அரசியல், சினிமா, கதை, கவிதை, ஆன்மீகம், பெண்ணியம், போட்டி, பாடல்கள், அனுபவம், அறிவியல், தத்துவம், செய்முறை விளக்கம் என்று பல துறைகளில் பல பதிவர்கள் எழுதுகிறார்கள். சண்டை, வாக்குவாதம், நட்பு என்று பல கோணல்களில் பதிவர் வட்டம் விரிந்து கிடக்கிறது.
நான் எழுத ஆரம்பித்த காலத்தில் எழுதிக் கொண்டிருந்த சில பதிவர்களை இப்போது காணவில்லை. அவர்களுள் ஒருவர் மனசுக்குள் மத்தாப்பு திவ்யா. சிறுகதைகளும், தொடர்கதைகளும் எழுதிக் கொண்டிருந்தவர் பெண்களை கவர்வது எப்படி? போன்ற சில பதிவுகளையும் எழுதி திருமணமான, ஆகாத ஆண்களுக்குப் பல குறிப்புகளை வழங்கிவந்த அவர் சென்ற வருட இறுதியில் பதிவுலகை விட்டுச் சென்றவர்தான் இன்னமும் திரும்பவே இல்லை.
வானிலை மாற்றம்போல், தமிழ் பதிவுலகில் அவ்வபோது சலனத்தை ஏற்படுத்திச் செல்லும் சிலப் பதிவுகள், அதனைத் தொடர்ந்துப் பல பதிவுகள் வர காரணமாக இருக்கும். கவிதாவின் "ஆண்கள் என்ற மிருகங்கள்", பாலபாரதியின் ஒளிந்து ஒலிக்கும் சாதியக் குரல் போன்ற பதிவுகள் அப்போதைய பலப் பதிவுகளுக்குக் காரணமாக அமைந்தது.
"அந்த" மாதிரி விசயங்களை தொடுவதற்கும் அதனை கையாள்வதற்கும் தமிழ் பதிவர்களுக்கு தனியாக தைரியம் வேண்டும். மூத்தப் பதிவரான ஜி.ராகவன் தன்னுடைய கள்ளியிலும் பால் தொடர் கதையில் இதனை அருமையாகக் கையாண்டிருப்பார். அதே போல் சிறுகதைகளுக்கென்ற ஆர்வத்தைத் தூண்டும் தனித்திறமையைத் தன்னகத்தேக் கொண்டிருக்கும் குப்புசாமி செல்லமுத்துவின் "அண்ணியின் அரவணைப்பில்" கதை பிரமிப்பைத் தரும் ஒன்று.
வானுக்குள் விரியும் அதிசயங்கள், படம் எடுக்கலாம் வாங்க போன்ற பலக் கருத்துள்ள பதிவுகளை எழுதி வருகிறாட் சி.வி.ஆர்.
பாலபாரதியை கலாய்க்கும் பா.க.ச, கைப்புள்ளையை கலாய்க்கும் சங்கம் தவிர்த்து, கவுண்டரின் டெவில் ஷோவையும் பதிவர்களைக் கலாய்க்கும் ஒரு உத்தியாகக் கண்டது தமிழ் பதிவுலகம். ராமின் வெட்டுகாரு செப்பண்டி, வெட்டியின் ர.ரா போன்ற பதிவுகளில் தனிமனித கலாய்த்தலின் நகைச்சுவையைப் பார்க்கலாம்.
இலங்கைத் தமிழர்கள் அவர்களது பேச்சு நடையில் எழுதுவது போல் வட்டார வழக்கில் எழுதுபவர் என்றால் உடனே ஞாபகத்துக்கு வருபவர் ஆசிப் அண்ணாச்சி. அவரது எழுத்துக்களின் நையாண்டி அனைவரையும் சிரிக்க வைக்கும்.
சில நேரங்களில் பதிவுகளையும் மிஞ்சும் அளவிற்கு அதற்கு வரும் பின்னூட்டங்கள் மிகவும் ரசிக்க வைப்பதாக இருக்கும். தம்பியின் எதிர்பால் ஈர்ப்பு பதிவுக்கு வந்தப் பின்னூட்டங்கள் பார்த்தாலே புரியும். மின்னுது மின்னலின் தலைமையில் கும்மிப் பின்னூட்டங்களும் சில நேரங்களில் சிரிக்க வைப்பதாக இருக்கும். கும்மிக்கென்று தனிப் பதிவே ஆரம்பித்தார்கள் என்றால் கும்மியின் மகிமை புரியும்.
தமிழ்மணம், தேன்கூடு போன்ற திரட்டிகளில் இணையாமல் தனியாக பதிவெழுதி வரும் சிலப் பதிவர்களும் நல்லப் பல பதிவுகளை தமிழ் பதிவுலகிற்குத் தந்திருக்கிறார்கள். ட்ரீம்ஸ் என்ற பதிவர் கவிதைகளில் மட்டுமல்லாமல் கவிதை எழுத குறிப்புகள், தத்துவம் என்று பலப் பதிவுகளை எழுதியுள்ளார். அதே பதிவர் வட்டத்தில் இருக்கும் பொற்கொடி, அம்பி போன்ற பதிவரின் பதிவுகள் மிகவும் நகைச்சுவையாக இருக்கும். தனியாக இயங்கும் பதிவர்கள் அவர்களுக்கென்று ஒரு தனி வட்டம் அமைத்ததுமட்டுமல்லாமல் ப்ளாக் யூனியன் என்ற ஒரு கூட்டுப் பதிவும் ஏற்படுத்தி எழுதி வருகிறார்கள். நானும் அந்த யூனியன்ல இருக்கேன் :)
இதுக்கு மேல உங்கள கஷ்டபடுத்த விரும்பல. அதுனால இத்தோட நிறுத்திக்கிறேன்.
Super Ji. :-))
ReplyDeleteIththoda niruththikkirennu kelambiddeenggale Boss??? :-(
\\நான் எழுத ஆரம்பித்த காலத்தில் எழுதிக் கொண்டிருந்த சில பதிவர்களை இப்போது காணவில்லை. அவர்களுள் ஒருவர் மனசுக்குள் மத்தாப்பு திவ்யா. \\
ReplyDeleteநல்ல பதிவர்...அப்போ நாம எல்லாம் ஒன்றாக மீட் பண்ணியது அவுங்க ப்ளாக்ல தான்னு நினைக்குறேன்...
\\ஜி.ராகவன் தன்னுடைய கள்ளியிலும் பால் \\
ராகவன் அவர்களோட எழுத்து சிறப்பான ஒன்னு அவரோட பின்னூட்டங்கள் கூட ஒரு உவமையுடன் தான் இருக்கும். மீண்டும் அந்த பழைய ராகவனை பார்க்க ஆசை..