வலைச்சரத்தில் ஜீஎம்பி-யின் 2-ம் நாள்
--------------------------------------------------------
இரண்டாம் நாள்
வலைச்சர ஆசிரியர் பொறுப்பிலேயே கடினமான வேலை இதுதான் என்று
எண்ணுகிறேன் பதிவர்களை அறிமுகப் படுத்துதல் என்பதே சரியில்லையோ. அப்படி
வலைச்சரத்தில் அறிமுகமாகும் பல பதிவர்களும் பெயர் பெற்றவர்களே,இருந்தாலும்
அவர்களையும் படிக்காத சிலரும் இருக்கலாம் அவர்களுக்காக என்று எடுத்துக் கொள்ளலாம்
நானும் பதிவர்கள் சிலரை வகைப் படுத்தி அவர்கள் பற்றி எழுத முடிவு செய்துள்ளேன்
அன்பே சிவம் என்னும் கொள்கை உடையவன் நான் அந்த அன்பு பற்றி
சென்னைப் பித்தன் அவர்கள் எழுதி இருப்பது ரசிக்க வைத்தது ”புலியின்மீசை” என்ற
கதையோடு அது பற்றி ஓர் விளக்கம்
வே.நடன சபாபதி எப்போதும் மக்கள் விழிப்புணர்வோடு இருக்க
வேண்டும் என்றும் எப்படி எல்லாம் ஏமாற்றப்படுகிறோம், ஏமாற்றுகிறார்கள் என்பது
குறித்துத் தொடராக எழுதி வருகிறார் எந்தப்பதிவைப் படித்தாலும் சுவாரசியமாகவும்
கவனத்தை ஈர்ப்பதாகவும் இருக்கும் சாம்பிளுக்கு ஒன்று
.இவரது பல்வேறு பரிமாணங்கள் இன்னும் சரியாக வெளிச்சத்துக்கு வரவில்லை என்று
நினைக்கிறேன் ஓவியம் தீட்டுவதில் வல்லவர். தமிழை ஆங்கிலக் கலப்பில்லாமல்
எழுதுபவர்.
தி தமிழ் இளங்கோவை நான் திருச்சியில் ஒருமுறையும் மதுரை
பதிவர் விழாவிலும் சந்தித்தேன் சில நேரங்களில் நான் எழுதுவது அவருக்குப்
பிடிக்கவில்லை என்று தெரியும் . அதுவும் என் சில தீவிரக் கருத்துக்களில் அவருக்கு
உடன்பாடு இல்லை என்றும் தெரியும் அவரவருக்கான ஸ்பேஸ் என்று எண்ணத்தில் கண்டுகொள்ள
மாட்டார். இவர் இன்ன மாதிரிப் பதிவுதான் எழுதுவார் என்று சொல்ல முடியாது. சில
பதிவுகள் அவுட் ஆஃப் த வேர்ல்ட் ஆக இருக்கும் . சைவ சித்தாந்தக் கருத்துக்களில்
ஈடு பாடுடையவர் என்று தெரிகிறது. சில நேரங்களில் என் எழுத்துக்கள் இன்னாரது
எழுத்துப் போல் இருக்கிறது என்றும் பின்னூட்டமிடுவார். திரைப் பாடல்கள் நடிகர்கள்
என்று இவர் ரசிக்கும் விஷயங்கள் பல. அண்மையில் நடிகர் எஸ்வி,ரங்கராவ் பற்றி எழுதி இருந்தார். நீங்களும் பாருங்களேன்
டி பி ஆர் ஜோசப் என்னுலகம் என்னும் தளத்தில் எழுதுகிறார்.
அண்மையில் இவரது பதிவுகள் வருவது குறைந்து விட்டது ஆனால் இவர் எழுதி வந்த சொந்த
செலவில் சூனியம் என்னும் க்ரைம் தொடர் போல் நான் இதுவரைப் படித்ததில்லை.
