Wednesday, October 17, 2007

சிந்தனை செய் மனமே

முற்போக்கு என்றால் என்ன?பிற்போக்கு என்றால் என்ன என்று கேட்டால், வாந்தி என்பது முற்போக்கு,வயிற்றுப்போக்கு தான்
பிற்போக்கு என்று யாராவது சொன்னால் பின்நவீனப்போக்கின் படி அது சரி தான்.

ஆனால் உண்மையான முற்போக்கு என்பது மனித இனத்தின் முன்னேற்றத்திற்கு,வளர்ச்சிக்கு உதவும் சிந்தனைகள்.பிற்போக்கு
என்பது வளர்ச்சிக்கு தடைக்கல்லாகவும்,பின்னோக்கிய பாதையிலும் சிந்திப்பது.

எனக்குத் தெரிந்த அருமையான பிற்போக்காளர் முன்னாள் மத்திய அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி அவர்கள்.ஜோதிடத்தை
ஒரு பாடமாக பல்கலைக்கழகங்களிலே கற்றுத்தர அவர் முனைந்த போது இந்தியாவின் நிலையை எண்ணி மிகவும் வருந்தினேன்.

பிற்பட்டவர்கள் எல்லாம் முற்போக்கர்களாகவும் ,முற்பட்டவர்கள் எல்லாம் பிற்போக்கர்களாகவும் இருப்பது ஒரு முரண்சோகம்.இதில்
விதிவிலக்குகள் உண்டு.

மனிதநேயம்,சாதிமறுப்பு,கடவுள் நம்பிக்கையை கேள்விக்கு உட்படுத்துவது போன்றவை முற்போக்கு எண்ணங்கள்.
தமிழ் வலையுலகில் முற்போக்காக சிந்தித்து எழுதும் நிறைய பேர் இருக்கின்றனர்.எனக்கு பிடித்த இருவர் தருமி,கல்வெட்டு.

உடல் தூய்மை என்று பார்த்தோமானால் பெண்கள் ஆண்களை விட ஒருபடி கீழ் தான் என்று பிரபல டாக்டர் கமலா செல்வராஜ்
அவர்களே , விஜய் டிவியின் நீயா,நானா? நிகழ்ச்சியில் ஒருமுறை திருவாய் மலர்ந்தார்.

எவ்வளவு அபத்தமான கருத்து இது என்பதை கல்வெட்டின்
http://kalvetu.blogspot.com/2006/07/blog-post.html
இந்தப் பதிவிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

"உலகத்தை இறைவன் படைத்தான்.நாமெல்லாம் சிறு பொம்மைகள்.உலகம் மிகவும் பெரியது.நாம் அனைவரும் சிறு துரும்பே.
இறைவன் காணும் கனவு தான் இந்த வாழ்க்கை" என்றெல்லாம் மனிதன் தான் உணர்ந்ததை ,அறிந்ததை வரலாறு முழுவதும்
பதிவு செய்து வருகிறான்.மனிதனின் அறிவு வளர்ச்சி அபரிமிதமான வேகத்தில் பெருகிக் கொண்டிருக்கிறது.
50 வருடங்களுக்கு முன்னால் இருந்த அறிவு வளர்ச்சியை விட இப்போது உள்ள அறிவு மேம்பட்டிருக்கிறது.
ஆனால் கடவுள் விசயத்தில் மட்டும் 1000 வருடங்களுக்கு முந்தைய அறிவையே இப்போதும் பின்பற்றுகிறோம்.
இதையும் காலத்திற்கு ஏற்றவாறு மனிதன் மேம்படுத்திக்கொள்ள வேண்டாமா என்று கேட்டால் வேண்டாம் என்று ஒரு
கூட்டம் எப்போதுமே சொல்லிக்கொண்டு வருகிறது.

வலைப்பதிவுகளில் இறைநம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கியவர்களில் முதன்மையானவர் தருமி அய்யா.அவரின் இந்தத் தொடரை
http://dharumi.blogspot.com/2005/09/49-1.html
படித்துப் பாருங்கள்.கடவுள்,மதம் போன்றவை பற்றிய புதிய எண்ணங்கள் மண்டைக்குள் வெள்ளமாகப் பாய்ந்தோடும்,
உங்கள் அறிவுக்கு அணை போடாமலிருந்தால்.

நாளை சந்திப்போம்.

3 comments:

  1. //வலைப்பதிவுகளில் இறைநம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கியவர்களில் முதன்மையானவர் தருமி அய்யா.//

    ஆம். தருமி அய்யாவின் சேவை பாராட்டுக்குரியது.

    இப்பதிவில் அண்ணன் பாலபாரதி எழுதிய இவை எனது FAQ... பதில் சொல்லுங்க! சேர்த்திருந்தால் மிகப் பொருத்தமாக இருந்திருக்கும்.

    ReplyDelete
  2. பாலபாரதி பதிவின் சுட்டிக்கு நன்றி லக்கி.மிகவும் சூடான பதிவு,பின்னூட்டங்களும் பட்டையைக் கிளப்புகின்றன.

    ReplyDelete
  3. ஜாஜா,
    உங்களுக்கும் தம்பி லக்கி லுக் அவர்களுக்கும், உங்கள் இருவரின் பாராட்டுகளுக்காக நன்றி.

    ReplyDelete