07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, December 22, 2013

கோமதி அரசு துரை செல்வராஜூவிடம் இருந்து ஆசிரியப் பணியினை ஏற்கிறார்.

அன்பின் சக பதிவர்களே ! 

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற - துரை செல்வராஜு  - தான் ஏற்ற பொறுப்பினை சரி வர, மிகுந்த  ஆர்வத்துடனும்,  பொறுப்புணர்வுடனும்,  ஈடுபாட்டுடனும் நிறைவேற்றி நம்மிடமிருந்து முழு மன நிறைவுடன் விடை பெறுகிறார். 

இவர் எழுதிய பதிவுகள்                         : 007
அறிமுகப் படுத்திய பதிவர்கள்            : 85
அறிமுகப் படுத்திய பதிவுகள்              : 186
பெற்ற மறுமொழிகள்                            :241
வருகை தந்தவர்கள்                              : 976

துரை செல்வராஜூ ஆன்மீகத்தில் மிகுந்த ஈடு பாடு கொண்டு அனைத்து அறிமுகங்களையும் பெரும்பாலும் ஆன்மீகத்துறையில் இருந்தே எடுத்திருக்கிறார்.  

நல்ல பதிவர்களைத் தேடிப் பிடித்து - அவர்களீன் நல்ல பதிவுகளை அறிமுகப் படுத்தி உள்ளார். 
பதிவுகளை அறிமுகப் படுத்தும் போது அப்பதிவுகள் பற்றிய கருத்துகளையும் கூறி இருக்கிறார். பதிவர் பெயரும் தளத்தின் பெயரும் பதிவின் பெயரும் சுட்டிகளும் கொடுத்து அறிமுகப் படுத்தி இருக்கிறார்.

துரை செல்வாராஜினை அவரது   கடும் உழைப்பினைப் 
பாராட்டி, வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி 

அடைகிறோம். 

நாளை பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார் 
திருமதி கோமதி அரசு 

இவர் திருமதி பக்கங்கள் என்னும் தளத்தில்எழுதி 
வருகிறார். 

இவர்  மயிலாடுதுறையில் வசிக்கிறார்.  இவரின்  கணவர் தமிழ்த்துறைத்தலைவராக இருந்து ஓய்வு பெற்ற கல்லூரிப் பேராசிரியர். இவரது  குடும்பத்தினர் தந்த  ஊக்கத்தால் 2009 மே மாதம் 31 தேதி வலைத்தளம்  ஆரம்பித்தார். இவரது  வலைத்தளத்திற்கு ’திருமதி பக்கங்கள்’ என்று பெயரிட்டு வலைத்தளத்தில் எழுதி வருகிறார். ஏற்கனவே 2012 ல் ஜனவரி மாதம் 2ம் தேதி வலைச்சர  ஆசிரியர் பொறுப்பை ஏற்று செய்து இருக்கிறார்.

கோமதிஅரசினை வருக வருக என் வரவேற்று வாழ்த்துவதில் பெருமை அடைகிறேன். 
நல்வாழ்த்துகள் துரை செல்வராஜூ

நல்வாழ்த்துகள் கோமதி அரசு

நட்புடன் சீனா 



மேலும் வாசிக்க...

மார்கழிப் பனியில் - ஞாயிறு

கலை மலர்.


அனைவருக்கும்  வணக்கம்.

நேற்று ஆறாவது பதிவில்  - வருகை தந்து கருத்துரையை பதிவு செய்து  பாராட்டி மகிழ்ந்த - மகிழ்வித்த,   நண்பர்கள் அனைவருக்கும்  மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

வலைச்சரத்தில் ஏழாம் நாளாகிய இன்றும் -  முதலில் ஆலய தரிசனம் செய்வோம்.

வருக... நண்பர்களே..

ஊர் சுற்றிப் பார்ப்பதிலும் ஓய்வு நாட்களில் சுவையாக உண்டு மகிழ்வதிலும்
யாருக்குத் தான் ஆசையிருக்காது!..

தமிழ்!..

நம் எல்லோருக்கும் பேச்சும் மூச்சும் ஆனது அதுவே!.. அந்தத் தமிழ் இன்பத் தமிழ் - எங்கள் தமிழ் காட்டும்  - முதல் குரு அருட்திரு அகத்திய மாமுனிவர்.

அவர் வடதிசைக் கயிலையில் இருந்து நடை வழிப்பயணமாக - சிவசக்தியின் திருக்கல்யாண வைபவத்தைத் தரிசிக்க தென் திசைக்கு வந்து - அருள் பெற்றதையும்,

தமிழகம் எங்கும் சிவ பிரதிஷ்டை செய்து வணங்கி  - பல்வேறு வழிகளிலும் மக்களுக்கு - கமண்டல காவிரி நதி உள்பட -  உறுதுணையாக  இருந்ததையும்  பற்பல நூல்களின் வாயிலாக அறியமுடிகின்றது. அப்பர் ஸ்வாமிகள் தமது தேவாரப் பாடல்களிலும் அகத்திய மாமுனிவரைக் குறிப்பிடுகின்றார்.

அகத்தியர்  தவமிருந்த மலை பொதிகைமலை. அந்த மலையில் அவருடைய தவபீடத்தைத் தரிசிக்க - இப்போது பலரும் பலசிரமங்களுக்கு இடையே சென்று வருகின்றனர்.  வாருங்கள் - நாமும் செல்வோம்.

நிகழ்காலத்தில் நம்மை அழைத்துச் செல்பவர் - திரு.சிவா.

இங்கே தென் பொதிகை தரிசனம் நிறைவடைந்ததும்  -
அகத்திய குருவுக்கும் குருவான ஆதி குரு வீற்றிருக்கும் மாமலை -
அதுதாங்க  - திருக்கயிலாய மாமலை!..


அங்கேயும் சிவா - அவர்களே அழைத்துச் செல்கின்றார்.
வாருங்கள்!..  இறைவன் துணையுடனும்  - நண்பர் சிவா அவர்களின் வழிகாட்டுதலுடனும் திருக்கயிலாய மாமலையைத் தரிசிப்போம்!..
வழிகாட்டி உடன் வந்த அன்பின் சிவா அவர்களுக்கு மிக்க நன்றி!..

அடுத்து ஒரு பயணம் - கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை!..
வழித்துணையாய் வந்த அன்பின் வெங்கட் நாகராஜ் , வசிப்பது தலைநகர்.

ஐயனின் ஜோதி மலைக்கு அடுத்து அப்பனின் ஜோதி மலை - அண்ணாமலை!..
காலெல்லாம் வலிக்குதே... கொஞ்ச தூரம் தான் .. இன்னும் வாங்க!...
இங்கே மலையே கோயில் . எனவே கிரி வலம் பிரசித்தம் .
அது சரி கூட வர்றது யாருங்க?!..
அவங்கதான் -  கனவுகளைத் தேடி திருவல்லம் பரசுராமர் கோயிலுக்கு அழைத்துச் சென்ற - ராஜி!..

குருநாதர்களைக் கும்பிடுவது என்றால் கொள்ளை இன்பம் தான் . அந்த இன்பத்தை மகிழ்ச்சியை சீரடி சாய்பாபா தரிசனத்தின் மூலம் வழங்குபவர் குடந்தையூர் R.V.சரவணன்.

அப்படியே - அவருடன் திருவெண்காடு கோயிலையும் தரிசனம் செய்யலாம்.

இயற்கையுடன் இணைந்த வாழ்வு நம்முடையது. வயலும்  ஓடையும் தோப்பும் துரவும் என - தூய வாழ்வு வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள்.

அவர்களுடைய அந்த வாழ்வுக்குத் துணையாய் எண்ணற்ற காவல் தெய்வங்கள். அந்த காவல் தெய்வம் முனீஸ்வரனை  மனசு நிறைஞ்சு  - நமக்குக் காட்டுகின்றார் - திரு. சே. குமார். 

மயிலைக் காளைகளைக் காணோம் - என்று மனம் வருந்தும் குமார் - தற்போது காதல் ஜோடிகளைக் காப்பாற்றும் களப் பணியில் தீவிரமாக இருக்கின்றார்.
பாதுகாப்பு வேண்டுபவர்கள் இவரை அணுகலாம். ஏனெனில் முனீஸ்வரன் கூட இருக்கார் அல்லவா!..

அடுத்த  இடம். தவறு. இதுவும் ஒரு தலம் - கொடுமணல் .
இங்கே தான் நம் சங்க கால தமிழ் மக்கள் வெளி நாட்டுத் தொடர்புடன் வாழ்ந்தார்களாம். மண்ணைத் தொட்டு கண்ணில் ஒற்றிக் கொள்வோம்!..

அழைத்துச்சென்ற மழைக்காதலனுடன் - நல்ல திரைப்படம் ஒன்றும் பார்த்தாகி விட்டது.


வழியில் - நமது அன்பின் ஐயா அவர்கள் -    தஞ்சை மாநகரில்.  பிறந்து வளர்ந்த வீட்டைத் தேடிச் சென்று கண்டு மகிழ்ந்தோம்.

இதுவரைக்கும் இயன்றவரை கோயில் மலை - ன்னு சந்தோஷ சுற்றுலா!..

தகவல் தொடர்பில் இணைந்திருந்த  திண்டுக்கல் தனபாலன் அவர்கள்
 
வழி நெடுக கலகலப்புடன் அரட்டைஅடித்து மகிழ்வித்தவர்  - அன்பின் ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள்.

குடும்ப இஸ்திரி .. ன்னு நிரூபிச்ச  பக்கத்து வீட்டுப் பொண்ணு

மலரும் நினைவுகளாக பல தகவல்களைப் பற்றி பகிர்ந்து கொண்டவர் -
தமிழ் இளங்கோ அவர்கள்.

தனிமரமாய் நின்றாலும் ஸ்நேக கவிதையும் கானமும் நன்று!.

பயணம் செய்யும் போது தன் இனிய குரலால் நம் அனைவரையும் கட்டிப் போட்டவர் - நகைச்சுவை வித்தகர்  நமது மதிப்புக்குரிய சுப்பு தாத்தா அவர்கள்.

சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கூடவே நமக்கு சொல்லிக் கொண்டு வந்தவர் அன்பின் திரு பாண்டியன்!.. அவர்கள்.

இப்போது - பசிக்குதே!..

பசிக்குதா!?.. அதனால தானே - இங்கே வந்திருக்கின்றோம்..
அன்பின் வித்யா விஜயகுமார் அவர்களின் கை வண்ணத்தில் -
அஞ்சரிசி பணியாரம்  பர்பி   ஜவ்வரிசி உருண்டை -
எல்லாம் நமக்காக...

இங்கே கோலமிட்டு விளக்கேற்றி வைத்திருப்பவர் - சின்னு ஆதித்யா.

அதோ!..

தமிழ்வாசி பிரகாஷ்  கபீரன்பன்   கவிஞர் இராய செல்லப்பா  
கிருஷ்ணாரவி   சக்கரகட்டி  மலர்த்தரு S. மாது  
நவ்சின் கான்   நிஜாமுத்தீன்   சித்ரா சுந்தர்   ரூபன்
கோமதி அரசு  கரந்தை சரவணன்   துளசிதரன்   பிரியா ராம்
ஸ்கூல் பையன் 

அனைவரும் வந்து விட்டார்கள்.

அறிமுகம் ஆனதில் இருந்து  நம்முடன் பயணித்துக் கொண்டிருக்கும் அத்தனை அன்பின் உறவுகளும் இங்கே குழுமி இருக்கின்றார்கள்.

மனம் நிறைவான பயணம் . 
இது நிறைவடைந்ததாக ஒரு பாவனை தான். ஆனால் - 

பயணங்கள் முடிவதே இல்லை!..  மீண்டும் அனைவருக்கும் நன்றி!..

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!..


பசுமை நிறைந்த நினைவுகளே!.. பாடித் திரிந்தபறவைகளே!..
பழகிக் களித்த தோழர்களே!..

 
மீண்டும் நல்லதொரு வேளையில் சந்திப்போம்!..
வணக்கம்.
மேலும் வாசிக்க...

Saturday, December 21, 2013

மார்கழிப் பனியில் - சனி

எழில் மலர்.

அனைவருக்கும்  வணக்கம். 

நேற்று ஐந்தாவது பதிவில்  - வருகை தந்து கருத்துரையை பதிவு செய்து  பாராட்டி மகிழ்ந்த - மகிழ்வித்த,   நண்பர்கள் அனைவருக்கும்  மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

வலைச்சரத்தில் ஆறாம் நாளாகிய இன்றும் -  முதலில் ஆலய தரிசனம் செய்வோம். 

வருக - நண்பர்களே!..
  = = = = > > > < < < = = = =

தமக்கென வாழாது பிறர்க்கென வாழ்பவர் - பெரியோர்.. 
அப்படி எண்ணற்றோர் வாழ்ந்ததனால் பெருமையுற்ற பாரத தேசத்தில் - தென் தமிழகத்தில் - ஸ்ரீவில்லிபுத்தூர் எனும் திருத்தலத்தில் - 
அப்பாவும் பெண்ணும் பேசிக் கொள்வதைக் கேளுங்கள்!..
ஏனம்மா..  நான்  உன்னை -  அழைத்தது உனக்குக் கேட்கவே இல்லையா ?..
எப்படியப்பா கேட்கும்!. வாய் பாடும்போது மனம் கேசவனையே சிந்திக்கின்றது. அதனால்  வேறெதிலும்  சிந்தனை செல்வதில்லை!..

அழைத்தவர் - பெரியாழ்வார்.
அழைக்கப்பட்டவள் - சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்.

எண்ணிய முடிதல் வேண்டும்  என்று -  நம் கண் முன்னே - திருப்பாவையைப் பதிவிடுகின்றார் - ஷைலஜா. 
  = = = = > > > < < < = = = =

அன்பில் ஏதும் குறையும் உண்டோ நீயும் கூறடி!.. - இப்படிக் கேட்பவர் - கவிநயா!..

மணியே.. மணியின் ஒளியே!.. - எனும் இவரது வலைத்தளம் முழுதும் 
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ - என்று அம்மன் பாட்டுக்கள் தான். 
தளத்தினுள் சென்றால் - தன்னை மறந்து உலவலாம்!.. தாயின் மடியில் துயிலலாம்!..
  = = = = > > > < < < = = = =

பிறர்க்கென வாழ்ந்த பெரியோர்களில் உயரிய நிலையில் ஞான பரவசத்தில் ஆழ்ந்து சிவானந்தப் பெருவெளியில் லயித்திருப்பவர்களை சித்தர்கள் என்று குறிப்பது நமது மரபு. 

அவர்களுக்கு நம்மிடமிருந்து தேவைப்படுவது யாதொன்றும் இல்லை - நல்லொழுக்கத்தை தவிர!..

மனுக்குலம் தான் அவர்களை நாடி நின்றது. சித்தர்களும் ஆன்மாக்களின் அவலங்களை உணர்ந்திருந்ததனால் - மக்கள் வாழ்வில் எல்லாப் பக்கங்களிலும் தமது முத்திரையைப் பதித்தனர். 

அந்த வகையில்  - ஆசான் அகத்திய மாமுனிவரின் அறிவுரைப்படி, ஞானகுரு போகர் நவபாஷாணங்களைக் கொண்டு அமைத்து - நமக்கு வழங்கியதே  - பழனி பாலதண்டாயுதபாணி ஸ்வாமியின் திருமேனி.

