07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, October 3, 2010

கதம்ப மலர் மாலை

இந்த வாரம் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விதமான வலைப்பூக்களைப் பற்றி சொல்லியிருக்கிறேன். இன்று அப்படி ஏதும் குறிப்பிட்ட வகை என்றில்லாமல், பலவித பயனுள்ள எழுத்துக்களைக் கொண்ட வலைப்பூக்களை காணலாம்.

ஒரு பிரச்சினையை அணுகும்போது, அதை எப்படி பார்க்கிறோம் என்பது முக்கியம். டி.பி.ஆர். சார் ரொம்ப நிதானமாக அணுகுவார். குறைகளை விட நிறைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்னை கவர்ந்த விஷயம். இவர் சமீபத்தில் காமன்வெல்த் போட்டி பற்றி எழுதிய பதிவையும், வீணாகும் உணவு பொருட்கள் பற்றி எழுதிய பதிவையும் படித்தால், இவரை புரிந்துக்கொள்ளலாம். தவிர, இவர் சில மாதங்களுக்கு முன்பு எழுதிய, அலுவலகத்தில் இருந்து ஓய்வு பெறுவது பற்றிய பதிவுகள், அக்காலத்தை நெருங்குபவர்கள் மட்டுமில்லாமல் அனைவரும் படிக்க வேண்டியவை.

எழுத வேண்டும் என்று எந்தவித கடமையும் இல்லாமல், நினைத்த நேரத்தில் நினைத்த விஷயத்தை எழுதும் சுதந்திரம் கொண்டவர்கள் பதிவர்கள். தெரிந்த விஷயத்தை சுவாரஸ்யமாக எழுதினால் போதும். இப்படி ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு தெரிந்த விஷயத்தை எளிமையாக எழுதும்போது, அது மற்றவர்களுக்கு பயனுள்ளதாகிவிடுகிறது. தெரிந்த விஷயம் என்றால், தங்களுடைய ஊரைப் பற்றி, தாங்கள் பணியாற்றும் துறை பற்றி, இப்படி எது வேண்டுமானாலும் இருக்கலாம். எஸ்கா, சேலம் பற்றி எழுதிய இப்பதிவையும், ஒரு நொடி கால் ரேட் பற்றி எழுதிய இப்பதிவையும் பாருங்கள். புரியும்.

சிலர் எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதுவார்கள். அந்த கருத்தில் நமக்கு உடன்பாடு இருக்கலாம், இல்லாமல் போகலாம். ஆனால், அந்த எழுத்து நடை காரணமாக, கண்டிப்பாக பாதியில் நிறுத்தாமல், இறுதிவரை வாசித்துவிட்டே முடிப்போம். விசா, அப்படிப்பட்ட ஒருவர். நேர்மையான படத்திற்கு விளக்கம் சொல்லி எழுதப்பட்ட இப்பதிவை பாருங்கள். தமிழ்ப்பட பாட்டு, ஷங்கரின் கிரியேட்டிவிட்டி, இந்திய ஜனநாயகம் - இப்படி எல்லாவற்றையும் கலந்து கட்டி எழுதிய இப்பதிவையும் பாருங்கள்.

எழுதுவது டெக்னிக்கல் விஷயங்கள், இணையத்தளங்கள் பற்றிய தகவல்கள் என்றாலும், சைபர்சிம்மனின் எழுத்தில் இருக்கும் நேர்த்தியும் தரமும் அது பற்றிய ஆர்வம் இல்லாதவர்களையும் வாசிக்க தூண்டும். கூகிள் ஜோசியம் பற்றிய இப்பதிவை வாசித்தால், நான் சொல்வது புரியும். நிறைய பயனுள்ள இணையத்தளங்களை, இந்த டிவிட்டர் ரசிகர் தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறார்.

நவீனத்துவத்தின் கோமாளி என்றால் யார் என்று தெரியுமா? ஆசிரியர் காலபைரவன் எழுதும் வடிவேலு பற்றிய இத்தொடரை பார்த்தால் தெரியும். மரணம் பற்றிய இவருடைய இப்பதிவும் ஆழமான கருத்துக்களை கொண்டது.

புகைப்படக்கலை தொடர்பான இந்த வலைப்பூ, இணைய தமிழர்கள் பெருமைக் கொள்ளும் விதமாக மிகவும் நேர்த்தியாக செயல்படுகிறது. இத்தளத்தால், பலருக்கு புகைப்பட கலை மேல் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. அந்த திறமையை மெருக்கேற்றி இருக்கிறார்கள். மாதம் தோறும் புகைப்பட போட்டி நடத்தும் இந்த தளம், கேமரா வாங்கவும் உதவுகிறது.

இந்த டாக்டர், புள்ளிவிவர மன்னர். எதை பற்றி விவரித்தாலும், விவாதித்தாலும், படம் போட்டு, புள்ளி வைத்து, கணக்கு போட்டு அலசுவார். ப்ளாக்கரா, வேர்ட்பிரஸா என்று வழக்கம்போல புல்லட் பாயிண்ட் போட்டு, டேபிள் போட்டு விளக்கிய இப்பதிவு, சில முடிவுகளை எடுக்க உதவும். ஒரு விஷயத்தை பதில் எழுப்ப முடியாதபடி எப்படி விளக்கலாம் என்பதை இவரை பார்த்து கற்றுக்கொள்ளலாம்.

இன்று நாம் கண்ட பதிவுகள் அனைத்தும் நமக்கு ஏதோ ஒரு விஷயத்தை உணர்த்துபவை. வலைப்பூக்கள், இவை போன்று எளிமையாக, சுவாரஸ்யமாக, தெளிவாக, ஆழமாக, தகவல் சார்ந்து இருக்கும்பட்சத்தில் வலையுலகின் தரம் சிறப்பானதாக இருக்கும்.

இத்துடன் எனது வலைச்சர வாரம் முடிகிறது. வாய்ப்பு வழங்கிய வலைச்சரக்குழுவிற்கும், ஆதரவளித்த நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

விடைப்பெறுகிறேன். நன்றி. வணக்கம்.

5 comments:

 1. வலைப்பூக்கள், இவை போன்று எளிமையாக, சுவாரஸ்யமாக, தெளிவாக, ஆழமாக, தகவல் சார்ந்து இருக்கும்பட்சத்தில் வலையுலகின் தரம் சிறப்பானதாக இருக்கும்.

  கதம்பம் பார்க்க எளிமையானதாக இருக்கும். ஆனால் சிறப்பாக இருக்கும்.
  மேலே சொன்ன உங்கள் கருத்தை வழிமொழிகின்றேன்.

  நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. எல்லாருமே எனக்கு புதியவர்கள்.
  அறிமுகத்திற்கு நன்றி.

  ReplyDelete
 3. நல்ல அறிமுகம் நன்றி அறியக்கிடத்தமைக்கு

  ReplyDelete
 4. சில வலைப்பூக்கள் தெரிந்தவை மீதி புதியவை. அறிமுகத்திற்கு நன்றி!

  ReplyDelete
 5. இந்தவாரம் டபுள் ட்ரீட் வாரம்..

  வலைச்சரமும் நட்சத்திரப்பதிவுகளும்

  ரொம்ப நல்லா அருமையா இருந்துச்சு.

  இனிய பாராட்டுகள்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது