'எனக்கு சரம் தொடுக்கவெல்லாம் தெரியாது' என்று சொல்லிக் கொண்டு சரவெடியாக தொடுத்து விட்டார் சிநேகிதி. இயல், இசை, நாடகம் தாண்டி நடனம், ஓவியம், கவிதை, தாயக கீதங்கள் என்று கலைநயமிக்க வாரமாக வடித்துக் கொடுத்த சிநேகிதிக்கு எங்களின் நன்றிகள். பல புதிய பதிவுகள், பதிவர்களையும் அறிமுகப்படுத்தி ஒரு முன்மாதிரி வலைச்சர வாரமாக ஆக்கிவிட்டார்.
அடுத்தபடியாக வலைச்சரம் தொடுக்க வருபவரைப் பற்றிச் சொல்லுமுன், முதலில் பெரிய கும்பிடோடு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
தொடரும் கொண்டாட்டமாக, நட்சத்திர வானில் மின்னிக் கொண்டிருந்தவரை வலைச்சரத்துக்குக் கடத்திக் கொண்டுவர திட்டமிட்டிருந்தோம். என் கவனக்குறைவால் இடையில் ஒரு நாள் விட்டுப் போய்விட்டது.
ஆம்.. இந்த வார வலைச்சர ஆசிரியர் போனவாரம் தமிழ்மண நட்சத்திரமான சயந்தன் தான்... 'இந்திய நேரம்தவறாமை' விதிப்படி ஏற்பட்டுவிட்ட இந்தத் தாமதத்தை, மன்னித்து மறந்து தலைமை தாங்கி சிறப்பிக்க சயந்தனைக் கேட்டுக் கொள்கிறோம் ;)
பொன்ஸ் இது நியாயமா தர்மமா அடுக்குமா?? இப்பிடிச் சதி செய்திட்டிங்கிளே :-) சயந்தனண்ணா எவ்வளவு ஆவலா முதல்பதிவு போட காவல் இருந்தவர் நீங்கள் என்னடாவெண்டால் இப்பத்தான் ஆடி அசைஞ்சு கொண்டு வாறீங்கள் அறிமுகப்பதிவு போட.
ReplyDelete