Sunday, June 10, 2007

ஆசிரியர் அறிமுகம்

வலைச்சரம் தொடுக்க இராமைத் தொடர்பு கொண்ட போதே, அவர் அந்த வாரம் தான் விடுமுறை முடிந்து திரும்புகிறார் என்பதால் நேரம் கிடைக்காமல் போகலாம் என்று எதிர்பார்த்தோம். எனினும், தன் அலுவலக, சொந்த நேரக் குறைபாடுகளுக்கிடையிலேயும் சொன்னபடி மூன்று இடுகைகள் இட்டு வலைச்சரத்தை மிகவும் அழகாக வழிநடத்தியுள்ளார்.

வட்டார வழக்கு பதிவுகள் ஒரு சுவை என்றால், வணக்குமுங்க இடுகைகளும் சுகமானவை.. சிவாஜி படம் பற்றிய இடுகைகளை இராம் தொகுத்த பிறகு படத்தின் எதிர்பார்ப்பு குறித்த விரிவான விமர்சனங்கள் வர உதவி இருப்பது குறிப்பிடத் தக்கது.. நன்றி இராம்..

இந்த வார வலைச்சர ஆசிரியர் பற்றி நான் சொல்ல புதிதாக ஏதுமில்லை. வலைச்சரத்தின் பக்கப்பட்டியில் தோன்றும் அவர் பங்கேற்கும் பதிவுகளைப் பார்க்கையிலேயே எத்தனை சுறுசுறுப்பான பதிவர் என்பது விளங்கும். ஆசிரியர் தொடர்ச்சியாக, சுணக்கமில்லாமல் பங்கேற்கும் மூன்று பதிவு ஓடைகளை மட்டுமே இங்கே காண்பிப்பது என்ற எங்களின் உச்சவரம்பு எத்தனை குறைவானது என்று உணர வைத்த, 'திறவுமூல மென்பொருள் மேம்படுத்தோர் சங்க'(Opensource Promoter Team) உறுப்பினரான (தமிழ்வலைப்பதிவுகள் துறைத்தலைவர்? ;) ) ரவிசங்கரின் தொகுப்பில் வருகிறது இந்த வார வலைச்சரம்..

6 comments:

  1. //'திறவுமூல மென்பொருள் மேம்படுத்தோர் சங்க'(Opensource Promoter Team) உறுப்பினரான //

    மேம்படுத்தோர் / மேன்படுத்துவோர் /மேம்படுத்துவோர் - இதில் எது சரி; முதலாவது அவ்வளவாக நன்கு சத்தமிடவில்லையே!(it does not sound good - என்பதன் தமிழாக்கம்தான் !)

    ReplyDelete
  2. //ஆசிரியர் தொடர்ச்சியாக, சுணக்கமில்லாமல் பங்கேற்கும் மூன்று பதிவு ஓடைகளை மட்டுமே இங்கே காண்பிப்பது என்ற எங்களின் உச்சவரம்பு எத்தனை குறைவானது என்று உணர வைத்த,//

    ;)

    open source - திறமூல

    promoterக்கு மேம்படுத்துவோர் (மேம்படுத்தோர் - பிழையான சொல்) பொருந்தாது. பரப்புவோர் என்று சொல்லலாம். திறமூல மென்பொருளை (open source software) விட கட்டற்ற மென்பொருளில் / உள்ளடக்கம் (Free software / content) தான் நமக்கு ஆர்வம் அதிகம். சரி, ஒழுங்கு மரியாதையாய் ஆசிரியர் வேலை பார்க்கத் தொடங்குறேன் :)

    ReplyDelete
  3. தருமி,
    //it does not sound good -//

    அவ்வளவாக நன்கு ஒலிக்கவில்லையே!

    ReplyDelete
  4. //சிவாஜி படம் பற்றிய இடுகைகளை இராம் தொகுத்த பிறகு படத்தின் எதிர்பார்ப்பு குறித்த விரிவான விமர்சனங்கள் வர உதவி இருப்பது குறிப்பிடத் தக்கது.. நன்றி இராம்..//

    ஓ... அப்பிடியா? நன்றிக்கு நன்றி.... :)

    ReplyDelete