Monday, May 21, 2007

ஆரம்பமே அமர்க்களம்...

சரி இந்த வாரம் நம்மல இங்க எழுத கூப்பிட்டுட்டாங்க. என்ன எழுதறதுனு கேட்டா நீ படிச்ச நல்ல வலைப்பதிவுகளை பத்தி சொல்லுனு சொன்னாங்க நம்ம பொன்ஸ் அக்கா. சரி அப்ப நம்ம வலைப்பதிவை பத்தியே சொல்லிடலாமானு கேட்டேன். நான் சொன்னதை இன்னொரு தடவை படிச்சி பாருனு சொன்னாங்க. ஆஹா நல்ல பதிவுகளா? சரி படிச்சதை தானே சொல்லனும். பண்ணிட்டா போச்சுனு ஒத்துக்கிட்டேன்...

இப்ப டார்டாய்ஸை கொளுத்துங்க. போன வருடம் ஏப்ரல் மாதம் ஆபிஸ்ல என்கூட வேலை பார்த்த நண்பர் ஒருத்தர் எனக்கு ஒரு லிங் அனுப்பி படிக்க சொன்னாரு. நான் கூட ஏதோ டெஸ்டிங் பத்தி இருக்கு போலனு படிச்சா, நம்ம Gaptain நடிச்ச சுதேசி படத்தோட விமர்சனம் அது. அதை படிச்சிட்டு விழுந்து விழுந்து சிரித்து கொண்டிருந்தேன். அப்படியே நரசிம்மாவும் படிச்சேன். அதுக்கு அப்பறம் அதுல இருக்கற எல்லா பதிவும் படிச்சேன். எல்லா பதிவுளையும் நக்கல் அதிகமா இருந்துச்சு.

அப்பறம் அதுல இருந்து ஒவ்வொரு வலைப்பதிவா போயிட்டு இருக்கும் போது தான் நம்ம குருநாதர் டுபுக்கு வலைப்பதிவுக்கு போனேன். அது தான் நான் பார்த்த முதல் தமிழ் வலைப்பதிவு. அதை பார்த்தவுடன் எனக்கு அவ்வளவு சந்தோஷம். ரொம்ப நாளுக்கு அப்பறம் அம்மாவை பார்க்கற மாதிரி ஒரு சந்தோஷம். அதுல இருக்கற ஜொள்ளி திரிந்த காலம் மட்டும் ஒரு 10 தடவை படிச்சிருப்பேன். (போன வாரம் தேடும் போது திரும்ப படிச்சேன்). அவ்வளவு அருமையா இருக்கும் அவர் எழுத்து.

அப்படியே நாமதேவரும் கைப்பிடி சுண்டலும்,தாமிரபரணி தென்றல், அல்மா மேட்டர் இதெல்லாமும் பல முறை படிச்சிருக்கேன்.

எச்சரிக்கை:
பதிவ படிக்கறதுக்கு முன்னாடியே எச்சரிக்கை பண்ணிடறேன். ஒரு பதிவ படிக்க ஆரம்பிச்சாலும் அப்படியே அதிலே முழுகிடுவீங்க. அப்பறம் எல்லா பதிவும் படிக்கணும்னு ஆசைப்பட்டு நீங்க லீவுக்கூட போடலாம். அப்பறம் ஒழுங்கா ஆணி புடுங்கலனு உங்க டேமஜர் திட்டினா அதுக்கு அண்ணேன் டுபுக்கு தான் காரணம். நானில்லை ;)

அப்படியே அவரோட இந்த கதையும் படிச்சி பாருங்க... சாமியாண்டி

அடுத்து என்னை பெரிதும் கவர்ந்த பதிவர் உலகின் புதிய கடவுள் "$elvan"

அவரோட கனலை எரித்த கற்பின் கனலிதான் இன்னைக்கு வரைக்கும் நான் படிச்ச இடுகைகளிலே எனக்கு மிகவும் பிடித்தது. சீதையை ராமன் ஏன் தீக்குளிக்க சொன்னானு இதை படிச்சா புரியும்.

அடுத்து அவரோட இந்த பதிவ படிச்சி ரொம்பவே அசந்து போயிட்டேன். குரங்குங்க கூட கொலை செய்யுமானு? அடுத்து அவரோட கொரில்லா காதல் (அப்ப தலைப்பு வேற வெச்சிருந்தாரு) எனக்கு ஆச்சரியமா இருந்துச்சி. கண்டிப்பா படிச்சி பாருங்க.