காவல்நிலைய சங்கதிகள் நீதிமன்ற நிகழ்வுகள் போன்றவை பாடமாக இருக்கும் வெகு
நீளமானதொடர். இருந்தாலும் விடாமல் படிக்கத் தூண்டும் கதையும் எழுத்தும் அது
மட்டுமல்ல பொருளாதார விஷயங்களும் இவருக்கு அத்துப்படி தொடரின் ஆரம்பச் சுட்டியைத்
தருகிறேன். இவரது பின்னூட்டங்களை ஆங்காங்கு நான் கண்டாலும் இவர் தொடர்ந்து எழுத
வேண்டும் என்று நினைக்கிறேன் சென்னை வாசியான இவரை சந்திக்கவும் ஆசை “க்ரைம் தொடர்“
மைத்துளிகள் என்னும் தளத்தில் எழுதும் மாதங்கி மாலி ஒரு
வித்தியாசமான பெண்மணி. முதலில் என் பதிவு ஒன்றுக்கு அவர் எழுதி இருந்த பின்னூட்டம்
என்னை அவர்பால் ஈர்த்தது கோவில்களில் கருவறைகளில் நாம் காணும் கடவுளின் உருவச்
சிலை தெரியாத அளவுக்கு வெளிச்சம் இல்லாமலிருப்பதால் கடவுளின் உருவத்தை மனதில்
பதிக்க முடிவதில்லை என்பது போல் ஒரு பதிவில் எழுதி இருந்தேன் உருவமில்லாத கடவுளைத்
தரிசிக்க வெளிச்சம் எதற்கு. உள்ளம் வெளிச்சமாக இருந்தால் போதாதா
என்கிற மாதிரியான பின்னூட்டம் பிற்குதான் தெரிந்து கொண்டேன்
இருபதுகளில் இருக்கும் இள மாது என்று. இவரையும் இவரது தந்தை மஹாலிங்கத்தையும்
சென்னையில் இரு முறை சந்தித்து இருக்கிறேன்
இரு முறையும் சிரமம் பார்க்காமல் என்னைக் காண வந்திருந்தார்கள் இவரது
சிந்தனைகளின் போக்கே புரிபடாதபடி சிலநேரங்களில் எழுதுவார். ஒரு முறை நான் அப்ஸ்ட்ராக்டாக
எழுதாமல் புரியும் படி எழுதலாமே என்று பின்னூட்டமிட்டிருந்தேன் அது அவருக்கு
உடன்பாடில்லை என்னும் விதத்தில் கோபமாக மறு மொழி எழுதி இருந்தார் ஹைலி
இண்டிபெண்டண்ட் மைண்ட். அவரது ” சாரல் “ என்னும் பதிவையும் படியுங்கள் புரியும்
என்ன நண்பர்களே நான் பதிவர்களை வகைப்படுத்தி இருப்பதன் பேஸ்(base)
புரிகிறதா இவர்கள் வங்கிப் பின்னணி கொண்டவர்கள்.நான் கொடுத்திருக்கும் சுட்டிகளில் உள்ள பதிவுகள் மாதிரிக்கே. இன்னும் அதிக விஸ்தீரணம் உள்ளவர்கள் மீண்டும் நாளை சந்திப்போம்
மேலும் வாசிக்க...
