'மரணம் உங்கள் வீட்டு வாசற்படியைத் தட்டும்போது
அதனை எந்த பிரார்த்தனை கொண்டு அலங்கரிப்பீர்கள்?' என்று கேட்கிறது தாகூரின் கவிதை வரிகள்.
என தொடங்கி தன் மீளா துயரத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் நண்பர் ஆசிப்பின் மீண்டு(ம்) வருகிறேன் நண்பர்களே!!
வலைப்பூவில் அவர் எழுதியிருப்பது:
" யாஸ்மினிடம் கடைசியாகப் பேசியது நினைவுக்கு வருகிறது. "இன்றைக்கு ஒருநாள் மட்டும் கஷ்டப்பட்டு கொஞ்சம் வலியைப் பொறுத்துக்கம்மா. இனிமேல் வாழ்நாள் முழுக்க உனக்கு வலிக்கவே வலிக்காது" எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி நான் என்று நினைக்கும்போது மனது மரத்துப் போகிறது. வலியோடேனும் அவள் வாழ்ந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது."
இணைய உலகின் முக்கிய படைப்பாளிகளில் ஒருவரான ஆசிப்பின் சாத்தான் குளத்து வேதம் அனைத்துவித மணம், நிறங்கள் எனக்கூடிய பல வண்ண வலைமலராகும்.
நுனிப்புல் மேய்வதைப் பற்றி நேற்று எழுதியதை தனது வலைப்பூவின் தலைப்புடன் இணைத்து வாழ்த்தி பின்னூட்டம் இட்டிருக்கும் உஷா ராமச்சந்திரனின் நுனிப்புல் நான் தொடர்ந்து படித்து வரும் ஒன்று. நுனிப்புல் என அவர் தலைப்பிட்டிருந்தாலும் அதில் உண்மையில்லை. ஆரம்பத்திலிருந்தே அவரது பல படைப்புகளை படித்துவருவதால் இதை நான் ஆணித்தரமாக கூறுகிறேன். நீண்டக்காலமாக இணைய உலகிலும் ஊடகங்களிலும் எழுதிவரும் இவரின் மலர் அரங்கத்திற்குள் நுழைந்தாலே உங்களுக்கு அது புரிந்துவிடும். தோழியர்களுடன் இணைந்து முதன் முதலில் பெண்களுக்கான வலைப்பதிவு ஆரம்பித்தவர்களில் இவர் முக்கியமானவர் என்பது கூடுதல் செய்தி.
பின்நவீனத்துவம் என்றாலே பலர் ஓடிஒளிந்துக்கொள்ளும் இந்த காலத்தில் விடாமல் அதில் தீவிர ஆர்வம் காட்டுவதுமட்டுமல்லாமல், நவீனக் கவிதைகள், கட்டுரைகள், கதைகள் என முழுவதும் வித்தியாசமான தளத்தில் இயங்கி வருபவரும், பல அருமையான திரைப்படங்களை பற்றிய செய்திகளையும் விமர்சனங்களையும் தொடர்ந்து எழுதிவருபவருமான நண்பர் அய்யனாரின் தனிமையின் இசை என்னும் வலைமலர் அடர்ந்த வனாந்தரத்தில் எங்கோ பூத்து தன் மணத்தால் அனைவரையும் கவர்ந்திழுக்கும் அற்புதமான ஒரு வலைப்பூவாகும்.
ஜெசிலாவின் கிறுக்கல்கள் என தன் வலைப்பூவை குறிப்பிட்டிருந்தாலும் அதில் அவர் கிறுக்கியுள்ளவை கிறுக்கல்களல்ல என்பதை நாம் படிக்கும் போது தெரிந்துக்கொள்ளலாம். தொடர்ந்து மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும், பெண்ணியம் பற்றியும் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் குரல்கொடுத்து எழுதிவரும் இவர் கவிதைகளிலும் கலக்குகிறார் என்பதை நீங்கள் அவரது வலைப்பூவிற்கு சென்று பார்த்தால் தெரிந்துக்கொள்வீர்கள்.
அரசியல் கட்டுரைகள் மட்டும் தான் இவர் எழுதுவார் என நான் நினைத்திருக்கும் பொழுது அருமையான கதைகளும் எழுதி என்னை திகைக்கவைத்தவர் பினாத்தல் சுரேஷ். பினாத்தல்கள். மெல்லிய நகைச்சுவை இழையோட இவர் எழுதியிருக்கும் பல கட்டுரைகளில் மறைந்திருக்கும் கருத்துக்கள் இவரது ஆழமான பார்வையை வெளிப்படுத்துகிறது.
மேலே குறிப்பிட்டிருக்கும் அனைத்து பதிவர்களும் அமீரக பதிவர்கள். ஒரு சிலர் விட்டும் போயிருக்கலாம். இதில் உஷா மட்டும் இப்பொழுது துபாயில் இல்லை என நினைக்கிறேன்.
இன்னும் வரும்.
வித்தியாசமான வலைச்சரம் அதில் உள்ள மலர்கள் அனைத்தும் அமீரகத்தை சேர்ந்தது ஆனாலும் அருமையான மலர்கள் தொடரட்டும் உங்களின் சேவை :)
ReplyDeleteமஞ்சூர்
ReplyDeleteஎழுத ஆரம்பித்த புதிதிலிருந்து இன்று வரை தொடர்ந்த ஊக்கத்திற்க்கும் அவ்வப்போது சரிபார்த்துக்கொள்ள தொடர்ந்த விமர்சனங்களுக்கும் நன்றி என்ற ஒற்றை சொல் கண்டிப்பாய் போதாது.உங்களுக்கு என் நன்றியும் அன்பும்
மலர்களை நாடு வாரியாக பிரிக்கிறீர்கள் போலிருக்கே :-). உங்கள் அன்பிற்கும் ஊக்கத்திற்கு நன்றிகள்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமஞ்சூர் ராசா, மீண்டும் ஊக்க வார்த்தைகளுக்கு நன்றி.
ReplyDeleteஅமீரவலைப்பதிவர்கள் வரிசையில் தம்பி, மகேந்திரன், குசும்பன்,லொடுக்கு என்று இன்னும் சில பெயர்கள் விட்டுப் போய்விட்டன.
ஜெஸிலா அல்லது அய்யனார் சரியாக சொல்வார்கள் என்று நினைக்கிறேன்.
இப்படிக்கு,
எக்ஸ்- அமீரகவாசி
பின்னூட்டம் இட்ட அனு, அய்யனார், ஜெஸிலா, உஷா அனைவருக்கும் நன்றி.
ReplyDeleteஒரு சிலரின் பெயர்கள் விட்டு போயிருப்பது உண்மை தான்.
எழுத ஆரம்பித்த போது அமீரக பதிவர்களை பற்றி எழுதவேண்டும் என நினைக்கவில்லை. ஆனால் இறுதியில் எல்லோருமே அமீரக பதிவர்கள் ஆகிவிட்டனர். அதனாலேயே பல அமீரக நண்பர்கள் விட்டு போய்விட்டனர். நண்பர்கள் கோபித்துக்கொள்ள மாட்டார்கள் என நம்புகிறேன்.