இணைய வானத்தின் இலக்கியப் பூ
இணையற்ற பதிவர்களின் வலைப் பூ
வலைச்சரம் தந்ததய்யா வாய்ப்பு(பூ)
சிந்தட்டும் சிறப்பு என்னும் சிரிப்பு!
புதுவை வேலு
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் யாதவன்
நம்பி என்கிற புதுவை வேலுவின்
அன்பு வணக்கங்களும், நெஞ்சார்ந்த நன்றிகளும்!
அன்பின் சீனா அய்யா அவர்களும், தமிழ்வாசி பிரகாஷ் அவர்களும்,
16/03/2015 முதல் 22/03/2015 வரை வலைச்சரத்தின் ஆசிரியராக
பொறுப்பேற்க என்னை அழைத்து இருந்தார்கள். அந்த அரிய வாய்ப்பான தமிழ் அமுத கலசத்தை, என்னிடம் தந்தார்கள். நானும் என்னால் இயன்ற வரையில் அந்த கலசத்தில் உள்ள அமுதத்தை!
பல்வேறு திறமிக்க பதிவாளர்களுக்கும்,
படைப்பாளர்களுக்கும் பகிர்ந்தளித்தேன்.
அதில் சில திறமையான பதிவாளர்களை என்னாள் சரியாக இனம் காண முடியாமல் கூட போய்
இருக்கலாம்.
வானத்தில் உள்ள நட்சத்திரங்களை போல ஒளி
வீசும் பதிவாளர்கள் ஏராளம். அவர்களிடம் நான் கற்ற விடயங்கள் அதிகம். ஆறுமுகன்
அருளாலே 6 நாட்கள் கடந்து விட்டேன். இன்று
ஏழாவதுநாள். இந்த இனிய நாளில் இன்னும் சில
சிறப்பு பதிவாளர்களை அறிமுகம் செய்து விட்டு விடைபெறுகின்றேன்.
நண்பர்களே! முதல் நாள் அறிமுகபதிவின் போது என்னை பற்றி விடுபட்ட ஒரு செய்தி
உங்களது மேலான பார்வைக்கு, அறியத் தருகிறேன்.
ACLI ( Association conitunuum des langues Indienne )
அமைப்பின் பொருளாளர் பொறுப்பில் இருந்து கொண்டு பிரான்சு நாட்டில்,
வாழும் இடத்தில்,(ACLI)
இந்த அமைப்பின் மூலம் இங்குள்ள தமிழ்ப்
பிள்ளைகளுக்கு தமிழ் மொழி பயிற்றுவிக்கின்றோம்.
ஆண்டு ஒன்றுக்கு முப்பதுக்கும்
மேற்பட்ட பிள்ளைகளைத் தேர்வுக்கு அனுப்பி சான்றிதழும் பெற்றுத் தருகிறோம்..
நண்பர்களே!
இந்த 7 நாட்களில் நான் கற்ற விடயங்கள்
ஏராளம்.
பெற்ற அனுபவங்கள் யாவும் தனியாகவே பதிவாக போடும்
அளவில் உள்ளது.
ஏழாவது நாளின் எழுச்சி மிகு
பதிவாளர்கள் இவர்கள்:
கவிஞா் கி. பாரதிதாசன்
தமிழர் திருநாள் (கவிதை)
இவரை பற்றி சொல்ல வேண்டுமாயின்
பூக்கடைக்கு விளம்பரம் தேவை இல்லை.
காந்தக் குரல் பெற்ற கவிஞர்.
புதுவையின் புகழ் மணி.
தென்றல் சசிகலா
சிரிப்பதற்கும் எப்போதாவது சிந்திப்பதற்கும் என்று சொல்லும் இவர்,சிந்தித்த போது உருவான பதிவு இது!
சித்ரா சுந்தர்
மலரும் வத்தல் நினைவுகள் !
சூரியனும்
நாங்களும்
சோளப்பணியாரம்
நள பாகத்தை நலமுடன் பதிவாக்கித் தருவதில் இவருக்கு இணை இவரே!
பதிவுகளில் பல்சுவை மணக்கும். இவர் ஒரு சமையல் சங்கீத சரிதா.
அந்த 7 நாட்களும் என்னுடன் பயணித்த அனைத்து அன்பு நல் உள்ளங்களுக்கும்மீண்டும் எனது நெஞ்சார்ந்த நன்றியினைக் கூறி பிரியா விடை பெறுகிறேன். நன்றி! வணக்கம்!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
(குழலின்னிசையை காண வாருங்கள்)