சரி சரி ரொம்பவும் கொசுவத்தியை கொளுத்தி உங்களை எல்லாம் அழவைக்காமல், புதியவர்களின் அறிமுகத்திற்கு செல்லுவோம். :-
ரத்தினங்களாக நான் கண்ட சில புதியவர்களை அறிமுகம் செய்வதில் சந்தோஷம் அடைகிறேன். படித்து விட்டு சும்மா செல்லாமல் எல்லோருக்கும் அவரவர் பதிவில் சென்று வாழ்த்து சொல்லிட்டு போகனும் டீல் சரியா..!!
1. சுபஸ்ரீ இராகவன் கவிதை நிறைய எழுதறாங்க.. கவிதைகள் நன்றாகவே உள்ளன, அதற்கு அவரின் ஆத்திசூடி கவிதை ஒரு உதாரணம். அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லி அவரை உற்சாகப்படுத்தலாமே..
2. நிலா – ராஜா, கோமதி தம்பதியின் குழந்தை நிலா குட்டி பெயரில் அவர்கள் ஆரம்பித்துள்ள பதிவு. கோமதி இது வரையில் எழுதியதில்லை, இந்த ப்ளாக் மூலம் நிலா குட்டியியுடன் தன் அனுபவங்களை இதில் பகிர்ந்து கொள்கிறார்கள். நிலாவை பற்றி நீங்களும் தெரிஞ்சிக்கனுமா.. வாங்க வாங்க....
3. கிருஷ்ணாபிரபு என்பவர் இந்த ப்ளாகை எழுதுகிறார். சற்று வித்தியாசமாகவே இருந்தது. அவருக்கு பிடித்த புத்தகங்களை அறிமுகம் செய்து எழுதுகிறார், புத்தகங்களை புரட்டி பாருங்களேன்.
4. சிம்பா என்பவர் எழுதுகிறார், அவருடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார். எனக்கு பிடிந்திருந்தது.. நீங்களும் பாருங்களேன்..
5. கலகலபிரியா.. :- ஆஹா பெயரே கலகல..வென இருக்கு, பதிவுகளும் கலக்கல்ஸ் ஆ இருக்கும், உங்களுக்கு எப்படி இருக்குன்னு முயற்சி செய்து பாருங்க..
6. மாதவன் என்னுடைய பதிவுகளில் பின்னூட்டம் இடுவார், அதை கொண்டு அறிவேன், அவ்வப்போது படிப்பேன், இவருடைய புகைப்படங்கள் எனக்கு ரொம்பவும் பிடித்தவை.
7. ஜஸ்டின் , பத்திரிக்கை துறையில் வேலை செய்த அனுபவங்களின் மூலம் பதிவுகளை எழுதுகிறார். நன்றாகவே உள்ளன.
8. தமயந்தியின் நிழம்வலை என்ற பெயரிட்டு சூப்பர் பதிவுகளை எழுதி இருக்கிறார்கள். ஆனால் யாரும் படிப்பதாக தெரியவில்லை. .இவர்களை போன்றவர்களை குழுக்களில் சேர்த்துவிட்டால் படிப்பவர்கள் அதிகமாகும்.
9. ஒரு வார்த்தை :- என்ற பெயரில் எழுதுகிறார், திரைபடதுறையில் பணியாற்றும் இவரை பற்றி அறிமுகமே என்னை கவர்ந்தது, தைரியமாக அரசியல் பதிவில் ஆரம்பித்து இருக்கிறார், படித்துதான் பாருங்களேன்..
10. வெங்கிராஜா:- வாவ்!! இவருடைய பாதசாரி டெம்ளேட்.. சூப்பர்.. !! இதற்காக ஒருதரம் சென்று பார்த்துவிட்டு அப்படியே பதிவுகளை படித்துவிட்டு வாருங்கள்..
11.பொன்னிலா , பெயர் தான் நிலா வென்று முடிகிறது ஆனால் நிலா சுடுகின்றது… சுடுவதை நீங்களும் உணர்வீர்கள் சென்று படியுங்கள்.
புதிய பதிவர்களுக்கு எனக்கு தெரிந்த சில டிப்ஸ்' :
1. முகம் தெரியாமல் எழுதினால் என்ன வேண்டுமானாலும் எழுதலாம்னு என்ற நினைப்பை விட்டுவிடுங்கள்
2. உங்களுடையது எப்படிப்பட்ட முகமாக இருந்தாலும் நான் இப்படித்தான் என்று காட்டிக்கொள்ள தயங்காதீர்கள்
3. எத்தனை கும்மி அடித்தாலும் நடுவே ஒரே ஒரு நல்ல பதிவாவது எழுதுங்கள்
அணில் குட்டி அனிதா :- என்னை அடக்கி அராஜகம் செய்வதால் நானும் ஒரு புது பதிவு ஆரம்பிக்கிறேன் மக்கா… அல்ரெடி இங்க யூ.ஆர்.எல் ரெடி செய்துட்டேன், சோ...எல்லாரும் இனிமே அங்க வந்து சேருங்க. .அம்மணிய எல்லாரும் Boycott பண்ணுங்க….. நோ மோர் டீலிங் வித் திஸ் லேடி !! கவி நோ மோர் ரீடர்ஸ் டூ யூ !! ...ஹாங்... ஐ சேலஞ்சு..!!
மக்கா உங்கள நம்பி சேலஞ்சு எல்லாம் ஓவரா சவுண்டு விட்டுட்டேன்.. சோத்துல மண்ணை போட்டுடாதீங்க… !! அவ்வ்வ்வ்வ்!! ஆதரவு கொடுங்கோஓஓஓ!!
பீட்டர் தாத்ஸ் : ரத்தினச்சரம் - (lapiz lazuli) :
Read more about Lapiz Lazuli
http://www.astroshastra.com/gemstore/lapiz.asp
http://en.wikipedia.org/wiki/Lapis_lazuli
http://www.all-that-gifts.com/se/lapis_lazuli.html
மூன்றாம் நாள் வாழ்த்துகள்
ReplyDelete\\எத்தனை கும்மி அடித்தாலும் நடுவே ஒரே ஒரு நல்ல பதிவாவது எழுதுங்கள்
ReplyDelete\\
ஆஹா!
சரி சரி
முயற்சி செய்திடுவோம்
மண்டபத்துலையாவது கேட்ப்போம்
\\முகம் தெரியாமல் எழுதினால் என்ன வேண்டுமானாலும் எழுதலாம்னு என்ற நினைப்பை விட்டுவிடுங்கள்\\
ReplyDeleteநானும் இப்படித்தான் நினைச்சேன்
\\உங்களுடையது எப்படிப்பட்ட முகமாக இருந்தாலும் நான் இப்படித்தான் என்று காட்டிக்கொள்ள தயங்காதீர்கள்\\
ReplyDeleteநாம தயங்குறதே இல்லீங்க
நிறைய புதியவர்கள் இருக்கின்றார்கள்
ReplyDeleteஅப்பாலிக்கா படிக்கிறேன் ...
நல்ல பட்டியல்!
ReplyDeleteநல்லா கொடுக்கறீங்க டிப்ஸ்!!
//உங்களுடையது எப்படிப்பட்ட முகமாக இருந்தாலும் நான் இப்படித்தான் என்று காட்டிக்கொள்ள தயங்காதீர்கள்//
ReplyDeleteஅப்படி காட்டிக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒருவர் நிஜ முகத்தில் நகைச்சுவை உணர்வு அதிகம் உள்ளவராக இருந்துகொண்டு பதிவில் சீரியஸ் விஷயங்கள் மட்டுமே கூட பேசலாம்.
//2. நிலா – ராஜா, கோமதி தம்பதியின் குழந்தை நிலா குட்டி பெயரில் அவர்கள் ஆரம்பித்துள்ள பதிவு. கோமதி இது வரையில் எழுதியதில்லை, இந்த ப்ளாக் மூலம் நிலா குட்டியியுடன் தன் அனுபவங்களை இதில் பகிர்ந்து கொள்கிறார்கள். நிலாவை பற்றி நீங்களும் தெரிஞ்சிக்கனுமா.. வாங்க வாங்க....//
டாங்ஸுங்கோ....
நல்ல அறிமுகங்கள்!
ReplyDeleteபுதியவர்களுக்கு அவ்வளவு தான் டிப்ஸா!
என்னை போல் புதியவர்கள் மேலும் ஆலோசனைகளை எதிர்பார்க்கிறோம்!
அது தமயந்தியின் நிழல்வலை.
ReplyDeleteச்சே.. ஸாரி.. சொல்ல மறந்துட்டேன்.
ReplyDeleteஉங்க டிப்ஸ்.. டாப்!
ப்ளாக் எழுத ஆரம்பிச்சு ரொம்ப நாள் ஆனாக்கூட இபப தான் பரிசல்காரன் வாசிச்ச பிறகு தொடந்து எழுத ஆரம்பிச்சது. பாலா மாதிரியே எனக்கும் கிருஷ்ணா,ல்க்ஷ்மண்.பதிலாம் உதவி செஞ்சாங்க. நல்ல பதிவுனு நீங்க தேர்ந்தெடுத்தது சந்தோஷம் மட்டுமில்லை. மேலும் ப்ளாக்கில் தொடர்ந்து சோர்வில்லாம பயணிக்க உதவுகிறது.(ஏனோ அவார்ட் நிகழ்ச்சிகள்ல அவார்ட் வாங்கினோன கண்லாம் கசிய பேசுறது உஙகளுக்கு ஞாபகம் வந்தா நான் பொறுப்பில்லைனு மட்டும் சொல்லிக்கிறேன்
ReplyDeleteஎனது எளிய எழுத்துக்களை அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி. டிப்ஸ்-உம் பயனுள்ளதாக இருந்தது!
ReplyDeleteதொடர்ந்து பதிவுகள் படித்து பின்னூட்டத்தில் நிறை-குறைகளைச் சொன்னால் இன்னும் உதவிகரமாய் இருக்கும். மீண்டும் நன்றிகள்.
வணக்கம் கவிதா....
ReplyDeleteஉங்களை வலைசரத்தில் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது... இனி ஒரு வாரத்துக்கு ஜமாய்ச்சுடலாம்...
வாழ்த்துக்கள்...
மேலும் பதிவர்கள் அறிமுகத்தில் இந்த சிறுவனையும் சேர்த்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது... அதிலும் முப்பது நாட்க்களுக்குள் எனக்கு கிடைத்த இரண்டாவது அறிமுகம் என்பதில் எனக்கு சிறிது பெருமையே... ஆனா ஒன்னு நீங்க என்னோட பழைய வலைப்பூவின் இணைப்பை குடுத்து விட்டீங்க...
மேலும் உங்கள் வலைப்ப்பூவில் உங்களை பற்றி நீங்கள் குடுத்துள்ள அறிமுகம் மிகவும் அருமை,,, மேலும் ஒவ்வொரு பதிவின் முடிவிலும் நீங்க கருத்து கந்தசாமி ஆவது உங்கள் தனி சிறப்பு...
இனி வலைச்சரத்தின் உங்கள் ஆட்சி... ready start மீசிக் \....\...
நன்றிங்க...:)
ReplyDeleteஇந்த வாரம் நீங்களா!!! சொல்லவேல்ல...ரைட்டு ;)
ReplyDeleteபுதியவர்களின் தொகுப்பு கலக்கல் ;)
வாழ்த்துக்கள் ;)
wishes
ReplyDeleteவணக்கம் கவிதா,
ReplyDeleteவலைச்சரம் ரத்தினச்சரம் பதிவில் என்னுடைய பதிவை அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி. அது சம்மந்தமாக சிறு குறிப்பை எனது பதிவில் இட்டுள்ளேன். தவறாமல் பார்க்கவும்.
http://online-tamil-books.blogspot.com/2009/04/mouna-puyal-vaasanthi.html
நன்றி.
@ ஜம்மு - நன்றி.. புதியவர்களின் பதிவுகளுக்கும் உங்கள் பின்னூட்ட ஆதரவை அளிக்கவும் :)
ReplyDelete@ நன்றி முல்ஸ்
@ ராஜ்
//அப்படி காட்டிக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒருவர் நிஜ முகத்தில் நகைச்சுவை உணர்வு அதிகம் உள்ளவராக இருந்துகொண்டு பதிவில் சீரியஸ் விஷயங்கள் மட்டுமே கூட பேசலாம். //
நான் சொல்ல வந்தது, நினைத்தை தைரியமாக எழுதவேண்டும்... சரியா சொல்லலியோ..?!!
@ வால்பையன் - நன்றி... ம்ம் உங்களுக்கு நான் கொடுக்கவா டிப்ஸ்...?!! வாலூஊஊஊ!!
@ பரிசல் - நன்றி.. :) தமயந்தி மட்டுமே போதும் தானே..
@ தமயந்தி, வெங்கிராஜா, சிம்பா, கலகலப்பிரியா, எனது பயணம் எல்லோரும் அடிச்சி ஆடுங்க..:) வாழ்த்துக்கள் !!
@Choco, மறந்துட்டேன், நீங்க பார்த்து இருப்பீங்கன்னு நினைச்சேன்.. மூன்று தினமாக ஒன்றும் பின்னூட்டம் வரலையே இன்னைக்கு மெயில் அனுப்பனும்னு நினைச்சேன்.. :) காலையில் வந்து பார்த்தா... ம்ம்.. என்ன சொல்ல நீங்களே நீங்களா வந்துட்டீங்க :)
@ அனானி - உங்க வாழ்த்துக்கள் வேண்டியதில்லையங்க... யாருன்னு சொல்லக்கூட தைரியம் இல்லாமல் எதுக்குங்க வாழ்த்து சொல்றீங்க.. ?!!
லிஸ்டில்.. என் பேரு இல்லையே..
ReplyDeleteஅதான் பீலிங்கா இருக்கு.கிகிகி..
:D நல்ல பதிவு.
நல்ல பதிவு.. வாழ்த்துக்கள்.
கலக்குங்க..!!