Tuesday, May 31, 2011
வரலாறு மிக முக்கியம் தம்பி.!!
Posted by
தம்பி கூர்மதியன்
at
9:25 AM
21
comments
Monday, May 30, 2011
இவுங்க மேல எல்லாம் எனக்கொரு பாசம்.!!
Posted by
தம்பி கூர்மதியன்
at
6:00 PM
52
comments
குடு மார்னிங் ஆபிஸர்ஸ்.!!
Posted by
தம்பி கூர்மதியன்
at
6:54 AM
32
comments
Sunday, May 29, 2011
தம்பி கூர்மதியன் சேலம் தேவாவிடம் இருந்து பொறுப்பேற்கிறார்
அன்பு நண்பர்களே !
Posted by
cheena (சீனா)
at
9:27 PM
7
comments
கதைகளும்.. கவிதைகளும்...!! தொடர்ச்சி.
கல்யாண்ஜி
கவிதைகள்,கதைகள்,பத்திரிக்கையாளர்,சினிமா உதவி இயக்குனர் என இவருக்கு பல முகங்கள்.தற்போது புதிய தலைமுறை இதழில் பணியாற்றி வருகிறார்.இவருடைய பிரபலங்களுடனான நேர்காணல்களை படித்து பாருங்கள்.சுவாரசியமாக இருக்கும்.
என்.சொக்கன்
காந்தி கொலை வழக்கு பற்றியும் எழுதுகிறார்.கம்யூட்டர் கையேடும் எழுதுகிறார்.சிலப்பதிகாரமும் எழுதுகிறார்.பட்டியல் போடமுடியாத அளவிற்கு நிறைய புத்தகங்கள் எழுதியுள்ளார்.பிரபலங்களின் வாழ்க்கைச்சரித்திரங்களை இவருடைய புத்தகங்களில் படிக்கும்போது நமக்கும் உத்வேகம் வரும்.ட்விட்டரிலும் கலக்குகிறார்.
பேயோன்
சமகால எழுத்தாளரான இவர் உலக இலக்கியத்தின் உள்ளூர் கிளை என முகவுரையிலேயே சுவாரசியமானவர்.ட்விட்டரில் இவர் எழுதியவை ஒரு புத்தகமாகவே வந்திருக்கிறது.குறிப்பிடத்தகுந்த ஓவியரும் கூட. :)
முகில்
கிழக்கு பதிப்பகத்தின் முதன்மை துணை ஆசிரியராக பணிபுரியும் இவருடைய புத்தகங்கள் நம்மை படிக்க தூண்டுபவை.அகம்,புறம்,அந்தப்புரம் ஒரு உதாரணம்.
அ.முத்துலிங்கம்
விஞ்ஞானமும்,சார்ட்டட் அக்கவுண்டட் படிப்பையும் முடித்து,ஐ.நாவில் பணிபுரிந்து ஒய்வுபெற்றுவிட்டு இப்போது எழுத்தாளராக உள்ள திரு.அ.முத்துலிங்கம் அவர்களுடைய தளம்.தமிழ்நாட்டின் பல எழுத்தாளர்கள் இவரின் எழுத்தை சிலாகிக்கிறார்கள்.ஏன் என்பதை பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.
ப்ரியன்
எண்ணங்களை உணர்வுகளை எழுத்தாக்கி மகிழும் ஓர் தமிழ் குழந்தை என தன்னைப்பற்றி கூறுகிறார் ப்ரியன் கவிதைகள் எழுதும் வெங்கடேஷ்.கவிதைகள் ரசிக்க வைக்கின்றன.
அழகன்
காதல்காரா என்ற வலைப்பூவில் காதலும் காதல் சார்ந்த உளறல்களையும் கவிதையாக வடித்து வைத்தருக்கிறார் இவர்.புகைப்பட ஆர்வலரும் கூட..