அப்பறம் இன்னும் என் ஃபேவரைட்ஸ்ல இருக்கறது அவரோட வாரன் பப்பட் பத்திய தொடர்தான்.

அப்படியே அவரோட இந்த பதிவுகளும் படிச்சி பாருங்க

சோமு தங்கச்சியும் குஷ்பூவும்
கடவுளின் மரணம்

ஸ்பூன் கதை


சரி இன்னைக்கு இது போதும். எல்லாரும் ஒழுங்க ஆணி புடுங்குங்க. நாளைக்கு வேற பதிவுகளோட வரேன்...


டிஸ்கி : தலைப்பு நான் படிக்க ஆரம்பிச்ச பதிவுகளை பத்திதான் ;)

20 comments:

  1. அமர்க்களம்...இது ஆ ரம்பம் பத்தித்தான். ;)

    ReplyDelete
  2. //✪சிந்தாநதி said...

    அமர்க்களம்...இது ஆ ரம்பம் பத்தித்தான். ;) //

    ஆஹா... ரொம்ப மொக்கையை போட்டுட்டனா???

    ReplyDelete
  3. அதெல்லாம் ஒண்ணுமில்லை. அந்த space கண்டுக்காதீங்க;)))

    ReplyDelete
  4. //அதெல்லாம் ஒண்ணுமில்லை. அந்த space கண்டுக்காதீங்க;))) //

    ஏனய்யா எங்க ஆளை கலாய்க்குறீங்க!

    அவரு ஆ "ரம்" பிச்சாரு அப்புறம் தாங்க மாட்டீங்க! ஆமா!

    ReplyDelete
  5. சு(ம்)மா இது ஸ்டார்டிங் ;)

    ReplyDelete
  6. டுபுக்குவை பற்றி நீங்க சொன்னதை நானும் வழி மொழியறேன்.. அவர் போஸ்ட் எல்லாத்தையும் பல தடவை படிச்சிருக்கேன்.. :D :D

    செல்வனின் சிலவற்றை படிச்சிருக்கேன்.. மீதியும் படிக்கறேன்.. சுட்டி கொடுத்தமைக்கு நன்றி..

    ReplyDelete
  7. //✪சிந்தாநதி said...

    அதெல்லாம் ஒண்ணுமில்லை. அந்த space கண்டுக்காதீங்க;))) //

    :-))

    ReplyDelete
  8. //நாமக்கல் சிபி said...

    //அதெல்லாம் ஒண்ணுமில்லை. அந்த space கண்டுக்காதீங்க;))) //

    ஏனய்யா எங்க ஆளை கலாய்க்குறீங்க!

    அவரு ஆ "ரம்" பிச்சாரு அப்புறம் தாங்க மாட்டீங்க! ஆமா! //

    தள,
    திங்கக்கிழமையே ஆ "ரம்" பிச்சா அவ்வளவு தான் ;)

    ReplyDelete
  9. //Boston Bala said...

    சு(ம்)மா இது ஸ்டார்டிங் ;) //

    யூ டூ பாபா...

    ReplyDelete
  10. //சிங்கம்லே ACE !! said...

    டுபுக்குவை பற்றி நீங்க சொன்னதை நானும் வழி மொழியறேன்.. அவர் போஸ்ட் எல்லாத்தையும் பல தடவை படிச்சிருக்கேன்.. :D :D

    செல்வனின் சிலவற்றை படிச்சிருக்கேன்.. மீதியும் படிக்கறேன்.. சுட்டி கொடுத்தமைக்கு நன்றி.. //

    ACE மிக்க நன்றி...

    செல்வனுடைய பழைய பதிவுகளில் வெரைட்டி கொட்டி கிடக்கும்...

    அப்ப இப்ப இல்லையானு கேக்காதீங்க ;) (உண்மைய சொன்னா முன்ன அளவுக்கு இருக்கற மாதிரி எனக்கு படல. அண்ணன் ரொம்ப பிஸி போல)

    ReplyDelete
  11. //சு(ம்)மா இது ஸ்டார்டிங் //

    வெட்டி! உன்னைய சு(ம்)மா இப்படி எல்லாரும் ஓட்டுறாங்களே!

    நிஜமாலுமே மேட்டர் இருக்கா?

    இல்லே சு(ம்)மாவாச்சுமா?

    ReplyDelete
  12. "சும்மா கொடுத்த உம்மா"ன்னு ஒரு படம் எடுக்கப் போறேன்!

    வெட்டி நீங்கதான் அதுல ஹீரோ!

    தனுஷை வெச்சி எடுத்தா ஓட மாட்டேங்குதாம்!

    ReplyDelete
  13. "சு(ம்)மா கொடுத்த உம்மா" ன்னு ஒரு புது புராஜெக்ட்லே புக் ஆகியிருக்கேன்!

    வெட்டின்னு ஒரு புது ஹீரோ! நல்லா கலக்கலா பண்ணுவாராம்!

    ஐ ஹோப் திஸ் புராஜெக்ட் வில் பி எ சக்ஸஸ்ஃபுல் ஒன்!

    ReplyDelete
  14. என்னமோ போங்க!

    எங்கத்தானுக்கு கண்ணு பட்டுரும்னு நினைக்கறேன்!

    சுத்திப் போடணும்! போன முறை சுத்திய அவரு கால் மேல போட்டுட்டேன்னு கோவிச்சிகிட்டாரு!

    ReplyDelete
  15. வணக்கம் அன்பரே...

    http://www.vanjoor-vanjoor.blogspot.com இந்த பதிவர் மற்ற மதத்தை பற்றி மட்டும் இழிவாக கருதியும் எழுதியும் வருகிறார்! தயவு செய்து இவரது எல்லா இடுகைகளையும் படித்து பாருங்கள், பிறகு (சரியென்றால்!) இதனை தமிழ் மனத்திலிருந்து நீக்க சொல்லி அறிவுறுத்துங்கள்!

    ReplyDelete
  16. //சு(ம்)மா இது ஸ்டார்டிங்//

    ரிப்பீட்டேய் :-)

    ReplyDelete
  17. பாலாஜி

    வலைச்சர ஆசிரியராக பதவி பெற்றதற்கு வாழ்த்துக்கள். நட்சத்திர வாரம் போல் இதுவும் கலக்கலான வாரமாக அமைய வாழ்த்துக்கள்.

    நீங்கள் சொன்ன பதிவுகளில் நான் ரசித்து எழுதியது "கற்பின் கனலி".

    வெரைட்டி பற்றி நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை. கடந்த 1 வருடமாக என் ஆய்வறிக்கை என்னை வில்லனை போல் துரத்துகிறது.அதிகம் படிக்கவும் எழுதவும் முடியவில்லை. வழக்கமாக எழுதும் இனைய இதழ்களுக்கும் எழுத முடியவில்லை.

    ReplyDelete
  18. அன்பின் வெட்டி,
    நீங்கள் என் மேல் வைத்திருக்கும் மதிப்பிற்கும், இந்த விளம்பரத்துக்கும் ஹீ ஹீ மிக்க நன்றி :))

    ReplyDelete
  19. //செல்வன் said...

    பாலாஜி

    வலைச்சர ஆசிரியராக பதவி பெற்றதற்கு வாழ்த்துக்கள். நட்சத்திர வாரம் போல் இதுவும் கலக்கலான வாரமாக அமைய வாழ்த்துக்கள்.

    நீங்கள் சொன்ன பதிவுகளில் நான் ரசித்து எழுதியது "கற்பின் கனலி".

    வெரைட்டி பற்றி நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை. கடந்த 1 வருடமாக என் ஆய்வறிக்கை என்னை வில்லனை போல் துரத்துகிறது.அதிகம் படிக்கவும் எழுதவும் முடியவில்லை. வழக்கமாக எழுதும் இனைய இதழ்களுக்கும் எழுத முடியவில்லை. //

    செல்வன் அண்ணா,
    வாழ்த்துக்களுக்கு நன்றி...

    சீக்கிரமே உங்க ஆய்வறிக்கையை முடிச்சிட்டு எங்களை எல்லாம் சந்தோஷப்படுத்துங்க ;)

    ReplyDelete
  20. // Dubukku said...

    அன்பின் வெட்டி,
    நீங்கள் என் மேல் வைத்திருக்கும் மதிப்பிற்கும், இந்த விளம்பரத்துக்கும் ஹீ ஹீ மிக்க நன்றி :)) //

    குருவே,
    உங்களை பார்த்து எழுத பழகிக்கிட்டோம்.. உண்மையை தானே சொல்றோம் :-)

    ReplyDelete