07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, April 2, 2008

9. காம்ப்ளான் வித் இம்சை

நான் ரசிச்ச பல பதிவுகள்ல இப்போதைக்கு ஞாபகம் இருக்க ஒரு 4 பதிவு. உங்களுக்கு தெரிஞ்சது இருந்தா சொல்லுங்க

குழந்தைகளோட மொக்கை உணர்வு இப்போல்லாம் ஆச்சரியப்பட வைக்குது.
வடையை சுட்டது பாட்டியா காக்காவா?

கோன் பனேகா கோரோர்பதி

சிதம்பரத்துக்கு போன அப்பா(டா)சாமி!!!- இப்படிக்கு அபிபாப்பா!

ஒருமுறை அவளை தூங்க வைக்க கதை சொல்லிக்கொண்டே நான் தூங்கிப் போக என்னை எழுப்பி ‘மாமா அந்த நரிக்கத சொல்லு மாமா’ என்று விடாமல் கேட்கிறாள். அவளுக்காக அனிமேசனில் கதை சொல்லும் சிடிக்கள் வாங்கி வந்து தொலைக்காட்சியில் ஓடவிட்டபோது, கரடிக்கதை, விறகுவெட்டி கதை, முதலைக் கதை என ஏற்கனவே அக்கா சொன்ன அத்தனைக் கதைகளும் அங்கே காட்சிகளோடு வந்து கொண்டிருந்தன. முன்பு அக்கா சொல்ல சொல்ல அவளாக மனதில் உருவாக்கிக் கொண்ட காட்சிகள் எப்படியிருந்தனவோ தெரியவில்லை, தொலைக்காட்சியில் எல்லாக் கதைகளுக்கும் அனிமேசன் காட்சிகள் வர வர அவளால் மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்தமுடியவில்லை. “இப்ப கரடி வந்துடும், ராமு மரத்துல ஏறிக்குவான், சோமு கீழப் படுத்துக்குவான்” என அடுத்து என்ன நிகழப் போகிறதென அவள் சொல்ல, அதுவே அங்கே காட்சியாகவும் வர… அப்போது அவள் முகத்தில கண்ட பூரிப்பு ஆயிரம் பூக்களுக்குச் சமம்.இந்த தீபாவளி… இப்படி…

இப்போதைக்கு இத படிச்சிட்டு டிபன் சாப்பிட ரெடியா இருங்க. எங்க வீட்டு குட்டி இம்சை இதுக்கும் மேல இம்சைய குடுக்கரான் எப்படி சமாளிக்கரது. பேரண்ட்ஸ் கிளப்ல வேற எல்லாரும் லீவுல போய்டாங்க.
மேலும் வாசிக்க...

Tuesday, April 1, 2008

8. டாக்டரம்மாவுக்கு வாழ்த்துக்கள் - மருத்துவ சரம்

இந்த பதிவ பாத்ததுக்கு அப்புறம் தான் என்ன மாதிரி நிறையா பேரு இருக்காங்கன்னு தெரிஞ்சது : இது ஒரு வீக் என்ட் பதிவு../// , ஒரு வீக் எண்ட் பதிவுதான்.!

கொஞ்சூண்டு ஜோக்குகள்... அப்படின்னு போட்டு டாக்டருங்க மேல ஒரு பயத்த உண்டு பண்ணிட்டாங்க.

என்னை ரொம்ப சந்தோசப்பட வைத்த பதிவு குண்டாக இருப்பவர்களுக்கு மாரடைப்பை தாங்கும் சக்தி அதிகமென்கிறது மருத்துவ ஆய்வு!!

இப்படியே கும்மி அடிச்சா அப்புறம் நானும் சீரியஸ் பதிவர்ன்னு எப்படி சொல்லிக்கரது அதனால கொஞ்சம் உபயோகமான பதிவுகள் நமக்காக.
மனப்பதற்றமும் மாரடைப்பும்,
பீதி நோய்
மன அழுத்தம்.. (depression),
'குடிப்பழக்கம்'--- ஒரு 'NO' சொல்லலாமே!

இந்த சாதனைக்கு நாம இவங்களுக்கு ஏன் பாராட்டுவிழா நடத்த கூடாது ?
"இருபத்தைந்தாயிரத்திற்கு மேல் பிரசவங்கள் ...... என் மருத்துவ வாழ்க்கையில்..(not in private practice)

வாங்க எல்லாரும் சேர்ந்து டாக்டரம்மாக்கு வாழ்த்து சொல்லுவோம்... பிறந்த நாள் வாழ்த்துக்கள்டாக்டர் டெல்பின் (அம்மா)!:-)

மேலும் வாசிக்க...

7. மதிய விருந்து ரெடி சாப்பிட வாங்க

இவங்க எல்லாம் பெரிய தலங்க ஆனா கொஞ்ச நாளா காணோம். திரும்ப வர சொல்லுங்க. நிறையா பேர் இந்த பதிவு எல்லாம் படிச்சி இருப்பீங்க இருந்தாலும் புதுசா வந்து இருக்க ஒரு ரெண்டு பேராவது தெரிஞ்சிக்கட்டுமே.

தடாலடியார் : ஒரு முன் குறிப்பு:பலகீனமான இதயமுள்ளவர்கள் இதைப் படிக்க வேண்டாமே! லிஃப்டாவது கிடைக்குமே! , ஒரு நண்பனின் நிஜம் இது!

லிவிங் ஸ்மைல் வித்யா: திருநங்கைகள் வாழ்க்கை முழுதும் தேடும் உளமார்ந்த மகிழ்ச்சியை, கொண்டாட்டத்தை, புன்னகையை அடையும் முயற்சி. மரணம் , புனைவாக சொல்லும் ஒரு முயற்சி

வாழ்வின் அந்தந்த நிமிடங்களை ரசிக்கிற ரசிகன். திருநங்கைகள்
மேலும் வாசிக்க...

6. பிரேக் பாஸ்ட் வித் இம்சை - வாசிப்புகள்

புத்தகம் - 1 : காந்திஜி & கஸ்தூரி பா
வளரும் காலத்தில் நமக்கு கிடைக்கும் சில வாசிப்புகள், சில சந்திப்புகள், சம்பவங்கள் மற்றும் அனுபவங்கள் நம் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி பல விதங்களில் நம் எண்ணங்களையும் கொள்கைகளையும் உருவாக்குகிறது

புத்தகம்-2 : Its Not about the Bike — Lance Armstrong அப்படிங்கிற Cyclistஇன் சுயசரிதம் (Autobiography). உலகத்திலேயே மிகவும் கடினமான Tour De France , சைக்கிள் பந்தயத்தை ஒரு முறை அல்ல இரண்டு முறை அல்ல ஏழு முறை வென்று இருக்காரு. அதுவும் உலகத்தில் மிகவும் கொடிய நோயான புற்று நோய்க்கு ஆளாகி மருத்துவர்களால் பிழைப்பதற்கு மிகக்குறைவான (10%-20%) வாய்ப்பே உள்ள நிலையில், அதில் இருந்து போராடி மீண்டு இந்த சாதனையை செய்து உள்ளார்.
புற்று நோயினால் அவதிப்பட்ட Lance Armstrong, அந்த நோயினால் அவதிப்படுபவர்களுக்காக ஒரு அமைப்பை உருவாக்கி புற்று நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.அதைப்பற்றி மேலும் அறிய இங்கே சொடுக்கவும்.

புத்தகம்-3: மோட்டார் சைக்கிள் டயரி , http://elanko.net/?p=289
திட்டமிடப்படாத பயணங்கள் பல ஆச்சரியங்களை, அதிர்ச்சிகளை, சந்தோஷங்களை, துக்கங்களைப் பொதிந்து வைத்திருந்து, அப்பொதியில் இருந்து எதிர்பாராதவொன்றை அவ்வப்போது நம்மெதிரே வீசுகிறது. ‘சே’ இந்தப் பயணத்தில் இருந்து தெரிந்து கொள்வது வாழ்க்கையும் அவ்வாறான ஒரு திட்டமிட முடியாத பயணமே என்பது தெரிகிறது.

இப்பயணத்திற்கு நடுவே இவருக்கு 24 வயது நிரம்புகிறது. எனக்கு 24 வயது ஆனபோது சனிக்கிழமையும் அலுவலகம் வந்து கேரம் போர்டு ஆடிக்கொண்டிருந்தேன். 40 வயதிற்குள்ளாகத் தம் வாழ்க்கையைத் தமக்கும் பிறருக்கும் பயனுள்ளதாகக் கழித்து, பிறர் நலனுக்காக எங்கோ போய் உயிர்விட்டார். இவர் இன்னும் இருந்திருந்தால் என்னென்ன நடந்திருக்குமோ! 24 வயதில் இவருக்கு இருந்த கருத்துச் செறிவும், மனிதாபிமானமும் இன்னும் எனக்கு இல்லை! இதை நினைக்கும்போது அவமானமாக இருக்கிறது.

ஈரோடு ராமசாமி- வாழ்க்கை வரலாறு
நீண்ட நாட்களாக.. எனக்குள் பெரியார் ஈரோடு ராமசாமியின் வரலாற்றை பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்து வந்தது. அதற்கான சிறு முயற்சியே இது. ஒருவரின் வாழ்க்கை வரலாற்றினை என்னால் சுவை பட சொல்ல முடியுமா.. என்பதை நான் அறியேன். இருந்தாலும் முயற்சித்து பார்க்கிறேன். சமயம் கிடைக்கும் போதெல்லாம் எழுதுவேன். குறிச்சொல்லாக பெரியார் வரலாறு என்று கொடுத்திருப்பதால் ஒரு சேர வாசிக்கவும் முடியும். இனி…

படிக்க நினைத்து இருப்பது:
பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு“எனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் மீண்டும் கூற விரும்புகிறேன், எனக்கு அது இல்லை… நாய்கள், பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால், குடிதண்ணீர் பெறவும் உரிமை இல்லை என்றால் சுயமரியாதையுள்ள எந்த தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான்? இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி, இன்னல்களையும் அநீதிகளையும் மலைபோல் எங்கள் மீது சுமத்தியதே ஆகும். யுகயுகமாகக் காலால் மிதித்து நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என் மக்களுக்கு மனித உரிமைகளுக்காக நான் செய்யும் முயற்சிகளின் காரணமாக இந்த நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாது.’

1931-ம் ஆண்டு மகாத்மா காந்தியைச் சந்தித்தபொழுது டாக்டர் அம்பேத்கர் முன் வைத்த கருத்துகள் இவை.

புத்தக விமர்சனம் : The Indian Clerk கணித மேதை ராமானுஜனின் வாழ்க்கை வரலாறு என்று செய்தி படித்தேன்.

ஜாக்கிஜான் வாழ்க்கை வரலாறு முன்னேற வேண்டுமென்று ஆசைப்பட்டால் மட்டும் போதாது. முயற்சி செய்ய வேண்டும் முயற்சி என்றால் சாதாரணமாக இருந்தால் போதாது. மதுரை பாஷையில் சொன்னால் காட்டுத்தனமாக முயற்சிக்க வேண்டும். அது எந்தத் துறையாக இருந்தாலும் சரி.
மேலும் வாசிக்க...

5. காப்பி வித் இம்சை

மொதல்லயே சொல்லிடரேன் பதிவ படிச்சா அனுபவிக்கனும்... ஆராயக்கூடாது ;) -

எனக்கு பிடித்த வலைப்பதிவர்களையும் அவர்களது ஒரு சில பதிவுகளையும் உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்... (எனக்கும் பிடிச்சிருக்கு அதான்)

கார்த்திக் பிரபு -கவிதை எல்லாம் அருமையா எழுதுவாரு. வெகுளித்தனமா பெசுவாரு. (கல்யாணமாயிடுச்சில்ல அதுதான் கொஞ்சம் மரியாதை). இப்ப அவருடைய கல்யாண வைபவத்தை நம் கண் முன் கொண்டு வருகிறார் இந்த தொடர் மூலம்நான் கணவனான போதுஇவருடைய இந்த கவிதைகளை படித்த பிறகு பலர் அவர்களுடைய தாத்தா, பாட்டிகளை திட்டியதாக எனக்கு தகவல் வந்தது (அத்தை இல்லாத காரணத்திற்காக)அத்தை பெண்கள் என்னும் ராகஷசிகள்

என்னுடைய லொள்ளு சீரிஸை போலவே இவருடைய இந்த லொள்ளும் எனக்கு பிடித்திருந்தது.லொள்ளுராகவன்இவருடைய இந்த பயணக்கட்டுரையில் பல சமூக கருத்துக்களையும் அள்ளி தெளித்திருப்பார் - கோவை குற்றாலமும் ஜான் ஆப்ரகாமும்
என்னுடைய பல நாள் வருத்தத்திற்கு பதில் சொன்ன பதிவு - என் கொங்கை நின் அன்பர்

கைப்புள்ளஇவருடைய சித்தூர்கட் செலவு சீரிஸ் எனக்கு மிகவும் பிடித்த ஒன்றுசித்தூர்கட் செலவுஇவருடைய ஆறு விளையாட்டு பதிவும் அருமையான ஒன்று - ஆறுமேலும் இவருடைய பஸ் பயணங்களில், தடிப்பசங்கள் சீரிஸும் அருமையாக இருக்கும். ஒரு சின்ன ஆலோசனை, இந்த சீரிஸிற்கெல்லாம் ஒன்றிலிருந்து மற்றொன்று போக ஹைப்பர் லிங் இருந்தால் இன்னும் பலனளிக்கும். மேலும் முகப்பில் இதையெல்லாம் தனியாக எடுத்து போட்டால் இன்னும் நலம்.

நாகை சிவாஇவருடைய பின் தங்கிய மாவட்டம் இவரின் மாவட்டம் பற்றிய இவரின் தெளிந்த பார்வையை காட்டும் - பின் தங்கிய மாவட்டம்இவரின் "எப்படி கிடைத்தது" இவரின் தேச பக்தியை வெளிப்படுத்தும் ஒரு சிறந்தபதிவு - "எப்படி கிடைத்தது?"

ராம்இவருடைய கைப்புள்ள காவியம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று - "கைப்புள்ள காவியம்"இவர் போட்டோவை ப்ரோபைலிலிருந்து தூக்கிய இந்த கதை சூப்பர் (கண்டிப்பா படிங்க) - "நான் ஏன் மாத்தினேன்"CVR- தமிழ்மணத்திலிருப்பவர்களுக்கு இவரை தெரியாது. என்னுடைய கதைகள் பிடித்தவர்களுக்கு கண்டிப்பாக இவரின் கதைகள் நிச்சயம் பிடிக்கும்.

சவுண்ட் பார்ட்டிஇவருடைய கிரிக்கெட் அனுபவம் பற்றிய இந்த பதிவை படித்தால் சிரிக்காமலிருக்க முடியாது - நானாத்தான் நாறிட்டனா?பொண்ணுங்க இந்த மாதிரி கூட ஓட்டுவாங்களானு இதை படிச்சதுக்கப்பறம்தான் தெரிஞ்சது - மூக்கறுந்த கண்ணகிகளும் மூக்கில்லாத நானும்

Syamஇவருடைய மேட்ரிமோனியல் விளம்பரங்கள் என்னுடைய ஆர்க்குட் அலும்பல்களை நினைவு படுத்தும் - மேட்ரிமோனியல் அட்வர்டைஸ்மெண்ட்முதல் பதிவிலே கலக்க முடியுமா என்று நான் அசந்தேன். அதுவும் அமெரிக்கா வந்த புதிதில் நானும் இதையே அனுபவித்தேன் - ரிப்பீட்டுஇவருடைய காலேஜ் அனுபவமும் என்னை ரீல் சுத்த வைத்தது - தமிழ் மணமும் நானும்

தேவ்இவருடைய கதைகளை போலவே எழுத வேண்டுமென்று நான் மிகவும் ஆசைப்படுகிறேன். ஆனால் முடியவில்லை :-(நீங்களும் படித்து பாருங்கள்கதிரேசன் கதைஇதை படித்து இவருக்கும் எனக்கும் பெரிய விவாதமே நடந்தது (ஆன்லைனில்) - ஆஷிராசந்தோஷ்எந்த ஒரு நியூஸையும் அருமையான தலைப்பில் அவருக்கே உரிய பாணியில் கொடுப்பார் - திருந்தவே மாட்டீங்களாடா நீங்கஇவருடைய முதல் வீடியோ பதிவு - தேசிய கீதம்

தம்பிஇப்படி ஒரு கேள்வி கேட்டுத்தான் தம்பி நமக்கு பழக்கமானார் ;) -தண்டவாலத்துல ஒண்ணுக்கு போனா தப்பா?ரீல் சுத்த வைத்த பதிவு, என்னுடைய நகைச்சுவை பதிவுகள் பிடித்தவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் - வாலிப வயசு(ஒரு பதிவிலிருந்து மற்றொன்றிற்கு லிங் கொடுத்தால் நன்றாக இருக்கும்தம்பியின் மற்றொரு பரிமானம். வெளிநாட்டிலிருப்பவர்கள் இதை படித்தால் மனம் கனக்கும் - என் நண்பனுடன் ஒரு நாள்

திவ்யாநம்மல மாதிரி பசங்களுக்கு பயனுள்ள பதிவு (ஓரளவுக்கு உண்மையாக இருப்பதாகவே நினைக்கிறேன்) - பெண்களை கவர்வது எப்படி?ஓசியிலே யூத் ஃபுல்லான படம் பார்க்க - கல்லூரி கலாட்டா(என்னுடைய நெல்லிக்காய் படித்தவர்களுக்கு இந்த கதை மிகவும் பிடிக்கும்)ஜிஇந்த வாரத்தில் நான் மிகவும் ரசித்த நகைச்சுவை பதிவு. என்னுடைய கவுண்டரின் காமெடியை விட நன்றாக வந்திருந்தது - லொள்ளு சபா பல்லவன்வசனமே இல்லாத அருமையான கதை - குறும்பன்

கப்பி (நான் பொறாமைப்படும் ஒரே பதிவர். வெரைட்டியிலும் அசத்துபவர்)என்னுடைய கொல்ட்டி கதையின் கருப்பொருள் இந்த கதையிலிருந்தே காப்பி அடித்தேன் - இன்றும்இப்படியெல்லாம் எழுத முடியுமானு நான் ஆச்சரியப்பட்ட பதிவு - பின்நவினத்துவ கனவுஇது கற்பனை என்று நான் சத்தியமாக நம்பவில்லை - அந்த இரவு

Posted by வெட்டிப்பயல் at Friday, December 22, 2006
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது