07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, July 5, 2012

மூன்றாம் சுவை-கார்ப்பு


            
         கார்ப்புச்சுவை நம் எலும்புகள் வளர பெரிதும் துணை புரிகின்றதுகார்க்கிறது என்றால் என்ன? உப்பு கார்க்கும்,உப்பிட்டவரை உள்ளளவும் நினை. 
            ஆம், நமக்கு அன்றாடம் உணவில் உப்பிடும் சகோதரிகள், சமையல் குறிப்பு மட்டுமின்றி சகல விஷயங்களிலும் கலக்கி வரும் பதிவுகள் இன்று உங்கள் பார்வைக்கு:
                  இந்தத் தளத்தைப்படித்தால்குறை ஒன்றும் இல்லைஆன்மீகப்பயணம் இருக்கும், அனுபவங்களும் இருக்கும். கற்பனை இருக்கும், காமெடி யும் இருக்கும். கண்டுதான் பாருங்களேன்.
          மணிராஜ் என்ற வலைப்பூவில் மணிமணியான படங்களுடன் மனம் கொள்ளை கொள்ளும் ஞானமய கணபதி இருப்பார், தேன் சிட்டுக்கள் இருக்கும், கருத்தான கறிவேப்பிலையும் இருக்கும். 
         வலைப்பூவெங்கும் அமைதிச்சாரல் தூவிக் கொண்டிருக்கும். காமிரா கிளிக்கியவை காணலாம். அப்புறமா அதிர்ச்சி வைத்தியம் பற்றிய குறிப்பும் இருக்கும். அத்தோடு நில்லாமல்வீட்டுத்தோட்டம் போட வழிகளுமிருக்கும்.
      மனிதம் வளர்க்க மார்க்கமொன்று சொல்லும் அம்பாளடியாள், கவிதை வரிகளில் இலங்கைத்தமிழ் தாக்கமிருக்கும், தமிழோடு உறவாட தனி அழைப்புமிருக்கும்,சிந்தனைத்துளி சிதறியுமிருக்கும். 
                            சிறுகதை ஸ்பெஷலிஸ்ட் இந்தத் தள இயக்குநர். பிரசவமான தாய்க்கான மருந்தும் இருக்கும், மந்திர விளைவுகளும் இருக்கும். தென்னம்பாளையில் தேன்சிட்டு  திகட்டாத கவி விருந்து.
           இந்த வலைப்பூ வாசித்து வந்தால் சமைத்து அசத்தலாம். அனுபவமும் பேசும், ஆரோக்கிய உணவுகளும் இங்கிருக்கும்.
        முத்துச்சரம் முழுவதும் முல்லைச்சரம். பள்ளி வாகனங்களும் குழந்தைகள் பாதுகாப்பும் என பதைபதைத்திருப்பார். படபடக்கும் பட்டாம்பூச்சிகள் இங்கே பார்க்கலாம். உன்னோடு நான் என்று படைக்கும் கவிதைகள் நடுவே, உன்னோடு நீ என்று உன்னதமாய்ச் சொல்லியிருப்பார்.
                            தளத்தின் பெயர் பாலைத்திணை. குவைத்தில் வசிப்பதால், குறிப்பிட்ட இந்த பெயரோ!  மழலைத்தினைதான் மயக்க வைக்கிறது. குழந்தை அமுதினி பற்றி விவரிக்கும் ஒவ்வொரு வரியும் வார்த்தைகளுக்குள் நம்மை சிக்க வைக்கிறது.
இனி வருவன பெண்களைக்கவரும் பதிவுகள்:
                       பயணங்களும், பார்த்த இடங்களும் , பாதித்த விஷயங்களும் இங்கே பகிரப்படுகின்றன. மதுரையில் இருந்து ராமேஸ்வரம் வரை உள்ள கோவில்களுக்கு சென்ற அனுபவத்தை தல புராணங்களை சேர்த்து சொல்லும் விதம் நமக்கும் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டும்.
                           ஆன்மீகம் தொடர்பான தேடலுக்கு ஒரு தளம். திருவையாறு வரலாறு, தியாகராஜா சுவாமிகள் வரலாறு, தஞ்சை பெரிய கோவிலை பற்றிய ஆய்வு கட்டுரை என பல தகவல்களை விரிவாக எழுதி உள்ளார். அம்மா இங்கே ஆராதிக்கப்படுகிறார். தேவாரத் திருப்பதிகங்கள் தலவிபரம், பாடியவர் விபரம், ராகம், தாளம் எனத் திகட்ட வைக்கும் தகவல்கள் தரப்பட்டுள்ளன.
              மனிதனின் பிறப்பிலிருந்து இறப்பு வரை, பல்வேறு சடங்குகள் நடத்தப்படுகின்றன. சடங்குகள் பற்றிய தாத்பரியங்களும், சடங்கு நடத்த தேவைப்படும் பொருள்களின் பட்டியலும் விரிவாக இங்கே காணலாம்.
             உப்பு குறித்த சிறு தகவல் ஒன்று. நாம் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் உப்பில், சோடியம் இருக்கும். அந்த சோடியம், இரத்த அழுத்தம் அதிகரிக்கக் காரணமாகும். இரத்த அழுத்த அறிகுறிகள் உள்ளோர் உண்ணும் உணவில் பயன்படுத்த, சோடியம் குறைவான/இல்லாத சமையல் உப்பும் உள்ளது.