ஜீஎம்பி-யின் வலைச்சரத்தில் முதல் நாள்
-------------------------------------------------------------
 |
| 25-ல் ஜீஎம்பி |
இந்த ஒரு வாரம் ஆசிரியர்
பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் நான் முதற்கண் வலைச்சர வாசகர்களுக்கு என்
வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்
ஏறத்தாழ
ஐந்து ஆண்டுகளாக வலைப்பூவில் எழுதி வருகிறேன் பல பதிவர்களுக்கும் ஓரளவு
பரிச்சயமானவன் பல முறை வலைச் சரத்தில் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளேன்.அறுநூறுக்கும்
அதிகமான பதிவுகள் எழுதி இருக்கிறேன் பெயர் ஜீ.எம். பால சுப்பிரமணியம் வயது தற்போது
77 நடந்து கொண்டு அல்லது ஓடிக் கொண்டு இருக்கிறது.ஊரறிந்த பார்ப்பானுக்குப் பூணூல்
எதற்கு என்னும் சொல் வழக்கு ஒன்றுண்டு. இருந்தாலும் சில நடை முறைகளைப் பின்
பற்றவேண்டியே என்னை பற்றிய இந்த அறிமுகம்
இது வரை யாரும் வலைச்சர ஆசிரியர்ப் பொறுப்பை
ஏற்கிறாயா என்று கேட்டதில்லை அதற்கு ஏதோ பிரத்தியேகத் தகுதி வேண்டும் போல்
இருக்கிறது என்று இருந்துவிட்டேன் நானாக ஆசிரியர் பொறுப்பை ஏற்பதாக கேட்கவும் இல்லை வேண்டவும் இல்லை.இந்நிலையில் சில
வாரங்கள் வலைச்சரம் எந்த ஆசிரியர் பொறுப்பிலும் வரவில்லை என்று நினைக்கிறேன்
நானும் வலைச்சரத்தைத் தொடர்ந்து படித்ததில்லை.ஒரு முறை திரு தி இளங்கோ அவர்களது
பதிவு ஒன்றுக்கு பின்னூட்டமாகவலைச்சர ஆசிரியர் ஆக ஏதாவது தகுதி உண்டா என்று கேட்டு
எழுதிய நினைவு அவரது மறு மொழியில் பிரத்தியேகத் தகுதி என்று ஏதுமில்லை என்றும்
வரும் பின்னூட்டங்களுக்கு மறுமொழி எழுத வேண்டும் என்றும் அது கட்டாயமில்லை என்றும்
கூறி அவர் பதிவில் எழுதி இருந்த சில சுட்டிகளைப் படித்துத் தெரிந்து கொள்ளுமாறும்
எழுதி இருந்தார் அப்படிப் படிக்கும் போது நண்பர் தமிழ் வாசிப் பிரகாஷ் ஒரு
கேள்விக்குப் பதிலாக இவ்வாறு கூறி இருந்தார்
ஒரு
வாரத்திற்கு வலைச்சரத்தில் ஆசிரியராக பணியாற்ற எதன் அடிப்படையில் பதிவர்களை
தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று அறிந்து கொள்ளலாமா?
குறிப்பிட்டுச் சொல்லும்
படியாக விதி முறைகள் இல்லை. எல்லோருடைய இடுகைகளையும் படித்துக் கொண்டே போகும் போது, இவர் ஆசிரியப் பொறுப்பேற்க
தகுதியானவர் என மனதில் படும் பொழுது அவரை அழைத்து
விடுவோம். அவ்வளவுதான்.”
அதை படித்தபோது எனக்குப் பொறுப்பேற்க தகுதி இருக்கிறது
என்று ஆசிரியர் குழு இதுவரை எண்ணவில்லை என்று நினைத்துக் கொண்டேன் மேலும் இந்தப்
பொறுப்பினைக் கொடுத்தால் என்னால் செவ்வனே செயல் பட
முடியுமா என்றும் கேள்வி என்னுள்
எழுந்தது இந்த நிலையில் எனக்கு ஆசிரியர் பொறுப்பேற்க விருப்பமா என்று கேட்டுக் குழல்
இன்னிசை தள யாதவன் நம்பி புதுவை வேலு மின்
அஞ்சல் அனுப்பி இருந்தார் அவர் வலைச்சரம் நிர்வாகக் குழுவில் ஒருவர் என்று
அறிந்தேன் இதுதான் நான் ஆசிரியர் பொறுப்பேற்க வந்த கதை.
முதல் நாள் என் பதிவுகள் சிலவற்றைப் பகிர்ந்து
கொள்ள அனுமதி இருப்பதால் கொஞ்சம் சுய தம்பட்டம்
நான் எழுதிய சில பதிவுகளை என்னாலேயே மறுமுறை எழுத
முடியுமா என்னும் சந்தேகம் உள்ளது.அப்பேற்பட்ட பதிவுகளில் ஒன்று நான் எழுதி இருந்த
ஒரே வாக்கியத்தில் ஆறு காண்டங்களுடனும் அமைந்திருந்த “சாதாரணன்ராமாயண்ம் “படித்துப் பாருங்களேன்
இப்போது வயது 77 ஆனாலும் நானும் இளஞனாக இருந்தவன்
தானே. சீனுவின் திடங்கொண்டு போராடு ”எழுத நினைத்த காதல் கடிதம்” போட்டி அறிவித்திருந்தபோது
எழுதியது. போட்டிக்கு அனுப்பாதது. காதல் சொட்டும் கடிதத்தை நீங்களும் படியுங்களேன்
ஆன்மீகத்தில் ஈடுபாடு கிடையாது. இருந்தாலும் நேரம் கிடைக்கும்
போது அது பற்றிப் படித்துத் தெரிந்து கொள்வேன் அப்படிப் பட்ட நேரத்தில் என்
சிந்தையில் உதித்த பதிவு “ஜீவாத்மாவும் பரமாத்மாவும் “
அது பற்றிய ஒரு வித்தியாச அணுகல்
இவை சில சாம்பிள்களே. ஆர்வமுள்ளவர்கள் என் பதிவுகளைத்
தொடர்ந்து படிப்பார்கள் என்று நம்பிக்கையில்
இன்னும் எழுதிக் கொண்டு போனால் ஒருவேளை தடை விதிக்கப்
படலாம் இனி வரும் நாட்களில் பிற பதிவர்களை
எனக்குத் தெரிந்தவரை அறிமுகப் படுத்துவேன்
 |
| 75-ல் ஜீஎம்பி |
மேலும் வாசிக்க...
அன்பின் சக பதிவர்களே !
இன்றுடன் இனிதே முடிவுறும்
வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்று பல பதிவர்களையும் அவர்களது பதிவுகளையும்
அறிமுகப்படுத்திய வலையுலக நண்பர் கார்த்திக் சரவணன், ஸ்கூல் பையன்
அவர்களை பாராட்டி வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
அவர்
தனது வலைச்சர வாரத்தில் மனதைத் தொட்ட பல பதிவர்களின் இடுகைகள் பலவற்றை
நமக்கெல்லாம் பகிர்ந்தளித்து சுமார் 135 மறுமொழிகளும், 53 தமிழ் மணம்
வாக்குகளையும் 1500 மேற்பட்ட பக்கப்பார்வைகளும் பெற்றுள்ளார்.
தனது
வலைச்சர வாரத்தை அழகாக தொடுத்த நண்பர் கார்த்திக் சரவணன், ஸ்கூல் பையன்,
அவர்களை வாழ்த்தி வழியனுப்புவதில் வலைச்சரக் குழு பெருமகிழ்ச்சியடைகிறது.
நாளை
முதல் துவங்கும் வாரத்திற்கு வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்க தற்போது
பெங்களூரில் வசிக்கும் மூத்த பதிவாளர் திரு G.M.பாலசுப்பிரமணியம் அவர்கள்
அன்புடன் இசைந்துள்ளார். இவரது வலைப்பூ
"gmb writes" என்பதாகும்.
சுமார்
5 ஆண்டுகள் வலைப் பூவில் எழுதி வருகிறார். திருமணம் ஆகி 50 ஆண்டுகள் ஆகி
இனிதே வாழ்வினை பிறர் போற்றும்படி வாழ்ந்து வரும் அய்யா G.M.B அவர்களுக்கு
2 மகன்கள் உள்ளனர்.
"உள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜெயிக்கும்"
-என்கிற இவரது உன்னதமான உயிர்ச் சொற்களைப் போலவே இவரது பதிவுகளும், அறிமுகங்களும் சிறந்து விளங்க வாழ்த்துகிறோம்.
G.M.பாலசுப்பிரமணியம்
அவர்களை இந்த வாரம் வலைச்சர ஆசிரியர் பொறுப்பில் அமர்த்தி "வருக....
வருக.." என வாழ்த்தி வரவேற்பதில் வலைச்சரக்குழு பெருமகிழ்ச்சியடைகிறது.
நல்வாழ்த்துக்கள் நண்பர் கார்த்திக் சரவணன், ஸ்கூல் பையன்
நல்வாழ்த்துக்கள் மூத்த பதிவாளர் திரு G.M.பாலசுப்பிரமணியம்
நட்புடன்,
புதுவை வேலு
மேலும் வாசிக்க...
இரண்டு வாரங்கள் தொடர்ந்து எழுதலாம் என்று எண்ணியிருந்தேன். அதனால் தான் ஒரு நாளைக்கு நான்கு ஐந்து என குறைவான பதிவர்களை மட்டும் அறிமுகப்படுத்தினேன். நேற்றைக்குத்தான் தமிழ்வாசியிடம் கேட்டேன், இன்னொரு வாரம் எழுத அனுமதிக்க முடியுமா என்று. ஆனால் அடுத்த வாரத்துக்கான பதிவருக்கு அழைப்பு விடுத்தாயிற்றென்று கூறிவிட்டார். அதை விட அருமை அடுத்த ஆசிரியரின் ஏழு பதிவுகள் டிராப்டில் இருக்கின்றன. முதல் பதிவே அட்டகாசம்.
இன்றைய அறிமுகங்கள்:
பதிவர்
ஜெய்லானி நூற்றுக்கும் மேற்பட்ட பதிவுகளை எழுதியிருக்கிறார். மூன்று வருடங்களுக்கு முன்பு. இப்போது எழுதுவதில்லை. சுவாரஸ்யமாக பதிவுகளை எழுதியவர் இப்போது ஏன் எழுதவில்லையென்று தெரியவில்லை. மீண்டும் எழுதுங்கள் சார்.
கடைசிப் பதிவு -
காய்கறி
ஸ்பெஷல் ஜூஸ்
பாண்டியன் பக்கங்கள் என்னும் தளத்தில் எழுதும் நண்பர் பாண்டியராஜ் இலக்கியங்கள் அதிகம் படித்திருக்கவேண்டும். அவருடைய எழுத்து நடையிலேயே தெரிகிறது.
பதாகை பக்கிரிகள் என்னும் பதிவு என்னை ஈர்த்தது.
பொறியியலில் எந்தப் படிப்பு சிறந்தது? என்னும் பதிவு நம்மையும் யோசிக்க வைக்கிறது. நன்றாக எழுதக்கூடிய இவருடைய தளத்தில் பக்கப் பார்வைகள் குறைவாகவே இருக்கின்றது. நாம் தான் உற்சாகப் படுத்த வேண்டும்.
உங்களுக்கு
சேக்காளி என்றொரு பதிவர் இருப்பது தெரியுமா? எனக்குத் தெரியாது. இவருடைய பின்னூட்டங்களைப் பார்த்திருக்கிறேன். பலருடைய பதிவுகளையும் படிப்பவர். நீங்கள் ஏதாவது தளத்தில் நல்ல பின்னூட்டம் இட்டிருந்தால் அங்கே ஒரு 'டிக்' போட்டுவிட்டுப் போவார். இவருடைய பதிவுகள்:
நொந்த நூடுல்ஸ்
டச் ஸ்கின்
ஜே தா என்னும் பதிவர் இலங்கையைச் சேர்ந்தவர். பள்ளி ஆசிரியர். இவரது மாணவர்கள் சேர்ந்து எடுத்த குறும்படத்தைப் பற்றி சிலாகித்துச் சொல்கிறார்:
இப்பிடி நடக்கும்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல்ல
உண்மையாயிருத்தல்
சென்னையைச் சேர்ந்த உதயகுமார் என்பவர் முகநூலில் எனக்கு நண்பர். ஓரிரு முறை போனில் பேசியிருக்கிறேன். இவர் பதிவர் என்பது இப்போது தான் தெரியும். இவர் எழுதிய பதிவுகள்:
காற்று - புரட்சி
குடும்பத் தலைவிகளின் குமுறல்
ஓரளவுக்கு அதிகம் அறியப்படாத பதிவர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். மீண்டும் வலைச்சர ஆசிரியர் பொறுப்பு கிடைத்தால் இன்னும் நிறைய பேரை அறிமுகப்படுத்துகிறேன்.
நன்றி.
மேலும் வாசிக்க...
நண்பர் ஒருவர் நேற்று போன் செய்திருந்தார். வலைச்சரம் எழுதறீங்க, வந்து கருத்து சொல்றவங்களுக்கு ஒரு நன்றி சொல்லலாமே என்றார். சொல்லலாம் தான், நேரமில்லை என்றேன். கஷ்டப்பட்டு நேரம் செலவழிச்சு பதிவர்களை அறிமுகப்படுத்தறீங்க, உங்களை மதிச்சு இங்க வந்து கமென்ட் போடுறவங்களுக்கு என்ன மரியாதை என்றார். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவருக்குத் தெரியும், நான் என்ன வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறேன் என்று. இருந்தாலும் அவர் கேட்டது நியாயமான கேள்வி தான். பின்னூட்டங்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் தான், ஆனால் நன்றியையே பலவிதமாகச் சொல்லவேண்டுமே.
இங்கே வரும் பின்னூட்டங்களை கவனிக்காமலில்லை. கைபேசியில் உடனுக்குடன் பார்த்துவிடுகிறேன். எந்தெந்தப் பதிவுக்கு யார் என்ன பின்னூட்டம் எழுதியிருக்கிறார்கள் என்று என்னால் தூக்கத்திலிருந்து எழுந்து கூட சொல்ல முடியும். பின்னூட்டங்களைப் பதிவு செய்யுங்கள். பதில் சொல்லவில்லை என்பதற்காக கோபித்துக்கொள்ள வேண்டாம்.
--------------
தொடர்ந்து எழுதுபவர்களில் மேலும் சில முக்கிய பதிவர்களைப் பார்க்கலாம்.
பதிவர் புதுவை வேலு அவர்கள்
குழல் இன்னிசை என்னும் வலைப்பூவில் எழுதிவருகிறார். நிறைய பதிவர்களுக்கு இவரைத் தெரிந்திருக்கும். கிட்டத்தட்ட எல்லா வலைப்பூக்களிலும் இவரது பின்னூட்டங்களைக் காணலாம். இவருடைய பதிவுகள் சில:
கூட்டாஞ்சோறு என்னும் வலைப்பூவில் எழுதி வரும் செந்தில் குமார் தெரியாத நிறைய விஷயங்களைத் தொகுத்துத் தருகிறார். சமீபத்தில் தான் அவரது வலைப்பூவைப் பார்த்திருந்தேன். குறுகிய காலத்துக்குள் நூறு பதிவுக்கும் மேல் எழுதிவிட்டார். இன்னதென்றில்லாமல் அனைத்து பதிவுகளையுமே சுவாரஸ்யமாகத் தந்திருக்கிறார்.
பரதேசி @ நியூயார்க் என்னும் வலைப்பூவில் எழுதி வரும் ஆல்பி அவர்கள் பதிவை சுவாரஸ்யமாக எழுதுவதில் வல்லவர். கூர்ந்து கவனித்தால் தெரியும் - கொஞ்சம் மெல்லிய நகைச்சுவை இழையோடும் இவரது பதிவுகளில். இசையும் அனுபவப் பதிவுகளும் வெகு சுவாரஸ்யம்.
எண்ணங்கள் என்னும் வலைப்பூவில் எழுதிவரும் கீதா சாம்பசிவம் அவர்களைப் பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அனுபவங்களை ரசனையுடன் சொல்வது அவரது இயல்பு. எப்போதுமே உற்சாகமாக எழுதுவது எப்படி என்று இவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
புத்தம் புதிய பதிவர்
வற்றா நதி படித்திருக்கிறீர்களா? அந்தப் புத்தகத்தின் ஆசிரியர் தான்
கார்த்திக் புகழேந்தி. மிகப் பெரிய ஆளெல்லாம் இல்லை, சின்ன வயசு தான். மாதம் இரண்டு மூன்று பதிவுகள் மட்டுமே எழுதினாலும் ஒவ்வொன்றும் மண் மணம் மணக்கும் மணி முத்துக்கள். இவரது தளத்தில் இணைந்திடுங்கள், தொடர்ந்து வாசியுங்கள்.
மீண்டும் நாளை சந்திப்போம்.
மேலும் வாசிக்க...