வாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...
Thursday, May 31, 2007
கும்மி,கொண்டாட்டம்,கேலி,கிண்டல் மற்றும் நகைச்சுவை
கும்மி என்றால் இந்த பாசக்கார குடும்பம் அடிக்கும் கும்மிதான் இப்போதைக்கு டாப் .இந்த குடும்பம் பற்றிய அறிமுகம், பதவி, பொறுப்புகள் எல்லாம் கண்மணி இப்பதிவில் விளக்கியுள்ளார்.
இவர் எங்க தல ன்னு பதிவுலகமே கொண்டாடுற பாலபாரதி மற்றும் பாகச உலகம் முழுக்க பரவி இருக்கும் பாகச தொண்டர்கள் இந்த வேலைய செவ்வனே செய்துட்டு வராங்க இதில் சேருவது எப்படின்னு சென்ஷி விலாவரியா சொல்லியிருப்பார்.வரவனையனோட பாலா மாம்ஸ் ஆன கதை செம டாப்
வாவச இவிங்க 1 வருசத்த கடந்து வெற்றிகரமா செயல்படுற திறமசாலிங்க தேர்ந்த செறிவான காமெடி ன்னா நேரா இவங்க பதிவுக்கு போயிடலாம் இங்க படிச்சி சிரிச்ச சில பதிவுகள்.வவா ஆட்டோகிராப்-2 ,கவுண்டர்ஸ் டெவில் ஷோ-விஜய்
கேலி க்கும் கிண்டலுக்கும் இவர விட்டா ஆளே இல்லிங்க அண்ணாச்சி ன்னு எல்லாராலும் அழைக்கப்படுற ஆசிப் மீரான்தான் அவர். மனுசன் கிண்டலாவே பொறந்தாரா எப்படி இந்த மாதிரிலாம் சிந்திக்கிறான்னு தோனும்.என்னோட தனிமையின் இசை அப்படிங்கிற கவிதைய அப்படியே உல்டாவாக்கி இசையின் தனிமை ன்னு இவர் அடிச்ச கூத்து செம காமெடி.
சமூக கோபத்தையும் கிண்டலாவே சாடுற இவர் அணுகுமுறை முற்றிலும் புதிது.
அடிக்கடி படிக்கிற சில நகைச்சுவை பதிவுகள் அபிஅப்பா வோட உலக கோப்பை கிரிக்கெட் அல்டிமேட் காமெடி. தம்பி யோட இந்த ரஸ்னா மேட்டர நெனச்சி நெனச்சி சிரிச்சேன் அட்டகாசமான காமெடி இது.இம்சையரசி யோட எடுத்த சபதம் முடிப்பேன் எல்லாருக்கும் நேர்ந்த சோகம்.அத சொன்ன விதம் திரும்ப திரும்ப படிக்க வச்சது. வெட்டியோட விமர்சனங்கள் நல்லாருக்கும் அதிலேயும் இந்த வீராசாமி வாய் விட்டு சிரிக்க வச்ச பதிவு.கப்பி யோட இந்த லீவ்லெட்டர் சென்சிபிள் காமெடி
வலையில் சமூகம்
ஜெஸிலா
இவரை புதுமை ஜெஸிலா என்றழைக்கலாம்,மூடநம்பிக்கைகளுக்கு எதிரான இவரது குரல் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.பெண்ணியம்,உடல்நலம்,மனநலம் என பல்வேறு தளங்களில் இயங்கும் இவரது கட்டுரைகள் எளிமையாகவும் சிறப்பானதாகவும் அமைந்திருக்கிறது.
பொன்ஸின் நீலக்குழந்தை இடுகை மனதை தொட்டது பிரச்சினைகளை பேசுவதோடு நின்றுவிடாது களமிறங்கி நண்பர்கள் துணையுடன் தீர்வு கண்டது பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
செந்தழல் ரவி யின் வேலை வாய்ப்பு வழிகாட்டி,மிகவும் பயனுள்ள மற்றும் பாராட்டப்பட வேண்டிய பணி
தோல் பதனிடும் தொழில் குறித்தான மா.சிவக்குமாரின் தொடர் கட்டுரைகள் விலாவரியாய் அத்தொழில் குறித்தான நுட்பம் ,மேலாண்மை, மாசு என எல்லாக் கூறுகளையும் அலசுவது சிறப்பு.
தென்றலின் நாணயம் பக்கம் சிறப்பாக இருக்கிறது என்னை போன்ற மந்தமானவர்களுக்கு கூட புரியும் முறையில் எளிமையாக மியூச்சுவல் ஃபண்ட் குறித்து சிறப்பாய் விளக்குகிறார்.
சம்சாரியின் வரவு இயற்கை விவசாயம் குறித்த விழிப்பை ஏற்படுத்தியுள்ளது பஞ்சகவ்யம் குறித்த இவரது தொடர் இடுகைகள் மிக்வும் சிறப்பானவை.விவசாயம் அழிக்கும் அரசியல்வாதிகள் கட்டுரை குமுறல்களை ஏற்படுத்தியது.மண்ணோடு இலக்கியத்தையும் கலக்கும் இவரது அணுகுமுறை வெகு சிறப்பு
பெனாத்தல் சுரேஷின் அரசியல் கட்டுரைகள் நடுநிலமையாய் இருப்பது ஆறுதல் அளிக்கிறது. இவரது குழப்பமும் உரத்த சிந்தனையும் கட்டுரை என் அலைவரிசையோடு ஒத்துப் போனது.
தேர்தல் முடிவுகள் இடுகை அதை இன்னும் உறுதிப்படுத்தியது.தமிழக அரசியலின் அவசர கோலங்கள் எனும் இந்த கட்டுரை நடுநிலமையாகவும் சிறப்பாகவும் இருக்கும்
சமீபத்தில் வலையில் வெங்கட் மற்றும் ஜெகத் இடையே நிகழ்ந்த திரைமறைவு அரசியல் ஊட்கங்கள் எனும் கட்டுரையும் எதிர்வினைகளும் படிக்க மகிழ்ச்சியாய் இருந்தது.தனிமனித தாக்குதல்,முகம் சுளிக்க வைக்கும் சாடல்கள், குறுகிய பார்வை என வலையில் மலிந்த விடயங்கள் எதுவுமில்லாமல் ஆரோக்கியமான சிந்தனைகளை பகிர்ந்து கொண்ட இருவருக்கும் நன்றிகள்.
லிவிங் ஸ்மைல் வித்யாவை பற்றி வெகு விரிவாய் வெட்டி முன் வாரத்தில் பதிவிட்டிருந்தாலும் சமூகம் எனும் தலைப்பில் அவரது பங்கு தவிர்க்க இயலாத காரணத்தினால் அவரது வலிகளை உள்வாங்கி கொண்ட சக வலைபதிவாளன் எனும் முறையில் இங்கே அவரின் பணிக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
மிகமிகத் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட மனிதரான ஓஷோ வை பற்றி பேசும் சக சன்யாசி ஆனந்த நிரூப் மகிழ்ச்சியளிக்கிறார் இவரின் சில இடுகைகள் புத்தருக்கு அவமானம், துனுக்காக மட்டுமே இல்லாத செறிவான கட்டுரைகளையும் இவரிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.
புத்தரின் விபாஸனா தியான முகாம் பற்றி பேசும் முத்துக்குமரனின் இந்த இடுகை மிக சிறப்பான ஒன்று .
Tuesday, May 29, 2007
வலைக் கவிகள் மற்றும் கவிதைகள்
தமிழ்நதி
கவிதை,சிறுகதை,கட்டுரை என முப்பரிமாண வடிவில் இயங்கும் தமிழ்நதி முழு நேர எழுத்தாளர்.கனடாவில் பெரும்பாலான தமிழ் ஏடுகளில் இவரது படைப்புகள் வெளிவந்திருக்கின்றன விரைவில் தமிழ்நாட்டின் வெகுஜன ஊடகங்களிலும் இவரது பங்களிப்பை எதிர்பார்க்கலாம்.இவரின் கவிதைகள் அழகியல் பார்வை கொண்டது.அழகின் லயிப்பிலிருந்தபடியே நககண்ணில் ஊசி ஏற்றுவது போல ஒரு வலி அல்லது துன்பம் சுமந்தபடி வெகு அழகாய் மிளிர்ந்திருக்கும். எனக்குப் பிடித்த இவரின் சில கவிதைகள் எழுது இதற்கொரு பிரதி ,சாத்தானின் கேள்வி, கலைந்துபோன மேகம்
தனிமையை மெல்ல இட்டு நிரப்புகிற்து அன்பின் வழிதல்கள்.
வா.மணிகண்டன்
வெகு நுட்பமான கவிஞர்.இவரது கவிதைகளை படிப்பதே ஒரு அலாதியான சுகம்.இவரது பார்வை சம தளங்களிலிருந்து மீண்டு உணர்வு நிலைகளின் மென் கோடுகளை அரூப வடிவின் ரகசிய வழித் தடங்களை சரியாய் பிடிக்கிறது.இவரது கவிதைகள் உயிர்மை,காலச்சுவடு உட்பட பெரும்பாலான இலக்கிய ஏடுகளில் வெளிவந்துள்ளது.வலைப்பதிவில் பதிவிக்காத இவரது 28 கவிதைகள் அடங்கிய தொகுப்பொன்றை படிக்க நேர்ந்த இரவொன்றில் இக்கவிஞனின் விரல்களை மென்மையாய் பற்றிக்கொள்ளத் தோன்றியது.எனக்கு பிடித்த இவரது சில கவிதைகள் நிழல், எழுதிவிட முடியாத கவிதை,அது பிசாசு போலவே இல்லை,சனிக்கிழமை இரவின்
அபிமன்யூ
புதிதாய் எழுத வந்திருக்கிறார்.காதல் என்ற உட்பிரிவில் எழுதப்பட்டிருக்கும் 12 கவிதைகளும்,கவிதைகள் பிரிவில் 10 கவிதைகளும் நன்றாக இருக்கிற்து.தலைப்புகள்,கவிதை இயங்கும் தளங்கள் வித்தியாசமாக
புதிதாக உள்ளது.குழப்பங்கள் நிரப்பிய கோப்பை ,
மித மிஞ்சிய தேநீரும் கடவுளின் நண்பனும் இந்த இரண்டு கவிதைகளும் எனக்கு ஓஷோ வினை நினைவு படுத்திப் போனது.கடவுளின் மரணப்படுக்கை எனக்கு மிகவும் பிடித்தது
நிவேதா
புனைவு கவிதைகள் வெகு நேர்த்தியாய் வருகிறது இவருக்கு.புலி கானகம் என என் சிந்தனைகளோடு ஒத்திருக்கிறது இவரது கவிதைகள் அல்லது இருவருமே ரமேஷ் ப்ரேமின் சாயல்கள் என்றும் சொல்லலாம்.இருப்பினும் சாயல்களை தவிர்க்க முனைதல் அபத்தமென்பதால் அதை அப்படியே விட்டுவிடலாம்.இவரது கனவுகளை படியுங்கள் மேலும் தேவதைகள் காத்திருப்பதில்லை, அகமெங்கும் பொழியும்... இந்த இரண்டும் செறிவாய் இருக்கும்.