சித்தர் பெருமக்களின் - திருவாக்கு -  கால சூழ்நிலை கருதி மறைவான பொருளில் (பரிபாஷையில்) இருந்ததால் - மக்களின் வழக்கத்திலிருந்து அவை மறைந்திருந்தன. 

அவற்றின் பயனை அனைவரும் அறியும் வண்ணம் குரு அருளும் திருவருளும் ஒன்றுசேர - தனது தளத்தில் பதிவிடுகின்றார் - தோழி.
வியப்பின் எல்லை உங்களை அழைத்துச்செல்வது -

அகத்தியர் அருளிய   திரிகடுக லேகியம்
அகத்தியர் அருளிய  சண்முக யந்திரம் 
அகத்தியர் அருளிய மகா மந்திரங்கள்
போகர் வடிவமைத்த பழனி முருகன்
கருவூரார் அருளிய  கீழாநெல்லி கற்பம்
புலிப்பாணி சித்தர் கூறியருளும் சனி பகவான்   

பலவித மூலிகை மருந்துகளைப் பற்றியும் உடல் நலம் தரும் ஆசனங்கள், மனநலம் தரும் மந்த்ர யந்த்ரங்களைப் பற்றியும் அறிய முடிகின்றது. 

ஆர்வத்துடன் படித்தறிந்து கொள்க. 
எதையும் செய்து பார்க்க வேண்டுமெனில் - கவனம். 
தகுந்த குருவின் சீரிய வழிகாட்டுதல் அவசியம்!..
  = = = = > > > < < < = = = =

தேவி எனும் சகோதரியின் தளம் -  காகிதத்தில் கிறுக்கியவை.

அங்கே போனால் - 
வாசல் முழுதும் வண்ணமயமான   அழகு    மார்கழிக் கோலங்கள்!..
பக்கத்தில் பூரிக்கட்டை இருக்கே!.. அதனால தானா?.. இல்லே.. இல்லே!.. - உண்மையிலேயே அருமை!..

கிறுக்கியவையே - இப்படி இருக்கின்றன என்றால் - 
ஒழுங்காக எழுதியிருந்தால் எப்படி இருக்கும்!?... நீங்களே சொல்லுங்கள்!..
  = = = = > > > < < < = = = =

வந்து கொண்டிருக்கின்றது புத்தாண்டு.. பலபேர் பல விஷயங்களுக்கு சபதம் செய்வதுண்டு, சிலர் - வரும் ஆண்டில் இதை இதை செய்ய (!?) மாட்டேன் என்று சபதம் செய்திருக்கக்கூடும் . 

அந்த சபதத்தின் கதி  அந்த ஆண்டிலேயே அதோ கதியாகி இருக்கும் எனினும் புத்தாண்டில் தயாராக இருப்பார்கள் - மறுபடியும் சபதம் செய்வதற்கென்று!.. பாவம் !.. அதை இன்னமும் நம்பும் பெண்களின் நிலைதான் பரிதாபமானது.

கீதா. M  - தனது - தென்றல் - தளத்தில், சபதத்தின் கதையைச் சொல்கின்றார்.
அதுமட்டுமில்லை!.. 

தொட்டில் குழந்தை  மொட்டுகள் - எனும் பதிவுகளில் மனம் கலங்கும்படி கவிதைகளைச் சொல்கின்றார்.  

ஆசிரியையாக விளங்கும் இவர்  வளரும் சந்ததிகள் கவலையில்லாமல் வளர வாய்ப்பில்லையா? - என மனித நேயத்துடன் வருந்துகின்றார்.

இவரது தளம் - கட்டுரை, கவிதை, சமூகம் - எனும் வகைப்பாடுகளில் இலங்குகின்றது.
  = = = = > > > < < < = = = =

மணல் கடத்தல்!.. புது வீடு கட்டவா?.. இல்லீங்க.. கலர் பொடி கலக்கி வீட்டுக்கு முன்னால கோலம் போடுறதுக்கு!..

இனிமையாக சொல்றாங்க - கஸ்தூரி!.. மகிழ்நிறை எனும்  தலத்தில்!.. பெருநகர வாழ்க்கை நரகம் - யாரோ ஒப்புதல் வாக்குமூலம் தர்றாங்க!..
 DSR - நூல்முகம்
அவங்களும் வாத்யாரம்மா போல இருக்கு.. இங்கிலீசு எல்லாம் சொல்லித் தர்றாங்க!.
= = = = > > > < < < = = = =
உஷா அன்பரசு, வேலூர் ( வீரமானவங்களா இருப்பாங்க போல இருக்கு!..) 
பள்ளி நாட்களில் இருந்து எழுத்தின் மீது நாட்டம் என்று சொல்கின்றார்.. 

அறிவியல் வகுப்பு ஆசிரியை:
தண்ணியிலிருந்து ஏன் மின்சாரம் எடுக்கறாங்க?..

மாணவி(புத்திசாலி): டீச்சர்.. அப்படி எடுக்கலைன்னா நாம குளிக்கும்  போது ஷாக் அடிக்குமே!..

வெகுநேரம் சிரித்துக் கொண்டிருந்தேன். பற்பல இதழ்களில் வெளியான இவரது படைப்புகளை  - சிறுகதைகள், கவிதை (இவங்களுமா!..) தனது தளத்தில் கருத்துரை போடும் ரகசியத்துடன் வெளியிடுகின்றார்.

  = = = = > > > < < < = = = = 

அன்பு நண்பர்களே!.. மேலும் தளங்களுடன் -  
நாளை சந்திக்கும் வரை நமது சிந்தனைக்கு,

இன்று இந்த அளவுடன் உங்களிடம் விடை பெற்றுக் கொள்கின்றேன்.  வணக்கம். 
மேலும் வாசிக்க...

Friday, December 20, 2013

மார்கழிப் பனியில் - வெள்ளி

பாச மலர்


அனைவருக்கும்  வணக்கம். 

நேற்று நான்காவது பதிவில்  - வருகை தந்து கருத்துரையை பதிவு செய்து  பாராட்டி மகிழ்ந்த - மகிழ்வித்த,   நண்பர்கள் அனைவருக்கும்  மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

வலைச்சரத்தில் ஐந்தாம் நாளாகிய இன்றும் -  முதலில் ஆலய தரிசனம் செய்வோம். 

வருக - நண்பர்களே!..

பெண்ணிற் பெருந்தக்க யாவுள - என்பது வள்ளுவப் பெருமானின் திருவாக்கு.

கால சுழற்சியில் - சித்திரை முதற்கொண்டு பங்குனி வரையிலான பன்னிரு மாதங்களில், ஆடி - முதல் ஆறு மாதங்கள் தட்சிணாயண புண்யகாலம் என்றும், தை - முதல் ஆறு மாதங்கள் உத்ராயண புண்ய காலம் என்றும் சான்றோர்கள் வகுத்துள்ளனர். 

நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் என்பது குறிப்பு.  தட்சிணாயணம் - தேவர்களுக்கு பொழுது சாயும் நேரம் எனில் உத்ராயணம் பொழுது விடியும் நேரம். இந்த -

ஆடி மாதத்தில் -  சிறப்பிக்கப்படுவது பெண்மை   என்றால்,
மார்கழி மாதம் - பெண்களால் சிறப்பிக்கப்படுகின்றது என்பதே உண்மை.  

பாருங்களேன்!.. வானவர்களுக்கு உரிய விடியற்பொழுதான மார்கழி எப்படி எல்லாம் சிறப்பிக்கப்படுகின்றது!..

கொட்டும் பனியில் வாசலில் கோலமிட்டு விளக்கேற்றி அழகு செய்வதிலிருந்து,

அதுவரையில் கவனிக்கப்படாமல் - சிவனே என்று இருக்கும் தெருக்கோடி பிள்ளையாரையும் விடியற்காலையில் எழுப்பி விட்டு  - அவருக்கு அபிஷேக ஆராதனைகளைச் செய்து - 

ஒருநாள் மண்டகப்படி உபயதாரராக இருந்து - தரிசனம் செய்ய வருவோர்க்குப் பொங்கலும் புளியோதரையும் பிரசாதமாகக் கொடுத்து மகிழ்ந்து -

அடடா!.. எத்தனை எத்தனை சந்தோஷங்களை நம் வீட்டுக் கொண்டு வருகின்றார்கள்!..

இதனால் தான் - பெண்மை வெல்க..! - என்று மகாகவி பாரதியார் ஆனந்தக் கூத்தாடினார்.

ஆத்தா, ஆச்சி, அம்மா, அக்கா, அண்ணி, அத்தை - ஆகிய 
நேசப் பிணைப்புகளுக்கு வணக்கம் கூறுவோம். 

தங்கை, மகள், பக்கத்து வீட்டு பெண் - ஆகிய 
பாசப் பிணைப்புகளுக்கு வாழ்த்து கூறுவோம்.

அன்பில் நிறைந்த - மங்கல மனையறத்தைக் 
கட்டிக் காக்கும் மனைவிக்கு நெற்றியில் குங்குமம் இட்டு, 
கருங்கூந்தலில் ஒரு முழம் மல்லிகைப் பூவினைச் சூட்டுவோம்!.. 
 பெண்மையே நீ வாழ்க!.. 

ஏ..சாமி!.. மாலை போட்டுக்கிட்டு இருக்கிறப்ப
ஒனக்கு இதெல்லாம் தேவையா!..
சாமியே சரணம் ஐயப்பா!..

ஆக - இந்த இனிய தருணத்தில்,

பெண்களிடம் ஒரு கேள்வி - நான் கேட்கலீங்க!... அம்மா கேட்கிறாங்க!..
அம்மாவா?!.. ஆமாங்க.. நம் அனைவருடைய  மதிப்புக்குரிய ரஞ்சனி அம்மா!..

அவர்களுடைய வலைத்தளத்திற்குள் சென்று விட்டால் அத்தனையும் சுவையோ சுவை!.. திரும்பி வருவதற்குத் தோன்றவே இல்லை..

திருவரங்கத்திலிருந்தும் நமக்கு பல தகவல்களை வாரி வழங்குகின்றார்கள்.

