1. இவரது சமீபத்திய பயணத்தொடர் - நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்
2. தினசரி வாழ்வில் தான் சந்தித்த சக மனிதர்களைப் பற்றிய இவரின் எழுத்தோவியம்
3. நியூசியின் வரலாற்றை எளிமையான தொடராக்கித் தருகிறார்.
உஷா வலைப்பூக்களில் மட்டுமல்ல அச்சு ஊடகங்களிலும் வெற்றிகளைப் பெற்றுவரும் எழுத்தாளர். நல்ல கதைகள், சமூக அக்கறை உள்ள பதிவுகள், அப்பப்ப நடுவுல காமெடி கலந்த பதிவுகள்னு எல்லாவிதமாவும் அடிச்சு ஆடுவாங்க. நல்ல தெளிவான சிந்தனைக்குச் சொந்தக்காரர்.
1. தீதும் நன்றும் பிறர் தர வாரா என்கிற அருமையான படிப்பினையைத் தன் சொந்த அனுபவத்தின் மூலம் விளக்கும் விழிப்புணர்வுப் பதிவு.2. பெரும்பாலான வலைப்பதிவர்களின் வாழ்க்கையை வ.ப.மு , வ.ப.பி என்றே பிரித்துவிடலாம் என்பதுதான் யதார்த்தம். இதை அருமையாகப் பகடி செய்கிறார் இந்தப் பதிவில்.
3. இது என்னோட நேயர் விருப்பமா அவர் போட்ட கவிதைப் பதிவு.
மதி என்று சுருக்கமாய் அறியப்படும் சந்திரமதி கந்தசாமி - அநேகமாய் வலைப்பதிவு ஆரம்பித்த எல்லோருமே ஏதேனும் ஒரு தொழில்நுட்ப உதவியை இவரிடமிருந்து பெற்றிருக்கக்கூடும். அவ்வளவுக்குப் பிறருக்கு உதவும் இயல்பும், வலைத் தமிழ் பற்றிய தொழில்நுட்பக் கூர்மையும் உடையவர். மிகப் பரந்த வாசிப்பனுபவம் கொண்டவர். உலக சினிமாக்கள், ஜாஸ் இசை என்று பல்வேறு விஷயங்களைப் பதிந்து வரும் இவர் இயற்கை விரும்பியும் கூட.
1. வோர்ட்பிரஸ் மற்றும் தனி இணையதளம் நிறுவுதல் தொடர்பாக இவர் அண்மையில் எழுதியுள்ள பதிவு.
2. ஈழத்து இலக்கியம் என்ற தலைப்பின் கீழ் ஈழத்தமிழ் இலக்கியத்தைப் பற்றிய ஒரு சாளரத்தைத் திறக்கிறார்.
3. அவ்வப்போது சமீபத்தில் தன்னைக் கவர்ந்த பதிவர்களின் பட்டியலையும் அவர்களைப் பற்றிய சிறுகுறிப்புகளையும் வெளியிடுகிறார்.
4. தன்னைச் சுற்றி நடக்கும் தமிழிலக்கியம் சார்ந்த நிகழ்வுகளை அக்கறையோடு பதிந்து வைக்கிறார் இந்த இழையில்.
5. உலக சினிமா பற்றிய இவரது பார்வை.
6. தன்னைக் கவர்ந்த இசை நிகழ்வுகளை ஒலி-ஒளிப் பதிவுகளாக்குகிறார் இந்த இழையில்.
செல்வநாயகி - கவித்துவமான எழுத்து நடை கொண்ட இவர் பேசுவது பெண்ணியம் உள்ளிட்ட அனைத்து வகையான ஒடுக்கப் பட்டவர்களின் உரிமைப் போராட்டங்களைப் பற்றியும். தொழில் முறையில் ஒரு வழக்கறிஞரான இவர் இப்போது வசிப்பது வெளியூரிலென்றாலும் தன் உணர்வுகளை வலைப்பதிவு மூலம் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.
1. உலகம் இருக்கும் கிரகத்தைவிட்டு இன்னொரு கிரகத்திற்கு இடம்பெயர்ந்தாலும் அங்கும் மதங்களையும் அதன் சண்டைகளையும் அப்படியேதான் எடுத்துச்செல்வானா மனிதன் என்கிற இவரது கேள்விக்கான அபாயகரமான பதில் ஆமென்பதுதானே?
2. ஒரு கவிதையில் தொடங்கி ஆணித்தரமான வாதங்களுடன் விரியும் இவரது வாதம் - பெண்கள் மூடிக்கொள்ள வேண்டும் என்கிற சர்வமத தத்துவத்தின் மீதானது.
3. ஜிகினாக் கவிஞரென்று அறிவுஜீவிகளால் அறியப்படும், சினிமாப் பாடல் எழுதுவதான கீழான தொழில் செய்வதற்காய் சற்றே தரம் தாழ்ந்ததென்று முத்திரை குத்தப்படும் வைரமுத்துவின் ஒரு அருமையான கவிதையை இங்கே பகிர்கிறார்.
4. மாற்றங்களை ஏற்றுக் கொண்டு வாழும் ஒரு பக்குவமிக்க தம்பதியினரின் பேட்டியை தன் குறிப்புகளோடு இப்பதிவில் கொடுத்திருக்கிறார்.
பத்மா அரவிந்த், இவரும் அமெரிக்காவிலிருந்து வலைப்பதிபவர். மருத்துவத் துறையில் பணிபுரிந்து வரும் பத்மா உடல் நலக் கல்வி குறித்த ஒரு வித்தியாசமான பார்வையை முன்வைக்கிறார். மனிதநேயமும் சமுதாய நலன் குறித்த அக்கறையும் விரவிய இவரது எழுத்து ஆடம்பரமில்லாத எளிய மனதைத் தொடும் எழுத்து.
1. மணமுறிவுக்கான காரணங்களை அலசுகிறார் இத்தொடரில்.
2. தன் வாழ்க்கைத் துணையை சந்தித்த இனிய் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார் இப்பதிவில்.
3. மதங்கள், நாடுகள் என்ற எல்லை கடந்து நிற்பது ஆதிக்க உணர்வு. அதன் பல்வேறு வடிவங்களைப் பற்றிய தனது கருத்தை தொடராக்கித் தருகிறார்.
4. நம் சமூகத்தில் அறிவுரை வழங்காத/வாங்கியிராத மனிதர்களே இருக்க முடியாது. மிகச் சுலபமாய்க் கிடைக்கும் பொருளிது. ஆனால் தவிர்க்க இயலாததும் கூட. ஆனால் அறிவுரை எரிச்சலூட்டுவதாய் இருந்து விடக்கூடாது. எப்படி இருக்கலாம் என்று சில எடுத்துக்காட்டுகள் மூலம் சொல்கிறார் இங்கே.
இன்னமும் எனக்குப் பிடித்த பதிவர்களின் பட்டியல் பெரிது. இருக்கும் நேரமும் என் பொறுமையும் சிறிதென்பதால் இப்பட்டியலை இத்துடன் முடித்துக் கொள்கிறேன். இங்கே போனால் நீங்களே விடுபட்டுப் போன நன்முத்துக்களை கண்டெடுக்கலாம்.
சூப்பர் ஸ்பெஷலா போட்டுட்டீங்க.
ReplyDeleteநம்மையும் கண்டுக்கிட்டதுக்கு நன்றி.
மதியைப் பத்திச் சொன்னீங்களே அது சத்தியமான உண்மை.
துளசிதளம் டெம்ப்ளேட்கூட அவுங்க எனக்காக ஸ்பெஷலாத் தயாரிச்சுக் கொடுத்ததுதான்.
தினமும் மதியை நினைக்காம என் நாள் போகாது.
நன்றி மறப்பது நன்றல்ல......
//அநேகமாய் வலைப்பதிவு ஆரம்பித்த எல்லோருமே ஏதேனும் ஒரு தொழில்நுட்ப உதவியை இவரிடமிருந்து பெற்றிருக்கக்கூடும்.//
ReplyDeleteஅப்படியா சொல்லவேயில்லை!
நான் மதி செய்யும் உதவிகளைப் பற்றிய இருவேறு கருத்து இருக்க முடியாது, ஆனால் இப்படி ஒரு கருத்து சொல்லக்கூடாது.
Exceptions are always there என்பது மட்டுமில்லாமல் இந்தக் கருத்தில் Exceptions அதிகமாக இருக்கும்.
பாராட்டுக்கு நன்றி டீச்சர். அப்புறம் ஒன்னு பதிவுல குறிப்பிட விட்டுப் போச்சு. தொழில்நுட்ப உதவி மட்டுமில்லை, புதுசா எழுதறவங்களை கவனிச்சு பாத்து ஊக்கமூட்டுறதும் ஒரு பெரிய உதவிதானே. எனக்கே கூட அந்த உதவிய செஞ்சிருக்காங்க.
ReplyDeleteபதிவு ஆரம்பிச்ச புதுசுல அதிகம் எழுதத் தோணினதில்லை. நாம எழுதி யாரு படிக்கப் போறான்னு விட்டுட்டேன். எங்கயோ பின்னூட்டங்களில் நான் வழக்கம் போல சண்டை பிடிச்சுகிட்டிருக்கையில் பாத்துட்டு தேடி வந்து என்னோட சோதனைப் பதிவுல ஒரு பின்னூட்டம் போட்டிருந்தாங்க. அடுத்தவங்க இடத்துல போய் பேசினா மட்டும் போதாது, அப்பப்ப நீயும் சொந்தமா எதுனா எழுதணும் ராசாத்தின்னு. :-) ஆகா நம்மையும் ஒருத்தர் படிக்கறாங்கப்பா, ரொம்ப நல்லவங்களா இருக்காங்களேன்னு எனக்கு சந்தோஷம் பொங்கித்தான் கிறுக்கித் தள்ள ஆரம்பிச்சேனாக்கும்.
வந்து கருத்துச் சொன்னதுக்கு நன்றி மோகன் தாஸ்.
ReplyDelete//அநேகமாய் வலைப்பதிவு ஆரம்பித்த எல்லோருமே ஏதேனும் ஒரு தொழில்நுட்ப உதவியை இவரிடமிருந்து பெற்றிருக்கக்கூடும். // தடித்த எழுத்திலிருக்கும் இரண்டு வார்த்தைகளுமே நீங்கல் சொல்லும் விதிவிலக்குகளை மனதில் வைத்துத்தான் எழுதப்பட்டவை மோகன்.
ReplyDeleteஇந்தப் பதிவில் பொன்ஸின் தொழில்நுட்ப அறிவு குறித்தும் அவரது உதவும் பண்பைக் குறித்தும் குறிப்பிடாததுக்கான காரணம் அது முகஸ்துதியாகத் தோன்றிவிடுமோ என்பதால்தான்.
இது என் சொந்தப் பதிவில்லை என்பதாலும் , பொதுவான ஒரு தளமென்பதாலும் முடிந்த அளவு சாய்வின்றி எழுதவேண்டுமென்றுதான் முயல்கிறேன். மீறியும் எனது விருப்பு வெறுப்புக்கள் என் எழுத்தில் தெரியக்கூடும்தான். மனித இயல்பல்லவா அது? மன்னித்து விட்டுவிடுங்கள் மோகன். அடுத்தவர் பற்றிய விவாதமென்பதாலும், பொதுத்தளமென்பதாலும் இதை நான் ஒரு விவாதமாக்கிட விரும்பவில்லை. புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். இருக்கவே இருக்கிறது என்னுடைய பதிவு. வாருங்கள் அங்கு, சூரியனுக்கு அடியிலிருக்கும் எது பற்றியும் விவாதிக்கலாம். ஆனால் தவறியும் நமது சண்டையில் எழும் புழுதி அடுத்தவர் மீது படிந்துவிடாதிருக்க முயல்வோம்.
நானும் Exceptions பத்தி எழுதியிருக்கேன். அதைப்ப்பத்தி தொடர விரும்பலை... விட்டுடுறேன்.
ReplyDelete//சூரியனுக்கு அடியிலிருக்கும் எது பற்றியும் விவாதிக்கலாம். //
இந்த ஸ்டேட்மென்ட் தப்புன்னு நினைக்கிறேன். சூரியனுக்கு கீழ்ன்னா என்னா சொல்லவரீங்க? பூமி மற்ற கிரகங்களெல்லாம் சூரியனுக்கு கீழ இருக்குன்னா?
வலைச்சரம் தொகுப்பதற்கு தாமதமாக வந்து வாழ்த்துகிறென் லக்ஷ்மி.. ... இனிப்புல தொடங்கி ஸ்பெஷல் எல்லாமே நல்லா இருக்கு
ReplyDeleteமோகன் ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல...அவங்க வாய பிடுங்கி ஏதாவது வந்து விழுதா? விவாதிக்கலாமான்னு :)
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி முத்து.
ReplyDeleteமோகன்,
ReplyDelete//பலசமயங்களில் படிப்பவர்கள் கொஞ்சம் தெரிந்தவர்களாக இருப்பார்கள் என்று நினைத்து ஏமாந்துவிடுவதுண்டு. மன்னிக்கவும்//எங்கயோ இப்படி ஒரு டயலாக் கேட்ட நினைவு. இப்ப நானும் அதே தப்ப செஞ்சிட்டேன். மன்னிச்சுக்குங்க ஐயா...
இங்கன போய் பாருங்க -
http://idioms.thefreedictionary.com/under+the+sun
//எங்கயோ இப்படி ஒரு டயலாக் கேட்ட நினைவு. இப்ப நானும் அதே தப்ப செஞ்சிட்டேன். மன்னிச்சுக்குங்க ஐயா...//
ReplyDeleteஇல்லை; முன்னமே சொன்னது போல் அந்த idiom தெரியும் ஆனால் அதைப் போன்றவைகளை அப்படியே(ஆங்கிலத்தில்) உபயோகிப்பது நலம். மொழிப்பெயர்ப்பது அல்ல. அதுமட்டுமல்லாமல் அந்த சொற்றொடரின் ரிஷி நதிமூலங்கள் எனக்குத் தெரியாது.
ஒருவேளை உண்மையிலேயே சூரியனுக்குக் கீழ் இருப்பதாக நினைத்துக்கொண்டிருந்த பொழுது வழங்கப்பட்டதாக/எழுதப்பட்டதாக இருக்கலாம். நம்மூர் பழமொழிகளைப் போல் அதற்கும் வரலாறு இருக்குமாயிருக்கும்.