லக்ஷ்மி யின் கையெட்டும் தூரம் கவிதை சிறப்பாக வந்திருந்தது கென் னின்(பேர் நல்லாருக்கில்ல!!) இந்த கவிதைகள் நன்றாக வந்திருக்கிறது. ப்ரியனின் இந்த கவிதை நன்றாக இருந்தது.
Monday, May 28, 2007
என் வலையுலக முன்மாதிரிகள்
வலைப்பதிவில் நான் முதலில் படித்த இடுகை இவரின் சொர்கத்தின் குழந்தைகள் எனும் இடுகைதான் செறிவான எழுத்துக்குச் சொந்தக்காரர்.பெரிய படிப்பாளி நல்ல சிந்தனையாளன்.வலம்புரி இதழின் இணையாசிரியர்.இவரது சில மொழிபெயர்ப்புகள் மிகவும் பிரசித்துபெற்றது.
பாம்பாட்டி சித்தன்
இவரது கவிதைகளும்,பரந்த வாசிப்பனுபவமும் என்னை நெடுநாள் நடைவழிகுறிப்புகளிலேயே கட்டிப்போட்டு வைத்திருந்தது.இவரது எல்லா இடுகைகளும் எனக்கு பிடிக்குமென்றாலும் கவிதையை வெகு விரிவாய் பேசும் இவரது தொடர் கவிதை அலசல்கள் தெளிவான ஒரு அனுகுமுறையை எனக்கு தந்தது. மேலும் பின்நவீனத்துவம் ஒரு அறிமுகம் எனும் இடுகை என் ஆரம்பகால கேள்விகளுக்கு விடையளிப்பதாய் இருந்தது.
சன்னாசி
இவரது எழுத்துக்களை படித்தபின் என் எல்லைகள் வெட்கப்பட்டு தலைகவிழ்ந்தது. இவரது பார்வை மற்றும் அனுகுமுறைகள் புதிதாய் ஒரு தளத்தில் இயங்குகின்றன.மாண்டீரீஸர் என்ற பெயரிலும் அழைக்கிறார்கள்.யார்?எங்கிருக்கிறார்? ஒரு தகவலும் தெரியவில்லை.தெரிந்தவர் யாரேனும் பினூட்டத்தில் சொன்னால் மகிழ்வேன்.
நகுலன் நாவல்களை விரிவாக அலசும் இவரது இடுகை நகுலன் விடைபெற்ற அன்று படிக்க ஆறுதலாய் இருந்தது. இவரது உலோகங்கள் எனும் புனைவு கவிதை எனக்கு பிடித்த ஒன்று.இவரது perfume திரைப்பட விமர்சனம் வெகுவாய் ஈர்த்தது.அதிலேயும் இப்படி சொல்லியிருப்பார்
இந்தப் படத்தைப் பார்க்கையில் முன் சீட்டில் அமர்ந்துகொண்டு சொரசொரப்பு பிளாஸ்டிக் காகிதத்துக்குள் கைவிட்டுக் கைவிட்டுப் பிரித்து கிரிச் கிரிச் என்று அரைமணி நேரத்துக்குச் சப்தம் எழுப்பிக்கொண்டிருந்த ஆசாமியில் சீட் முதுகில் ஓங்கி மிதிக்கலாமா என்று தோன்றியது
கோபமான எழுத்துக்கள் இவருடையது.சமூகம்,பெரியாரியல்,கூர்மையான விமர்சனங்கள் அவ்வப்போது முகத்திலறையும் கவிதைகளென பன்முக தன்மை கொண்ட கலைஞன். சென்னை சென்றால் இவரை சந்தித்து வெகுநேரம் பேசவேண்டுமெனத் திட்டம். வனம்,சொற்களின் தாய், முகம் பார்க்கப்படும் காலடிச்சுவடுகள் கவிதைகளும் யார் யாரை தூக்கில் போடலாம் என்ற இவரது ஒட்டு மொத்த கோபத்தையும் வெளிப்படுத்திய கட்டுரையும் எனக்கு மிகவும் பிடித்தவை.
டிசே தமிழன்
வலையில் 4 வருடங்களாய் செறிவாய் இயங்கும் இளைஞர் இவர் சம வயதுக்காரர் என்பது ஆச்சர்யமாய் இருந்தது.முதிர்வான,செழுமையான எழுத்துக்கள்.இவருடைய பின்நவீனத்துவ புரிதல்கள் நான் திரும்பத் திரும்ப படித்துக்கொண்டிருக்கும் இடுகை.துப்பாக்கி தின்று விழுங்கிய கவிஞன் சில மணி நேரங்கள் என்னை உறைய வைத்த கட்டுரை.புத்தக வாசிப்பு என்ற கட்டுரை என் புரிதல்களோடு ஒத்திருந்தது இந்த தனிமை கவிதை எனக்கு பிடித்தது.
மதிகந்தசாமி
இலக்கியம்,திரைப்படம் என வலையில் வெகுபரவலாய் இயங்கும் மதி எனக்கு மிகவும் பிடித்தவர்.2003 லிருந்து எழுதப்பட்ட இவரின் மூவிடாக் என் ஓய்வு நேரங்களை மொத்தமாய் திருடிக் கொள்கிறது.இவர் சமீபத்திலிட்ட காதற்படங்களின் பட்டியல் எனக்குப் பிடித்த ஒன்று.Open your eyes இந்த படமும் விமர்சனமும் எனக்கு மிகவும் பிடித்தது இந்த படம் பாக்கனும்.இவரோட மியூசிங்க்ஸ் ல என் பெயரையும் பாத்து சந்தோஷப்பட்டேன் :)
செல்வநாயகி
இவங்களோட எழுத்தும் சிந்தனையும் என்னை நெகிழ்வடைய வைக்கும் தமிழ்நதி சொன்னது போல இருந்து இருந்து எழுதினாலும் மனதில் நிற்கும்படி எழுதுபவர் சாத்தப்பட்ட கதவுகளினூடான தரிசனம் எனக்கு பிடித்த இடுகை.மனுசங்கடா இடுகை,கல்யாண்ஜி பற்றி பேசும் இந்த இடுகை எனக்கு மிகவும் பிடித்தது.கல்யாணி பத்தி பேசுறாங்கன்னாவே இயல்பா ஒரு நெகிழ்வு அவர்களிடம் இருக்கும்.எடுத்துக்காட்டா இத படிங்க சும்மாதான் இருக்கிறேன்
Sunday, May 27, 2007
திறக்கப்பட்ட சன்னல்கள் – பின்புலம்

ஒரு ஞாயிற்றுகிழமையின் மதிய வெக்கையில் பொன்ஸ் வலைச்சரம் தொடுக்க அழைத்தபோது கொஞ்சம் தயக்கமாக இருந்ததென்னவோ உண்மை.வெட்டியாய் வலையில் மேய்ந்துகொண்டிருப்பவன் என்பதை எப்படியோ தெரிந்து வைத்திருக்கிறார்கள்.சென்ற வருடத்தின் இறுதிவாக்கில் சில்ரென் ஆஃப் ஹெவன் படத்தை கூகுலில் தேடிக்கொண்டிருக்கும்போது கண்ணில் பட்டது சித்தார்த்தின் அங்கிங்கெனாதபடி வலைப்பக்கம்.கணினியில் தமிழெழுத்துக்களையே பார்த்திராத நான் ஒரு பெரிய உலகத்தின் சன்னல்களை சித்தார்த்தின் மூலமாய் கண்டுகொண்டேன்.அடுத்த மூன்று மாதங்கள் அவன் அறிமுகப்படுத்திய மதி,பாம்பாட்டி சித்தர் வலைப்பக்கங்களை மேய்ந்து கொண்டிருந்தேன்.மெல்ல தமிழ்மணம் தடம் பற்றி வந்து சேர்ந்தபோது இவ்வுலகின் பிரம்மாண்டம் மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்தது.பொன்ஸ் ஐ வெகு தயக்கங்களுக்குப்பிறகு தொடர்பு கொண்டு வலைப்பதிவிக்க தொடங்கி விட்டேன் தமிழ்மணத்தில் சேராமல் தடுமாறிக் கொண்டிருந்தபோது தம்பியின் அறிமுகம் கிடைத்தது.என் வலையில் ஏதோ கோளாறாம் என் பக்கத்தை தமிழ்மணத்தில் இணைக்க தம்பி,வெட்டி,ராம் போன்ற நண்பர்கள் அரும்பாடுபட்டிருக்கிறார்கள். என் எழுத்துக்களை பார்த்த பிறகு ஏண்டா இவனை சேர்த்தோம் என நொந்திருப்பார்கள் என்பது திண்ணம்.
வரவிருக்கும் ஒரு வாரத்தில் எனக்கு பிடித்த,நான் படித்த,படித்துக் கொண்டிருக்கிற வலைப்பதிவுகளையும் சில இடுகைகளையும் இங்கிட விரும்புகிறேன்.இது முழுக்க முழுக்க என் பார்வையின் என் கண்ணோட்டத்தின் அனுகுமுறைதான்.இதில் ஏதேனும் மாற்றுக் கருத்துக்கள் இருக்குமெனில் சற்று பொறுத்துக் கொள்ளுங்கள்.இப்போதுதான் வந்திருக்கிறேன் இன்னும் எல்லாரையும் படிக்கவில்லை.தலைப்போடு தொடர்புடைய சுட்டிகள் ஏதேனும் இருக்குமெனில் தயங்காது பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். இந்த ஒரு வாரத்தில் நான் எழுதப்போகும் பதிவுகளை பின் வருமாறு வகைப்படுத்தியுள்ளேன்.
1.வலையுலகில் இலக்கியம்,திரைப்படம் சம்பந்தமான இடுகைகள் அதாவது வலையுலக அறிவுஜீவிகளின் பதிவுகள்.
2.வலைக் கவிகள், கவிதைகள்
3.கருத்துச் செறிவு,சமூக பார்வை,ஜனரஞ்சக பார்வையுள்ள எழுத்துக்கள்
4.கும்மி மற்றும் கொண்டாட்டம் நிரம்பிய நகைச்சுவை இடுகைகள்
5.புதிய பதிவர்கள் பற்றிய அறிமுகங்கள்
திட்டமிடும் துறையிலிருப்பதால் இது போன்ற ஆரம்ப மிகைப்படுத்தல்களை தவிர்க்க இயலவில்லை.வார முடிவில் பார்த்து விடுவோம் திட்டத்திற்க்கும் நடைமுறைக்குமுள்ள வேறுபாடுகளை.ஓ கே மக்கா ஸ்டர்ட் மியூஜிக்
Friday, May 25, 2007
நாங்களும் இலக்கியவாதிக தான் ...