ஆசிரியர்களின் மீது இப்போதுதான் எனக்கு மதிப்பு கூடுகிறது.ஒரு வார ஆசிரியர் பணிக்கே நான் நிறைய படிக்கவேண்டியதாயிற்று.முழுநேர ஆசிரியர்களை நினைத்தால் மரியாதையாகவும்,பாவமாகவும் உள்ளது.எப்படியோ வலைச்சர ஆசிரியர் பணியை வேலைப்பளு என்னை அழுத்தியபோதும் நசுங்கிவிடாமல் என்னளவில் சிறப்பாக செய்திருக்கிறேன் (அத நாங்க சொல்லணும்) என்று நினைக்கிறேன்.அடுத்து விரிவுரையாளர்,பேராசிரியர்,கல்லூரி தலைவர் என்று அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு உங்கள் ஆசிகள் தேவை.(திருந்தவே மாட்டானா..?!)ஹி..ஹி...
நாலுபேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்லை என்று என்னையும் நம்ம்ம்பி இந்த வாய்ப்பளித்த சீனா அய்யா அவர்களுக்கும், பதிவுகளை படித்து பின்னூட்டம் அளித்த இணைய நண்பர்களுக்கும்
நன்றி..!! நன்றி..!! நன்றி..!!
Posted by
சேலம் தேவா
at
8:56 AM
8
comments
Saturday, May 28, 2011
கதைகளும்.. கவிதைகளும்...!!
Posted by
சேலம் தேவா
at
8:55 AM
18
comments
Friday, May 27, 2011
அனைத்தும் கிடைக்கும்.!
![]() |
| கோர்ட் பிரச்சினை - கூகிள் |
Posted by
சேலம் தேவா
at
8:59 AM
8
comments
Thursday, May 26, 2011
சேலம் ஸ்பெஷல்..!!
Posted by
சேலம் தேவா
at
8:56 AM
18
comments
Wednesday, May 25, 2011
போட்டோசாப் கத்துக்கலாம் வாங்க..
இந்த மென்பொருளில் டிசைன் செய்வதற்கு அடிப்படை தகவல்கள் தெரிந்து கொண்டால் யாரும் டிசைன் செய்யலாம்.கற்பனைத்திறன் இருந்தால்போதும்.அதை நமக்கு எளிமையாகவும்,அருமையாகவும் சொல்லித்தரும் தளங்களை இன்று பார்க்கலாம்.
இதில் டிசைன் செய்த சில நகைக்கவைக்கும் படங்களை பார்த்துவிடலாம்.
கேக்கறவன் முட்டாளா இருந்தா எருமை ஏரோப்ளேன் ஓட்டுமாம்-ன்ற பழமொழி கேட்டிருப்பிங்க...இங்க யானை பைக் ஓட்டுது பாத்திங்கில்ல...
உங்க மௌஸையும் எதுக்கும் சோதனை பண்ணிடுங்க..கடிச்சி வச்சிரப்போவுது.ஹி.ஹி..
தமிழில் போட்டோசாப் பாடம் என்ற இந்த தளத்தில் எளிமையான முறையில் சொல்லித்தருவது போல வேறு எங்கும் நீங்கள் பார்க்க முடியாது.வெறுமனே டூல்களின் பயன்களை சொன்னால் கற்றுக்கொள்பவர்களுக்கு புரியாது என்று ஒவ்வொ படிநிலையையும் படங்களுடன் விளக்கும் இவருடைய பாடங்களை பார்த்தால் நீங்கள் இந்த மென்பொருளை கற்றுக்கொள்வது உறுதி.பிளாக் ஆரம்பித்து பல வருடங்கள் ஆகியும் யாராவது நம்மை பின்தொடர்வார்களா என்று ஏங்கிக் கொண்டிருக்கும் ஒரு சிலருக்கு(நான் என்ன சொல்லல) மத்தியில்(அதுக்கு நீ முதல்ல உருப்படியா ஏதாவது எழுதணும்) இவர் ஆரம்பித்த ஒரு வருடத்திற்குள் 835 பின்தொடர்பவர்களை பெற்றிருக்கிறார் என்றால் இந்த தளத்தின் சிறப்பை புரிந்து கொள்ளுங்கள். 61 பாடங்கள் போட்டோசாப்பில் முடித்துள்ள திரு.கான் அவர்கள் அடுத்ததாக கோரல்ட்ரா பற்றிய பாடங்களை ஆரம்பிக்க இருக்கிறார் என்பது வரைகலை ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி.
வேலன் என்பவருடைய இந்த தளத்திலும் எளிமையான போட்டோசாப் பாடங்கள் நிறைய இருக்கிறது.சுவாரஸ்யமான சிறிய அளவுள்ள மென்பொருள்களையும்,குழந்தைகளுக்கு பயன்படும் மென்பொருள்களையும் தருவது இந்த தளத்தின் சிறப்பு.
எஸ்.கே அவர்களுடைய மனம்+ தளத்தில் அடோபி நிறுவனத்தின் போட்டோசாப் மட்டுமன்றி பிளாஸ்,பையர் வொர்க்ஸ் சம்பந்தமான பதிவுகளும்,மனோதத்துவம் படித்திருப்பதால் அது சம்பந்தமான பதிவுகளும் சுவாரஸ்யமான வகையில் தொகுத்துள்ளார்.
அனிமேசன் துறையில் உங்களுக்கு ஆர்வமிருந்தால் கருப்பு பெட்டி என்ற இந்த தளத்தில் அதைப்பற்றி சில கட்டுரைகள் எழுதியுள்ளார்.உலகப்படங்களையும்,இந்தியபடங்களையும் அனிமேசன் பார்வையில் விமர்சனங்களும் உண்டு இந்த தளத்தில்.
தோழமை என்ற இந்த தளத்திலும் சுவாரஸ்யமான போட்டோசாப் பாடங்களும்,நம் பிளாக்கை அழகுபடுத்தும் சில கோடிங்குகளும்,வித்தியாசமான மென்பொருள்களும் கிடைக்கபெறுகிறது.
பொன்மலர் என்பவருடைய இந்த தளத்தில் தொழி்ல்நுட்பம்,மென்பொருள்கள் பற்றி விளக்கமான கட்டுரைகளை எழுதி வருகிறார்.பாஸ்போர்ட் போட்டோவைப் பற்றிய இந்த பதிவு நிச்சயம் பலபேருக்கு பயனுள்ளதாக இருக்கும்.
ப்ரியமுடன் வசந்த் அவர்களின் கற்பனை போட்டோசாப்பில் புகுந்து விளையாடியிருப்பார்.ரசிக்கத்தக்க வகையில் போட்டோசாப்பை பயன்படுத்தியிருப்பார்.இவருடைய தளத்தில் போட்டோசாப்பை கற்றுத்தரவில்லை.ரசிக்கவைக்கிறார்.
மீண்டும் நாளை தொழில்நுட்ப பதிவுகளுடன் சந்திப்போம்.
Posted by
சேலம் தேவா
at
9:51 AM
13
comments
Tuesday, May 24, 2011
சொல்லித் தெரிவதில்லை ஒளிப்படக்கலை..!!
Posted by
சேலம் தேவா
at
8:18 AM
12
comments
Monday, May 23, 2011
வலைச்சரத்துக்கு வணக்கம்..!!
Posted by
சேலம் தேவா
at
7:51 AM
11
comments
சேலம் தேவா பொறுப்பேற்க - கவிதை வீதி சௌந்தர் விடை பெறுகிறார்.
அன்பின் சக பதிவர்களே !
Posted by
cheena (சீனா)
at
2:55 AM
2
comments
Saturday, May 21, 2011
இவர்களை நம்பி இத்தனைபேரா.. என்ன ஆச்சரியம்.. (Top 10 Blogs)
பொதுவாக பதிவெழுத வரும்போது தன்னுடைய பதிவுகளுக்கு பின்னுட்டங்கள் வராதா, யாராவது தன்னுடைய தளத்தை யராவது பின்பற்றமாட்டார்களா என்ற ஏக்கம் இருக்கும். அப்படி பின்னூட்டங்கள் மற்றும் பாளோவர் வந்துவிட்டால் மிகவும் மகிழ்ச்சியடைவோம்....
