Tuesday, November 20, 2007

வலைப்பதிவில் பாடகர்கள்

இந்த தலைப்புல நான் எழுதனும்னு ஆசைப்பட்டதுக்கு காரணம் எங்க குரூப்ல இருக்கற சூப்பர் ஜோடி கிட்டு மாமா & மாமி தான். இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து பாடினா கச்சேரி சும்மா சூப்பரா களைகட்டும்.

இவங்க பாடின டூயட்ல எனக்கு ரொம்ப பிடித்தது நறுமுகையே . பின்னனி இசை இல்லாம கூட இவங்க கலக்கி இருப்பாங்க.

காதலர்கள் தின சிறப்பு விருந்தா இவங்க பதிவிட்ட மலர்களே மலர்களே பாட்டும் அசத்தலா இருக்கும்.

இவரே பாடல் வரி எழுதி மெட்டு போட்டு பாடிய பாடல் இங்கே.

இவங்களோட பாடல் தேர்வே கலக்கலா இருக்கும். மற்ற பாடல்களை இங்க போய் ஒரு எட்டு கேட்டுட்டு வாங்க.

எங்க கிட்டு மாமாவோட இன்னொரு ஸ்பெஷாலிட்டி அவரோட குறள். 2 லைன் குறளுக்கு html லிங்க எல்லாம் குடுத்தா கொஞ்சம் ஓவரா இருக்கும். அதனால இங்கயே சாம்பிளுக்கு சிலது குடுக்கறேன்.

துன்பங்களைக் கண்டு கலங்காதவனைத் தொடரும்
துன்பங்கள் துன்பப்பட் டழிந்துவிடும்

பொருளடக்கம் : இடுக்கண் அழியாமை


இப்படி சீரியஸா மட்டும் தான் எழுதுவாருன்னு தப்பா நினைச்சுக்காதீங்க. காமெடியும் கலந்தே குடுப்பாரு.

கஷ்ட்டப்பட்டு ஆணிபுடுங்கியதை மதிக்காத மேனேஜர்களை
கோணியிலிட்டு கும்முவதே சிறப்பு

பொருளடக்கம் : கள்ளிப்பால்

கண்சிமிட்டும் நேரம் இதயம் சிமிட்டுகிறதடி
ஒருவினாடியுன்னை பார்க்க முடியாதென்று

பொருளடக்கம் : ஐஸ் கட்டி பால்

குறள்ல பொருளடக்கத்த கவனிச்சீங்களா? அதுலயும் இவரோட குசும்பு எக்கச்சக்கமா இருக்கும் :) மற்ற குறள்களையும் படிக்க...

இவரோட திறமை இதோட முடியலைங்க. இன்னும் கதை, கவிதை, விமர்சனம், கலாட்டான்னு இவர் விட்டு வைக்காத சப்ஜெக்டே இல்ல. நேரம் கிடைக்கும்போது அவர் வலைப்பூல பழச எல்லாம் எட்டிப்பாருங்க.



*******************

அழகான குரல்வளம் கொண்ட இன்னொரு வலைப்பதிவர் நம்ம மருதம். அவங்களோட வலைப்பூவ நானும் ரொம்ப படிச்சதில்ல. ஆனா அவங்க பாட்ட கண்டிப்பா மிஸ் பண்ண மாட்டேன். நீங்களும் கேட்டு ரசிக்க இங்குட்டு போயிட்டு வாங்க.



*******************

அடுத்து நாம கேட்கப் போற குரல் கே.கே.வோடது . இந்த பாட்டு இவருக்கு ரொம்ப பிடித்த பாட்டாம். படம் வர்றதுக்கு முன்னாடியே இந்த பாட்ட பல முறை கேட்டு ரொம்ப ஆர்வமா படத்தோட ரிலீஸ்க்கு காத்திருந்தவரு, படம் வந்ததும் இந்த பாடல் படமாக்க பட்டிருந்த விதத்தை பாத்து ரொம்ப கடுப்பாகிட்டாரு. இந்த பாட்டு எப்படி படமாக்கலாம்னு அவரு கற்பனை பண்ணி எழுதியிருப்பாரு (மன்னிச்சிக்கோங்க. பதிவு ஆங்கிலத்துல இருக்கும்). அதோட நிறுத்தினாரா இவரு? இவன் எடுத்த காட்சிக்கு ஏ.ஆர். ரஹ்மான் பாடினதெல்லாம் ரொம்ப ஜாஸ்தி. நான் பாடறதே போதும்னு அவரு பாடி அதையும் அந்த பதிவோட சேத்திருப்பாரு பாருங்க... வாய்ப்பே இல்ல. இந்த பதிவு வந்த காலத்துல இந்த பாட்ட கேட்டு வயிறு வலிக்கற அளவுக்கு சிரிச்சிருக்கேன் நான். (தங்கிலீஷ் படிக்க கஷ்டமில்லன்னா அந்த பதிவோட பின்னூட்டத்த படிச்சு பாருங்க. சும்மா குசும்பன் சொல்ற மாதிரி கலாய் கலாய்ன்னு கலக்கலா கலாய்ச்சிருப்போம் :)) )

இவர் பாடினதுல எனக்கு பிடித்தவை ராஜ ராஜ சோழன் நான் & கண்ணே கலைமானே

இன்னிக்கு இம்புட்டுத்தானுங்க :)

11 comments:

  1. அரூமையன பதிவு,

    இதேபோல பாலுஜி ரசிகர்களுக்கும் நாங்களும் போட்ருக்கோம்ல. இதோ சுட்டி.

    http://www.spbfansvoice.blogspot.com

    ReplyDelete
  2. கிட்டு மாமா & மாமி, மருதம் பாடியதை கேட்டு இருக்கேன் :)

    நன்றாக பாடியிருப்பாங்க..;)

    கே.கே இனிமேல் தான் கேட்க வேண்டும் ;)

    ReplyDelete
  3. ஸ்டார்ட் மியூஜிக் என்று சொன்னா நிஜமாவே ஸ்டார்ட் ஆயிட்டா!

    சூப்பர்:)

    ReplyDelete
  4. @வேதா

    வாங்க குருவே. கேட்டுட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க :)

    @கோவை ரவி

    நன்றிங்க. உங்கள் பாராட்டுக்கும் நீங்கள் தந்த சுட்டிக்கும் :)

    ReplyDelete
  5. @கோபி

    கேட்டு பாருங்க கோபி. அவங்களோட எல்லா பாட்டுமே அருமையா இருக்கும் :)


    @குசும்பன்

    நீங்க சொல்லி கச்சேரி ஆரம்பிக்காம இருக்குமா என்ன?

    பாராட்டுக்கு நன்றி :)

    ReplyDelete
  6. வணக்கம் G3 :)
    நல்ல ப்லாக். அருமையான முயற்சி. உங்கள் அனைவருக்கும் என் மனம் கனிந்த வாழ்த்துக்கள்.

    நல்ல தலைப்பு , அருமையான பதிவு. திரு & திருமதி கிட்டு பாடல்களைக் கேட்டு இருக்கிறேன். KK பாடியும் கேட்டிருக்கின்றேன். ஆனால் யார் அது மருதம்?? உங்களுக்கு ரொம்பவும் பெருந்தன்மை, சுமாராக படும் அந்த பதிவரையும் பட்டியலில் சேர்த்துக் கொண்டுள்ளீர்
    நன்றி !! :) வாழ்த்துக்கள்.

    என்றும் அன்புடன்,
    மருதம்

    PS: Am surprised to see some of the comments here :) I do not know few of the friends here, but they seem to have heard me. GLAD & Thanks to all the lovely hearts! :)
    CHEERS!!

    ReplyDelete
  7. இந்த பதிவுல ஒரு காப்பி,பேஸ்ட்(3ரோஸஸ்,பெப்ஸுடன்ட் இல்ல..) இல்லியே..?ஏனுங்க ஜி3, இத்தனை நாளா கட்டிக்காத்த பேரை நிலை நிறுத்த வேணாமா?..இல்லேன்னாக்கா எழுதறது ஜி3யான்னு எங்களுக்கெல்லாம் ஒரே சந்தேகமாயிருக்கில்ல.. ஹிஹி..
    அமைதியாய் அமர்ந்திருப்பவர்களையும் சபைக்கு அழைத்து (இழுத்து)வந்து வெளிச்சம் போட்டு காட்டும் ஜி3 ன் புதிய முயற்ச்சி பாராட்டுக்குறியது..வித்தியாசமாயிருக்கு.. தீபாவளிக்கு டீவியில தமிழ் தெரியாத நட்சத்திரங்களை பேட்டி எடுப்பதற்க்கு பதில்,உண்மையான நாட்டுப்புற கலைஞர்களை காட்டுவது போல.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. @மருதம்

    உங்க தமிழ் பின்னூட்டத்த பாத்து ஆச்சர்யம் :) இப்படியே கண்டினியூ பண்ணுங்க :)

    // சுமாராக படும் அந்த பதிவரையும்//
    தன்னடக்கத்துக்கும் கீழ போயிட்டீங்க. எழுந்து மேல வாங்க :)

    //but they seem to have heard me.//
    உங்க ரசிகர் படை எக்கச்சக்கம் உண்டல்லோ :))

    ReplyDelete
  9. @ரசிகன்,

    //ஏனுங்க ஜி3, இத்தனை நாளா கட்டிக்காத்த பேரை நிலை நிறுத்த வேணாமா?..//

    அதெல்லாம் நம்ம ப்ளாக்ல எப்பவும் போல நடக்கும் :)

    //அமைதியாய் அமர்ந்திருப்பவர்களையும் சபைக்கு அழைத்து (இழுத்து)வந்து வெளிச்சம் போட்டு காட்டும் ஜி3 ன் புதிய முயற்ச்சி பாராட்டுக்குறியது//

    ரொம்ப நன்றிங்க :)

    ReplyDelete
  10. aaaaaaaaaaaha, g3 ippadi enga nenja thottuteengalae . pazaiya post ellam eduthu, chancae illa. thanks a lot for your post on us :-)

    marudham and kk paadi kaettu irukkaen..ippadi ellarayum sarthu oru super post thaakkittenga ponga..ungalukkaaga, unga anbukkkaaga enga blogla 2 paattu poattu thaakkitoomla :-)

    saga makkalae, paatu ellam kaettadhukku romba nanri

    ReplyDelete