- ஒன்று, ஆழ்ந்த அறிவும் அனுபவமும். தான் எழுதுவது கிட்டத்தட்ட சரியாகத்தான் இருக்கும், அதைப் பார்த்து மற்றவர்கள் சிரிக்க மாட்டார்கள் என்ற புலமை வேண்டும்.
- இரண்டு. தன்னம்பிக்கை. தொழில் ரகசியங்களை எல்லாம் எழுதி விட்டால் மற்றவர்கள் அதை நகல் செய்து நமக்கு போட்டியாக வந்து விட மாட்டார்கள் என்ற நம்பிக்கை வேண்டும்.
- மூன்று. சொல்வதை சுவையாக படிப்பதற்கு புரியும் படி எழுதும் திறமை வேண்டும்.
இரண்டாவதாக என்னைக் கவர்ந்தவர் ஜோயல் ஸ்பால்ஸ்கி என்ற மென்பொருள் வல்லுனர். பெரிய நிறுவனங்களில் வேலை செய்வதை விட்டதிலிருந்து ஆரம்பித்து, சொந்தமாக நிறுவனம் ஆரம்பித்து நடத்தி வரும் கடந்த 8 ஆண்டுகளாக மென்பொருள் துறை குறித்து, மென் பொருள் உருவாக்கம் குறித்து, வேலைக்கு ஆள் தேடுவது குறித்து உள்ளது உள்ளபடி எழுதியுள்ள இடுகைகள் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு லட்சக்கணக்கான வாசகர்களால் படிக்கப்பட்டு வருகின்றன.
மொழிபெயர்ப்பை பகுதி நேர தொழிலாக ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வரும் தனது அனுபவங்களை் தனது பதிவுகளில் அவ்வப்போது பகிர்ந்து கொள்கிறார் டோண்டு ராகவன். கால் இடறாமல் கவனமாகப் போய்ப் படித்து விட்டு வரலாம்.
No comments:
Post a Comment