சரி உங்களோட பகிர்ந்துக்களாமேனு தான்
மனுஷ்யபுத்திரன்
எஸ்.ராமகிருஷ்ணன்
ஆர்.வெங்கடேஷ்
இரா.முருகன்
மாலன்
இதுல பழைய பதிவர்களோட தொகுப்பு
இனிமே நம்மலும் சொல்லிக்கலாம் நாங்களும் இலக்கியவாதிக தானு ;)
Thursday, May 24, 2007
மனதை மாற்றிய பதிவு
என்னடா ஒரே பில்ட் அப் கொடுக்கறானு பாக்கறீங்களா? விஷயம் இருக்கு. இந்த வார்த்தையை படித்தால் எந்த பதிவை பற்றி சொல்ல போகிறேன் என்று புரிந்துவிடும் - "திருநங்கைகள்".
ஆமாம் லிவிங் ஸ்மைல் வித்யா அக்காவை பத்தி தான் சொல்ல போறேன். என்னடா அது பேரு லிவிங் ஸ்மைல்னு இருக்குனு யோசிக்கறீங்களா?
அதுக்கு அழகா இந்த பதிவுல பதில் சொல்லியிருக்காங்க. ஏன் லிவிங் ஸ்மைல்
அடுத்து அது என்ன திருநங்கை. புதுசா இருக்குனு பாக்கறீங்களா? அதுக்கும் பதில் இருக்கு... இதை படிங்க அலி, அரவாணி, திருநங்கை
திருநங்கைகள் குறித்து நம் மனதில் தவறான ஒரு எண்ணத்தை ஏற்படுத்தியது எதுனு பார்க்கும் போது, பெரும்பாலும் சினிமா தான். அதை ரொம்ப அழகா இந்த பதிவுல தோல் உரிச்சி காட்டியிருக்காங்க. தமிழ் சினிமாவின் கலாப்பார்வையில் திருநங்கைகளின் நிர்வாணம்
அடுத்து இந்த தொடரின் மூலம் பாலின சிறுபாண்மையினரை பற்றி எழுத ஆரம்பிச்சாங்க. ஆனால் தொடற முடியாமல் விட்டுவிட்டார்கள். வித்யாக்கா இந்த பதிவை படிச்சா, இந்த தொடற எழுத முயலுங்களேன். ப்ளீஸ்...
இந்த பதிவ படிச்சதுக்கப்பறம் உங்க மனசு கண்டிப்பா பாரமாகும்... சாதனையா தேவை
இது தேன்கூடு போட்டில பரிசு வாங்கிய கவிதை... கண்டிப்பாக மரணம் மட்டுமா மரணம்னு சிந்திக்க வைத்தது
இது அவர் சந்தோஷமாக எழுதியது... ஒரளவு மனிதாபிமானம் இன்னும் மக்களிடையே இருக்கிறது என்று சந்தோஷப்பட வைக்கும் பதிவு
நம்புங்கள் நான் வசிப்பது தமிழ்நாட்டில்
கடைசியா சாதனை திருநங்கைகள்
Wednesday, May 23, 2007
பதிவுகள் பலவிதம்...
அதனால விளக்கமெல்லாம் சொல்லாம எனக்கு பிடிச்ச பதிவுகள் மட்டும் கொஞ்சம் தறேன்... உங்களுக்கும் பிடிச்சிருக்கானு படிச்சிட்டு சொல்லுங்க
1. கையூட்டு
2. 'சுகா'னுபவங்கள் ஆறு
3. அந்த இரவு
4. பின்நவீனத்துவக் கனவு
5. மனசுக்கு நேர்மையாய்
6. எனக்கு வராத காதல் கடிதம்
7. இறந்துபோன அப்பாவுடன் ஒருநாள்
8. மூக்கறுந்த கண்ணகிகளும் மூக்கில்லாத நானும்...
9. நிஜமல்ல, கதை!
10. கதிரேசன் கதை
11. அப்பா
12. Dark & Lovely
13. ஞாண் tolet போர்டு கண்டு...
14. அப்பாவி அடிமைகளுக்கு
15. கமல்ஹாசன் - உள்ளிருக்கும் கடவுள்!
16. என் நண்பனுடன் ஒரு நாள்
17. முத்தழகு
18. லொல்லு சபா 'பல்லவன்'
19. ஆண் என்ற அன்பானவன்
20. தடிப்பசங்க
Tuesday, May 22, 2007
கொஞ்சம் அழுகை... நிறைய சிரிப்பு
அப்பா இறந்து போக அம்மா இட்லிக்கடை வெச்சி படிக்க வெச்சி மகன் பெரிய ஆளாகறது விக்ரமன் படம் மாதிரி இருந்தாலும் அது நிறைய பேர் வாழ்க்கைல நடந்தது என்னுமோ உண்மை தான். யார்டா அதுனு பாக்கறீங்களா? தமிழ்மணத்தை உருவாக்கி என்னை போல் பலர் எழுத ஊக்கமளித்த காசியோட சில விளக்குகளும் சில வழிகாட்டிகளும் பத்தி தான் சொல்றேன்.
இது நம்ம எல்லாரும் படிக்க வேண்டிய ஒரு தொடர். வாழ்க்கைல எவ்வளவு கஷ்டப்பட்டு முன்னேறிருக்காருனு பார்த்தாலே நமக்கு எல்லாம் ஒரு உத்வேகம் வரும்.
என்னடா ரொம்ப ஃபீல் பண்ண வெச்சிட்டனு கேக்கறீங்களா? அதுக்கு அவரோட அமெரிக்க சாலைப்போக்குவரத்து அனுபவங்கள் படிங்க. நல்லா சுவாரசியமா இருக்கும். அமெரிக்காவுல இருக்கறவங்களுக்கு டார்டாய்ஸ் நியாபகம் வரும். இந்தியாவுல இருக்கவங்களுக்கு ஒரு படம் பார்த்த எஃபக்ட் இருக்கும்.
என்னடா வெறும் சொந்த கதையா இருக்குனு பாக்கறீங்களா? அப்ப இதை எல்லாம் படிங்க...
தமிழில் எழுதலாம் வாருங்கள், வலையில் பரப்பலாம் பாருங்கள்
என் கோடு, உன் கோடு, யுனிகோடு, தனி கோடு (எல்லாரும் படிக்க வேண்டியது)
வலைப்பக்கத்தைப் பிரித்துமேய்தல்
சரி அடுத்து இன்னொரு பதிவரை பார்ப்போம்... இவரும் என் ஃபேவரைட் தான்... ஆனா ஆங்கிலம். நமக்கு புரியற மாதிரி தான் எழுதுவாரு. சும்மா கலாய்ச்சலா இருக்கும்.
இவரோட He-She seriesயை தமிழ்ல மொழி மாற்றம் செஞ்சு எழுதலாமானு கூட நினைச்சிருக்கேன். அவ்வளவு அருமையா இருக்கும். இவரோட சினிமா விமர்சனம் மாதிரி எழுதனும்னு நானும் முயற்சி பண்ணறன் ஆனா முடியல. சில மொக்கை படத்தை பார்த்துட்டு அவ்வளவு அட்டகாசமா விமர்சனம் எழுதியிருப்பாரு. அது ஒரு எச்சரிக்கை பதிவு தான். நம்மல காப்பாத்த.
இதை படிச்சிட்டு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க.. அவரோட திறமையை
சபரி படத்திலிருந்து
Just like I successfully decoded TR’s dance sequences, I managed to do for captain too.
1. Walk from left to right, while heroine and group dancers are dancing in the background
2. Assume, you have stepped on something you shouldn’t step on. Shake your leg to remove the dirt. That time, step on it again, using the other leg. Now shake this leg
3. Walk from right to left
4. A new step. Do check out the Malavika, Captain song. I will try to get the youtube link, If I find it. One of the best duets of captain. He has added one innovative step, where in captain stands on his toe every 2 seconds, while raising his hands, just like you raise when you apply deodorant
5.Repeat step 4, with right and left hand instead of left and right hand
6. Keep walking
In fact you can use the same sequence for any song, by just rearranging the order. And it will be any song, even if it is ‘Baba blacksheep have you any wool?’
And one of the best ever climaxes of a Captain movie. Captain is injured. Villain group searches for captain in all city hospitals. But they cant find him. Why? Captain is getting treated at the veterinary hospital. No, am not joking. Seriously captain gets treated at that hospital. And he takes revenge after recovering. Phew!
Sabari- The sharp knife, really. Watch it at your own risk!
அடுத்து இந்த வீராசாமி விமர்சனமும் படிச்சிடுங்க...
இதுக்கு மேல நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை... இன்னைக்கு முழுக்க இந்த ரெண்டும் படிச்சிட்டு இருந்தாலே போதும்...
திரும்ப நாளைக்கு மீட் பண்ணுவோம் ;)
Monday, May 21, 2007
ஆரம்பமே அமர்க்களம்...
இப்ப டார்டாய்ஸை கொளுத்துங்க. போன வருடம் ஏப்ரல் மாதம் ஆபிஸ்ல என்கூட வேலை பார்த்த நண்பர் ஒருத்தர் எனக்கு ஒரு லிங் அனுப்பி படிக்க சொன்னாரு. நான் கூட ஏதோ டெஸ்டிங் பத்தி இருக்கு போலனு படிச்சா, நம்ம Gaptain நடிச்ச சுதேசி படத்தோட விமர்சனம் அது. அதை படிச்சிட்டு விழுந்து விழுந்து சிரித்து கொண்டிருந்தேன். அப்படியே நரசிம்மாவும் படிச்சேன். அதுக்கு அப்பறம் அதுல இருக்கற எல்லா பதிவும் படிச்சேன். எல்லா பதிவுளையும் நக்கல் அதிகமா இருந்துச்சு.
அப்பறம் அதுல இருந்து ஒவ்வொரு வலைப்பதிவா போயிட்டு இருக்கும் போது தான் நம்ம குருநாதர் டுபுக்கு வலைப்பதிவுக்கு போனேன். அது தான் நான் பார்த்த முதல் தமிழ் வலைப்பதிவு. அதை பார்த்தவுடன் எனக்கு அவ்வளவு சந்தோஷம். ரொம்ப நாளுக்கு அப்பறம் அம்மாவை பார்க்கற மாதிரி ஒரு சந்தோஷம். அதுல இருக்கற ஜொள்ளி திரிந்த காலம் மட்டும் ஒரு 10 தடவை படிச்சிருப்பேன். (போன வாரம் தேடும் போது திரும்ப படிச்சேன்). அவ்வளவு அருமையா இருக்கும் அவர் எழுத்து.
அப்படியே நாமதேவரும் கைப்பிடி சுண்டலும்,தாமிரபரணி தென்றல், அல்மா மேட்டர் இதெல்லாமும் பல முறை படிச்சிருக்கேன்.