                                    இந்த சுவை எப்படியிருந்தது? நாளை பிரிதொரு சுவையினை,  சுவைபடக் கொணர்கிறேன்.
மேலும் வாசிக்க...

Wednesday, July 4, 2012

இரண்டாம் சுவை-கைப்பு




             இன்சுவை மட்டுமே சுவையாகாது. எந்த சுவையையும், நல்ல சுவையாக எடுத்துக்கொள்வதே இனிதாகும். கசப்புச்சுவை நரம்புகளை பலப்படுத்துகின்றது. அந்த வகையில், கசப்பு மருந்து கொடுக்கும் பதிவர்களின் பதிவுகளிலுள்ள சிறப்புக்களை இன்று பார்ப்போம். 
         அகடவிகடங்கள் என்றிவர் தலைப்பிட்டாலும், தன்னைச்சுற்றி நடக்கும் உலக நடப்புகள் மீதிவர் பார்வையிருக்கும். சமூக அவலங்கள் மீதிவர் சாட்டையிரங்கும். நாட்டைக்காக்க போரிட்ட வரலாறுமிருக்கும். பட்ட அனுபவங்கள் பாதி,சுட்ட அனுபவங்கள் மீதி.கிச்சிளிக்காஸ் காட்டுவார்,  மானிட்டர் மூர்த்தி பேசுவார், அறுநூறு பதிவுகள் தாண்டிவிட்டாலும்,அனைத்தையும் விஞ்சி நிற்கும் ரத்தக்கறை டைரி பேச்சு, என் மனம் கொள்ளை போச்சு.
            ஊரும், பேரும் சொன்னாத்தான் படிப்பீங்களோ என்று வினவும் சேட்டைக்காரன் , ஆறு மாதகால ஓய்விற்குப்பின்னர் மாப்பிள்ளை வந்தார்..! மாப்பிள்ளை வந்தார்..!! என்றிவரும் வந்துட்டார் . இவ்ர் ஆஸ்பத்திரியில்  சேட்டை! பண்ணியது பலருக்கும் தெரியும். எனக்கும் பிடித்தவர். நக்கல், நையாண்டி கலந்து கட்டி கலக்குவார்.

              வைகை எனும் காட்டாற்றில் குளிக்க, வகையாய் அழைத்திருப்பார். மதங்களைக்கடந்த மஜீத்  இங்கே மனங்கவருவார். விமான நிலைய விபரீதங்கள் விரிவாய்ச் சொல்லி எச்சரிப்பார். நகைச்சுவை,நையாண்டி, அரசியல் என அனைத்திலும் காட்டாற்று வெள்ளமாய் பாய்கிறது இந்த வைகை.
                காற்றைக்கொண்டு கவிதை பேசும் இலை கரடிபொம்மை.  இவர் கவிதையில், சமூக அவலங்கள் மீதான கோபம் கொப்பளிக்கும். இப்படிக்கு அம்மா!இதற்கோர் எடுத்துக்காட்டு. பரிசுகளால் ஏற்பட்ட பாதிப்பால் பரிதவிப்பார், ஒரு பண்பட்ட மனிதன்  இங்கே.                      எடக்கு மடக்குன்னு எகத்தாளமாச்சொன்னாலும், எல்லோருக்கும்    பயன்படும் பயமுறுத்தும் பன்றிக்காய்ச்சல் நோய் பற்றியும் இங்கே பதிவுண்டு. விழிப்புணர்வு மட்டுமின்றி, சில கசப்பு மருந்துகளும் இங்கே தரப்படுவதுஉண்டு. கல்லூரிக்கு போனா கர்ப்பமாக வந்தா... என்று சமுதாயத்தின் மீது ஒரு கண்ணும் உண்டு.
          வினவு தளத்தில் கறுப்புப்பணம் குறித்த தகவல்கள் இருக்கும். ரூபாய் வீழ்ச்சிக்கான காரணமும் இருக்கும்.
                இதுவும் கசப்புத்தான். உதிரும் மாயவலை ஓராயிரம் கருத்துச்சொல்லும். புரியும் முன் கசப்பாயும், புரிந்துவிட்டால், கருத்துக்கள் ஓராயிரம் சொல்லும்.
          சரி, கைப்புச்சுவை கொண்ட கசப்பு அமுதம் பாகற்காய்  காண இங்கு செல்லலாம். புற்று நோயை புறந்தள்ளும் பாகற்காய் இங்கே காணலாம்.
                        நாளை நல்லதொரு சுவையுடன் நாம் சந்திப்போமா!
அன்பு வேண்டுகோள்: "www.unavuulagam.in"   என்ற என் வலைத்தளத்தைப்  பல நண்பர்களால்   பார்க்க இயலவில்லையென    தொடர்ந்து தெரிவித்து வந்ததால், எனது தளம்," www.unavuulagam.blogspot.in"  என்ற வலைப்பூ முகவரியில் தெரியுமாறு மாற்றம் செய்துள்ளேன்.    
மேலும் வாசிக்க...

Tuesday, July 3, 2012

முதற்சுவை-நகைச்சுவை.


                      
அறுசுவைகளில் முதற்சுவை இன்சுவை. இளவயதில் தசையை வளர்க்க, இனிப்புச்சுவை மிக அவசியம். வயது ஏற, ஏற இனிப்பைக் குறைச்சுக்கணும். ஆனால், நகைச்சுவை எனும் இன்சுவை எந்த வயதிலும் ஏற்புடையதே. இன்னும் சொல்லப்போனால், சிரிக்கத்தெரிந்த ஜீவராசி மனித குலம் மட்டுமே. வாய் விட்டுச்சிரித்தால், நோய்விட்டுப்போகும். அதற்கேற்ப, நம்ம பதிவர்கள் நகைச்சுவையாய் சொல்லும் செய்திகள் ,எந்த வயதிலும் திகட்டாதவை.
              இந்த நகைச்சுவைக் கலைஞன் ஸ்டார்ட் மியூசிக் என்று சொன்னால், நக்கல்,நையாண்டி என நவரசமும் அதிலிருக்கும். 
கோடீஸ்வரன் நிகழ்ச்சி, கேள்விகள் வெளியானது...!   என்பார். இவரின் ஆனந்தத்தொல்லை தாங்கலைப்பா! பதிவை மிஞ்சும் பின்னூட்டமிருக்கும். 
                  தேர்ந்த எழுத்தாளர்போல், தெளிவான நடையிருக்கும். சிரிக்கவும், சில நேரம் சிந்திக்கவும் வைக்கும் செல்வா கதைகள். மொக்கையென்றாலும், முடிவில் ஒரு நீதியுமிருக்கும். ஒரு வட்டம் மாவட்டம் சாரி மூவட்டம் ஆகுமா என்பார்.
                        தைரியமா சிரிச்சிட்டு வரலாம் தக்குடு தளம் சென்றால். கொஞ்சம் குறும்பு, கொஞ்சம் நக்கல் இரண்டும் கலந்து இனித்தே இருக்கும். 
அகிலா மாமியும் ஐ.டி கம்பெனிகளும்.... அவர் தரப்பு நக்கல்.                                     
          கலாய், கலாய், கலக்கலாய் கலாய். கார்டூன் இருக்கும், கலாய்த்தலும் இருக்கும்.ஆனாலும் குசும்பு கொஞ்சம் ஜாஸ்திதான். டரியள் டக்ளஸ் அரசியல் நையாண்டி அசத்தலா இருக்குமே.
                 அன்பானவர், அனைத்து உயிர்களையும் நேசிப்பவர். விரசமில்லா நகைச்சுவை வேண்டுவோர், நிஜாம் பக்கம் விரைந்து செல்லலாம். குஷ்புவுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? எனச்சொல்லி குலுங்க குலுங்கச் சிரிக்க வைக்கிறார்.
                               புத்தகங்களின்  காதலர், புதுப்புது நகைச்சுவை எழுத்தாளர்,கொஞ்சம் லக, லக சாரி கல, கல, மிஞ்சும்  சாரி கொஞ்சம் வள, வள என சுய அறிமுகம் காண கடுகு தாளிப்புஐயோ வேண்டாம் ஆஸ்பத்திரி என்று அலற வைக்கிறார்.
                                   கப்பல் வியாபாரிகள் ஒன்பது பேர் சேர்ந்து கலக்கும் கவுண்டமணி செந்தில், குடை புடிச்சிட்டுப்போற பெரியவரையெல்லாம் கட்டியிழுக்கும். அட உங்க வூட்ல பார்ட்டி!! அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.
             வெகுளித்தனமான நகைச்சுவை வேண்டுவோர் விரும்பிச்செல்ல யானைக்குட்டி ஞானேந்திரன். இவர் பக்கம் கிறுக்கலுமிருக்கும்,சில பொறுக்கலும் இருக்கும். கொஞ்சமாவது அறிவு இருக்கா! உனக்கு ! என்று சூடாகக்கேட்டு, சுயம் புலம்புகிறார்.
                  சுட்டா விலங்குதாம்லே என சூடாய்ச்சொல்லும் சிரிப்பு போலீஸின் சுயதம்பட்டம் கொஞ்சம் வில்லங்கமானதுங்கோ! போலீஸே திருடினால்!  சத்தியமா திருடப்பட்ட பதிவு பாருங்க.
                               டவுசர் பாண்டி யிடம்,கவிதையும் இருக்கும், கற்பனை பேட்டியுமிருக்கும். தலைப்பிலும் பல நக்கல் சொல்லிருக்கும். டவுசரு வாங்கின அவார்டு என்று டபாய்க்கிறார்.
                                 நகைச்சுவையும், நக்கலும் நாய்நக்ஸ் பக்கத்தில் இருக்கும். ’தானே புயல்’ வந்து தள்ளாட வைத்தாலும், தனித்துவமாய் நகைச்சுவை நர்த்தனமாடும். பதினாறு பந்தியில் சாப்பிட்ட மனோ பலரையும் கவர்ந்ததில் பழுதில்லை.
                                                 இன்னல் தரும் இனிப்பு நோய்க்கு இவரிங்கே  மருத்துவம் கூறுகிறார். அதையும் கொஞ்சம் பாத்துக்கோங்க.
                    இன்சுவையை இனிதே ர(ரு)சித்தீர்களா? இனி பிரிதொரு சுவையுடன் நாளை சந்திப்போமா?

