Tuesday, May 8, 2007

பல முறை படித்தவை...

சமீபத்தில நான் படிச்ச இரண்டு பதிவுகள்...படிச்சு முடிச்ச அப்புறம் கொஞ்ச நேரம் பேசாம உட்கார்ந்துட்டேன்.

எனக்கு அப்படி இருந்துச்சு...உங்களுக்கு எப்படியோ..படிச்சுட்டு சொல்லுங்க.

அந்தாரா....ஹ்ம்ம்...சமீபத்தில் இவருடைய மெனோபாஸ் பத்தி ஒரு பதிவை படிச்சேன். நம்மில் எத்தன பேர், நம்ம அம்மாவ்ங்க எல்லாம் இந்த கட்டத்த அடைஞ்சப்போ அத புரிஞ்சு நடந்து இருப்போம். எவ்வளவு கடினமான கால கட்டம்னு நமக்கு அப்ப தெரியலை. மன சோர்வு, மன நிலை மாற்றம், போன்ற உளவியல் பிரச்சனைகளும், வேறு சில பிரச்சனைகளும் இருக்கும். இது என்ன எல்லா பொம்பளைகளுக்கும் வர்ரது தானேன்னு யாரும் பெரிசா கண்டுக்கறதில்லை. ஆனா இந்த காலகட்டத்துல அவங்களுக்கு ஆதரவா பேசி, அவங்க ஆரோக்கியத்தின் மேல அக்கறை காட்டனும்னு எதிர்பார்ப்பு இருக்கும்..இதோ

இப்போதெல்லாம் கடவுள் கோயில் பக்தி என்று உன்னுடைய நாட்கள் நகர்கிறது. உன்னுடைய தனிமையை கடவுளும் பக்தியும் குறைப்பிக்கிறதா அல்லது உன்னுடைய பயத்தை இறைமையாய் உணர்கிறாயா?- மெனோபாஸ்

அடுத்த பதிவு, வசந்தின் இளமையில் வறுமை பற்றிய பதிவு. இளமையில் வறுமையும், முதுமையில் தனிமையும் கொடுமை.

''மிகவும் நீளமானது எது தெரியுமா..? நைல் நதியோ, கங்கை நதியோ அல்ல.. வேலை இல்லாதவனின் பகல் பொழுது..''

கொம்பு முளைத்த வறுமை - 'வெறுமை'.

என்னைக் கவர்ந்தது....

இந்த வரிகள், நான் வறுமையின் பிடியில், வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கையில் எழுதியன.என் காலம் வருகையில், ஆணவம் என்னைப் பற்றக் கூடாதென்று சேர்த்து வைத்திருந்தேன். வானம் அளவு நான் விஸ்வரூபம் எடுக்கும் போது, என் கால்கள் பூமியோடு புதையச் செய்ய நான் நினைவு வைத்திருக்கும் வரிகள்

அடுத்து, சித்தார்த், நம்ம சுத்தி நடக்கிற விஷயங்கள், மனிதனின் முயற்சியில் ஒவ்வொரு நாளும் நடக்கும் புதுமைகள், கண்டு பிடிப்புகள் பற்றி ஸ்டீஃபன் ஹாக்கிங் ன் கட்டுரையை மொழிபெயர்த்துள்ளார். எளிமையான தமிழ்ல அழகா எல்லார்த்துக்கும் புரியறமாதிரி சொல்லி இருக்கார். ஆர்வமா படிச்சேன்

தன்னிலை விளக்கம்னு தலைப்பு குடுத்துட்டு கணவன் என்ற ஒருவன் பிடியில் தவிக்கும் பெண்களின் நிலையை மனிதத்துடன் படம் பிடித்து காட்டி இருக்கும் தமிழ்நதியோட இந்த பதிவ நான் பல தடவை படிச்சிட்டேன்.

இன்னைக்கு கிளாஸ் அவ்வ்ளோ தான்...நாளைக்கு பார்க்கலாம்....

11 comments:

  1. நான் இன்னிக்கும் ஆஜர்.. :))

    //''மிகவும் நீளமானது எது தெரியுமா..? நைல் நதியோ, கங்கை நதியோ அல்ல.. வேலை இல்லாதவனின் பகல் பொழுது..''

    கொம்பு முளைத்த வறுமை - 'வெறுமை'.//

    சூப்பர் வரிகள்... வசந்துக்கு பாராட்டுக்கள்.. எல்லாத்தையும் படிச்சுட்டு அவங்களுக்கு பின்னூட்டம் போட்டுடறேன். தொகுத்து தந்தமைக்கு நன்றி :)

    சென்ஷி

    ReplyDelete
  2. மங்கை அதிகம் படிப்பதில்லை எதை அறிமுகப்படுத்த என்று சொல்லிவிட்டு நீங்கள் தந்த பதிவுகள் எல்லாம் அருமையாக இருக்கிறதே..
    உங்க தன்னடக்கத்துக்கு ஒரு அளவே இல்லையா...? வசந்த் மற்றும் சித்தார்த் பதிவு நான் மிஸ் செய்த பதிவுகள். நன்றி.

    ReplyDelete
  3. நான் இப்போதுதான் படித்"தேன்" இந்த பதிவுகளை! நன்றி 'சுட்டி'காண்பித்தமைக்கு!

    ReplyDelete
  4. நன்றி மங்கை..

    நீங்கள் கொடுத்துள்ள சுட்டிகள் எதையுமே படிக்காதவன் என்ற முறையில்..(அதிகம் வலைப்பூக்கள் பக்கம் இப்போ சுத்துறதில்லை :( ) இந்த நன்றிகள்.

    தொடர்ந்து நல்ல பதிவுகளை அடையாளம் காட்டுங்கள்.

    ReplyDelete
  5. பெரிய பெரிய மேட்டரெல்லாம் லிங்க் குடுத்துருக்கீங்க....இதுல நம்ம தமிழ்நதி தவிர வேறெதயும் நான் படிச்சதில்லை....

    படிச்சிட்டு வாறேன்....

    ReplyDelete
  6. //முத்துலெட்சுமி said...

    மங்கை அதிகம் படிப்பதில்லை எதை அறிமுகப்படுத்த என்று சொல்லிவிட்டு நீங்கள் தந்த பதிவுகள் எல்லாம் அருமையாக இருக்கிறதே..//

    இன்றைய ரிப்பீட்டே போட வேண்டிய பின்னூட்டம் :))

    சென்ஷி

    ReplyDelete
  7. மங்கை
    நல்ல பதிவுகளை அறிமுகப் படுத்தினீர்கள்.
    நன்றி

    ReplyDelete
  8. அனைவருக்கும் நன்றி...

    சென்ஷி...உங்க ரீப்பிட்டே எல்லார்த்துக்கும் தொத்தீடுச்சு,, சிந்தாநதியும் பாருங்க..

    லட்சுமி நிஜமாவே நான் அதிகம் படிக்கிறதில்லை..உங்களுக்கே தெரியும்.:-)

    அபி அப்பா, பங்காளி
    படிச்சுட்டு வாங்க நான் டெஸ்ட் வைப்பேன்..கஷ்டப்பட்டு போடறோமில்ல..

    பாலபாரதி, சந்திரவதனா..
    மேலும் நல்ல பதிவுகளை தர முயற்சிக்கிறேன்..நன்றி

    ReplyDelete
  9. என்ன என் பழைய பதிவொன்றுக்குப் பின்னூட்டம் வருகிறதே என்று குழம்பிப்போனேன். சென்ஷி விடயத்தைச் சொல்லி பின்னூட்டம் போட்டதன் பின் புரிந்துகொண்டேன். அன்புக்கு நன்றி மங்கை. என்னவோ தெரியவில்லை சில நாட்களாக எவரெவரோ தட்டச்சுவதன் வழியாக பூக்களை அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

    ReplyDelete
  10. //என்னவோ தெரியவில்லை சில நாட்களாக எவரெவரோ தட்டச்சுவதன் வழியாக பூக்களை அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்//

    அதான் நீங்களே சொல்லிட்டீங்களே
    அன்புன்னு.. அப்புறம் 'எவரெவரோ' வேண்டாமே நதி....
    நமக்கு கிடைத்த புதிய சொந்தங்கள்/ நட்பு, நமக்கு எதுல நம்பிக்கை இருக்கோ அது தான்..அப்படி நினச்சுக்கோங்க நதி..:-)

    ReplyDelete