மனம் கவர்ந்த பதிவுகள்
➦➠ by:
சம்பத் குமார்,
ப்ளாக்கர் அறிமுகம்
வணக்கம் நண்பர்களே! வலைச்சர புதனில் இன்று என்னைக்கவர்ந்த பதிவுகளின் வழியாக அறிமுகப்பதிவர்களுடன் உங்களை சந்திக்கவருகின்றேன்.எல்லா பதிவுகளை தினம் தினம் வாசித்து வந்தாலும் சிலரது பதிவுகளை வாசித்தவுடன் ஏதோ நமக்கே நடந்தது போன்ற ஓர் உணர்வு வருவது இயற்கையே.அத்தகைய பதிவுகளில் என்னை கவர்ந்த சில பதிவுகளை பூச்சரமாக தொடுத்து உங்களிடம் சமர்பிக்கின்றேன்.
முதலில் சென்னைமண்ணின் சூப்பர் ஸ்டார் சென்னை பித்தன் அவர்களின் அசத்தல் பதிவு. நான்தான் சமையல்காரி அலமேலு.வீட்டுவேலைக்கு செல்லும் தாய்மார்களின் மனநிலையை படம்பிடித்துக்காட்டுகிறார்
இவர் நகைச்சுவை எழுத்துக்களுக்கு சொந்தக்காரர். சகோதரி ஆமினா அவர்கள் எழுதியதில் பிடித்தது ஆணாதிக்கத்துக்கு காரணம் ஆண்களா? பெண்களா ஒரு பட்டிமன்றமே பதிவுல நடத்திக்காட்டியிருக்கார்.
அடுத்து காணாமல் போன கனவுகள் வலையெழுதும் ராஜி அக்கா அவர்கள் தன் தந்தை குறித்து எழுதிய நெகிழ்வான பதிவு படித்ததும் ஒரு கணம் விக்கித்தது மனம்.குடும்ப உறவுகளில் தந்தை மகள் பாசத்தின் பிரதிபலிப்பாய் இப்பதிவுடன் உன்வீட்டு சுவற்றில் ஓர் புகைப்படமாய் கவிதையை வாசியுங்களேன்.
ஒரு பெற்றோராக தனது பிள்ளைகளுக்கு உணவு,உடை,இருப்பிடம் கல்வி மட்டும் அளிப்பது கடமையல்ல.பாதுகாப்பான பழக்க வழக்கங்களை சொல்லித்தரவும் வேண்டும் என்பதை வலியுறுத்தும் பர்தா போபியா.இதனை அழகுற செதுக்கியவர் சகோதரி ஹுசைனம்மா.
அடுத்து இரவுவானம் சுரேஷ். திருப்பூர்காரர். எப்போதாவது பதிவிடுவார். ஆனாலும் இவரின் பதிவு பேசப்படும். அதில் ஒன்றினைப் பார்ப்போம்.இவரின் நாய்கள் V/S மனிதர்கள் பதிவினை வாசித்து பாருங்களேன்.நண்பர் தொடர்ந்து எழுத அவரது சூழ்நிலைகள் ஓத்துழைக்கட்டும்.
நா. மணிவண்ணன். மதுரைக்காரர்.மதுரை வட்டார வழக்கில் இவர் எழுதுவது சுவாரஸ்யமாக இருக்கும். இவரது பதிவுகளில் மிகவும் கவர்ந்தது அத்த மக ரத்தினமே.நீங்களும் வாசித்துவிட்டு வரலாமே.இப்போது எழுதுவதை வெகுவாக குறைத்து கொண்டது எல்லோருக்கும் வருத்தமே.
அடுத்தது சேலம் தேவா.இவரது தளம் தேவாவின் தேடுதல்கள்.சர்க்கஸ்.இவரது பதிவு ஒன்று சர்க்கஸ் அனுபவம்.குழந்தை பருவத்தில் இருந்த குதூகலங்கள் மறைவது வயதாவதை நினைவுபடுத்துக்கிறது
அடுத்தது சுடச்சுட அரசியல் பதிவுகளை எழுதும் ரஹீம்கஸாலி. அவரது பதிவுகளில் தொலைபேசி நிறுவனத்தால் அவருக்கு நேர்ந்த கதி பற்றி எடுத்துச்சொல்லி அதற்க்கு தீர்வு காண்கிறார்.இந்த கதி நம்மில் பலருக்கும் ஏற்பட்டிருக்கக்கூடும்.
அடுத்தது நண்பர் ஆரூர் முனா செந்தில்.இவர் தோத்தவண்டா என்ற பெயரில் வலை நடத்தி வருகிறார்.சொந்த ஊரின் சுவாரசியத்தினை அழகுற பகிர்ந்துவைத்துள்ளார். நாமும் சென்று பார்த்துவிட்டு வரலாமா..
அடுத்தது நண்பர் கோகுல்மனதில் கோகுல் சமுதாயத்தில் தினம் தினம் காணும் விஷயங்களை கருவாக கொண்டு மனதில் பட்டதை விழிப்புணர்வு பதிவாக வெளியிடுவதில் கெட்டிக்காரர்.தற்சமயம் தானே புயலால் தமிழகம் மற்றும் புதுச்சேரி பாதிக்கப்பட்ட போது வலையுலக நிதி திரட்டி முடிந்தவரை பாதிக்கப்பட்டோருக்கு வழங்கியவர்.இவரின் பதிவு ஒன்று இங்கே குடிகாரன் பேச்சு விடிஞ்சா...?
அடுத்து நண்பர் ஹைதர் அலி அவர்கள்.வலையுகம் என்ற வலையினை நடத்தி வருகின்றார்.சமூக சிந்தனையுடன் சமூதாயத்தில் ஊடுருவியிருக்கும் சாதிவெறியால் பாதிக்கப்பட்ட தனது நண்பரை பற்றிய உணர்வுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அடுத்து நண்பர் ஹைதர் அலி அவர்கள்.வலையுகம் என்ற வலையினை நடத்தி வருகின்றார்.சமூக சிந்தனையுடன் சமூதாயத்தில் ஊடுருவியிருக்கும் சாதிவெறியால் பாதிக்கப்பட்ட தனது நண்பரை பற்றிய உணர்வுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.
பதிவர் அறிமுகம் :
இன்றைய அறிமுகப்பதிவர் திரு S.S பூங்கதிர் அவர்கள்.இவர் பூங்கதிர் போர்ட்டூன்ஸ் என்ற பெயரில் தற்போது வலை நடத்தி வருகிறார்.பிரபல இதழ் பாக்யாவில் எதிரொலி என்ற பகுதியில் தொடர்ந்து எழுதி வருகிறார்.இவரது ஊர் திருவிழா பற்றிய கவிதை ஒன்றினை காணலாமே.
அடுத்த அறிமுகப்பதிவர் திரு ராஜ் அவர்கள்.இவர் அரசியல் ஆர்வமுள்ள, சமூக அக்கறை உள்ள,சினிமாவை விரும்பும் ஒரு சராசரி வாலிபன் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கின்றார்.ஹோலிவுட்ராஜ் என்ற பெயரில் வலையில் இருந்தாலும் விமர்சனம் செய்வது ஹாலிவுட் படங்களே.
அடுத்த அறிமுகப்பதிவர் திருமதி மு.சரளாதேவி அவர்கள்.பெண் என்னும் புதுமை என்ற பெயரில் வலைத்தளம் நடத்திவருகிறார்.கடந்த ஜனவரி முதல் கவிதைகளை எழுதி வருகிறார்.இவரது பதிவில் பெண் என்னும் இலக்கியம் வாசிக்கலாமே.
நன்றி நண்பர்களே ! நீங்கள் தொடர்ந்து வளமோடும் நலமோடும் எழுத வலைச்சரத்தின் வாயிலாக வாழ்த்துகின்றேன்.
மீண்டுமொரு பதிவில் புதிய அறிமுகங்களுடனும் மனதை கவர்ந்த பதிவுகளுடனும் உங்களை சந்திக்க வருகின்றேன்
நட்புடன் நலம் நாடும்
சம்பத்குமார்