மேலும் வாசிக்க...

Monday, July 2, 2012

சுயம்


   ”தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
 காமுறுவர் கற்றறிந் தார்”-எனும் வள்ளுவன் வாக்கினிற்கிணங்க, தான் கற்றதையும்,பெற்றதையும்,சக பதிவர்களும்,இணைய வாசிப்பாளர்களும் கற்றும்,பெற்றும் மகிழ்ந்திட உருவாக்கப்பட்டதே வலைச்சர ஆசிரியர் பொறுப்பு. அந்த மதிப்புமிக்க பொறுப்பு இந்த வாரம்,எனக்கு வழங்கப்பட்டுள்ளது. சீனா அய்யா மற்றும் வலைச்சர ஆசிரியர் குழுமத்திற்கு என் நன்றிகளை தெரிவித்துத் தொடர்கிறேன்.
மூன்றாண்டுகளுக்கு முன்னர்,புலியைப்பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டதுபோல்,எறும்பு வலைத்தளம் மூலம் அறிமுகமாகி, எனக்கும் ஒரு வலைப்பூ துவக்கிவைத்தேன். ஆம்,அது 2009ம் ஆண்டின் இறுதிப்பகுதி. துவக்கத்தில் சமைத்து வைத்த உணவை, ருசிக்க வந்த நெஞ்சங்கள் குறைவே. சமையல் சரியாய் ருசிக்கவில்லையோ,சமைத்துவைத்த உணவின் ருசியை சரியாய் எடுத்துரைக்கவில்லையோ! வருடம் ஒன்றும் உருண்டோடியது, சகோதரி கௌசல்யா அவர்தம் மனதோடு மட்டும் வலைப்பூவில், இன்று ஒரு பதிவர்-விமரிசனம் பகுதியில் இனிமையாய் அறிமுகம் செய்து வைத்து, என் வலைப்பூவை பதிவுலக நண்பர்கள் பக்கம் எடுத்துச்சென்றார். அத்தோடு வலைச்சரத்தில் அறிமுகம் செய்துவைத்த மூத்தோர் பலர்.பழக இனிமையான பண்பாளர் ஸ்டார்ட் மியூசிக் ராம்சாமி சார்,அவர் இதயத்தில் ஓர் இடமளித்தார். ஆம்,அவர் ப்ளாக்கில்,’உணவு உலகம்’தளத்திற்கு தனியிடம் கொடுத்தார். அதனைத்தொடர்ந்து,’மனோ நாஞ்சில் மனோ’வும், மனசார அவர் தளத்தில் தனியிடம் கொடுத்தார். 17.06.11ல் நடைபெற்றநெல்லைப்பதிவர்சந்திப்பு,உணவு உலகத்தை உங்களருகே எடுத்துவந்தது. ப்ளாக்கிலிருந்து டொமைன் வாங்கியது அடுத்த கட்ட பயணம்.
என்பக்கம் குறிப்பிட்டுச்சொல்லும் பதிவுகள் இவை:
பதினொரு வயதில் பாரில் சிறந்த பட்டங்கள் பெற்ற நெல்லைச்சிறுமி பற்றிய என் தொகுப்பு-விசாலினி இந்தியாவின் விடிவெள்ளி,மும்பை பயணத்தின்போது நான் கண்ட காட்சியின் அடிப்படையில் அமைத்த பதிவு-முதுமையை மதிப்போம்- மருமகனே மகனான்,அனைவரும் ஓட்டு போட தெரிஞ்சுக்க-உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுப் போடலாம் வாங்க,
உங்கள் நலனில் எந்தன் அக்கறை- உடல் நலக் குறிப்புகள் உங்களுக்கே! 
அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்கள்- வாட்டர் கேன்களும் வாட்டும் நோய்களும்-அதிர்ச்சி தகவல்கள்.  
சத்துக்கள் குறித்த முத்தான பதிவு-வியக்க வைக்கும் வேர்கடலை.
                                           துறைசார்ந்த தகவல்கள் மட்டும் என் ஆங்கில வலைப்பூ FOOD SAFETYல் எழுதி வருகிறேன்.
உணவு உன்னதமாய் அமைந்திட,அறுசுவையும் அவசியம். ஆறில் ஒன்று குறைந்தாலோ,கூடினாலோ இன்சுவை அதிலிருக்காது.இனிப்பு,கசப்பு(கைப்பு),கார்ப்பு,உவர்ப்பு(கூர்ப்பு),துவர்ப்பு, புளிப்பு. இந்த அறுசுவைகளின் அடிப்படையிலேயே,பதிவர்களின் பல்சுவையைப்பகிரப்போகிறேன். இத்துடன், கூடுதல் ருசிக்குக் கூட்டாஞ்சோறும், கண்ணாமூச்சி ரே ரேயும் வ்ந்து உங்களை வசப்படுத்தும். நாளைக்குப் பார்ப்போமா!
மேலும் வாசிக்க...

Sunday, July 1, 2012

செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருத்தல்

அன்பின் சக பதிவர்களே !

அனைவருக்கும் வணக்கம்.

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற நண்பர் ஹாரி பாட்டர் - தான் ஏற்ற பொறுப்பினை நிறைவேற்றி - மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் நான்கு பதிவுகள் போட்டு, ஏறத்தாழ எழுபது மறுமொழிகள் பெற்றிருக்கிறார். அறிமுகப் படுத்தப் பட்ட பதிவர்களோ 67 - பதிவுகளோ 50.

ஹாரி பாட்டரை நன்றி கலந்த வாழ்த்துகள் கூறி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறோம்.

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார் அருமை நண்பர் சங்கரலிங்கம். நண்பர் சங்கர லிங்கம் பிறந்த ஊரோ அம்பாசமுத்திரம். வசிப்பதோ நெல்லை மாநகரம். நாற்பத்தெட்டே வயதான் இளைஞர். உணவு பாதுகாப்பு அலுவலராகப் பணி புரிகிறார்.

இவர் உணவு உலகம் என்ற தளத்தினில் நவம்பர் 2009ல் இருந்து எழுதி வருகிறார். 340 பதிவுகள் இதுவரை எழுதி இருக்கிறார். உணவு உலகத்தில், உணவு கலப்படம் மற்றும் உணவு பாதுகாப்பு குறித்து, புதிய பயனுள்ள செய்திகள் மற்றும் பயணங்கள், பதிவர் சந்திப்புகள், ரசித்தவை பார்த்தவை பற்றியும் எழுதி வருகிறார்.

நண்பர் சங்கர லிங்கத்தினை வருக ! வருக ! என வரவேற்று வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் ஹாரிபாட்டர்

நல்வாழ்த்துகள் சங்கர லிங்கம்

நட்புடன் சீனா
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது