Monday, February 26, 2007

வலைப்பூ ➜ வலைச்சரம்

தமிழ் வலைப்பதிவுகளின் ஆரம்பக் காலத்தில் வலைப்பதிவுகளின் பட்டியலை உருவாக்கி தமிழ் வலைப் பதிவாளர்களை ஒருங்கிணைத்த சந்திரமதி கந்தசாமி இன்னொரு அற்புதமான முயற்சியையும் செய்திருந்தார். அதுதான் வலைப்பூ இதழ். இதில் வாரம் ஒரு வலைப்பதிவர் வலைப்பூ ஆசிரியராகப் பங்கேற்று மற்றவர்களுடைய வலைப்பதிவுகளை விமர்சனம் செய்து அறிமுகம் செய்து வைப்பார்கள். நிறைய புதிய வலைப்பதிவாளர்கள் அதன்மூலம் கவனப் படுத்தப் பட்டார்கள். முக்கியமான பதிவுகள் அதில் சுட்டிக் காட்டப் பட்டும் விமர்சிக்கப் பட்டும் தவறவிடப் படாமல் வாசிக்க உதவின.

வலைப்பூ இதழ் ஆசிரியர் என்பது பின்னர் தமிழ்மணத்தின் நட்சத்திரப் பதிவாக மாறியது. ஆனால் வலைப்பூவில் வலைப்பூ ஆசிரியர் செய்தது போல தாங்கள் வாசித்த பதிவுகளின் விமர்சனமாகவோ தொகுப்பாகவோ நட்சத்திரப் பதிவர்கள் செயல்பட அவசியமில்லாமல் தங்கள் படைப்புகளை அந்த வாரத்தில் முதன்மைப் படுத்துவதாக மட்டுமே அமைந்து விட்டது. அதே சமயம் தமிழ்மணத்தின் இப்போதைய பூங்கா இதழ் வலைப்பதிவர்களின் படைப்புகளை தொகுத்து வழங்குவதன் மூலம் இன்னொரு விதமாக அந்த சேவையை மீண்டெடுத்துள்ளது.

கில்லி ஓரளவுக்கு வலைப்பூ போன்றதொரு அமைப்பை கொண்டுள்ளது. எனினும் பெரும்பாலும் ஆங்கிலப் பதிவுகளையே கில்லி முன்னிலைப் படுத்துகிறது என்பதால் இதுவும் வலைப்பூ ஆசிரியர் அளவுக்கு தமிழ் வலைப்பூக்களை அறிமுகம் செய்வதாக இல்லை.

பாஸ்டன் பாலா தனிநபராக தனது snape judgement மூலம் சில பதிவுகளை அறிமுகம் செய்து ஆவணப் படுத்தி வருகிறார்.

எனினும் அன்றைய வலைப்பூ தந்த சேவையை, திருப்தியை வழங்கும் சேவைகள் இப்போது இல்லாததால் அதுபோன்றதொரு முயற்சியை மீண்டும் உருவாக்க உங்கள் ஒத்துழைப்பை நாடுகிறேன்.

அன்றைய வலைப்பூ மூலம் பல புதிய பதிவர்களுக்கு ஊக்கமும் வெளிச்சமும் கிடைத்தது. பல்வேறு விதமான விமர்சனப் பார்வைகள் மூலம் முக்கியமான பதிவுகள் கவனப் படுத்தப் ட்டன. அதற்கு மேலாக அவை அங்கே ஆவணப் படுத்தப் பட்டன. அது போன்றதொரு முயற்சி மீண்டும் தமிழ் வலைப்பதிவுலகிற்கு தேவை என்ற எண்ணத்தில் விளைந்த ஒரு முயற்சி இது.

வலைச்சரம் என்ற வலைப்பதிவு அதற்கென உருவாக்கப் பட்டுள்ளது. வலைப்பதிவர்களில் ஒருவர் ஒரு வார காலம் தன் பார்வையில் கவர்ந்த, முக்கியமான வலைப்பதிவுகள், இணைய தளங்களைப் பற்றி சில வரிகளில் சிறு விமர்சனக் குறிப்பினை இட்டு அறிமுகம் செய்வார்.

இதற்கென தேர்வு செய்யப் படும் வலைப்பதிவர் அந்த ஒரு வாரத்தில் குறைந்தது மூன்று பதிவுகள் முதல் எத்தனை பதிவுகள் வேண்டுமானாலும் இடலாம். ஒவ்வொரு பதிவும் ஒன்றுக்கு மேற்பட்ட தமிழ் வலைப்பதிவு அல்லது இணைய தளத்தை அறிமுகம் செய்வதாக இருக்க வேண்டும். இது போன்ற சில விதிமுறைகளின் அடிப்படையில் தெளிவாக வரையறுக்கப் பட்ட நோக்கங்களுடன் வலைச்சரம் உங்கள் முன் வலை(ப்பதிவு)ச்சரம் தொடுத்துப் படைக்க வருகிறது.

இந்த முயற்சியின் முதல் கட்டமாக வலைச்சரத்தின் முதலாவது ஆசிரியர் பொறுப்பை பதிவர் பொன்ஸ் மேற்கொள்ள இருக்கிறார்.

இந்த தளம் மற்றும் முயற்சி குறித்த விமர்சனங்களும் ஆலோசனைகளும் வரவேற்கப் படுகின்றன...

20 comments:

  1. அடடே.. நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  2. அருமையான முயற்சி!!!

    மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்.


    (ஆனால் லக்கி உண்மையாகவே வாழ்த்தினாலும் எனக்கு சிரிப்பு வருவதை தவிர்க்கமுடியவில்லை )

    ReplyDelete
  4. நல்ல முயற்சி வெற்றி பெற என் வாழ்த்துக்கள் !!!

    ReplyDelete
  5. இதயங்கனிந்த நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. //அருமையான முயற்சி!!!

    மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!//

    ரிப்பீட்டே

    சென்ஷி

    ReplyDelete
  7. ரொம்ப நல்ல விஷயம்.

    ரொம்ப நாளைக்குமுன்னாலே மதியுடன் பேசும்போது 'வலைப்பூ'வை மீட்டு எடுக்கலாமான்னும்
    கேட்டாங்க. ஆனா நேரம் பத்தாக்குறையா இருக்கு. அதுவுமில்லாம இப்ப 1700 வலைப்பதிவுகளுக்குமேலே
    இருக்கு பாருங்க. படிக்க முடியுமா? ஒரு சிலதை மட்டும் குறிப்பிட்டா, கண்ணில் படாமப்போன நல்ல பதிவுகளை
    எப்படி முன்னே கொண்டுவந்து வெளிச்சத்தில் வைக்கறதுன்னு பலவித எண்ணப்போக்கால் அதை செயல்படுத்த முடியலை.

    இப்ப நீங்க முன்வந்து செய்யறது சந்தோஷமா இருக்கு.

    வாழ்த்து(க்)கள்.

    பொன்ஸ் கணினி சம்பந்தப்பட்டவைகளைச் சொல்லி இருக்கறதும் நல்லா இருக்கு. என்னமாதிரி இருக்கற
    க.கை.நா.வுக்கு பொறுமை வேணும்,நிதானமாப் படிச்சுப் புரிஞ்சுக்கறதுக்கு !

    ReplyDelete
  8. மனமார்ந்த வாழ்த்துகள், பொன்ஸ்.

    வைசா

    ReplyDelete
  9. வலைச்சரம் வாழ்க! வளர்க!
    இந்தவார ஆசிரியர் பொன்ஸ் அம்மணிக்கு வாழ்த்துக்கள்
    SP.VR.சுப்பையா

    ReplyDelete
  10. வித்தியாசமான அறிமுகங்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. வலைச்சரத்தை வலைச்சரத்தில அறிமுகம் செய்தது நீங்கதான்!:-)

    ReplyDelete
  12. சிறியவனாகிய என்னை உங்களது வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி, வாழ்த்துக்கள்

    தெரிவித்தமைக்கு ரொம்ப நன்றி ரமேஷ்.

    ReplyDelete
  13. சிறியவனாகிய என்னை உங்களது வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி, வாழ்த்துக்கள்

    தெரிவித்தமைக்கு ரொம்ப நன்றி ரமேஷ்.

    ReplyDelete
  14. ஆஹா! தமிழ் வலைப்பூக்கள் பட்டியல் தொகுத்து வெளியிட ஆசை. தங்கள் வலைச்சரம் கண்ணில் பட்டது எனது நல்வாய்ப்பு. மறைந்த பாசிட்டிவ் அந்தோணிமுத்து(மாற்றுத் திறனாளி) அவரது நினைவு நாள் அன்று நினைவு மலர் ஒன்றும் வெளியிட்டு அவரது குடும்பத்தினருக்கு ( தாயாக இருந்த தமக்கைக்கு) உதவிட வேண்டும்.
    இந்த ஆண்டில் இதுவரை 10 பதிவுகள். rssairam.blogspot.com மனித தெய்வங்களும் சில சேகரிப்புக்களும் அதன் தலைப்பு. தங்களைத் தொடர்பு கொள்ளும் வாய்ப்பினை உடனே எதிர் பார்க்கின்றேன். சென்னை என்றால் மிகவும் எளிது. rssairam99@gmail.com
    நன்றியுடன்-ச.இராமசாமி

    ReplyDelete
  15. தகவலுக்கு மிக்க நன்றி. எப்படி வோட் அளிப்பது என்று எனக்குப் புரியவில்லையே!

    தயவுசெய்து தெரிவித்தால் வோட் அளிக்க இயலும்.

    என் இ.மெயில் valambal@gmail.com

    ReplyDelete
  16. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ரத்னவேல் - நட்புடன் சீனா

    ReplyDelete
  17. //வலைச்சரம் என்ற வலைப்பதிவு அதற்கென உருவாக்கப் பட்டுள்ளது. வலைப்பதிவர்களில் ஒருவர் ஒரு வார காலம் தன் பார்வையில் கவர்ந்த, முக்கியமான வலைப்பதிவுகள், இணைய தளங்களைப் பற்றி சில வரிகளில் சிறு விமர்சனக் குறிப்பினை இட்டு அறிமுகம் செய்வார்.//

    24.12.2012 [வைகுண்ட ஏகாதஸி] திங்கட்கிழமையன்று ஆரம்பிக்கும் ஒரு வார காலத்திற்கு தாங்கள் வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்று பணியாற்ற இருப்பது கண்டு எனக்குப் பெரும் மகிழ்ச்சியாக உள்ளது.

    வாழ்த்துகள். அன்புடன் VGK

    ReplyDelete
  18. அன்பின் வை.கோ - என்ன ஆரமப கால ( 2007 பிப்ரவரி மாதப் பதிவுகளைப் படித்து தற்போதுள்ள பதிவுகளுடன் குழம்பி மறுமொழி இட்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். பரவாய் இல்லை - ஆர்வத்தினை மெச்சுகிறேன். - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  19. என்னைய போன்ற புது வலைப்பதிப்பாளர்களுக்கு பெரிய ஊன்று கோலாக இருக்கும் என்பதை நினைக்கும் போழுது மிக மிக மகிழ்ச்சியாக இருக்கின்றது...
    பொதுவாகவே புதிதாக வரும் பதிவுகளை யாரும் அவ்வளவாக கண்டுக்கொள்வதில்லை ஆனால் இங்கு வலைப்பதிவின் பிரபலமானவர்களை புதியவர்களை அறிமுகம் செய்வதுடன் அவர்களின் பதிவுகளுக்கு" சன்மானமாக " விமர்ச்சணமும் கிடைக்கும் என்பதை என்னும்போது மிக மிக ஆணந்தமாகவே உள்ளது..
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ...
    அன்புடன் (குருவின் ஆசியுடன் )...
    தென்றலின்வாசம்
    மேலூர் ராஜா

    ReplyDelete