என் இனிய தமிழ் பதிவர்களுக்கு நாந்தான் உங்கள் பாசக்கார பய இராம் எழுதுகிறேன்னு பாரதிராஜா எப்க்ட்'லே பில்ட்-அப் எல்லாம் கொடுத்து எழுதமுடியாதுங்க. நம்ம மண்டையிலே இருக்கிற கொஞ்சகாணு பச்சை மண்ணிலே என்ன செய்யமுடியுமோ அதே மட்டுந்தானே செய்யமுடியும், சட்டி செய்யுற அளவுக்கு மண்ணை வைச்சிக்கிட்டு பானையா செய்யமுடியும். எதுக்கு இப்பிடி நீட்டி மொழங்குறன்னா வலைசரமின்னு ஒரு பதிவு. அதுக்கு ஒரு வாரத்துக்கு ஆசிரியர்'ன்னா கெத்தா இண்டரோ கொடுக்கவேணாமா? கொடுக்கிற அறிமுகத்திலே இவ்ங்கிட்டே என்னோமோ விஷயமிருக்குன்னு நம்ப வைக்கக்கூட வேணாம், அட்லிஸ்ட் சந்தேகப்பட வைக்கலாம் இல்ல.
இன்னவரைக்கும் நான் எப்பிடி வலைபதிய ஆரம்பித்தேன்னு யாருக்கிட்டேயும் சொல்லவே இல்லை. அதுக்கு எங்களுக்கு தெரிஞ்சு என்னா ஆகப்போகுதுன்னு நீங்க முணுமுணுக்கிறது என்னோட மானிட்டர் ஸ்பீக்கர் அலறுது. அப்பிடியெல்லாம் வலிக்கிறமாதிரியெல்லாம் நடிச்சா நாங்க விட்டுருவோமா?
வாங்க பாஸ்! என்னோட வலைபதிய வந்த வரலாற்றை சொல்லுறேன்.
2005 டிசம்பர் மாசம் நம்ம மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை பத்தி கூகுளிலே தேடிட்டு இருந்தோப்போ எதோச்சையா ஷிரிஷிவ் பதிவை படிக்க நேர்ந்துச்சு, அவரு அதிலே உலக அதியசத்தை பத்தி எழுதிவைச்சிருந்தார், அதே படிச்சி பார்த்ததும் நம்ம ஊரு கோவிலை ஒலக அதிசயமா ஆகிறக்கூடாதுன்னு நடக்கிற வெளிநாட்டு சதியோ இல்ல உள்நாட்டு சதிக்கோ அவரும் துணைப்போறார்'ன்னு நான் போய் கருத்தை சொல்லிட்டு வந்தேன். அப்பிடியே அந்த பதிவிலே இருந்து மோகன்தாஸ், பினாத்தலார், கொழுவின்னு யாரல்லாம் பின்னூட்டம் போட்டுருந்தாங்களோ அவங்க பதிவுக்கெல்லாம் போய் படிச்சுப்பார்த்துட்டு மதியோட இந்த சுட்டிதான் முதலிலே அறிமுகம் ஆச்சு. ஓய்வுநேரங்களிலே ஒவ்வொரு பதிவா படிச்சிட்டு இருப்பேன். எவ்வளவு நாள்தான் படிச்சிட்டே இருக்கிற நாமெல்லும் தமிழிலே எழுதனுமின்னு என்னத்தயோ டவுண்லோட் பண்ணி இன்ஸடால் பண்ணுனேன். நாமே உபயோகப்படுத்துற லினக்ஸ்'க்கு இன்னும் Unicode Tool வரலைன்னு அப்போதான் தெரிஞ்சது. ஆபிஸிலே அதுக்காக சண்டைப்போட்டு ஒரு (வீணாப்போன) விண்டோஸ் சிஸ்டத்தையும் வாங்கி வைச்சிட்டு வலைப்பதிய ஆறு மாசம் ஆகிப்போச்சுங்க.
ஏண்டா இப்பிடி ஆரம்பத்திலே அறிமுகம் கொடுக்கிறேன்னு அறுவையே போடுறேன்னு இன்னொருதடவையும் ஸ்பீக்கர் அலறிருச்சு. ;)
நம்ம மக்கள்ஸோட சுவராசியமான அறிமுகத்தை பற்றி பதிவுகளின் சுட்டிகளை பாருங்க. அதுக்குள்ளே அடுத்த பதிவுக்கு மேட்டர் கிடைக்குதான்னு பார்க்கிறேன்.
கொங்கு ராசா'வின் கலக்கல் அறிமுகம்
ஆசிப் அண்ணாச்சியின் அறிமுகம்
'ஓ'மப்பொடியோட அறிமுகம்
தடாலடியாரின் அறிமுகம்
(பதிவிலே போய் டைரக்டர் கெளதமா'ன்னு கலாய்ச்சு வைக்க, அவரோ அதை சீரியஸின்னு நினைச்சிட்டு தனிமெயிலாம் அனுப்பி வைச்ச நல்லவரு... )
கைமண் அளவுதான்னு சொல்லிட்டு கடலளவு விஷயத்தை எழுதும் ஜெகத்'ன் அறிமுகம்
கல்யாணம் ஆனதும் பதிவே எழுதாத துபாய் இராஜா'வின் அறிமுகம்
தன்னடக்கத்தின் ஒட்டுமொத்த உருவம் CVR'வின் அறிமுகம்
கதையோ,கவிதையோ எல்லாத்திலேயும் அசத்தும் ஜி'யின் அறிமுகம்
மிகவும் சமிபமாய் வந்து கவிதைகளில் கலக்கும் காயத்ரியின் டிபிகல் அறிமுகம்
அடுத்த பதிவிலே இன்னும் சில சுவராசியமான பதிவுகளை பார்க்கலாம்.
பாபா வேலை எவ்வளோ கஷ்டமின்னு இப்போதாய்யா தெரியுது.
ஹேய்.. என்ன தல ஒரே புலம்பல்ஸ்!! கை குடுங்க! கலக்குங்க உங்க ஸ்டைல்ல! ஹை.. நானும் அறிமுகமா? அய்யனாருக்கே இன்னும் தேங்க்ஸ் சொல்லல. இங்கன வெச்சி சொல்லிக்கிறேன்.. ரெண்டு பேருக்கும் நன்றி.
ReplyDeleteவாழ்த்துக்கள் ராம்
ReplyDeleteஅடிச்சி ஆடுங்க .. ரொம்ப கஷடமான வேலய்யா இது ..பொன்ஸ் கிட்ட செக் அனுப்ப சொல்லனும் :) நீயும் மறக்காம கேட்டு வாங்கிக்க ராம்
ராம் அண்ணாச்சி.. கலக்கிப் போட்டீங்க.. நம்ம அறிமுகத்தையும் தட்டிக் கொடுத்ததுக்கு நன்றி :))
ReplyDeleteவாழ்த்துக்கள் அத்தான்!
ReplyDeleteஅய்யனார்,
ReplyDeleteசெக்கா?! தலைவா, அதுக்குப் பதிலாத்தான் உங்க இன்றைய புரியாக் கவிதையைப் படிச்சிட்டனே..
பாசக்கார ராம் அண்ணே,
உங்க செக்கை ரஞ்சனி மதனிகிட்ட கொடுத்திடுறேன்.. சரி தானே?!
//லினக்ஸ்'க்கு இன்னும் Unicode Tool வரலைன்னு//
அப்படியா! இருங்க, லினக்ஸ் பரப்புவோர் சங்கத்துல சொல்லி அனுப்புறேன்..
/லினக்ஸ்'க்கு இன்னும் Unicode Tool வரலைன்னு//
ReplyDeleteஅது அப்போ...
இப்போ எல்லாமே இருக்கு...
உபுண்டுவுக்கு தபுண்டு வரை!
//பாசக்கார ராம் அண்ணே,
ReplyDeleteஉங்க செக்கை ரஞ்சனி மதனிகிட்ட கொடுத்திடுறேன்.. சரி தானே?!
//
சரிதான் நாத்தனாரே!
இந்த ஆளு கைல குடுத்தா ஊதாரித் தனமா செலவு செய்யறாருண்ணு துர்கா நாத்தனார் சொன்னாங்க!
//லினக்ஸ்'க்கு இன்னும் Unicode Tool வரலைன்னு//
ReplyDeleteஅது அப்போ...
இப்போ எல்லாமே இருக்கு...
உபுண்டுவுக்கு தபுண்டு வரை!
//
சுசீல கூட வந்துடுச்சுமே!
கவிதாயினி,
ReplyDeleteநன்றிக்கு நன்றி... :)
கானகத்து புலி,
செக் இன்னும் வந்து சேரலை... :(
ஜியா,
நன்றி மக்கா... :)
// ரஞ்சனி said...
வாழ்த்துக்கள் அத்தான்! //
இந்த பின்னூட்டம் போட்ட புல்லுருவி யாரு?? :(
//பாசக்கார ராம் அண்ணே,
உங்க செக்கை ரஞ்சனி மதனிகிட்ட கொடுத்திடுறேன்.. சரி தானே?!//
யக்கோவ்,
ஏனிந்த கொலைவெறி?? :(
//அப்படியா! இருங்க, லினக்ஸ் பரப்புவோர் சங்கத்துல சொல்லி அனுப்புறேன்..//
அதிலே நாங்கெல்லும் நாலு வருசமா இருக்கோமில்லை.... வீணாப்போன விண்டோஸ்'ன்னு சொன்னப்பவே தெரிய வேணாமா?? :)
//அது அப்போ...
இப்போ எல்லாமே இருக்கு...
உபுண்டுவுக்கு தபுண்டு வரை!//
சிந்த்ஸ்,
நம்ம பொட்டியிலே அதோட ராஜ்ஜியம் தான் நடந்துட்டு இருக்கு.
Fedora'லேயும் முயற்சித்து பார்க்கனும்... :)
//அய்யனார்,
ReplyDeleteசெக்கா?! தலைவா, அதுக்குப் பதிலாத்தான் உங்க இன்றைய புரியாக் கவிதையைப் படிச்சிட்டனே..
//
ஓ! அதனாலதான் யானை இம்புட்டுக் கவலையா உக்காந்துகிட்டு இருக்கா?
:(
//இந்த பின்னூட்டம் போட்ட புல்லுருவி யாரு?? //
ReplyDeleteஎன்ன அத்தான் இது? என்னையப் போய் புல்லுருவின்னெல்லாம் சொல்லிகிட்டு!
//:(//
மன்னவனே அழலாமா! மங்கையிவள் மனம் வாடலாமா?
//லினக்ஸ்'க்கு இன்னும் Unicode Tool வரலைன்னு//
ReplyDeleteஎந்தெந்த distributionல எல்லாம் கணினியில் ஒருங்குறித் தமிழ்ல எழுத முடியுதுன்னு கேட்டு சொல்றேன். இப்ப firefoxல தமிழ்விசை நீட்சி இருக்கனால இணையத்துல தமிழ்ல எழுத இயக்குதளம் ஒரு பிரச்சினையில்லை.
//சரிதான் நாத்தனாரே!
ReplyDeleteஇந்த ஆளு கைல குடுத்தா ஊதாரித் தனமா செலவு செய்யறாருண்ணு துர்கா நாத்தனார் சொன்னாங்க!//
ஏலேய்,
இங்கனயும் கும்மியா... விட்டுருங்கய்யா!!
/சுசீல கூட வந்துடுச்சுமே!//
தள,
இன்னும் செவப்பு தொப்பிக்காரனோடதிலேயும் டிரை பண்ணிட்டு சொல்லுறேன்... :)
//இப்ப firefoxல தமிழ்விசை நீட்சி இருக்கனால இணையத்துல தமிழ்ல எழுத இயக்குதளம் ஒரு பிரச்சினையில்லை.//
இரவி,
உண்மைதான், ஆபிஸிலே அது மூலமா தான் டைப்புறது... ;)
ஏலேய்,
ReplyDeleteஇங்கனயும் கும்மியா... விட்டுருங்கய்யா!!
//
என்னமோ எழுதியிருக்கு கண்ணு மசமசப்பா இருக்கு என்னனு தெரியல
:)
வாழ்த்துக்கள் ராம்
ReplyDelete//என்னமோ எழுதியிருக்கு கண்ணு மசமசப்பா இருக்கு என்னனு தெரியல //
ReplyDeleteஎலே மின்னல பாக்காதலே
பாத்தின்னா இப்படிதான்
கண்ணு கெட்டு போகும்
வாழ்த்துக்கள் ராம் !!
ReplyDeleteஇந்த வாரம் ராயலண்ணாவா...
ReplyDeleteஅப்ப பெஸ்ட் கண்ணா பெஸ்ட் தான் ;)
//என்னமோ எழுதியிருக்கு கண்ணு மசமசப்பா இருக்கு என்னனு தெரியல
ReplyDelete//
மின்னலு,
இது நம்ம இடம் இல்லை.... :)
//வாழ்த்துக்கள் ராம்//
நன்றி கதிரு...
//வாழ்த்துக்கள் ராம் !!//
நன்றி கதிரவன்
//இந்த வாரம் ராயலண்ணாவா...
அப்ப பெஸ்ட் கண்ணா பெஸ்ட் தான் ;)///
வெட்டிண்ணே,
சன் டிவி'க்கு யோசிச்சு முடிச்சது போதும், இனிமே அடுத்தப்படியா கலைஞர் டிவி விளம்பர டெக்னிக் படி யோசிங்க.... ;)
இந்தவார வலைச்சரம் ஆசிரியர் ராமா?
ReplyDeleteஅப்போ அசத்தலா தான் இருக்கும்!!!
சின்ன தல இராயலுக்கு வாழ்த்துக்கள் :))
ReplyDelete//இந்தவார வலைச்சரம் ஆசிரியர் ராமா?//
ReplyDeleteலக்கிண்ணே,
ஹி ஹி ஆமாம்... :)
//அப்போ அசத்தலா தான் இருக்கும்!!!//
ஒங்க நம்பிக்கையே நினைச்சு பார்க்கிறோப்ப கண்ணெல்லாம் கலங்குது........
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//சின்ன தல இராயலுக்கு வாழ்த்துக்கள் :))//
ReplyDeleteஏலேய் கப்பி,
சூரியன்னா ஒன்னே ஒன்னு தான் நீ கேள்விப்பட்டது இல்லையா???
அதுமாதிரி தல'ன்னா ஒரே தல'தான்... சிறுசு பெருசு எல்லாம் கிடையாது.
//சூரியன்னா ஒன்னே ஒன்னு தான் நீ கேள்விப்பட்டது இல்லையா???
ReplyDelete//
அக்காங்க்!
கப்பி! இனிமே இராயலுதான் அந்த சூரியன் புரிஞ்சிக்கோ!
சின்னத் தலன்னெல்லாம் சொல்லப் பிடாது!
தல! அம்புட்டுத்தேன்!
//நாமக்கல் சிபி said...
ReplyDelete//சூரியன்னா ஒன்னே ஒன்னு தான் நீ கேள்விப்பட்டது இல்லையா???
//
அக்காங்க்!
கப்பி! இனிமே இராயலுதான் அந்த சூரியன் புரிஞ்சிக்கோ!
சின்னத் தலன்னெல்லாம் சொல்லப் பிடாது!
தல! அம்புட்டுத்தேன்! //
ok தள ;)
பரிந்துரைக்கு நன்றிங்க :D
ReplyDelete