எச்சரிக்கை:
பதிவ படிக்கறதுக்கு முன்னாடியே எச்சரிக்கை பண்ணிடறேன். ஒரு பதிவ படிக்க ஆரம்பிச்சாலும் அப்படியே அதிலே முழுகிடுவீங்க. அப்பறம் எல்லா பதிவும் படிக்கணும்னு ஆசைப்பட்டு நீங்க லீவுக்கூட போடலாம். அப்பறம் ஒழுங்கா ஆணி புடுங்கலனு உங்க டேமஜர் திட்டினா அதுக்கு அண்ணேன் டுபுக்கு தான் காரணம். நானில்லை ;)
அப்படியே அவரோட இந்த கதையும் படிச்சி பாருங்க... சாமியாண்டி
அடுத்து என்னை பெரிதும் கவர்ந்த பதிவர் உலகின் புதிய கடவுள் "$elvan"
அவரோட கனலை எரித்த கற்பின் கனலிதான் இன்னைக்கு வரைக்கும் நான் படிச்ச இடுகைகளிலே எனக்கு மிகவும் பிடித்தது. சீதையை ராமன் ஏன் தீக்குளிக்க சொன்னானு இதை படிச்சா புரியும்.
அடுத்து அவரோட இந்த பதிவ படிச்சி ரொம்பவே அசந்து போயிட்டேன். குரங்குங்க கூட கொலை செய்யுமானு? அடுத்து அவரோட கொரில்லா காதல் (அப்ப தலைப்பு வேற வெச்சிருந்தாரு) எனக்கு ஆச்சரியமா இருந்துச்சி. கண்டிப்பா படிச்சி பாருங்க.
அப்பறம் இன்னும் என் ஃபேவரைட்ஸ்ல இருக்கறது அவரோட வாரன் பப்பட் பத்திய தொடர்தான்.
அப்படியே அவரோட இந்த பதிவுகளும் படிச்சி பாருங்க
சோமு தங்கச்சியும் குஷ்பூவும்
கடவுளின் மரணம்
ஸ்பூன் கதை
சரி இன்னைக்கு இது போதும். எல்லாரும் ஒழுங்க ஆணி புடுங்குங்க. நாளைக்கு வேற பதிவுகளோட வரேன்...
டிஸ்கி : தலைப்பு நான் படிக்க ஆரம்பிச்ச பதிவுகளை பத்திதான் ;)
பன்முக ஆசிரியர்
இந்த வார வலைச்சர ஆசிரியரும் பிரபலமானவர். அமைதியாக பதிவுலகுக்கு வந்து, கதை, கவிதை, சமூகம், ஆன்மிகம், மென்பொருள் என்று அடித்து ஆடிக் கொண்டிருப்பவர். இவருடைய இடுகைகள் பல, வலைபதிவர் வட்டத்தைத் தாண்டி வெளியிலும் வாசகர்களால் படிக்கப்படுகின்றன, பரப்பப்படுகின்றன. மென்பொருள் நிறுவனமொன்றில் இவர் இடுகைகளைப் பகிர்ந்து கொள்ள தனி மடற்குழு உருவாகி இருப்பதாக கேள்விப்பட்ட போது வியப்பின் உச்சிக்குச் சென்றேன். அந்தப் பதிவருக்கே இது தெரியுமா? என்பது சந்தேகம் தான் என்ற போதும், 'சாப்ட்வேர் என்ஜினியர் ஆகலாம் வாங்க' போன்ற தொடர்களின் மூலம் இது போன்ற பாராட்டுகளுக்கு தகுதியான எழுத்து என்பதை நிருபித்திருக்கிறார் அவர்.
பன்முகத்தன்மை என்பதை, தன் பதிவின் தாரக மந்திரமாகக் கொண்டிருக்கும் வெட்டிப்பயல், இந்த வார வலைச்சர ஆசிரியர்.
Saturday, May 19, 2007
தொழிற்நுட்ப சனி(க்கிழமை)
தமிழ் சார்ந்த சமீபத்திய இணைய தொழிற்நுட்ப செய்திகளை பகிர்ந்து கொள்ளலாம் என நினைத்ததால் இந்த தொழிற்நுட்ப சனி(க்கிழமை) பதிவு
1. பெரும்பாலனோர் ஏதாவது ஒரு முறையாவது பதிவை முழுதாய் எழுதி முடித்த பின் publish செய்யும் நேரத்தில் browserலோ, இணையத்தொடர்பிலோ ஏதோ பிரச்சனையாகி அவ்வளவு நேரம் கஷ்டப்பட்டு எழுதியதும் காணாமல் போய் செய்வதறியாது திண்டாடியிருப்பீர்கள் . Blogger கடந்த வாரம், எழுதிக்கொண்டிருக்கும் இடுகைகளை பதிப்பு செய்யும் வரை நிமிடத்தொருமுறை தானாகவே auto save ஆகிவிடும் வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஒவ்வொரு நிமிடத்திற்கொருமுறை நீங்கள் எழுதுவது கூகுள் பிளாக்கருக்கான செர்வரை சென்றடைந்துவிடுவதால் நடுவில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டாலும் நீங்கள் ஒரு நிமிடத்திற்கு முன்னர் எழுதியவற்றை திரும்பபெறலாம். இந்த எளிதான தொழிற்நுட்ப வேலையை செய்ய பிளாக்கர் இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டாலும் இப்போதாவது செய்ததே என்று நிச்சயம் சந்தோஷப்படலாம். இது குறித்த பிளாக்கரின் உதவிப்பக்க தகவல்
2. வேர்ட்பிரஸ் செயலி பயனர்களால் உருவாக்கப்படுவதால் அடிக்கடி மேம்படுத்தப்படுத்தபட்டுவருகிறது. சமீபத்தில்தான் செயலியில் ஏகப்பட்ட மாற்றங்களை கொண்டுவந்து wordpress 2.1 பிரதியை வெளியிட்டார்கள். அதற்குள் 2.2 பிரதி வந்திருக்கிறது. இந்த பிரதியில் முக்கியமாக பிளாக்கர் பீட்டா என்று தமிழ் வலைப்பதிவுகில் பரபரப்பை உண்டு செய்த பிளாக்கரின் மேம்படுத்தப்பட்ட பிரதியில் இருந்தும் வேர்ட்பிரஸ் வலைச்சேவைக்கு தங்களின் இடுகைகள், பின்னூட்டங்கள் ஆகியவற்றை எளிதாய் கொண்டு செல்லும் செயலியை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். இதனால் பிளாக்கரிலிருந்து வேர்ட்பிரஸுக்கு மாற விரும்பவர்களும், புதிதாக தளம் அமைத்து அதில் வேர்ட்பிரஸ் நிறுவ விரும்புகிறவர்களும் எளிதாய் பிளாக்கரில் இருக்கும் தங்கள் இடுகைகளையும், பின்னூட்டங்களையும் கொண்டு செல்ல முடியும்.
Wordpress 2.2 பிரதி குறித்த முழுவிவரங்களுக்கு
3. இந்தியாவில் இந்திய வலைப்பக்கங்களை தேடுவதற்காக உருவாக்கப்பட்ட குருஜி தேடுபொறி சேவை தனது சேவையை தமிழிலும் அறிமுகப்படுத்தியிருக்கிறது. தமிழ் Virtual keyboard ஒன்றினையும் இணைத்திருப்பதால் தமிழ் தட்டச்சு முறை தெரியதாவர்கள் நேரடியாக virtual keyboardன் துணைகொண்டு தட்டச்சி தமிழில் தேடுதல்களை தொடரலாம்.
குருஜி - தேடுபொறி சேவை
4. தமிழ் வலைப்பதிவுலகம் விரிய விரிய வலைப்பதிவு சார்ந்த சேவைகளும் அதிகரித்து கொண்டே வருகிறது. ஏற்கனவே மூன்று தானியங்கி வலைத்திரட்டிகள் வழக்கத்திலிருந்தது போக புதிதாக இரண்டு திரட்டிகளை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது.
அ) தமிழ்வெளி
ஆ) தமிழ்.கணிமை
இவ்விரண்டு சேவைகளும் இப்போதுதான் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதால் அடிப்படை நிலை வசதிகளை தாண்டி வலைப்பதிவர்களுக்கு தேவையான மேம்படுத்தப்பட்ட வசதிகளையும் வழங்க வாழ்த்துக்கள்
5. குறிச்சொற்களின் அடிப்படையில் வலைப்பதிவுகளை திரட்டி பட்டியலிடும் மாஹிரின் தமிழூற்றின் இந்த முயற்சி நிச்சயம் பாரட்டிற்குரியது. சேகரிக்கப்படும் குறிச்சொற்களை அகர வரிசைப்படுத்தியிருப்பதால் தேடுதல் எளிதாகிறது. ஆனால் முழுமையாக அனைத்து பதிவுகளையும் திரட்டவில்லை என நினைக்கிறேன். அதுபோல் குறிச்சொற்களை பதிவிலிருந்து திரட்டும் முறையையும் மேம்படுத்த வேண்டியிருக்கும். மேலும் தேதி அடிப்படையில் குறிச்சொற்களை பட்டியலிட்டால் இன்னும் வசதியாக இருக்கும்.
தமிழூற்றின் குறிச்சொல் திரட்டி
இணையத்தில் மற்ற மாநில மொழிகளைக்காட்டிலும் தமிழ் மிகப்பெரிய அளவில் பரவிவருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. அதற்கு இது போன்ற ஆக்கப்பூர்வமான முயற்சிகளில் ஈடுபட்டுவரும் நண்பர்களுக்கு ஊக்கமளிப்பதும், உற்சாகப்படுத்துவதையும் நமது முக்கிய கடமை :)
Wednesday, May 16, 2007
காவிய புதன்
புதனென்றாலே சன் டிவியின் புண்ணியத்தில் காவிய புதன் என்றாகிவிட்டது. அதனால் நானும் வலைச்சர ஆசிரியராக இருக்கும் புதனில், நான் ரசித்த, மீண்டும் மீண்டும் படித்த, இப்போதும் நினைவிருக்கிற பழைய தமிழ் பதிவுகள் சிலவற்றை பட்டியலிடலாம் என முடிவு செய்ததால் இந்த காவிய புதன் பதிவு. இனி எனை கவர்ந்த சில Old is Goldகள்
1. எப்போது Nuclear weapons, Nuclear testing பற்றி பேசப்பட்டாலும் உடனே ஹிரோஷிமா, நாகஸாகியின் நினைவுதான் நம்மில் பலருக்கு வரும். உலகின் வளர்ந்த நாடுகளுள் ஒன்றாக ஜப்பான் வளர்ந்துவிட்டாலும் இன்னும் அணுஆயுத சோதனைகள் எதுவும் மேற்கொள்ளாமல் இருப்பதற்கும் முக்கிய காரணம் ஹிரோஷிமா, நாகஸாகி தாக்குதல்தான். தனது நாகஸாகி பயணக்கட்டுரையில் நாகஸாகியின் வரலாற்றையும் இன்றைய சூழலையும் கண்முன் கொண்டு வந்த ரோசாவசந்தின் இந்தப்பதிவு என்னை மிகவும் கவர்ந்த பயணக்கட்டுரை பதிவு.
நாகசாகி, 9/02/1945, 11.02 - வரலாறு
2. "நண்பனின் மரணத்தை விட நட்பின் மரணம் மிகவும் கொடியது" - இது எதிர் நீச்சலில் வரும் வசனம் என நினைக்கிறேன். ஒரு நட்பில் விழுந்த இடைவெளியையும் அது விலகுமுன் அந்த நண்பனின் மரணத்தையும் குறித்து கௌதம் எழுதிய பதிவு தேன்கூடு போட்டியில் முதல் பரிசு வாங்கியது என நினைக்கிறேன். இணையத்தின் மூலம் கௌதமையும், திரைப்படத்தின் மூலமாக அந்த நண்பனான திருப்பதிசாமியையும் தெரியும் என்பதால் மிகவும் பாதித்த பதிவு இது
ஒரு நண்பனின் நிஜம் இது! - கதையல்ல உண்மை
3. Satire வகைப்பதிவுகள் தமிழில் மிகவும் குறைவு. மேலும் அதிக ரிஸ்க்கானது. பெரும்பாலும் தனி நபர் தாக்குதல்களாக உணரப்பட்டு யுத்த பூமியாகிவிடும் வாய்ப்புதான் அதிகம். ஆனால் இட்லி வடையின் இந்தப்பதிவு அனேகமாக mock செய்யப்பட்ட வலைப்பதிவர்களையும் சேர்த்து பெரும்பாலனோரால் ரசிக்கப்பட்டது என நினைக்கிறேன். உலகம் அடுத்த வாரம் அழியப்போகிறது என்னும் சூழலில் தமிழ் வலைப்பதிவாளர்கள் எப்படி ரியாக்ட் செய்வார்கள் என்பதை ஒவ்வொரு வலைப்பதிவர்களின் பாணியில் எழுதப்பட்டது. எப்போது படித்தாலும் வயிறு புண்ணாகுவதற்கு நான் கியாரண்டி :)
தேன்கூடு போட்டி ( ஆறுதல் பரிசு ) பதிவு - பதினெட்டு பதிவர்களின் குரல்
4. காமம் - வள்ளுவர் மட்டுமே 33% சதவீகித இட ஒதுக்கீட்டை தைரியமாக, சரியாக கொடுத்தவர். காமத்தை பற்றி எழுதுவதெல்லாம் அம்மாவிடம் அமைச்சராய் இருப்பது மாதிரி. கொஞ்சம் LOCஐ cross பண்ணிவிட்டால் ஆள் அம்பேல்தான். கணவன் மனைவிக்கிடையேயான அந்தரங்கங்களை அனுபவமில்லாமல் எழுதியதாக சொன்ன (கொஞ்சம் நம்ப கஷ்டமாக இருந்தாலும்) பிரதீப்பின் இந்த இடுகை கவித்துவமானது
புணர்வு - காமக்கவிதை
5. நீங்க எப்பவாவது ஜெயிலுக்கு போயிருக்கீங்களா??, சினிமாவைத்தவிர்த்து பிரபல சிறைச்சாலைகளை ஒருமுறையாவது பாத்திருக்கீங்களா?? .. அப்படி இல்லையென்றால் இந்த உருப்படாத(!!!) பதிவு உங்களுக்கு நிச்சயம் அதிர்ச்சியாயிருக்கும். நரேன் தன்னுடைய ஒரு நாள் ஜெயில் அனுபவங்களை (அவர் நண்பர் ஒருவரை வெளியிலெடுப்பதற்காக ..) எழுதிய இந்தப்பதிவு நான் படித்ததில் ரொம்ப வித்தியாசமான அனுபவத்தை தந்த பதிவு.
மத்திய சிறைச்சாலை - வழக்கமான 1,2, 3 அல்ல
Tuesday, May 15, 2007
அறிமுக செவ்வாய்
1. பிடிச்ச நாலு , பிடிக்காத ஆறு , தூக்கத்துல பேசுற எட்டு வார்த்தைகள் போன்ற தலைப்பில் சங்கிலித்தொடர்கள் வலைப்பதிவுலகில் வாடிக்கை. முதல் முறையாக ஒரு தொடர்கதையை பல்வேறு பதிவர்கள் இணைந்து சங்கிலித்தொடராய் எழுதவிருக்கிறார்கள். நல்ல சுவாரசியமான முயற்சி. ஒவ்வொரு எழுத்தாளரும் அவரவர் மன ஓட்டத்தை ஒட்டி எழுதும்போது ஒரே கதை பல திசைகளில் பயணிக்கும். அதேவேளையில் கதையின் கருவை ஒரு மனதாக தீர்மானித்து விட்டு அதன் அடிப்படையில் எழுதினால் சுவாரசியமாக இருக்கும் என தோன்றுகிறது. நீட்டிப்பு கிடைக்காத மெகா சீரியலாய் அடுத்து எழுத பதிவர் கிடைக்காவிட்டால் காவேரி break பிடிக்காத national permit ஒன்றினால் ... என சொல்லி முடித்துவிடும் அபாயமும் இருக்கிறது ;)
பார்த்த ஞாபகம் இல்லையோ பகுதி 1, பகுதி 2
2. சென்னை சத்யமிலோ, மாயாஜாலிலோ நாலு பேர் ஒரு படம் பார்த்து விட்டு திரும்பவே ஆயிரம் ரூபாய் ஆகிவிடுகிறது. இந்நிலையில் ஆயிரம் ரூபாயை மட்டும் கையில் வைத்துக்கொண்டு பத்து நாளைக்குள் தென்னிந்தியாவிலிருக்கு பத்து இடங்களுக்கு போய் திரும்பும் சாகச பயணத்தை திட்டமிட்டிருக்கிறார்கள் வலைப்பதிவர்கள் சிலர். இரண்டு பேர் கொண்ட அணி ஒன்றை உருவாக்கி கொண்டு தங்களுடைய பயணச்செலவை குறைக்கவும், ஆயிரம் ரூபாய்க்கு மேல் தேவைப்படும் பணத்தை புத்திசாலித்தனமாக சம்பாதிப்பதுமே த்ரில் என நம்புகிறார்கள். எப்படிலாம் வாழ்க்கையை அனுபவிக்கிறாங்கப்பா
Make your trip
3. ஒண்ணே முக்கால் அடி குறள்கள் மனப்பாடம் பண்ணுவதற்கு எளிதாக இருந்தாலும் அடக்கியிருக்கும் பொருளை எளிதில் புரிந்துகொள்ள முடியாது. அதனாலயே திருக்குறளின் உரைகளின் எண்ணிக்கை மட்டும் அதன் குறள்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கும். ஆனால் பல திருக்குறள் உரைகளுக்கே கோனார் நோட்ஸ் தேவைப்படும் நிலைமையும் இருக்கிறது. இந்த நிலையில் சக பதிவர் ரவிசங்கர் எளிய நடையில் திருக்குறளுக்கு பொருளுரை எழுதத்தொடங்கியிருக்கிறார். உண்மையிலே எளிமையாய் இருக்கிறது. சீக்கிரம் செஞ்சுரி+33 அடிக்க வாழ்த்துக்கள்
கடவுள் வாழ்த்து,வான்சிறப்பு
4. மூன்று மணி நேர திரைப்படத்தை ரொம்ப சாதாரணமாய் சோப் போட்டு அலசி கிளிப் மாட்டு காயப்போடும் நம்மைப்போன்ற வலைப்பதிவர்களுக்கு கானம் கலைக்கூடமும் மற்றும் சில நண்பர்களும் (மலைநாடன்) இணைந்து ஒரு எளிதான (!!) போட்டி ஒன்றை அறிவித்திருக்கிறார்கள். ஏதாவது ஒரு தலைப்பில் ஒரு நிமிட நேரம் பிடிக்கும் குறும்படம் ஒன்றை தயாரித்து இயக்கி அனுப்ப சொல்லியிருக்கிறார்கள். சிறந்த படைப்புக்களை தேர்ந்தெடுத்து பரிசுகளை வழங்கவிருக்கிறார்கள்.
குறும்படப்போட்டி - மீள் அறிவிப்பு
5. சற்றுமுந்தைய செய்தி நிகழ்வுகளை பல வலைப்பதிவர்கள் இணைந்து தொகுக்கும் சற்றுமுன் கூட்டுவலைப்பதிவிலிருந்து அதன் 1000மாவது இடுகையின் கொண்டாட்டத்தின் பகுதியாக ஒரு செய்தி விமர்சன போட்டி ஒன்றை அறிவித்திருக்கிறோம். அரசியல், சமூகம், அறிவியல் உள்ளிட்ட ஐந்து துறைகளில் செய்தி விமர்சன கட்டுரைகள் எழுதலாம். பல வகை பரிசுகளும் உண்டு.
சற்றுமுன் - 1000 - விமர்சனப் போட்டி அறிவிப்பு
அரசியல் திங்கள்
தொடர்ந்து அரசியல்/சமூக நிகழ்வுகளை அலசும் ஆங்கில வலைப்பதிவுகள்(இந்திய அளவில்) நிறைய உள்ளன. அதில் குறிப்பிடத்தக்க சில பதிவுகளும் அவற்றுள் சமீபத்தில் நான் ரசித்த இடுகைகளும் இங்கே
1. Desicritics - இந்த குழுப்பதிவில் 500க்கும் மேற்பட்ட வலைப்பதிவர்கள் இணைந்து பங்களிக்கின்றனர். அரசியல், சமூகம், நிகழ்வுகள் , பொருளாதரம், பொழுதுபோக்கு என அனைத்து தளங்களின் செய்திகளையும் அலசுகிறார்கள். நேற்று கொண்டாடிய அம்மாக்கள் தினம் பற்றிய Is Mother's Day Only A Hallmark Holiday? சுவாரசியமான இடுகைகளுள் ஒன்று
2. SepiaMutiny - பல்வேறு துறைகளை சார்ந்த நண்பர்கள் இணைந்து எழுதும் இந்த கூட்டு வலைப்பதிவும் ஆங்கிலத்தில் மிக முக்கியமானது. சமீபத்திய கராச்சி கலவரம் குறித்த இந்தப்பதிவு , Blood and Tears , இதன் அலசலுக்கு எடுத்துக்காட்டு
3. The acorn - மற்றொரு முக்கிய வலைப்பதிவு. நாராயண் மூர்த்தி, சச்சின் ஆகியோர் மீது சமீபத்தில் எழுப்பபட்ட தேசிய சின்னங்களை அவமதித்த குற்றச்சாட்டுக்களையடுத்து எழுதபட்ட இடுகை இது, The empowerment of intolerance
4. இந்தியாவின் உண்மை நிலையை அறிவதாக சொல்லும் இந்த பதிவும், இந்தியாவின் மறுபக்க அவலங்களை அலசும் இந்த பதிவும் இட ஒதுக்கீடு விவகாரங்களின் போது எதிரெதிர் நிலைகளில் புள்ளி விவரங்களோடு தங்கள் நிலைப்பாட்டினை விவாதிக்கும் இடுகைகள் இரண்டு பக்க நியாயங்களையும் உணர வழி வகுக்கும்.
