தமிழ்மணத்தை விட்டு சற்று விலகி இருக்கும் ஆனால் அடிக்கடி தமிழ்மணத்துக்கு வந்து போகும் சிலரை பாக்கலாம்.
விக்கியின் தண்டரோ, இது கண்டதையும் சொல்லும், ஆனால் உருப்படியாக சொல்லும். இவரை பத்தி சொல்லனும் என்றால் ஒரே வரியில் புதுமை விரும்பி. எல்லாத்தையும் எழுதுவார், கவிதையை தவிர :) நான் விரும்பி படிக்கும் பதிவர்களில் ஒருவர். இவர் பதிவுகளில் குறிப்பிட்டு ஒரு பதிவு சொல்வது கடினம். இவர் தொடர்ந்து தலைப்பிட்டு எழுதும் "நினைத்தேன் எழுதுகிறேன்" தான் என் முதல் விருப்பம். நீங்களும் அதை பாருங்களேன்.
விக்கி யின் - நினைத்தேன் எழுதுகிறேன்
உமாநாத்(விழியன்)- இவர் கதைகள், கவிதைகள், சிறுவர் கதைகள், புகைப்படங்கள், புத்தக விமர்சனம், இலக்கியம் என எல்லாத்திலும் கலக்கும் பதிவர். இவரை நேரில் சந்தித்த பிறகு தான் இவரின் வலைப்பூ அறிமுகம். பகத்சிங் அள்ளிய ஒரு பிடி மண் பகத்சிங் க்கு கடிதம் எழுதுவது போல் இவர் இட்ட பதிவு உங்கள் பார்வைக்கு.
விழியனின் - மண்ணின் மைந்தனுக்கு ஒரு பிடி மண்ணின் கடிதம்
வேதா - இவர் கதைகள், கவிதைகள், நாட்டு நடப்பு, ஆன்மிகம் என பல வித முகங்களை காட்டுபவர். சொல்ல வருவதை சில சம்பவங்களுடன் கோர்த்து விவரிப்பதில் வல்லவர். மார்கழி மாதம் நெருக்கும் இந்த நேரத்தில் மார்கழி மாத கோலங்களையும், திருபாவையை(பாடல் + பொருள்) பற்றியும் பேசுகிறார் இந்த பதிவில்
வேதா - மாதங்களில் நான் மார்கழி(பாடல் 1-5)
ட்ரீம்ஸ் - இவர் கன்னாபின்னானு கவிதை எழுதுவார். அதுக்கு மிக அழகாக படம் எடுத்து போடுவார், அதை காணவே இவர் பதிவுக்கு முன் அடிக்கடி போவது உண்டு. இப்பொழுது ப்ளாக் யூனியன் மூலம் பழக்கமும் கூட. நம்மள போலவே மல்லாக்க படுத்து விட்டத்தை வெறித்து பார்த்து ரொம்ப யோசிப்பவர் என்று நினைக்குறேன். இவரின் தீபா என்ற பதிவு, என்ன அழகு னு நீங்களே போய் பாருங்க.
ட்ரீம்ஸ் - தீபா
ஷாம் - நாட்டமை என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படுபவர். இவரின் TBI & R கலாட்டாஸ் பதிவுகள் மிகவும் அருமையாக இருக்கும்.
ஷாம் - TBI
பி.குறிப்பு :
இதை தவிர தமிழ்மணத்தில் சேராத பல பதிவர்கள் உள்ளார்கள். சிலர் தங்கிலிஷ், சிலர் முன்பு அவ்வாறு எழுதி பின் தமிழுக்கு மாறியவர்கள். 2006 யில் வெளிவந்த பதிவுகளாக கொடுக்க விழைந்த காரணத்தால் அவர்கள் பதிவுகளை குறிப்பிட முடியவில்லை.
பயனுள்ள தொகுப்புகள். நன்றி!
ReplyDeleteநல்ல தொகுப்பு சிவா. என் பதிவையும் சேர்த்தமைக்கு நன்றி :-)
ReplyDeleteநல்ல சுட்டிகள்..நன்றி சகா ;)
ReplyDeleteஆஹா .. இன்னும் பத்து நாளைக்கு தூங்கவே முடியாதே ;)
ReplyDeleteவசிஸ்டர் வாயால் ... :)
பா.பா!
ReplyDelete__/\__ :)
விழியன் !
நான் என் கடமையை தானே செய்தேன் ;) யூ வெல்கம்
@ வேதா!
ReplyDeleteஇன்னும் Credit ஆகல என்னனு சீக்கிரம் பாருங்க...
இது நன்றி எல்லாம் எதுக்கு.. எல்லாமே ஒரு கணக்கு தானே ;)
//கோபிநாத் said...
ReplyDeleteநல்ல சுட்டிகள்..நன்றி சகா ;)//
நான் தான் நன்றி சொல்லனும் சகா. தொடர்ந்து வந்து படிக்குறீயே அதுக்கு :)
//Vicky said...
ReplyDeleteஆஹா .. இன்னும் பத்து நாளைக்கு தூங்கவே முடியாதே ;) //
விக்கி தன்னடக்கம் இருக்கலாம், ஆனா அந்த தன்னடக்கம் என்கிற வார்த்தைக்கும் கீழே போவது நல்லா இல்ல சொல்லிட்டேன் :)
//வசிஸ்டர் வாயால் ... :)//
பாலா சொன்னதை சொல்லுறீங்களா.. சரி தான்... அவரே நல்ல தொகுப்புனு சொல்லிட்டார். அப்புறம் என்ன...
நான் எஸ்கேப் :)