மணி அதிகாலை 2:00... விழி விளிம்பில் தள்ளாடிக்கொண்டிருக்கிறது தூக்கம்.
உடலின் சோர்வெல்லாம் கண்களிலும் விரல் நுனிகளிலும் முயங்கி நிற்கிறது.
ஒவ்வொரு விசையழுத்தமும் விரல்களால் மிக மிக யோசித்துச் செய்யப்படுகின்றன.
இருப்பினும் புத்தகம் பற்றிய பதிவுகளைப் போடாமல் எனது இந்த வாரத்தை
நிறைவு செய்வது சரியில்லை என்று படுவதால்....
புத்தகம் குறித்த பதிவுகளை நான் வழக்கமாக படிப்பது மதியின் புத்தகவாசம்
பதிவில் இருந்து. நல்ல சேவை அது. சினிமாவிற்கு ஒரு கீற்றுக்கொட்டாய் போல புத்தகங்களைக் குறித்த பதிவுகளுக்காக ஏற்படுத்தப்பட்ட தளம்.
சன்னாசியின் மூன்று மிக நல்ல புத்தக விமர்சனங்களோடு எனது இந்த வாரத்தை
முடிக்கிறேன். எழுத்தாளனை சகனாக மதித்து, குறைகளையும் நிறைகளையும் கூட
உட்கார்ந்து பேசும் பாவனையில் சரளமான தன்மையுடன் எழுதப்பட்ட விமர்சனங்கள்
இவை. எனக்கு மிகவும் பிடித்த "கொற்றவை" யின் விமர்சனத்தை அறிமுக
பதிவிலேயே கொடுத்திருந்தேன்.
நகுலன் நாவல்கள்
காடு
மார்க்குவேசின் சுயசரிதை
வாய்ப்பை அளித்த பொன்ஸுக்கு நன்றிகள். அடுத்த முறையேனும் இது போன்ற
தவறுகளை செய்ய வேண்டாம் :).
No comments:
Post a Comment