சரி இனி அரசியல்/சமூகம் சார்ந்த தமிழ்ப்பதிவுகளின் எனக்கு பிடித்த சமீபத்திய இடுகைகளில் சில
1. தமிழக அரசியல் அவலங்களை அலசும் பினாத்தல் சுரேஷின் பதிவு
2. தயாநிதியை சாதனையாளராக புகழும் வட இந்திய பத்திரிக்கைகளை சாடும் பிரகாஷின் பதிவு
3. நாடுனா தலைவன் இல்லப்பா, மக்கள் தான்... மக்கள்னா வேற யாரும் இல்லை. நாமதான்... என்னும் வெட்டிப்பயலின் பதிவு
4. மாயவதியின் வெற்றியை அலசும் பத்ரியின் பதிவு
மற்றொரு தொகுப்போடு நாளை சந்திக்கிறேன்.
வணக்க்க்க்க்கம் .....
வலைப்பூ ஆசிரியராக இருக்கும் இந்த வாரத்தில் எனக்கு பிடித்த நல்ல பதிவுகளையும் பதிவர்களையும் அடையாளம் காண்பிக்க முயல்கிறேன். தமிழ் வலைப்பதிவுலகம் மட்டுமின்றி எனக்கு பிடித்த சில ஆங்கில வலைப்பதிவுகளையும் அடையாளம் காட்டலாம் என்றிருக்கிறேன். அறிமுகப்பதிவிலேயே திங்கள் கிழமையை கடத்தியாச்சு. இதனை ஈடுகட்டும் வகையில் வரும் நாட்களில் நல்ல பல பதிவுகளை கோர்த்து நல்ல ரசிக்கும்படியான பயனுள்ள வலைச்சரம் அமைக்க முயல்கிறேன்
Monday, May 14, 2007
வலைச்சரம்.... இந்த வாஆஆரம்...
அமைதியான ஆர்ப்பாட்டமான இரண்டு வாரங்களுக்குப் பிறகு, இந்த வார வலைச்சரம் தொடுப்பவரும் அமைதியான சாதனையாளர் தான். ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளாக தமிழிணையத்தில் வலம் வரும் இவர், விக்கி பட்டறை, அகில இந்திய வலைபதிவர் பட்டறை, விருப்பத் தேர்வுகளின் பரிந்துரைத் தளமான கில்லி, வலைபதிவர் உதவிப் பக்கம் என்று பல தளங்களிலும் தொடர்ந்து இயங்கி வருகிறார்.
'கண்டதை'ச் சொல்லும் தண்டோரா, தமிழிணையத்தில் தான் கண்டவற்றுடன், ஓங்கி ஒலிக்கப் போகிறது வலைச்சரத்தில்....
Friday, May 11, 2007
பொருளாதாரம், பங்குவணிகம்
நம்ம தமிழ்மணம் நன்பர்களே அழகா, இத பொழிபெயர்ச்சி செய்து, எளிதா, புரியற மாதிரி, தொடர்ச்சியா, தளராம எழுதீட்டு வராங்க. மா.சிவகுமார், பங்காளி, குப்புசாமி, இப்ப புதுசா தென்றல் ஆகியோர் நல்ல தொடர்கள எழுதீட்டு வராங்க.
மா.சிவகுமாரின் பொருளாதாரம் பற்றிய கட்டுரைகள் பயனுள்ளவை. பொருளாதாரம் படிச்சவங்கிறதுனால ஆர்வமா சில சமயம் படிப்பேன்....
அவர் எழுதினது எல்லாம் ஒரே பக்கத்துல குடுத்து இருக்கார் பாருங்க.. பொருளாதாரம், வணிகவியல் படிக்கும் மாணவர்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும்..இத விட அழகா அல்வா மாதிரி எங்கேயும் கிடைக்காதுங்க.. நேரம் கிடைக்கும் போது படிச்சுட்டு ஒரு பின்னூட்டம் போடுங்க..அவங்களுக்கும் சந்தோஷமா இருக்கும்...
அடுத்து பங்காளியின்...பங்குவணிகம்.
பங்குவணிகம் பற்றி ஆன்னா ஆவன்னா வில இருந்து ஆரம்பிச்சு இருக்கார். சின்ன சின்ன பதிவுகளா இருக்குறதுனால படிக்கிறதுக்கும் சலிப்பு வர்ரது இல்லை...அவர் வாக்கு குடுத்து கரெக்டா எழுதீட்டு வர்ர தொடர் இது தான். அதுக்காகவாது ஆதரவு குடுக்கனும்.( கோவிச்சுக்காதீங்க சார்)
பங்காளியின் வர்த்தகம் பதிவுல தீக்குச்சி மரம் பற்றி குறிப்பிட்டுருக்கார். இத படிச்சுட்டு அவர் குடுத்திருந்த தொலைபேசி எண்ணுக்கு சம்பந்தப்பட்டவர் கிட்ட பேசினேன். அட அமாங்க, நெசமாத்தான்.... பெரிய பண்ணாடிச்சி ஆகப்போறேனுங்கோவ்.. இரண்டு மாதம் கழித்து தொடர்பு கொள்ள சொல்லி இருக்கார் (வெயில் காலம் முடிஞ்ச பின்னாடி). உங்களுக்கும் எங்காவது நிலங்கள் தரிசா கிடந்தா இத முயற்சி செய்து பாருங்க. நான் கண்டிப்பா இதுல இறங்கப் போறேன்....நன்றி பங்காளி....ஒரு நாளைக்கு பெரிய பண்ணாடிச்சி ஆகும்போது உங்களை நினச்சுக்குவேன்..:-) .. ஆனா இதுல ஏதாவது மிஸ் ஆச்சு...அப்புறம் பாருங்க..
இன்னும் தமிழ்நிதியின் பதிவுகள்.. பங்குமார்க்கெட் பற்றி...
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யவதற்கு முன் ....மியூச்சுவல் ஃபண்ட் சம்பந்தமான சில முக்கியமான வார்த்தைகளை தெரிந்து கொள்ளலாம்னு ஆரம்பிச்சு இருக்கார்.
ரொம்ப நாளா பங்குவணிகம் பற்றி எழுதீட்டு வர்ர குப்புசாமியின் பதிவுகள். குறிப்பா கச்சா எண்ணை பற்றி அவர் எழுதின பதிவு...என்ன மாதிரி மக்குக்கே புரிஞ்சுரிச்சுன்னா பாருங்க... நாணயம் விகடன்லேயும் இந்த கட்டுரை வந்துச்சு.
இந்த மாதிரி தலைப்புகள் எல்லாம் தேடிப் போய் பார்த்து படிப்போமாங்கிறது சந்தேகம் தான். இவங்க அன்றாட அலுவல்களுக்கு மத்தியில, நேரம் ஒதுக்கி, சலைக்காம பின்னூட்டத்த பற்றி கவலைப்படாம, தொடர்ந்து எழுதீட்டு வர்ரது பெரிய விஷயம் தானே?.
நான் இந்த பதிவ எழுதப் போறேன்னு சொன்னப்போ லட்சுமி, சிவகுமார் பங்குபெற்ற இணையத்தில் இன்பத்தமிழ் வாராந்திர நிகழ்ச்சியின் ஒலிப்பதிவு பத்தி சொன்னாங்க. இதுல மா.சிவகுமார் அவர்கள் வ்லைப்பதிவு உலகத்த பற்றி பகிர்ந்துக்குறார் கேளுங்க. பங்குவணிகம், மியூச்சுவல் ஃபண்ட் பதிவுகள் பற்றி இவர் குறிப்பிட்டு இருக்கார். இப்ப யார் படிக்கிறாங்கன்னு கவலைப்படாம எதிர்காலத்தில வர்ரவுங்க நம்ம எழுதறத படிச்சு பயண் பெறுவாங்க..அதுக்காகவாவது நமக்கு தெரிஞ்சத நேரம் கிடைக்கும் போது கண்டிப்பா எழுதனும்னு சொல்ரார்.
இந்த இடத்துல நான் இன்னொன்னு பகிர்ந்துக்க விரும்பறேன். எங்க கல்லூரியில் படிக்கும் நான்கு MBA மாணவர்கள், தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள், பங்காளியின் பதிவுகளையும், மா.சிவகுமாரின் பதிவுகளையும் படிச்சுட்டு வர்ராங்க. இதுல கல்லுரியில் இருந்து சிவகுமாரின் பதிவுகளில் பின்னூட்டம் போட முடியறதில்லை. ஆனா பங்குவணிகம் பதிவுல போடறதுண்டு.
Wednesday, May 9, 2007
இன்னைக்கு மங்கையர் மலர்
தாரா-பெண்கள் இன்னைக்கு கால் வைக்காத துறைகளே இல்லைன்னு சொல்லலாம். அதே போலத்தான் தொழில் நுட்பத்துறையும். இதுல அவர்கள் பல சாதனகள் புரிந்து வந்தாலும் அந்த எந்த அளவுக்கு லைம் லைட்டுக்கு வந்து இருக்குன்னு எல்லார்க்கும் தெரியும்.
''கணிணி இயந்திரத்தை வடிவமைக்க வழிகாட்டியாக இருந்தவர். ஆனால் அவருடனேயே பணியாற்றிய Ada Byron King என்கிற பெண் தான் உலகின் முதல் கம்பூட்டர் ப்ரொக்ராமர் என்பது எத்தனைப் பேருக்கு தெரியும்? அதே போல் 19ஆம் நூற்றாண்டில் நவீன கம்பைலர்கள் மூலம் மென்பொருள் தயாரிப்பதற்கான மகத்தான முயற்சிகளுக்காக Grace Hopper என்கிற பெண்மணிக்கு பல விருதுகள் கிடைத்தன, "Man of the Year" விருது உட்பட!!!''
சின்ன வயசில இருந்து நம்ம சமுதாயத்தில இருந்து வர்ர பால் நிலை பாகுபாடுகள், பெண்களின் எதிர்ப்பார்பிலும், நோக்கத்திலும் கூட வித்தியாசங்களை கொண்டுவருதுன்னு அருமையா சொல்லி இருக்காங்க.
செலவனின் கட்டுரைகள் அனைத்தும் ஆர்வமா படிப்பேன் பெண் விடுதலைன்னு, ஒரு பட்டிமண்டபத்திலல நடந்த விவாதத்த எடுத்து சொல்லி இருக்கார் பாருங்க. ஒரு பெண் அடிமை பட்டு கிடக்கிறாள் என்கிற விழிப்புணர்வே அவளுக்கு இல்லைன்னா, அதுல இருந்து வெளியே வர்ரதுக்கு எவ்வாறு போராட முடியும்?. முதல்ல அது மாதிரி பெண்களை சுயத்துக்கு வரச்செயனும்னு பெரியாரின் வாதத்தை முன் வைத்து பேசிய சில கருத்துக்கள்.
''ஆக பெண்முன்னேற்றம் என்பது "விழிப்புணர்வின் மூலம் வரும் சுயமரியாதை" என்ற கருத்தை நான் முன் வைக்க விரும்புகிறேன்''
திரு வின் ஐ நா சபையும் பெண்விடுதலையும் கட்டுரை. ஐ நா சபையில் பெண்களுக்கான சில திட்டங்கள், அது எதுக்காக, எவ்வாறு செயல் படுத்தப் படுகிறது என்பதை தெளிவா குடுத்து இருக்கார். தலித் இன பெண்கள் ஆதிக்க சக்திஅக்ளின் பிடியில் படும் அவஸ்தையை சொல்லி இருக்கார்.