தன்னுடைய பதிவுகள் மீது நம்பிக்கை வைத்து, பதிவுலகில் நயமான பதிவுகளிட்டு.... படிப்பார்கள் மத்தியிலும் மற்ற பதிவர்கள் மத்தியிலும் நல்ல பெயர் வாங்கி அதிகமான பின்னூட்டங்கள் பாளோவ்ர்ஸ் பெறுவது அவ்வளவு சாதாரண வேலையல்ல...
2007 ஜனவரி 14-ம் தேதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது..
இந்த தளத்தின் மொத்த பின் தொடர்பவர்கள் : 2355
இது வரை வெளிவந்த பதிவுகள் : 841
அதிக பட்ச பதிவு வகுப்பறை என்ற பெயரில் : 750
இத்தளம் பெற்றுள்ள ஹிட்ஸ் : 18 லட்சத்திற்கும் மேல்...
2009 தமிழ்மண ரேங்கிங் :
இரண்டாவது இடத்தில் உள்ளவர்
இவரின் வாலைப்பூவை பின்பற்றுபவர்கள் : 1688
இது வரை இவர் இட்டுள்ள பதிவுகள் : 3343
அதிக பட்சமாக அரசியல் சார்ந்த பதிவுகள் : 836.
இத்தளம் இது வரை பெற்றுள்ள ஹிட்ஸ் : 16 லட்சத்திற்கும் மேல்...
இத்தளம் 2009 ஆகஸ்ட் 5-ல் ஆரம்பிக்கட்டது.
இவரின் வாலைப்பூவை பின்பற்றுபவர்கள் : 1444
இதுவரை வெளியிடப்பட்டுள்ள பதிவுகள் : 710
பெற்றுள்ள ஹிட்ஸ் : 674000 த்திகு மேல்
2009 தமிழ்மண ரேங்கிங் : 22
நான்காவது இடம்
முதல் பதிவை 2006 அக்டோபர் 11 ம் தேதி வெளியிட்டப்பட்டுள்ளது.
இத்தளத்தை பின்தொடர்பவர்கள் 1428
இவர் முதல் பதிவை 2006 அக்டோபர் 11 ம் தேதி வெளியிட்டார்.
இத்தளத்தை பின்தொடர்பவர்கள் 1091
பெற்றுள்ள பின்னூட்டங்கள் : 22149
ஏப்ரல் 14 2008ம் தேதி வெளியிட்டார்.
இத்தளத்தை பின்தொடர்பவர்கள் 1058
2010 பிப்ரவரி 22 ம் தேதி வெளியிட்டார்.
இத்தளத்தை பின்தொடர்பவர்கள் 1047
பெற்றுள்ள பின்னூட்டங்கள் : 22144
இத்தளம் ஆரம்பிக்கப்பட்டது 2008 நவம்பர்.
இத்தளத்தை பின்தொடர்பவர்கள் 983
பெற்றுள்ள ஹிட்ஸ் 635000
இத்தளம் ஆரம்பிக்கப்பட்டது டிசம்பர் 2005.
பெற்றுள்ள ஹிட்ஸ் 9 லட்சம்
பத்தாவது இடம் :
குசும்பு
நண்பர்களே இவ்வளவு பின்தொடர்பவர்களை பெருவது என்பது சாதராண விஷயம் அல்ல. அதை பெற அவர்கள் அளித்துள்ள உழைப்பை நாம் பாராட்டியே ஆகவேண்டும். அவர்கள் தொடர்ந்து சிறப்பாக வளர என்வாழ்த்துக்கள்..
இத்தகவல் என் அறிவுக்கு எட்டிய அளவுதான். இதில் மாற்றம் இருக்கலாம்.
யாராவது அதிக FOLLOWERS பெற்றிருந்தால் தெரிவிக்கவும்.
(இத்தகவல்கள் இறுதியாக திரப்பட்ட நாள் : 18-05-2011)
(இவை Blogspot மட்டுமே பொருந்தும் .com மற்றும் Wordpress -க்கு பொருந்தாது.)
Posted by
கவிதை வீதி... // சௌந்தர் //
at
3:44 PM
16
comments






































