாகச் சொல்லும் ஸ்வர்ணரேக்கா, பூசலம்பு என்ற வலைப்பூவின் சொந்தக்காரர். நடுவில் காணாமல் போயிருந்த(!) அவருடைய சமீபத்திய பதிவு பார்க்க, கேட்கப் பிடிக்காத பாடல்கள்! சரியாகத் தான் படித்தீர்கள், அது பிடிக்காத பாடல்கள் தான்!
Mano - !¡...என் செய்வேன்...¡! என்ற வலைப்பூவைப் பார்ப்போம். டைரக்டர் கே.பாலச்சந்தர் பற்றி ஒரு இடுகையும் எழுத்தாளர் சுஜாதாவின் மின்னூல்களை அளித்து ஒரு இடுகையும் என்னை மிகவும் ஈர்த்தன.
கொஞ்சம் கனவு,கொஞ்சம் கண்ணீர்,கொஞ்சம் புன்னகை,நிறைய ஆசைகள் கொண்டவன்.. உலகையும் மனிதர்களையும் ரசிப்பவன்.. என்று தன்னைப் பற்றிச் சொல்லிக் கொள்ளும் Raazi !..யாதும் ஊரே...! என்ற பெயரில் ஜூலை 2011 முதல் எழுதுகிறார். இவருடைய லேடிஸ் பர்ஸ்ட் என்ற நகைச்சுவைப் பதிவு வலை மேய்கையில் கண்ணில் பட்டது.
பல நிறம் கொண்ட வானவில் போன்று விதவிதமான பதிவர்களின் இடுகைகளை நீங்களும் ரசித்திருப்பீர்கள் என நம்புகிறேன். வானவில்லின் ஐந்தாவது நிறமான மஞ்சள் ஆக்கசக்தியின் வெளிப்பாடாம்! இந்த நிற உடைகளை அணிந்து கொண்டால், எந்தப் பிரச்னையிலும் தீர்க்கமாக ஆலோசித்துத் தெளிவான முடிவை எடுக்க முடியுமாம்!

டிஸ்கி: பேரன்புடைய வலையுலகப் பெருந்தகையீரே! வலைச்சரப் பதிவுகள் தமிழ் மணத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. உங்கள்/உங்களுக்குப் பிடித்த பதிவுகள் பலரைச் சென்றடைய ஓட்டுப் போட மறக்காதீர்கள்! நன்றி!