எந்த ஒரு எண்ணத்திற்கும்  - மறு எண்ணம் யாருக்கும் இருக்கும் தானே!.. இவர்களுக்கும் இருக்கின்றது.

தவிரவும்,  நான்கு பெண்கள் சேர்ந்தால்  - என்னவெல்லாம் செய்யலாம்?.. முக்கியமாக ஊர்க்கதை பேசலாம்!.. சொல்லலாம்!.. அதைச் செவ்வனே செய்திருப்பதைப் பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கின்றது.

பெண்கள் உலகின் கண்கள் என்பர். (ஆனால் - கண்களைப் பெண்கள் என்கிறார்களோ!?...) அப்படியாகப்பட்ட - பெண்களும் (!)   கண்களும் காக்கப்பட  வேண்டியது அவசியம் அல்லவா!.. அதற்கான அருமையான குறிப்புகள்!.

இசைப்பா எனும் தமிழ் இசைப் பாடல்களின் தளத்தில் சுட்டும் விழிச்சுடர் தான் கண்ணம்மா என்று மகாகவியின் பாடல் விமரிசனமும் காணக் கிடைக்கின்றது.

செந்நெற்களஞ்சியம் என்பார்கள் - தஞ்சையை!.. செஞ்சொற்களஞ்சியம் என்று தாராளமாக சொல்லலாம் - இவர்களுடைய தளத்தை. . 

அத்தனையும் மனிதத்திற்கு அத்யாவசியமான விஷயங்கள்..
அவர்களை நான் அறிமுகப்படுத்துவதாக இல்லை!..
அவர்களிடம் - என்னை அறிமுகப்படுத்திக் கொள்கின்றேன்!..

>>>>> <<<<<

பார்வதி ராமச்சந்திரன் - இவரது தளத்தில் -
சிவநாமம் சிந்தனையில் என்றும்
கும்புடுறோம் மாரியம்மா.. என்றும் முத்து முத்தாய் பாடல்கள்.
படித்ததில் பிடித்தது என்று நல்ல நீதிக் கதைகள் - நிறைந்திருக்கின்றன.
நல்லதை நினைத்து நாளும் உயர்வோம்.. எனும் முத்திரையுடன் இவரது தளம்.

>>>>> <<<<<

அம்பாளடியாள் - கவிதாயினி. இவரது கவிதைகளில் கோபம் கொந்தளித்துக் குமுறும். அதே சமயம் மனித நேயமும் மல்லிகையாய் மலரும். தமிழை அலங்கரிக்கும் இவரது தளத்திலிருந்து -

வேரொடு பகைக்கும் நிலை வரினும்
வரம் வேண்டியே தொழுவேன் உனை நானே!..

ஏழைகள் வயிற்றைக் குளிர வைத்தால்
தங்கும் மங்களம் எந்நாளும்

கற்றவர் விரும்பும் கனி எங்கள் மொழியைக்
கற்றிட கற்றிட இன்பம் பொங்கும் !..

>>>>> <<<<<

ஸ்ரவாணி  -  இனிய கவிதைகள், நலந்தரும் குறிப்புகள், யுவதி பக்கங்கள் - என பன்முகம். தளத்தினுள் என்ன இருக்கின்றது என்று போனால் ,
கிடைத்தது - சுடச்சுட அருமையான புதினா பரோட்டா .
 
புகைப் பழக்கத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டு
வேலையை இழந்த நண்பருக்காக உருகும் - மஞ்சுபாஷிணி. தன் வீட்டில் நடந்த உண்மைச் சம்பவம் ஒன்றினை  விவரிக்கின்றார் - இறைவன் நம்முள் இருக்கிறார். ஷீரடி சாய்நாதர் துணையிருக்கின்றார்.   என்ற நம்பிக்கையுடன்!..

 >>>>> <<<<<

ஸாதிகா - இவரும் அதே நம்பிக்கையுடன் கூறுகின்றார்.
அல்லாஹ் ஒருபோதும் கைவிட மாட்டான்!... -

அல்பத்தையும் மகா அல்பத்தையும் பட்டியல் இடுகின்றார். இலங்கையின் இனிப்பு வகைகளுள் ஒன்றான தொதல் - பற்றியும் பதிவிட்டுள்ளார். 

என் நண்பர் திரு. இஸ்மாயில் அவர்கள் - இலங்கை சென்று வரும் போதெல்லாம் கொண்டு வரும் இனிப்பு தொதல். 

இனி அவரது அன்புடன் கலந்த தொதல் எப்போது கிடைக்கும்?.. கிடைக்காது.
ஏனெனில் திரு. இஸ்மாயில் இறைவன் திருவடிகளில் கலந்து விட்டார்.

>>>>> <<<<<

நிழல்கள் எப்போதும் நிஜத்தைக் காட்டுவதில்லை என்கின்றார் இளமதி. ஆனால் இவர் தம் - க்விலிங் கைவேலையில் நிஜம் என உருவாகின்றன அழகிய பழங்களும், மலர்களும். இவை மட்டும் தான் என்றில்லை -

இனிய கவிதைகளை வரைவதிலும் தனித்துவம் மிக்கவர். இதனுடன் -
தனது வலைப்பதிவின் தோழர்களில் ஒருவரை இனிமையுடன் அறிமுகமும் செய்து வைக்கின்றார் என்றால் அவரைப் பற்றி சந்தோஷப்படவேண்டும்.

>>>>> <<<<<

இனியா - இவரது தளம் காவியகவி .வண்ணமயமான தளம்.
ஆத்தா மகமாயி அன்பு செய்ய வருவாய் நீ
திருவாய் உருவாய் திகழ்ந்தாரே அன்னை மரியாள் மடியில் தவழ்ந்தாரே
சாயி என்பது மந்திரமே செய்திடும் பற்பல அற்புதமே
கனிந்து வரும் நாளும் வெகுதூரம் இல்லை.
சின்னச் சின்ன மணிகளால் , மலர்களால் பெரிய மாலைகளைக் கட்டுவதை போல இருக்கின்றது - இவரது கைவண்ணம்.

>>>>> <<<<<

ஒரு காலமிருந்தது - மகனே!.. அது நாங்களெல்லோரும்
அன்பில் திளைத்திருந்த காலம்.
- என்று கவிதைக்குள் கதை  சொல்பவர்  - தீபிகா.

விதைத்த பயிரை  அறுவடைக்கு முன்னே
தொலைத்து வந்திருக்கிறவர்கள்.
- என்று ஆழ்ந்த  சோகத்தைப் பிரதிபலிக்கும் அழுத்தமான வரிகள் நம் நெஞ்சை அறுக்கவில்லையா?..

ஒரு குடிகாரனின் அவலத்தால் - அவனது மகள்களின் முகங்கள் வெட்கத்தாலும் அவமானத்தாலும் வீங்கிக் கிடப்பதைக் காட்டும் போது - கண்ணீர் சுரக்கின்றது.
கலங்க வேண்டாம் காலமும்  காட்சியும் ஒருநாள் மாறும்.

>>>>> <<<<<

பூங்குழலி - மருத்துவரான இவருடைய பக்கங்கள் பலவிஷயங்களைப் பேசுகின்றன.


கொழந்த பிறக்குறதுக்கு முன்னால பேசியே என்னைய கொன்னுருவாங்க, வேண்டாம் மேடம்.. - என்று  இளம் தாய் சிந்தும் கண்ணீர் - காலத்தின் கொடுமையைக் காட்டுகின்றது. 

எச்,ஐ.வி.பாதிக்கப்பட்டு வரும் ஒருவருக்கு தேவை சிகிச்சையும் , 
நலம்  பெறுவோம் என்ற நம்பிக்கையுமே ! 

சிகிச்சை அளிப்பவர்களுக்கு தேவை நோய் குறித்த  அறிதலும்  மனிதநேயமும் மட்டுமே!.. - என்று மனித நேயத்தை  முன் வைக்கின்ற அவருக்கு  நன்றி  சொல்வோம். 

இவர் மேலும்  எம்.ஜி.ஆர்.பாடல்கள்நோய் முதல் நாடி   And I Wrote
எனும் தளங்களையும் கொண்டுள்ளார்.

அன்பு நண்பர்களே!.. மேலும் தளங்களுடன் -  
நாளை சந்திக்கும் வரை நமது சிந்தனைக்கு,

 
இன்று இந்த அளவுடன் உங்களிடம் விடை பெற்றுக் கொள்கின்றேன்.  வணக்கம். 
மேலும் வாசிக்க...

Thursday, December 19, 2013

மார்கழிப் பனியில் - வியாழன்

எழில் மலர்


அனைவருக்கும்  வணக்கம். 

நேற்று மூன்றாவது பதிவில்  - வருகை தந்து கருத்துரையை பதிவு செய்து  பாராட்டி மகிழ்ந்த - மகிழ்வித்த,   நண்பர்கள் அனைவருக்கும்  மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

வலைச்சரத்தில் நான்காம் நாளாகிய இன்றும் -  முதலில் ஆலய தரிசனம் செய்வோம். 

வருக - நண்பர்களே!..

நல்லனவற்றைச்  சிந்திப்பது பெரிய விஷயம்.  அதை அப்படியே வெளியில் சொல்வது மிகப் பெரிய விஷயம். அப்படிச் சொல்வதற்கு தடங்கல் இல்லாமல் ஆனது - இந்த தலைமுறையில் உள்ள நல்லவர்களுக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய வரப்பிரசாதம்!..

பின்னே!.. எண்ணங்களை இயல்பாக வெளியிட எளிதாகக் கிடைத்திருப்பது  - இதைப் போன்ற வலைப்பூ வசதி அல்லவா!..

இதை மிகச் சரியாக கையாளும் அனைவரையும்  அடையாளம் காண்பது மிகவும் கடினம்.

எனினும் கைக்கெட்டியவரை கிடைத்த தளங்களில் அவர்களின் பங்களிப்பு!.. இதோ!..

தூய துறவறம் கொண்டு பரிவினாலும் பண்பினாலும் மனித நேயத்தினாலும் - கண்முன் வாழ்ந்து - இன்னும் நம் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்றிருப்பவர் காஞ்சி ஸ்ரீஸ்ரீஸ்ரீ பரமாச்சார்ய ஸ்வாமி அவர்கள்.