''பெண்களின் உரிமைகளில் கட்டுப்பாடுகளை விதிப்பதில் குடும்பமே பெரும் பங்கு வகிக்கிறது. இந்திய கணவர்கள் தங்கள் மனைவியர் மீது தொடுக்கிற கட்டுப்பாடுகள் ஆணாதிக்க அடிமைத்தனத்தை உறுதிப்படுத்துகிறது. மனைவியர் தங்களை விட படிப்பில் குறைந்தவர்களாக இருக்கவும், பதவிகளில் கீழ் நிலையில் இருக்கவும், வேலைக்கு செல்லவிடாமல், படிக்கவிடாது தடுப்பதிலும் குறிப்பாக இருக்கிறார்கள் இந்திய ஆண்கள்''
சந்திரவதனா பற்றி நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை.. இந்த பதிவும் நான் பல முறை படிச்சது... நமக்கே நமக்கா இருக்கும் சில உறவுகள், அதுல கிடைக்குற சில சந்தோஷங்கள்...ஹ்ம்ம்ம்,அனுபவிச்சு பார்த்தாதான தெரியும்.... இத கண்டிப்பா படிங்கப்பா...
''வாழ்வில் யார் யாரை எந்தெந்தப் பொழுதுகளில் சந்திக்கப் போகிறோம் என்பதையோ, அவர்களில் யார் யார் எமக்குப் பிடித்தமானவர்களாகி விடப் போகிறார்கள் எனபதையோ எம்மில் யாருமே முற்கூட்டியே அறிந்து வைத்திருப்பது இல்லை.''
இருபதாம் நூற்றான்டின் தலை சிறந்த பெண்கள் பற்றி ஜெயா சொல்லி இருக்கார் பாருங்க..செய்தி விமர்சனம் ,விகடன்ல வந்தது. வணக்கதுக்குறியவர்கள். படிச்சுட்டு நெகிழ்ந்து போயிட்டேன்
Tuesday, May 8, 2007
பல முறை படித்தவை...
எனக்கு அப்படி இருந்துச்சு...உங்களுக்கு எப்படியோ..படிச்சுட்டு சொல்லுங்க.
அந்தாரா....ஹ்ம்ம்...சமீபத்தில் இவருடைய மெனோபாஸ் பத்தி ஒரு பதிவை படிச்சேன். நம்மில் எத்தன பேர், நம்ம அம்மாவ்ங்க எல்லாம் இந்த கட்டத்த அடைஞ்சப்போ அத புரிஞ்சு நடந்து இருப்போம். எவ்வளவு கடினமான கால கட்டம்னு நமக்கு அப்ப தெரியலை. மன சோர்வு, மன நிலை மாற்றம், போன்ற உளவியல் பிரச்சனைகளும், வேறு சில பிரச்சனைகளும் இருக்கும். இது என்ன எல்லா பொம்பளைகளுக்கும் வர்ரது தானேன்னு யாரும் பெரிசா கண்டுக்கறதில்லை. ஆனா இந்த காலகட்டத்துல அவங்களுக்கு ஆதரவா பேசி, அவங்க ஆரோக்கியத்தின் மேல அக்கறை காட்டனும்னு எதிர்பார்ப்பு இருக்கும்..இதோ
இப்போதெல்லாம் கடவுள் கோயில் பக்தி என்று உன்னுடைய நாட்கள் நகர்கிறது. உன்னுடைய தனிமையை கடவுளும் பக்தியும் குறைப்பிக்கிறதா அல்லது உன்னுடைய பயத்தை இறைமையாய் உணர்கிறாயா?- மெனோபாஸ்
அடுத்த பதிவு, வசந்தின் இளமையில் வறுமை பற்றிய பதிவு. இளமையில் வறுமையும், முதுமையில் தனிமையும் கொடுமை.
''மிகவும் நீளமானது எது தெரியுமா..? நைல் நதியோ, கங்கை நதியோ அல்ல.. வேலை இல்லாதவனின் பகல் பொழுது..''
கொம்பு முளைத்த வறுமை - 'வெறுமை'.
என்னைக் கவர்ந்தது....
இந்த வரிகள், நான் வறுமையின் பிடியில், வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கையில் எழுதியன.என் காலம் வருகையில், ஆணவம் என்னைப் பற்றக் கூடாதென்று சேர்த்து வைத்திருந்தேன். வானம் அளவு நான் விஸ்வரூபம் எடுக்கும் போது, என் கால்கள் பூமியோடு புதையச் செய்ய நான் நினைவு வைத்திருக்கும் வரிகள்
அடுத்து, சித்தார்த், நம்ம சுத்தி நடக்கிற விஷயங்கள், மனிதனின் முயற்சியில் ஒவ்வொரு நாளும் நடக்கும் புதுமைகள், கண்டு பிடிப்புகள் பற்றி ஸ்டீஃபன் ஹாக்கிங் ன் கட்டுரையை மொழிபெயர்த்துள்ளார். எளிமையான தமிழ்ல அழகா எல்லார்த்துக்கும் புரியறமாதிரி சொல்லி இருக்கார். ஆர்வமா படிச்சேன்
தன்னிலை விளக்கம்னு தலைப்பு குடுத்துட்டு கணவன் என்ற ஒருவன் பிடியில் தவிக்கும் பெண்களின் நிலையை மனிதத்துடன் படம் பிடித்து காட்டி இருக்கும் தமிழ்நதியோட இந்த பதிவ நான் பல தடவை படிச்சிட்டேன்.
இன்னைக்கு கிளாஸ் அவ்வ்ளோ தான்...நாளைக்கு பார்க்கலாம்....
Monday, May 7, 2007
இந்த வாரம் நான் தானுங்கோவ்...:-)
தமிழ்மணம் மாதிரி இலவசமா ஒரு ஊடகம், அதுல நாமு(னு)ம் எழுதி,அத இத்தன பேர் படிச்சு, கருத்து சொல்லி, நானும் என் கருத்துகள சொல்லி..ஹ்ம்ம்...பிரமிப்பாதான் இருக்கு.தமிழ்மணம் இல்லைன்னா நாம எழுதறதெல்லாம்...... சரிங்க... நான் எழுதற தெல்லாம், அச்சடிச்சா வரப்போகுது?.என்னை இந்த வார வலைச்சரம் தொடுக்க அழைத்த சிந்தாநதிக்கும் பொன்ஸ்க்கும் என் நன்றிகள்.சரி ரொம்ப அலட்டாம நேரா சொல்ல வந்த விஷயத்திற்கு வர்ரேன்.
தமிழ்மணத்துல நான் தான் ரொம்ப கம்மியா பதிவுகளை படிக்கிறவன்னு நினைக்குறேன். நிறைய படிக்காட்டியும் நான் படிச்ச பக்கங்களையும், தமிழ்மணத்த விட்டு வெளியே இருக்கும் பக்கங்களையும் தர முயற்சிக்கிறேன்.சுவர் இருந்தா தானே சித்திரம்...அதனால ஆரோக்கியமா ஆரம்பிப்போம்...

நம்ம ஆரோக்கியத்துக்கு எத்தன விஷயத்த சொல்றார் பாருங்க இவர் . இத கண்டிப்பா படிங்க. இதில இல்லாத விஷயங்களே இல்லை... இந்த பக்கத்த சேமிச்சு வச்சுக்கலாம்.
எத வேனாலும் வாய்க்கு ருசியா இருந்தா சாப்பிட்டு பின்னால உடம்புக்கு ஏதாவது வந்ததுக்கு அப்புறம் தான நமக்கு உறைக்குது... எப்படியெல்லாம் வியாதிகள் வரலாம்னு, நம்ம போன வார நட்சத்திரம் சொல்லி இருக்கார். இந்த தகவல்கள் தெரிஞ்சிட்டா சில உணவு வகைகளை தடுத்து வரலாம்.
காய்ச்சலை போக்கும் மூலிகை இருக்கு பாருங்க.. சர்க்கரை நோயிலிருந்து நம்மள பாதுகாக்க இவர் சொல்றத நியாபகத்துல வச்சுக்கலாம்...கீரைவகைகளும் அதை சமைக்கிற விதமும் பற்றி மதியோட பதிவ ஒன்னு பார்த்தேன்..ஆங்கில பதிவு...சுட்டி கிடைக்கலை...மதி இங்க வந்து பார்த்து சுட்டிய குடுத்தா நல்லா இருக்கும்.படிச்சுட்டு உபயோகமா இருந்துச்சான்னு ஒரு வரி எழுதுங்க மக்களே.....
நோய் நொடி நீங்கி பல்லாண்டு பல்லாண்டு பலநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள்
தலைநகரிலிருந்து....
முத்துலட்சுமியை அடுத்து வலைச்சரம் தொடுப்பதும் இன்னுமொரு வளைக்கரமே (நன்றி: துளசிக்கா :) )
வலைபதிவில், "டில்லி சகோதரிகள்" என்றே அழைக்கக்கூடிய வகையில் முத்துலட்சுமியின் இணைபிரியா தோழியாகிவிட்ட மங்கை தான் அடுத்த வலைச்சர ஆசிரியர்.
மறைந்திருக்கும் மனிதத்தை வெளிக்கொணரும் மங்கையின் சமூகப் அக்கரையுள்ள பதிவுகள் நமக்கு நன்கு பரிச்சயமானவை. அதே மாதிரியான அக்கரையான புதிய தளங்களை/ பதிவுகளை இந்த வாரம் நிறைய அறிந்து கொள்ளலாம் என்று நம்புகிறோம்.
இதோ உங்களுடன், தலைநகரிலிருந்து கோவைச் செல்வி மங்கை..

Saturday, May 5, 2007
வலைச்சரத்தின் 50 வது பதிவு
என் பதிவு பக்கமே ஒரு வாரமா போகல..அங்க இருந்த 13 ங்கற க்ரேடு இறங்கி 12 க்கு வந்துடுச்சு.
இது வலைச்சரத்தின் 50 வது பதிவு. இந்த முயற்சியால் நேரம் குறைவாக இருப்பவர்கள் வித்தியாசமான பதிவுகளைப் படிக்க முடியும். வலைச்சரம் மேலும் நல்ல வளர்ச்சி அடைந்து பலருக்கும் உதவியாக இருக்க என் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
இன்றைக்கான பதிவுகள் .....
நான் டைப் கத்துக்கப்போன க்ளாஸ் ஒட்டினாற்போல ஒரு வீட்டு சமையலறை...பசி நேரத்தில அங்கிருந்து வரும் தாளிக்கும் வாசனை இருக்கே ...இங்க ஒருத்தங்க தாளிக்கும் ஓசை கேட்குதா உங்களுக்கு... அருமையான குறிப்புகள் இருக்கு.
சினிமாவில் மட்டும் தான் ஹீரோ இல்லாட்டி ஹீரோயின் அரசாங்கமே ஆனாலும் அநியாயத்தைத் தட்டிக்கேட்கும் தைரியம் பெற்றவர்களாக இருப்பதை பார்த்திருக்கோம்..இனி நீங்களும் ஒரு ஹீரோ ஹீரோயின் தான் தட்டிக் கேளுங்கள் ... நாட்டுக்கு நல்லது செய்ய உங்களால் கூட முடியும் தெரியுமா உங்களுக்கு
சந்தோஷமோ சோகமோ பாட்டிருந்தா துணைக்காச்சு...அதுவும் நம்ம தமிழ் சினிமா பாட்டுகள் இருக்கே அவங்கவங்க சிச்சுவேஷனுக்கு ஏத்தமாதிரி பாட்டுகள் குவிஞ்சு கிடக்கிற ஒரு பெட்டகம். அதுல இருந்து என்ன வேணும் கேளுங்க இங்க போய்.. உங்களுக்கான இலவச இசைச்சேவை நடக்கிறது .
கதம்பமாலை தளத்துக்கு சென்றிருக்கிறீர்களா ? நீங்கள் படித்த ப்ளாக் பற்றி பரிந்துரையுங்கள் ...பரிந்துரைக்கப்பட்ட தளங்களையும் படித்து மகிழுங்கள்.
இத்துடன் என் வலைச்சர அறிமுகங்கள் முடிகிறது வாய்ப்பளித்த சிந்தாநதி அவர்களுக்கும் இது வரை பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும்...வந்து படித்த மற்றவர்களுக்கும் நன்றி..நன்றி.
Friday, May 4, 2007
பராக் பராக் பராக்
அப்படி பார்த்தவற்றில் சிலவற்றை குறிப்பிடுகிறேன்.
இங்கே ஒரு நட்சத்திரம் பேசுகிறது.அரங்கேற்றம்
எல்லா நதிகளும் ஊற்றாகத்தான் தோன்றுகின்றன... எல்லா மேதைகளும் குழந்தையாகத்தான் பிறக்கின்றனர்.!! கண்கள் மற்றும் கற்பனையின் சக்திக்கு அப்பாற்பட்டு பரந்து விரிந்திருக்கும் இந்த வானத்தில் நானும் ஓர் நட்சத்திரமாய் மின்ன வந்திருக்கிறேன். நட்சத்திரங்களை எண்ணும் எந்தக் குழந்தையாவது என்னை அதன் கணக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ளாமலா போய் விடும்? நம்பிக்கையுடன் துவங்குகிறேன்!!
வலைப்பதிவுலகத்தில் முக்கியமானவர்களில் ஒருத்தராச்சே
புதியதாக வரவங்களுக்கு இந்த அறிமுகம் உபயோகப்படும்.
நன்றி நன்றி ன்னு சொல்லிக்கிட்டே வரார் பாருங்க...எதையும் தொடங்குமுன்னர் வேண்டியவங்க நமக்கு பெரியவங்களை நினைச்சுப்பார்க்கறது நல்லது இல்லயா? அதான்.
எதையும் இவங்க ஒரு வித்தியாசமாத்தான் எழுதி இருக்காங்க..இவங்கள உதாரணம் காட்டாம இருக்க முடியல
தலைப்பு வச்ச காரணத்தைச் சொல்லி ஆரம்பிச்சுருக்கார்..
சிலர்வரும் போது என்னை மாதிரி பயந்துகிட்டே ஆரம்பிக்கறாங்க சிலர் வரும் போதே அட்டகாசமா நுழையறாங்க..உதாரணத்துக்கு அபி அப்பா , காட்டாறு , கண்மணி , அய்யனார் .படிச்சிருப்பீங்களே !!
நாளைய நாட்டின் தூண்கள்
குழந்தைங்க கிட்ட பேசறார்... ஒரு பொறுப்புளவர்களாக நாமும் நடந்துக்க வேண்டாமா ?
குழந்தை பிறந்த வுடன் நாம நம் இயற்கை வரங்களா கிடைத்த மருந்துகளைக் கொடுத்து வந்தோம் அது வர வர இப்ப குறையுது பாருங்க இவங்க அதைப்பத்தி எழுதி இருக்காங்க.
குழந்தை வளர்ப்பு
எந்த நாட்டில் இருந்தாலும் தாய்மொழி முக்கியமில்லையா குழந்தைங்க இப்படி வளர்ந்தா எப்படிங்க
இங்கே சில லிங்க்குகள் இருக்கு..
குழந்தைங்களுக்கான வலைப்பூக்கள் பற்றிய தகவல்கள்
வளரும் குழந்தை எதை எதை கத்துக்குதுங்கறது கவனிக்கப்படவேண்டிய விஷயம்...எனக்கு ஹிந்தி தோடா தோடாத்தான் மாலும் ...புதுப்பாட்டு வந்து மகள் பாடும் போது அர்த்தம் தெரியுமா நல்லா பாட்டா இதுன்னு மகளிடம் கேட்டுக்கிட்டு இருப்பேன்..அது பத்தி ஒரு விவாதம் பாருங்க இங்க...
குழந்தைங்க இப்படிப்பட்டப் பாட்டைப் பாடலாமா?
இவங்க பக்கத்துக்குப் போனேன் ,
நிறைய தலைப்புகளில் குழந்தைகளைப்பற்றி எழுதி இருக்காங்க...
என் பொண்ணுக்கு கடவுள் கதைகள் என்றால் ரொம்ப பிடிக்கும் நிறைய தெரிந்து வைத்திருக்கிறாள்...என் அம்மா வந்தா தினமும் கதை கேட்டுத்தான் தூங்குவா..அவ கேட்கிறா யாராச்சும் கடவுளைப் பார்த்து இருக்காங்களா? இந்த கதையெல்லாம் நிஜமா அப்படின்னு...
நான் அவளுக்கு சொல்வது என்னன்னா ""எனக்கும் சரியாத்தெரியாது அவரவர் உணர்ந்து பார்க்கவேண்டிய விஷயம் இது ...பார்த்தவர்கள் சொன்னாலும் பார்க்காதவர்கள் ஒத்துக்கிறது கஷ்டம் ... நீயாக புரிந்து கொள்ளவேண்டும் . எனக்கு தெரியாதை நான் எப்படி சொல்ல முடியும் இது ஒரு நம்பிக்கை.
என் தாத்தா அப்பா அம்மா இப்படி வழி வழியாய் சொன்னதை நான் ஓரளவுக்கு நம்புகிறேன் கட்டாயமில்லை ...நீ உணர்ந்து பார்.""
குழந்தைங்க அப்படியே பெற்றோர்வழியில் வளர்ந்தா எப்படி..
கேட்கிறார் பாருங்க...
Wednesday, May 2, 2007
கொஞ்சம் ஒற்றுமை
அப்படி ஒரு சில பதிவுகளை த் தான் இங்கே குறிப்பிடுகிறேன். இது சிந்தாநதி அவர்கள்; ஆரம்பித்த சாப்பிட வாங்க குழுப்பதிவுக்காக நான் எழுதிய முதல் பதிவு...இதே மாதிரி என் குரு அவங்களும் ஒரு பதிவு போட்டிருக்கறது லேட்டாத்தான் எனக்கு தெரிந்தது. படிச்சுப்பாருங்க ஈஸிதான் அப்படிங்கறதுல ஆரம்பிச்சு கொஞ்சம் கொஞ்சம் ஒற்றுமை இருக்கில்ல.
[அவங்க எங்க நான் எங்க சும்மா எதாச்சும் எழுதிக்கிட்டு சேசே]
முதியவர்களைப் பத்தி அந்த வயதை நெருங்கிக் கொண்டிருப்பவர்கள் சில விஷயம் எழுதி இருக்காங்க .. [வயதாகுதுன்னு சொல்லிட்டேன்னு அடிக்க வராதிங்க ப்ளீஸ் மனதளவில் நீங்கள் எல்லாம் எங்களை விட இளமை யான வங்க ] தமிழில் முதலில் எழுதத்துவங்கிய பெண் வலைப்பதிவர்களில் ஒருவரான இப்போது அதிகம் எழுதாத இவரைப் போன்றவர்களை நான் எழுத வந்து சிறிது காலத்துக்கு எனக்கு தெரிய வே இல்லை. நம்ம துளசி வலைப்பதிவர் சந்திப்பில் தான் சொன்னாங்க அப்புறம் தான் அவங்க பதிவுஎல்லாம் படிச்சுப்பார்த்தேன். அதே பதிவில் பத்மா ,துளசி மற்றும் தாரா இவர்களின் லிங்க் இருக்கு அப்பவே ஒரு விவாதம் நடந்து கொண்டிருந்திருக்கிறது.
இப்ப இந்த மாதம் வல்லி எழுதிய பதிவு பார்த்து திரும்ப ஒரு வாதத்தை முதியவர்களை கவனிக்கவேண்டிய நிலையில் இருக்கும் வயதில் இருப்பவர் எழுதி இருக்காங்க .
எப்படி யெல்லாம் யோசிக்கறாங்க பாருங்களேன்.பின்னூட்டத்தில் அருமையான வாதங்கள் இருக்கு ....பதிவோடு அந்த பின்னூட்டங்களையும் உன்னிப்பாகப் படியுங்கள்..
கதை படிக்கறதுங்கறது எல்லாருக்கும் சின்னவயசுல ஒரு கொண்டாட்டமா இருந்துருக்கும்... அவங்கவங்க படிச்சத பத்தி சொல்லி இருக்காங்க பாருங்க.
ஒன்று
இரண்டு
என்னடா இவ எல்லாத்துலயும் அவ பதிவு ஒன்னுத்துக்கும் விளம்பரம் கொடுக்கறான்னு நினைக்காதீங்க...நான் எழுதப்போகும் போது தானே இதெல்லாம் என் கண்ணுல பட்டுது. அதனால தான்.
இவங்க ரெண்டு பேருதும் படிச்சுட்டு அப்புறமும் நான் என்னோட கொசுவத்தியைச் சுத்திட்டுத்தானே ஓய்ந்தேன். ரேடியோ பத்தி நான் ஒரு பதிவு எழுதினேன்[ இங்க என்னோட லிங்க் குடுக்கல பாத்துக்குங்க ] பின்னூட்டத்தில் வந்து கானாப் பிரபா நான் கூட இதே மாதிரி எழுதி இருக்க ன்னு சொன்னாங்க அப்புறம் பார்த்தா இதே மாதிரி நிறைய பேர் கொசுவத்தி சுத்தி இருந்தாங்க..ஒவ்வொன்னும் அருமையானது தான் ... கொஞ்சம் ஒற்றுமை இருந்தாலும் , அவங்க அவங்க கோணத்துல அவங்கவங்க எழுத்துத் திறமையில் படிக்க நல்லா இருந்தது.
புதுசா வரவங்க எழுதறதுக்கு முன்னாடி இது போல யாராச்சும் எழுதி இருக்காங்களான்னு ஒரு முறை கூகிள் செய்து பார்த்துட்டு அதுல என்ன எழுதி இருக்காங்க நாம் என்ன எழுதப்போறம்ன்னு ஒருமுறை பார்த்துக்கலாம்...இல்லயா எப்படி ஐடியா. :)