நகைச்சுவை தொகுப்பு 1
➦➠ by:
எஸ்.கே
வலைப்பூக்களை பார்வையிடுபவர்களில் பெரும்பாலோனர் விரும்புவது நகைச்சுவைப் பதிவுகளே. இவை நம் இறுக்கத்தை குறைத்து மனதை லேசாக்குகின்றன. அப்படிப்பட்டவைகளில் 5 பதிவுகளை இங்கே சுட்டிக்காட்டுகிறேன்.
முதலில் சீரியசான பதிவுகளை எழுதி வந்த இவர் சிறிது இடைவெளிக்கு பிறகு நகைச்சுவையுடன் பதிவுகளை எழுதுகிறார். படிக்க படிக்க புன்னகை பூக்க வைக்கின்ற இவரது பதிவுகள். தன் பெயருக்கான காரணத்தை எவ்வளவு நகைச்சுவையாக சொல்கிறார் பாருங்கள்.
படிக்கும்போதே நல்லா சிரிச்சிகிட்டே படிக்கிற மாதிரியான பதிவுகள் எப்போதாவது காண்போம். அப்படிப்பட்டவைகளின் ஒன்று இப்பதிவு: உன்னைக் கொல்லாம விட மாட்டேன். இவரும் கலவையான விசயங்களை எழுதுகிறார், இவரின் நகைச்சுவைகளும் நன்றாக உள்ளன.
இவர் ஒரு டாக்டர். நல்ல கதை கவிதைகள் எல்லாம் எழுதுவார். இவரின் ஒரு பதிவு ரொம்ப சிரிச்சிகிட்டே படிச்சேன். இவர் எதைச் சொல்ல வந்தாரோ...ஆனால் செம காமெடியா இருந்தது பதிவு.
முழுக்க முழுக்க நகைச்சுவையான பதிவுகளை எழுதுபவர்களில் இவரும் ஒருவர். ஒரு எழுத்து தேர்வை எவ்வளவு நகைச்சுவயாக சொல்லியிருக்கிறார். இரு பாகங்களையும் படித்துப் பாருங்கள்.
கதை, கவிதை, விமர்சனங்கள், சமூகப் பதிவுகள் என சீரியசான பதிவுகள் எழுதி வந்தாலும் அவ்வப்போது இது போன்ற நகைச்சுவையான பதிவுகளையும் எழுதுவார். இப்பதிவை படியுங்கள் அப்பாவி கணவர்களின் நிலை தெரியும்.
நகைச்சுவை என்பதால் மட்டும் அதற்கு இரு பதிவுகள் வெளியிடுகிறேன். இன்னொன்றிலும் ஐந்து பதிவுகளை அறிமுகப்படுத்துகிறேன்.:-)