காஞ்சி பரமாச்சார்ய ஸ்வாமிகள் வழங்கிய  அறிவுரைகளையும்
குல தெய்வ வழிபாடு பற்றி காஞ்சி மகான் அளித்த விளக்கமும்
அந்த காலகட்டத்தில் நடந்த உண்மை நிகழ்வுகளையும் 
பல இடங்களில் இருந்தும் திரட்டி,  தனது தளத்தில் சிறப்பாகப் பதிவிட்டு வருபவர்  - வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள்.

  = = = > > > < < <  = = = 

அடுத்து ஐயா புலவர் ராமாநுசம் அவர்கள்.
வாய் நொந்து போகும்வரை எடுத்துச் சொன்னோம் - ஆனால்
வடநாடு கேட்டதா பலன் தான் என்ன?.. - என்று குமுறுகின்றார்.

முயலா விட்டால் ஏமாற்றம் - எனவும் -
வளங்காணக் கடன்பட்டு வருந்த வேண்டாம் - எனவும்
ஐயா அவர்கள் வழங்கும் அறிவுரை எந்த காலத்திற்கும் ஏற்புடையது.

   = = = > > > < < <  = = =

உள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தையில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்  - என்ற தத்துவத்துடன் - GMB Writes எனும் தளத்தில் கவிதை கட்டுரை என கலகலப்புடன் இருப்பவர் ஐயா GMB அவர்கள்.

 குறட்டை விட்டோரெல்லாம் கோட்டை விட்டார் - என்று பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதியிருப்பார். அந்தக் குறட்டையைப் பற்றி!..
                                                                                                
மயிலின் படங்கள் சிலவற்றை வெளியிட்டு, அதற்கு பொருத்தமாக
கவிதை எழுதலாமே என்று சக தோழர்களை  அழைத்துள்ளார்கள். (நானும் ஒரு கவிதை எழுதி இருக்கின்றேன்..ல)

மேலும் அன்பு எனப்படுவது யாது?. என்று ஒரு ஆய்விலும் தீவிரமாக இருக்கின்றார்கள்.

எனவே மயில் பாட்டு விஷயம் அறிந்தவர்கள் விவரத்தைக் கூறி செண்பகப் பாண்டியனிடம் பரிசினைப் பெற்றுச் செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. எனவே மண்டபத்தில் யாரிடமாவது பாட்டை எழுதி வாங்காமல் செல்லவும்.
  = = = > > > < < <  = = =

தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும் உயரிய வாசகத்தையே - வலைத் தளத்தின் தலைப்பாகக் கொண்டு, அன்பின் ரமணி.S.   அவர்கள்

அயர்வது இன்றி நாளும் தொடர்ந்து நீ முயன்றால் போதும்!.. - என்று நமது வெற்றிக்கு வித்திடுகின்றார்.

குஞ்சு வளர்வதற்குத் தேவையான முட்டை மூடிய ஓடு போல -
ஆத்திகமும் தேவையென்பதுவும் சரிதானோ?.. என்று கேட்பது நியாயமாகப் படுகின்றது.
  = = = > > > < < <  = = = 
மற்ற ( வலைச்சர!?.. ) ஆசிரியர்களைப் போல அல்லாமல் - 
கடுமையான ஆசிரியன் - யாரைச் சொல்கின்றார் !?..
நம்முடைய கவிதை வீதி செளந்தர் அவர்கள் தான்!..

  = = = > > > < < <  = = = 

கடமை துறக்கச் சொன்ன கடவுள் உண்டா மகனே!..
அருமையான - இந்த  வரிகளுக்குச் சொந்தக்காரர் - கவியாழி.
பெற்றோர் கடமை மறந்து போதையில் வாழ்தல் முறையா?.. என இடித்து உரைக்கின்றார்.

முறையாய் சொல்லாத கல்வியால் - எல்லாம் தலைகீழ் - என்ற ஆதங்கமும்,
மரத்தை பிழைக்க வைக்க நீயும் வா  - என - மழையை அழைப்பதும் மனதைக் கவர்கின்றன.
  = = = > > > < < <  = = = 

அவர்களிடம் நீங்களாகவே இருங்கள்!.. - 
யாரிடம்!.. எதற்காக?... என்ற கேள்விக்கு  - எழுதிய பதிவின்
நடுவில் எங்கேயோ இருக்கிறது விடை.
மறுபடி முதலிலிருந்து படித்துப் பாருங்கள். 
இப்படிச் சொல்பவர் அன்பின் அப்பாதுரை அவர்கள். பதிவின் இறுதியில் உள்ள பின்னூட்டம் நல்லதொரு விவாதக் களம். விவாத மேடையில் பெரிய பெரிய ஜாம்பவான்களை சந்திக்கலாம்.

மீன் பிடிப்பது லாபமா?. தூண்டில் விற்பது லாபமா?. விவரங்களுக்குக் காண்க -
விண்வெளிச் சாகுபடியில்
= = = > > > < < <  = = =  

அன்பு நண்பர்களே!.. மேலும் தளங்களுடன் - 
நாளை சந்திக்கும் வரை நமது சிந்தனைக்கு,
 
இன்று இந்த அளவுடன் உங்களிடம் விடை பெற்றுக் கொள்கின்றேன்.  வணக்கம்.
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது