07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, March 13, 2008

"குழலினிது "யாழ்" இனிது என்பர்"

"குழலினிது "யாழ்" இனிது என்பர்"

வசதியான சூழ்நிலை! நான் தமிழன் என்பதை, அரசியல் முதல், வீடு வரை நினைவுறுத்தும்.... பாராட்டும்.. ஒரு இடம்! அதுதான் தமிழ்நாடு!

இங்குதான், இது இத்தனை இருந்தாலும்..... சொந்தத் தமிழை மறக்கும் அவலம்!
அடிபட்டு,மிதிபட்டு, நசுக்குண்டு, ஊரை விட்டுத் துரத்தும் நிலை வரினும், தாய்த்தமிழை மறவேன் என ஒரு கூட்டம் இன்னொரு பக்கம் அலைவதைப் பார்க்கும் போது, ......பெருமைப்படுவதா,... இல்லை.. நம்மை நினைத்து அவமானப்பட்டுக் கொள்வதா என்பதே எனக்குள் எப்போதும் தோன்றும் உணர்வு.

இவர்கள் பதிவு... அது எத்தன்மையதாய் இருப்பினும்... விடாது படித்துவிடுவேன்!

இவர்கள் எல்லாருமே படிக்க வேண்டியவர்கள் என்றாலும், ஒரு சில மனதைக் கவர்ந்த பதிவர்களை இங்கு "யாழ் மாலை"யாய்த் தொடுக்கிறேன்!

"தூயா"

வீட்டில் சமைப்பதில் தொடங்கி, தமிழ்மணம் என்றால் உண்மையிலேயே என்ன என்பதைச் சொல்லுவதிலாகட்டும், ஈழத்தமிழரின் நிலையைப் படம் பிடித்துக் காட்டும் இவரது பதிவுகள் நெஞ்சை நிறைப்பவை. எல்லாருக்கும் புரிய வேண்டும் என்பதற்காக, சில ஆங்கிலப் பதிவுகளும் வைத்திருக்கிறார்! படித்துப் பயனுறுங்கள்!



"யோகன்-பாரிஸ்":


நான் அறிந்த பதிவர்களிலேயே மிக மிக எளிதானவர்! மிகவும் தன்னடக்கம் உள்ளவர்! தனது கருத்துகளை பிறர் பதிவில் மட்டுமல்லாமல், தனது பதிவுகளிலும் தெளிவாகச் சொல்லி வருபவர்!தமிழ் மீது இவருக்கு இருக்கும் பற்று என்னை எப்போதும் வியக்க வைக்கும்! தகராறு இல்லாத தரமான பதிவுகள் படிக்க இவரது வலைப்பூவைப் படியுங்கள்!

எம்.ரிஷான் ஷெரீப்":

"ஒரு பெருந்துயரத்தின் சாறலோடு பொழுதுகள் விடிகின்றன...! மாறாவடுக்களின் துயரஅலறல் தேசங்களெங்கும் முட்டிமோதி மனிதம் வாழும் இதயங்களெல்லாம் விழிநீரோடு எதிரொலித்திடினும் எவராலும் நீக்க முடியா ஒரு பெருந்துயரத்தின் சாறலோடு பொழுதுகள் கழிகின்றன...!"

புரிஞ்சிருக்குமே! ஆமாங்க! இவர் ஒரு கவிஞர்! யாழ் மக்கள் பற்றிய எண்ணங்கள், கவிதைகள், இஸ்லாம் பற்றிய தன் எண்ணங்கள் என இவர் எழுதும் பன்முகங்களைப் பார்க்கையில் இவர் மீது ஒரு தனி மதிப்பே வந்தது எனக்கு! படித்துப் பாருங்கள்! உங்களுக்கே புரியும்!

"கானா பிரபா"
Location: துரை வீதி, இணுவில், யாழ்ப்பாணம், Sri Lanka

"ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்!"

