முதலில் பீலா என்பது தமிழா என்ற கேள்வியை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு நான் ஃபீல் பண்ணிய சிறுகதைகள் சிலவற்றை தொகுக்க முயல்கிறேன்.
ஆரம்ப காலம் தொட்டே தமிழ் வலைப்பதிவுகளில் சிறுகதைகள் அதிகம் படிக்காதவன் நான் புதுமைப் பித்தனைத் தவிற. ஏனோ நாவல்கள் ப்டிப்பதில் இருக்கும் பெரிய ஆவல் சிறுகதைகளை படிக்க எண்ணினால் காணாமல் போகின்றன. அதற்கு ஆரம்பம் தொட்டே நான் சிறுகதைகளை படிக்காமல் இருந்துவந்தது காரணமாய் இருக்கலாம் ஆனாலும் சில நண்பர்கள் படித்துவிட்டு நல்ல கதை எனச் சொன்னபின்னும் படிக்காமல் இருந்தால் எங்கே கூகுள் டாக்கில் கூப்பிட்டு கடித்து விடுவார்களோ என்ற காரணங்களுக்காய் படித்து பின் அவை மனசில் ஒட்டிக்கொண்ட கதைகளின் தொகுப்பே இந்த ஃபீலிங் எக்ஸ்பிரஸ் .
எந்த திருப்பமும் இல்லாமல் சிறுகதை அதன் போக்கில் போகும் போது நாவலாகி விடுகிறது. ஆனால் நாவலில் கிடைக்கும் கால அவகாசம் அதிகம் என்பதால் அவை மிகுந்த கவணம் இன்றியே எழுதப் படுகின்றன . ஒரு அத்தியாயம் குளருபடியானால் அடுத்த அத்தியாயம் ஒரு கொசுவத்தியை கொளுத்தி முந்தய பகுதிக்கு வக்காலத்து வாங்கும் பழக்கம் சிறுகதைகளில் இல்லை என்பதாலோ என்னவோ சிறுகதைகள் மிகச் சீக்கிறமாய் படிக்கவும் பின் கிழிக்கவும் முடிகின்றன அதே வேளை சில கதைகள் நாம் எதிர்பார்க்காத சம்பவங்களை அள்ளித் தெளிக்காமல் அதன் பாட்டுக்கு இருப்பதாலேயே முழு கதைகளாகும் அதிசயம் நடந்திருக்கின்றன அந்த வகையில் இந்தக் கதைகளை சொல்லுவேன்...
நீங்களும் படித்துவிட்டு ஃபீலாகுங்கள் நண்பர்களே :)
டுபுக்குவின் பிரசவம்
ஞானசேகரின் அத்தைமார் முத்தம்
ஜெயந்தி சங்கரின் தலைச்சன்
செல்வராஜின் மாண்டவன் கதை
தமிழ்மணத்தின் முதல் நாவல் சிபியின் மாதங்களில் அவள் மார்கழி
டல்லாஸ் போகப்போற கப்பியோட இறப்பும் இறப்பு சார்ந்ததும்
இன்னும் சில கதைகள் மனசை (?) தொட்டிருந்தாலும் எல்லாவற்றிலும் சிகரமாக அய்யனாரின் இந்தக் கதையைச் சொல்லுவேன்
No comments:
Post a Comment