Saturday, May 19, 2007

தொழிற்நுட்ப சனி(க்கிழமை)

தொடர்ச்சியாக மூன்று நாட்கள் ஒழுங்காக கல்லூரிக்கு சென்றுவிட்டால் உடனே அடுத்த இரண்டு நாட்கள் ஓய்வெடுக்கும்(!!!) பழக்கம் வலைச்சர ஆசிரியராக இருக்கும் போதும் தொடர்ந்து கொண்டதாலும், லேப்டாப் சொதப்பியது, கொஞ்சம் அதிகப்படியான வேலைகள் ஆகியவையும் சேர்ந்து கொண்டதாலும் கடந்த இரண்டு நாட்களாய் இந்த பக்கம் வர இயலாமல் போய்விட்டது. மன்னிக்க.

தமிழ் சார்ந்த சமீபத்திய இணைய தொழிற்நுட்ப செய்திகளை பகிர்ந்து கொள்ளலாம் என நினைத்ததால் இந்த தொழிற்நுட்ப சனி(க்கிழமை) பதிவு

1. பெரும்பாலனோர் ஏதாவது ஒரு முறையாவது பதிவை முழுதாய் எழுதி முடித்த பின் publish செய்யும் நேரத்தில் browserலோ, இணையத்தொடர்பிலோ ஏதோ பிரச்சனையாகி அவ்வளவு நேரம் கஷ்டப்பட்டு எழுதியதும் காணாமல் போய் செய்வதறியாது திண்டாடியிருப்பீர்கள் . Blogger கடந்த வாரம், எழுதிக்கொண்டிருக்கும் இடுகைகளை பதிப்பு செய்யும் வரை நிமிடத்தொருமுறை தானாகவே auto save ஆகிவிடும் வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஒவ்வொரு நிமிடத்திற்கொருமுறை நீங்கள் எழுதுவது கூகுள் பிளாக்கருக்கான செர்வரை சென்றடைந்துவிடுவதால் நடுவில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டாலும் நீங்கள் ஒரு நிமிடத்திற்கு முன்னர் எழுதியவற்றை திரும்பபெறலாம். இந்த எளிதான தொழிற்நுட்ப வேலையை செய்ய பிளாக்கர் இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டாலும் இப்போதாவது செய்ததே என்று நிச்சயம் சந்தோஷப்படலாம். இது குறித்த பிளாக்கரின் உதவிப்பக்க தகவல்

2. வேர்ட்பிரஸ் செயலி பயனர்களால் உருவாக்கப்படுவதால் அடிக்கடி மேம்படுத்தப்படுத்தபட்டுவருகிறது. சமீபத்தில்தான் செயலியில் ஏகப்பட்ட மாற்றங்களை கொண்டுவந்து wordpress 2.1 பிரதியை வெளியிட்டார்கள். அதற்குள் 2.2 பிரதி வந்திருக்கிறது. இந்த பிரதியில் முக்கியமாக பிளாக்கர் பீட்டா என்று தமிழ் வலைப்பதிவுகில் பரபரப்பை உண்டு செய்த பிளாக்கரின் மேம்படுத்தப்பட்ட பிரதியில் இருந்தும் வேர்ட்பிரஸ் வலைச்சேவைக்கு தங்களின் இடுகைகள், பின்னூட்டங்கள் ஆகியவற்றை எளிதாய் கொண்டு செல்லும் செயலியை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். இதனால் பிளாக்கரிலிருந்து வேர்ட்பிரஸுக்கு மாற விரும்பவர்களும், புதிதாக தளம் அமைத்து அதில் வேர்ட்பிரஸ் நிறுவ விரும்புகிறவர்களும் எளிதாய் பிளாக்கரில் இருக்கும் தங்கள் இடுகைகளையும், பின்னூட்டங்களையும் கொண்டு செல்ல முடியும்.

Wordpress 2.2 பிரதி குறித்த முழுவிவரங்களுக்கு

3. இந்தியாவில் இந்திய வலைப்பக்கங்களை தேடுவதற்காக உருவாக்கப்பட்ட குருஜி தேடுபொறி சேவை தனது சேவையை தமிழிலும் அறிமுகப்படுத்தியிருக்கிறது. தமிழ் Virtual keyboard ஒன்றினையும் இணைத்திருப்பதால் தமிழ் தட்டச்சு முறை தெரியதாவர்கள் நேரடியாக virtual keyboardன் துணைகொண்டு தட்டச்சி தமிழில் தேடுதல்களை தொடரலாம்.

குருஜி - தேடுபொறி சேவை

4. தமிழ் வலைப்பதிவுலகம் விரிய விரிய வலைப்பதிவு சார்ந்த சேவைகளும் அதிகரித்து கொண்டே வருகிறது. ஏற்கனவே மூன்று தானியங்கி வலைத்திரட்டிகள் வழக்கத்திலிருந்தது போக புதிதாக இரண்டு திரட்டிகளை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது.

அ) தமிழ்வெளி
ஆ) தமிழ்.கணிமை

இவ்விரண்டு சேவைகளும் இப்போதுதான் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதால் அடிப்படை நிலை வசதிகளை தாண்டி வலைப்பதிவர்களுக்கு தேவையான மேம்படுத்தப்பட்ட வசதிகளையும் வழங்க வாழ்த்துக்கள்

5. குறிச்சொற்களின் அடிப்படையில் வலைப்பதிவுகளை திரட்டி பட்டியலிடும் மாஹிரின் தமிழூற்றின் இந்த முயற்சி நிச்சயம் பாரட்டிற்குரியது. சேகரிக்கப்படும் குறிச்சொற்களை அகர வரிசைப்படுத்தியிருப்பதால் தேடுதல் எளிதாகிறது. ஆனால் முழுமையாக அனைத்து பதிவுகளையும் திரட்டவில்லை என நினைக்கிறேன். அதுபோல் குறிச்சொற்களை பதிவிலிருந்து திரட்டும் முறையையும் மேம்படுத்த வேண்டியிருக்கும். மேலும் தேதி அடிப்படையில் குறிச்சொற்களை பட்டியலிட்டால் இன்னும் வசதியாக இருக்கும்.

தமிழூற்றின் குறிச்சொல் திரட்டி

இணையத்தில் மற்ற மாநில மொழிகளைக்காட்டிலும் தமிழ் மிகப்பெரிய அளவில் பரவிவருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. அதற்கு இது போன்ற ஆக்கப்பூர்வமான முயற்சிகளில் ஈடுபட்டுவரும் நண்பர்களுக்கு ஊக்கமளிப்பதும், உற்சாகப்படுத்துவதையும் நமது முக்கிய கடமை :)

2 comments:

  1. நன்றி விக்கி

    தமிழ்.கணிமை.காம் ஒரு தனித்திரட்டி அல்ல. தனித்தனியாக திரட்டிகளை பார்வையிட நேரம் குறைவாக உள்ளபோது அவசரத்துக்கு வலைமேய உதவும் - திரட்டிகளின், செய்திகளின் சங்கமம் என்ற அளவிலேயே தற்போது செயல்படுத்தப் பட்டுள்ளது.

    இன்னும் பல மேம்பாடுகள் செய்யப் பட உள்ளன.

    தமிழ்.கணிமை.காம்

    ReplyDelete
  2. நன்றி விக்கி,

    //ஆனால் முழுமையாக அனைத்து பதிவுகளையும் திரட்டவில்லை என நினைக்கிறேன்.//

    உண்மையே. சிறுகச் சிறுகவேனும் சேர்க்கப்படவேண்டும். அதே சமயம் thamizhootru@gmail.com அரட்டையில் /submit வலைப்பதிவு மூலம் தெரிந்த வலைப்பதிவுகளைத் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    //அதுபோல் குறிச்சொற்களை பதிவிலிருந்து திரட்டும் முறையையும் மேம்படுத்த வேண்டியிருக்கும்.

    பதிவுகளிலிருந்து தானே திரட்டுகிறது. ஏதாவது வழு இருக்கிறதா?

    //மேலும் தேதி அடிப்படையில் குறிச்சொற்களை பட்டியலிட்டால் இன்னும் வசதியாக இருக்கும்//

    உங்கள் யோசனை சரியே...

    தாங்கள் பகிர்ந்து கொண்டமைக்கு

    நன்றி
    மாஹிர்

    ReplyDelete