கலன்ங்க வைக்கும்ம் இவ்வரிகளால்தான் ...இப்படித்தான்... இந்தப் பதிவர் தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார்! ஆனால், தன்னலமில்லாது, இசை மீதான அளப்பரிய ஆசையினால், இன்று தமிழ் கூறும் நல்லுலகெல்லாம் தனது இசை பற்றிய பதிவுகளினால், மிகவும் அதிகமாகவே அறிமுகமான ஒரு பதிவர் இவர்!. இவரது ஒவ்வொரு பதிவும் படிக்கத் தகுந்தவை! ரசிக்கத் தகுந்தவை! மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுபவை! இவரது சேவை ரேடியோ என்கிற நிலையிலும் இன்று தொடர்வது ஒரு பெருமைக்குரிய விஷயம்!

"வசந்தன்":

தன்னம்பிக்கை என்பதை மட்டுமே துணையாகக் கொண்டு தனிநடை போட்டு, தன் கருத்துகளைத் துணிவாகத் தொடர்ந்து எழுதிவரும் ஒரு துடிப்பான ஈழ இளைஞர். தமிழின் மீதும், தமிழ்க் கலாச்சாரத்தின் மீதும் இவருக்கு இருக்கும் ஈர்ப்பு எவருக்குமே ஒரு உத்வேகத்தை அளிக்கும். படித்து மகிழுங்கள்!

இவர்கள் அனைவருமே எனக்குத் தெரிந்தவர்கள்! ஆமாங்க! எப்படி எனக்கு ரஜினியைத் தெரியுமோ, ஜார்ஜ் புஷ்ஷைத் தெரியுமோ அப்படித்தான் இவர்களை நான் அறிவேன்! இவர்கள் எவருக்காவது என்னைத் தெரியுமா என்பது எனக்குத் தெரியாது!:)))))))))

ஈழத்துக் குரல்கள் இங்கு வெகுவாக வெவ்வேறு தொனியில் ஒலித்தாலும், தமிழ் என்னும் நமது பெருமையை முடிந்த வரையில் தங்களது பதிவுகளில் வெளியிடும் இவர்கள் அனைவரையும் பாராட்டி சரமாலை அணிவித்து மகிழ்கிறேன்!
மேலும் வாசிக்க...

Wednesday, March 12, 2008

"சொல்லாத சொல்லுக்கு விலையேதுமில்லை"

"சொல்லாத சொல்லுக்கு விலையேதுமில்லை"


இனிமேல் சொல்வதற்கு பாக்கி இல்லை என்னும் அளவுக்கு டீச்சரும், திரு. சீனாவும் வந்து எழுதிட்டுப் போயிட்டாங்க! பத்தும் பத்தாததுக்கு, நம்ம 'பாசமலர்' வரைக்கும் மீதி அத்தனை பேரும் வேற பின்னிப் பீராய்ஞ்சிட்டாங்க! உறவெனும் தெய்வத்தின் உதவியால், ஒரு நிறைவான பதிவை நேற்று கொடுக்க முடிந்தது! இன்னிக்கு என்னத்தை தொடுப்பது என மலைப்பாய் இருந்த போது, நினைவுக்கு வந்தது..... ஏதாவது வித்தியாசமா சொல்லலாமேன்னு!

அதாவது, தனக்குப் பிடிச்சிருக்கு என்னும் ஒரே காரணத்துக்காக மட்டும் பதிவுகள் எழுதி, பின்னூட்டம் வருவதைப் பற்றிக் கவலையே படாமல், தொடர்ந்து பதிவு எழுதும் சில பதிவர்களைத் தொடுத்து ஒரு சரம் கட்டலாமென!

உடனே நினைவுக்கு வந்தவர்களை எல்லாம் தொடுத்து இதோ ஒரு சரம்!

இவர்கள் எல்லாருமே என் மனதை நிறைத்தவர்கள்! தங்களுக்குத் தெரிந்த நல்ல கருத்துகளை வலைப்பூவில் வைக்க வேண்டும் என்னும் ஒரே ஒரு உந்தல் மட்டுமே இவர்களுக்கு! எத்தனை பின்னூட்டங்கள் வருகின்றன நம் பதிவுக்கு என்பதை விட, எத்தனை நல்ல விஷயங்களை நாம் சொன்னோம் என்பதை மட்டுமே கவனத்தில் கொண்டு, பின்னூட்ட ஆசைக்காக உண்மைக்குப் புறம்பான செய்திகளை முற்றிலும் தவிர்த்தவர்கள் என்ற வகையில் இவர்கள் எல்லாரையும் பாராட்டி, இந்தச் சரத்தை இவர்களுக்கு மாலையாக அணிவிக்கிறேன்!

திரு. ஞானவெட்டியான்:
சமயக் கருத்துகளோ, மனதுக்கினிய திரைப்படப் பாடல்களோ, இல்லை தத்துவங்களோ.... சுருக்கமாக, சுவையாகச் சொல்லி வருபவர்...இன்றும்!
இவரது சில பதிவுகளைப் படிக்க இங்கே செல்லுங்கள்! தனது எல்லையை இப்போது ஆங்கிலத்துக்கும் விரிவாக்கி இவர் செய்யும் சேவை அளப்பரியது!

திரு. மா. சிவகுமார்:
இவரது பதிவுக்கு நான் சென்றதே ஒரு தற்செயல் எனவே சொல்ல வேண்டும். சென்றதுடன் நில்லாமல், ஒரு திருக்குறளையும் போட்டு வெறுப்பேத்தினேன்! கொஞ்சம் கூடக் கோபப்படாமல், 'இன்னமும் நான் திருக்குறளைப் படிக்கவில்லை ஐயா! அதை நினைவு படுத்தியதற்கு நன்றி' என் இவர் பதில் சொல்லிய பண்பு என்னைக் கவர்ந்தது. சொன்னபடியே, இப்போது திருக்குறளும் பதிகிறார்!! பொருளாதாரம், அரசியல், சமூகம், பிரயாணம் என இவர் எழுதியிருக்கும் விஷயங்கள் பிரமிப்பூட்டுபவை! கணினி சம்பந்தமாக இவர் பதிவுலகத்துக்கு செய்திருக்கும் சேவை... பாராட்டத்தக்கது. இவரது பதிவுகளைப் படிக்க இங்கே செல்லுங்கள்!.... ஒரு 10 நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு!!

டாக்டர். ப்ரூனோ:
ஆரவாரமில்லாமல் சமுதாயக் கருத்துகளை தனது பதிவுகளிலும், இதை வெளிப்படுத்தும் மற்றவர் பதிவுகளிலும், தாராளமாக அள்ளித் தெளிப்பவர். இவரிடமிருந்து இதுவரை ஒரு பின்னூட்டம் கூட நான் பெற்றதில்லை என்றாலும், இவரது கருத்துகளைத் தொடர்ந்து படிப்பவன் என்ற முறையில், இவரை இங்கு தொடுப்பதில், மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்!

திரு. நக்கீரன் பரமசிவன்:

பல்வேறு தலைப்புகளில் சுவாரசியமான பதிவுகளைப் படிக்க வேண்டுமென்றால் இங்கே செல்லவும்! அரசியல், சமூகம், மருத்துவம், தத்துவம், புகைப்படக்கலை என இவர் தொடாத விஷயங்களே இல்லை எனச் சொல்லுமளவுக்கு பதிவுகளை எழுதிக் குவிப்பவர்! சேர வேண்டியவர்களை சென்றடையும் என்பதில் இவருக்கு இருக்கும் தன்னம்பிக்கை, இவர் தொடர்ந்து இட்டுவரும் பதிவுகளில் இருந்து நீங்களே புரிந்து கொள்வீர்கள்! தவற விடாதீர்கள் இவரை!



திரு. ஜமாலன்:

இவரை எத்தனை பேருக்குத் தெரியும் என்பதை விட, இவரைத் தெரிந்தவர்கள் இவரை எப்படி மதிக்கிறார்கள் என்பதை வைத்து இவரது பெருமையை உங்களுக்குச் சொல்லலாம் என நினைக்கிறேன்.பல விஷயங்களில் மேம்போக்காக அறிவு இருப்பதே இங்கு நாம் பரவலாகக் காணப்படுவது! ஆனால், எடுத்துக் கொண்ட எந்த ஒரு விஷயத்திலும், ஒரு முழுமையான ஆளுமையை இவர் ஒருவரிடம் மட்டுமே நான் அதிகமாகக் கண்டேன் என்பதைச் சொல்லிக் கொள்வதில் எனக்கு மிகவும் பெருமையே! எவராலும் எளிதில் எடுத்துக்கொள்ள அஞ்சப்படும்[!!] தலைப்புகளை எடுத்துக் கொண்டு அநாயசமாக இவர் கையாளும் திறமை என்னை பலமுறை வியக்கவைத்திருக்கிறது. படித்துப் பாருங்கள்... புரிந்து கொள்வீர்கள்!



இன்னும் சொல்ல நிறையப் பேர் இருக்கிறார்கள். இடமில்லை என்பதால் இத்துடன் முடிக்கிறேன். விட்டுப் போனவர்கள் எந்தவிதத்திலும் இவர்களுக்குக் குறைந்தவர்கள் இல்லை. வாய்ப்பிருந்தால், விரும்பினால், சொல்லுகிறேன்.
மேலும் வாசிக்க...

Tuesday, March 11, 2008

வாடாமாலை - வண்ணக் குழப்பம் (இராம் பிரசாத்)

வாடாமாலை - வண்ணக் குழப்பம் (இராம் பிரசாத்)

இனிமேல் சொல்வதற்கு பாக்கி இல்லை என்னும் அளவுக்கு டீச்சரும், சீனாவும் வந்து எழுதிட்டுப் போயிட்டாங்க! பத்தும் பத்தாததுக்கு, நம்ம 'பாசமலர்' வரைக்கும் மீதி அத்தனை பேரும் வேற பின்னிப் பீராய்ஞ்சிட்டாங்க! என்னத்தை தொடுப்பது என மலைப்பாய் இருந்த போது, நினைவுக்கு வந்தது..... ஏதாவது வித்தியாசமா சொல்லலாமேன்னு!

2006 ஆம் வருடம் நான் ஆத்திகம் வலைப்பதிவை
தொடங்கியபோது பார்த்த பல ஆக்டிவ் பதிவர்கள் தற்போது எழுதுவதில்லை. சொந்த காரணங்களாக இருக்கலாம். நல்ல எழுத்தாற்றல் உள்ளவர்கள் திடிரென்று பதிவுகளை எழுதாமல் விட்டுச் சென்றது நீண்ட நாட்கள் வெறுமையாக இருந்தது. இராம் பிரசாத் என்ற பதிவர் வண்ணக் குழப்பம் என்ற பெயரில் வலைப்பதிவு வைத்திருந்தார். தமிழ் மணம் நட்சத்திரமாக எழுதியவர். பன்முகத்தன்மை கொண்டவர், அரசியல் தவிர்த்து அனைத்து பிரிவுகளிலும் எழுதி தள்ளியவர். அவரது "நான்கு தெருக்கள் மட்டும் அறிந்த நாய்" என்ற நாய் கவிதையை படித்தவுடன் அதே போல் 'நாயும் நானும்' என்ற ஒன்றை நான் எழுதினேன். பிறகு கோவியார் மற்றும் பலர் தொடர்ச்சியாக அதே போன்று எழுதினோம்.[நாயும் நானும் பின்னூட்டங்களையும் படியுங்கள்! கோவியார், ப்ரியன் இன்னும் சிலர் நடத்திய கவியரங்கமே இருக்கும்!] தற்போது ஒரே தலைப்பில் வெவ்வேறு பொருளில் கவிதைகள் வருவது குறைந்துவிட்டது.

நண்பர் இராம் பிராசாத் ஆன்மிகவாதி, ஆன்மிகம் தொடர்புடைய பல விடயங்களை அவ்வப்போது கட்டுரையாக்கி இருக்கிறார். நிறைய சிறுகதைகளை எழுதி இருக்கிறார். நிறைய கவிதைகள் எழுதி இருக்கிறார். சமூகம் தொடர்புடைய கட்டுரைகளை எழுதி இருக்கிறார்.

அவருடன் மின் அஞ்சலில் தொடர்பு கொண்டது இல்லை, வலைச்சரம் மூலம் அவருக்கு வேண்டுகோள் வைக்கிறேன். தாங்கள் மீண்டும் எழுதவரவேண்டும். அவரை தனிப்பட்ட முறையில் அறிந்தவர்கள் அவருக்கு எனது வேண்டுகோளை சொன்னால் மிகவும் மகிழ்வேன்.

நண்பர் இராம் பிராசாத் எழுதியவைகளில் சிலவற்றின் இணைப்பு:

அக்னிப் பூ... (http://tamiltheni.blogspot.com/2006/07/blog-post_07.html)
எனக்குப் பிடித்தக் கதைகள் (http://tamiltheni.blogspot.com/2006/01/blog-post_27.html)
முதுமையில் இளமை (http://tamiltheni.blogspot.com/2006/01/blog-post_24.html)
அனைவரும் உறவினர். அனைவரும் உறவினர். (http://tamiltheni.blogspot.com/2006/01/blog-post_23.html)
ராமசாமி சுப்ரமணிய மனோகர் (http://tamiltheni.blogspot.com/2006/01/blog-post_13.html)
உள்ளே வெளியே (http://tamiltheni.blogspot.com/2006/04/blog-post_28.html)
நான்கு தெருக்கள் மட்டும் அறிந்த நாய் (http://tamiltheni.blogspot.com/2006/05/blog-post_15.html)
வளரிளமைக் காலம் (http://tamiltheni.blogspot.com/2006/06/blog-post_115001822528711020.html)
நட்சத்திர இடுகைகள் (http://www.thamizmanam.com/inc/star_post_list.php?date=2006-02-20)
மேலும் வாசிக்க...

Monday, March 10, 2008

என் கதை சொல்லும் நேரமிது! [வலைச்சரத்துக்கு!]

என் கதை சொல்லும் நேரமிது! [வலைச்சரத்துக்கு!]


நாம்பாட்டுக்கு நானுண்டு எம்பதிவுண்டுன்னு இருந்தேனுங்கோ!
அது பொறுக்கலை நம்ம பொன்ஸ் தாயிக்கு!
வலைச்சரம் எழுத வாடான்னூட்டாங்க!
ஊருக்குப் போறேம்மா, இப்ப வேணாமேன்னு டபாய்ச்சுப் பார்த்தேன்!
அதுக்கென்ன! தாராளமாப் போயிட்டு வந்து பொறவால எழுதுன்னுட்டாங்க!
தப்பிக்க வழியில்லை..... ஹிஹிஹிஹி.... உங்களைத்தான் சொல்றேன் சாமியோவ்!
இந்த ஒருவாரம் என்னிய நீங்கள்லாம் சகிச்சுகிட்டுத்தான் போகணும்!
என்ன ஒரே ஒரு நிம்மதி இதுலன்னா... ஒரு வாரம்தான்! சீக்கிரம் ஓடிப்போயிரும்!
முடிஞ்சா படிங்க! இல்லேன்னா அடுத்த வாரமா இந்தப் பக்கம் வாங்க!

சரி! இப்ப மேட்டருக்கு வருவோம்!

முதல் பதிவு என்னைப் பத்தி சொல்லணுமாம்!
என்னைப் பத்தி சொல்லிக்க அதிகமா ஒண்ணுமில்லீங்க!
தஞ்சையில் பிறந்து, தமிழகம் முழுவதும் பல பள்ளிகளில் படித்து, சென்னையில் மருத்துவம் பயின்று, அங்கேயே மருத்துவப்பணியும் செய்து, இடையில் ஈராண்டு காலம் ஜாம்பியாவில் பணி புரிந்து, கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவில் இதைத் தொடரும் ஒரு சராசரி ஆள்தான் நான்.
தமிழில் எப்பொழுதுமே ஆர்வம் உண்டு.... படிக்க மட்டுமே!

வலைப்பதிவு என ஒன்று இருக்கிறது எனத் தெரிந்ததே 3 ஆண்டுகளுக்கு முன்புதான்!

பின்னூட்டத்தில் தொடங்கி ஒரு சிலரின் பார்வையில் பட்டு, அவர்களின் உந்துதலால், வலைப்பதிவு தொடங்கினேன்! [இவர்கள் யார் என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன்!]

"நல்லன சொல்வதில் நடுக்கமில்லை! அல்லன அகற்றிடத் தயக்கமில்லை!" எனத்தொடங்கிய இந்த 'ஆத்திகம்' வலைப்பூவில், 230-க்கும் மேல் பதிவுகள் இதுவரையில் எழுதியிருக்கிறேன் என.... இன்றுதான் பார்த்தேன்!:))

தொடக்கத்தில், என்ன எழுதுவது என ஒரு நிலையில்லாமல், மனதுக்குப் பட்டதையெல்லாம் எழுதிய பொழுதில், நண்பர் குமரன் என்னைத் திருப்புகழ் எழுதுமாறு கேட்டுக் கொள்ள, என் வலைப்பூவின் தலைப்புக்கு ஏற்றவாறு இருக்கிறதே என்ற மகிழ்வுடன், திருப்புகழுக்கு விளக்கவுரை கவிதை வடிவில் எழுதத் தொடங்கினேன். நல்ல வரவேற்பு இருந்தது! இன்றும் இருக்கிறது.... சற்றே நான் "நீட்டி முழக்கினாலும்"!
அருணையாரின் பாடலுக்கு எழுத வாய்ப்பு கிடைப்பதே பெரிய விஷயம்! அந்த வாய்ப்பில், தெரிந்த எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டும் எனும் ஆர்வமே இந்த 'நீட்டி முழக்கியதின்' காரணம்! இதில் எனக்கு மகிழ்ச்சியே!

இப்படி தொடர்ந்து திருப்புகழே எழுதி வருகையில், நண்பர் சிறில் அலெக்ஸ் ஒரு திருக்குறள் பதிவு போட்டிருந்தார். அதைப் பார்த்தவுடன் என்னுள் ஒரு உந்தல் ஏற்பட்டு, உடனே உருவானான் மயிலை மன்னார்!
வலைப்பதிவு இவனையும் மனமுவந்து ஏற்றுக்கொண்டது என் அதிர்ஷ்டம் எனவே சொல்ல வேண்டும்! இன்னமும் தொடர்ந்து வருகிறான்! வாரம் ஒரு அதிகாரம் இவனைக் கொண்டு எழுத வேண்டும் என்பது என் அவா! வள்ளுவனும், முருகனும் அருள வேண்டும்!

இப்படி ஒரு நிலையில் எழுதி வரும்போது, 'திருவெம்பாவை' உரை விளக்கம் எழுத ஒரு வாய்ப்பு கிடைத்தது என் வாழ்வில் எனக்குக் கிடைத்த ஒரு பெரும் பேறு! 30 நாட்கள் அதைத் தொடர்ந்து எழுதியது மறக்க முடியாத ஒரு அனுபவம்!

'ஆல்கெமிஸ்ட்' என்கிற ஒரு அற்புதமான நாவலை நான் படித்தேன்! ஒரே மூச்சில் படித்து முடித்தேன் என்பதே உண்மை! என்னிடம் உள்ள ஒரு கெட்ட பழக்கம், எனக்குப் பிடித்தது எல்லாம் என் மனைவிக்கும் பிடிக்க வேண்டும் என வற்புறுத்துவது! இந்தக் கதையை அவரையும் படிக்கச் சொல்லி அவரிடம் இந்தப் புத்தகத்தைத் திணித்தேன்! படித்தவுடன் அவர் என்னிடம் முதன்முறையாக கேட்டது இதுதான்! 'என்னமோ ப்ளாக்கெல்லாம் எழுதறீங்களே! இதை ஒட்டி ஒரு கதை எழுதுங்க! இல்லாட்டி எழுதறதை நிறுத்திடுங்க!' இதை ஒரு சவாலாக ஏற்று, 40 நாட்கள் வேறு பதிவு எதுவுமே எழுதாமல் 'சித்தர்-- கனவு மெய்ப்படும்!' என 42 அத்தியாயம் எழுதி வெளியிட்டேன்! இதையே எனது வலைப்பதிவின் நிறைவாகக் கருதுகிறேன்!

நண்பர்கள் சிலர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, 'கசடற' என்னும் வலைப்பூ தொடங்கி, பாலியல், இதயம் பற்றி எழுதிய இரு தொடர்கள் நல்ல வரவேற்பைப் பெற்றதையும் இங்கு குறிக்கிறேன்.

அவ்ளோதாங்க! +நேரம் கிடைக்கும் போது ஒரு நடை நம்ம பக்கம் வந்திட்டுப் போங்க!

நன்றி!
மேலும் வாசிக்க...

ஆன்மீகமும் ஆசுப்பத்திரியும்.. கூடவே மயிலை மன்னாரும்

நானும் நிறைய புதிய பதிவுகளைக் கண்டுகொண்டேன் . பாசமலர் பூக்கடைக்கு வாருங்கள் ன்னு சொன்னாங்க அது தவறு .....பூக்கடையில் தொடுத்த சரம் இல்லை இது.....பாசமா அம்மா சைக்கிள் பூக்காரரிடம் படி அளந்து பூவாங்கி நெருக்கக்கட்டிய வீட்டுச்சரமாக்கும்.. எனக்கு தலைகொள்ளாமல் பூவச்சு கண்ணாடிப்பாக்கற பிரம்மை இப்ப.. ஒரு சம்படத்துல போட்டு பத்திரமா பிரிட்ஜ்ல வச்சு திருப்பி வச்சிக்கலாம் ..அதாங்க திரும்பவும் ரெண்டு தடவை இணைப்புகளை கிளிக் செய்து படிச்சுக்கலாம்.. :) நன்றி பாசமலர்.

\\பெயருக்கு ஏற்ப மலர்ச் சரங்களை அள்ளித் தொகுத்து, பலவித மலர்களையும் மணம் பரப்பச் செய்து, ஒரு அழகான நறுமணமிக்க மலர்த் தோட்டத்தையே உருவாக்கி, மனிதனின் அனைத்து உணர்வுகளையும் மதித்து, பல பதிவுகள் கொடுத்து மணமுடன், மலர்க் கொத்துடன் விடை பெறும் பாச மலருக்கு நன்றிகளுடன் கூடிய நல் வாழ்த்துகள்
இலக்கியம், தகவல்கள், வளைகுடா, புகைப்படம், வித்தியாசம், கதைகள், அனுபவங்கள், கவிதைகள், சோகம், நகைச்சுவை, உறவுகள் எனத் தலைப்பினைத் திட்டமிட்டு, அதற்குரிய பதிவுகளைத் தினந்தேடி, படித்துப் பொறுக்கி, அழகான பூக்களோடு ஒப்பிட்டு, மதிப்பான முன்னுரையுடன் அழகாகப் பதிந்தது பாராட்டத்தக்கது.கொடுத்த பொறிப்பினை இவ்வளவு கவனத்துடன், ஈடுபாட்டுடன், சிரமத்துடன், மன மகிழ்வுடன் செய்தது உண்மையிலேயே ஒரு அரிய செயல்.//இது சீனா சார் பின்னூட்டமா எழுதிய வரிகள் இதனை இங்கே திருப்பி கொடுத்திருக்கிறேன்..
---------------------------------------------------------------
வி. எஸ். கே ..ஆத்திகம் என்னும் பதிவு..""நல்லன சொல்வதில் நடுக்கம் இல்லை! அல்லன அகற்றிடத் தயக்கம் இல்லை! வல்லமை தாராயோ! - இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே!"" தலைப்பிலேயே ஆணித்தரமாக சொல்லிவிட்டார்.. மயிலை மன்னாரின் குரலில் குறள்களுக்கு விளக்கமளிக்கிறார்.... திருப்புகழுக்கும் விளக்கமளித்துவருகிறார். அம்மன் பாட்டு முருகனருள் விக்கிப்பசங்க பதிவுகளிலும் இணைந்து எழுதுபவர்..அவரை தான் ரசித்த பதிவுகளை நமக்கு அறிமுகம் செய்து இவ்வார வலைச்சரத்தை தொடுத்தளிக்க வரவேற்போம்.
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது