ஏன் இதப் பத்தி சொல்றேன்னா என் நண்பர்களை பதிவுகளைப் படிக்க அழைக்கும்பொது இரண்டாம் நாளே அவர்கள் சொல்வது என்னடா இப்டி சண்ட போட்டுக்கிறானுங்கன்னுதான். எனக்குத் தெரிந்து பத்துபேரு போடுற சண்டையில சில நூறுபேரின் பெயரும் அடிவாங்குது.
ஆனா இப்போது நிலமை நல்லாயிருக்கு. பல புதியவர்கள் வந்து கலக்கு கலக்குன்னு கலக்கி நம்பிக்கை நட்சத்திரங்களாய் மிளிர்கிறார்கள். (இப்டியெல்லாம் சொன்னா நம்மள சீனியர் பதிவர்னு நினைப்பாங்கல்ல?)
என் கண்ணில் மின்னும் புதியவர்கள். (புதியவர்கள் = June 2006க்குப் பின் பதிவை துவக்கியவர்கள்)
உலகக்கோப்பை 2007 - மணிகண்டன். சிறப்பாக, சுவாரஸ்யமாக உலகக் கோப்பை பற்றி தகவல்களைத் தருகிறார் மணிகண்டன். வெறும் பதிவு என நின்றுவிடாமல் போட்டியெல்லாம் வச்சு சுவாரஸ்யத்த அதிகப் படுத்திட்டார். உ.கோப்பைக்கபுறம் என்ன செய்யப் போறார்னு தெரியல.
ரிச்மாண்ட் தமிழ்சங்கம். ஒர் தமிழ் சங்கம் வலைப்பதிவு வச்சிருக்கிறது என்பதே பெரிய விஷயம். வெளிநாட்டு தமிழ் சங்கங்களில் அரசியலும் பிரிவினைகளும் அதிகம் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனா இவங்க தொடர்ந்து பதிவுகளத் தந்தபடி இருக்கீறார்கள். வாழ்த்துக்கள்.
செல்லி. பல விஷயங்கள அலசுறாங்க குறிப்பா திரைப்படங்களும் நோய்களும் எனக்குப் பிடிச்சிருந்தது. இவங்க URL பாத்தீங்களா? எல்லாம் தெரியும்போலிருக்கு.
ஊரோடி. இவர் பதிவ வடிவமைச்சிருக்கும் விதமே வித்தியாசமாயிருக்கும். இணைய பக்கங்களை வடிவமைப்பதுபற்றி பல விஷயங்களை தெரியத் தருகிறார்.
அலசல் சேவியர். பல தலைப்புகளிலும் அலசல் கலக்கல்.
மாற்று. இது பதிவல்ல, நல்ல பதிவுகளை அடையாளம் காட்டும் தளம். நிச்சயம் பயன்படுத்தவேண்டியது எனச் சொல்லுவேன்.
விக்கி பசங்க. சீரியசான விஷயங்களுக்குன்னு ஆரம்பிக்கப்பட்ட அருமையான குழுப்பதிவு. சிறப்பான தலைப்புகளில் கலக்குவாங்க.
சற்றுமுன். என்னடா இதுன்னு கேக்காதீங்க :) சற்றுமுன் குழு நிச்சயமா பாராட்டுக்குரியது, நானும் குழுவில் ஒருத்தன் என்பதில் பெருமை. துவங்கி சரியாக ஒரு மாதம் ஆகிறது. 400+ செய்திகள்(பதிவுகள்) தந்திருக்குது சற்றுமுன். இன்னும் கலக்குவோம்.
இத்தோட நான் மூடிக்கிறேன். இன்னொருமுறை வாய்ப்பு கிடைத்தால் பாப்போம்.
அன்புடன்
சிறில் அலெக்ஸ்
:( புதிதாக ஆரம்பித்து மிகவும் சிறப்பாக எழுதிவரும் ஒரு பெரும் பதிவரை மறந்திட்டீங்களே சிறில்... :( :( :( :( :( :(
ReplyDelete//உ.கோப்பைக்கபுறம் என்ன செய்யப் போறார்னு தெரியல//
ReplyDeleteஉலகக்கோப்பை 2011 பத்தி எழுத வேண்டியது தான் :) :)
சும்மா சொன்னேங்க. பரீட்சைல எழுத்னது தவிர அவ்வளவா எழுதுன அனுபவம் கிடையாது :( . அதனால கிரிக்கெட் வச்சு ஒப்பேத்திட்டு வர்றேன். உலகக்கோப்பை முடிஞ்சதுக்கு அப்புறம் எதாவது உருப்படியா எழுத முயற்சி பண்றேன் :)
//:( புதிதாக ஆரம்பித்து மிகவும் சிறப்பாக எழுதிவரும் ஒரு பெரும் பதிவரை மறந்திட்டீங்களே சிறில்... :( :( :( :( :( :(
ReplyDelete//
வெயிலில் மழை எப்பவாவது தானங்க வரும். அதனால் மறந்திருப்பாரு :)
உங்க பாராட்டுக்கும் ஆதரவுக்கும் நன்றி,சிறில்
ReplyDeleteஅன்புடன் செல்லி
ஏன்,இந்த வலை அமைப்பு கூட அருமையாகத்தான் இருக்கிறது,ஆனால் கலர் தான் சரியாக அமையவில்லை.
ReplyDeleteகலந்துகட்டி வைத்துள்ளீர்கள்.
அடுத்த வருசம் நம்மளையும் சேர்ப்பீங்கன்னு நம்பறேன் ;-)
ReplyDeleteகவிஞர் சேவியரின் கவிதைச் சாலை "புச்சு" லிஸ்டில் சேருமோ இல்லையோ.. அருமையா இருக்கும்:
ஆகா ஜீ..
ReplyDeleteI did not do any justice.. like Sinthanathy has mentioned in the post next to this.
Major issues at work. I accepted reluctantly... had great plans ..
:)
Sorry I missed YOU.
இனி வருபவர்களுக்கும் வேண்டுமில்லையா அதான் சிலதுகளை விடவேண்டியாயிடுச்சு (சமாளிப்பு)
ReplyDelete:))
ஆஹா... நன்றி சிரில் !!
ReplyDelete