வந்துட்டோம்ல..
வணக்கம்.. வந்தனம்...
எல்லாருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். கொஞ்சம் லேட்தான்.. இருந்தாலும் பரவாயில்லை.
அடுத்து போன வார வலைச்சர ஆசிரியர் கவிதாயினிக்கு ஒரு பலத்த கைத்தட்டுக்கள் கொடுப்போம். அசத்திட்டாங்க. வரிகள் எல்லாம் என்னமா இருந்துச்சு. தமிழ் M.A தமிழ் M.Aதான்.. சரிதானே?
இனி, நம்ம கதைக்கு போகலாம்.. வாங்க..
சிறுவயதிலிருந்தே இந்த பேனாவை (பென்சில் என்று கூட நீங்க படிக்கலாம்) புடிச்சு, மூளையை கசக்கி, கை வலிக்க வலிக்க எழுதுறது என்றாலே ஒரு மலையை கட்டி இழுக்கிற அளவுக்கு கஷ்டமான வேலை எனக்கு. தமிழ், மலாய், ஆங்கிலம்.. எந்த மொழியிலும் இதே பிரச்சனைதான் எனக்கு! :-( எப்போதுமே நான் எழுதும் கட்டுரைகள் கொடுத்த தலைப்புக்கு அற்பாற்பட்டே இருக்கும். "You are out of topic. திரும்ப செய்"ன்னு திருப்பி கொடுத்துடுவாங்க.. இப்படி திரும்ப திரும்ப ஒரே பாடத்தையே எத்தனை தடவைதான் எழுதுறது? எத்தனை நாள்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது? அதனாலேயே, சில சமயம் ஆசிரியர் வகுப்புக்கு வர்றதுக்குள்ள வகுப்பை விட்டு ஓடிடுவேன் நான்.. பல சமயங்கள் மாட்டிக்குவேன். :-(
இப்படி ஓடி ஓடியே பழக்கப்பட்ட எனக்கு, வலை மட்டும் எப்படி பிடித்து போனது? ஏன் வலைப்பூக்களை மட்டும் பார்த்தவுடன் ஓடவில்லை? நானே விரும்பி விரும்பி படிப்பதற்கு என்ன காரணம்? என்னையும் வலைசரம் தொடுக்க அழைத்திருக்கிறார்களே? நான் காண்பது கனவா? இல்லை நிஜமா?
இவைகளுக்கெல்லாம் இந்த வாரம் பதில் சொல்லிவிடுவேன் என்ற நம்பிக்கையிலும் உங்கள் ஆசியுடனும் என் முதல் பதிவை இன்று தொடங்குகிறேன். :-)
நான் இணையமே கதின்னு கிடந்திருந்தாலும் தமிழ் வலைப்பூக்கள் இருப்பது 2006 அக்டோபர் மாதம்தான் அறிந்தேன். கஜினி - மொமெண்டோ படங்களின் வித்தியாசத்தை கூகளில் தேடிக்கொண்டிருந்தபோதுதான் இந்த பதிவு என் கண்களுக்கு அகப்பட்டது. இவருடைய எழுத்துதான் என்னுடைய முதல் இன்ஸ்பிரேஷன். அவர் அந்த இரண்டு படங்களையும் போட்டு அதுக்கு கொடுத்திருந்த ஒற்றுமை வேற்றுமை என்னை மிகவும் பிரமிக்க வைத்தது. அதைவிட ஆச்சர்யம் என்னவென்றால் அவர் எழுதியிருந்தது அத்தனையும் தமிழில். தமிழில் மட்டுமே! உடனே அவருடைய பழைய இடுகைகளை நோண்ட ஆரம்பித்தேன்.
அவருடைய மின்னஞ்சல் முகவரியும் அங்கே இருந்ததால் அவரிடம் எப்படி தமிழில் தட்டச்சு செய்தார் என்று கேட்டேன். அவர் எப்படி என்று விளக்கியதுமில்லாமல் அந்த மென்பொருளையும் கூடவே இணைத்து அனுப்பினார். நானும் அதை கொஞ்சம் ட்ரை பண்ணிவிட்டு ஒரு ஓரமாக வைத்துவிட்டேன். விட்டாரா அவர்! "மை ஃபிரண்ட், நீங்க இன்னும் தமிழில் எழுத தொடங்கவில்லையா? வேறேதாவது உதவி வேண்டுமா?" என்று அவர் திரும்ப அனுப்பிய மடல்தான் இப்போது என்னை இங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.
10 வருடமாக தமிழே எழுதாமல் படிக்காமல் இருந்த எனக்கு திடீர்ன்னு தமிழில் எழுதணும் என்றதும் தலை கால் புரியவில்லை. ஓவர் பந்தா என்று நினைக்காதீர்கள். தலை கால் புரியாததற்கு காரணம் என்ன எழுதுறது என்றே தெரியாது வணக்கம் என்பதையே "வனக்கம்" என்று எழுதுமளவு என் தமிழ் மொழி அறிவு குறைந்திருந்தது. கார்த்தியின் எழுத்துக்களை படித்து படித்துதான் அ'னா, ஆவனா எழுத கற்றுக்கொண்டேன். இவர் இவரோட இடுகைகளுக்கு வைக்கும் தலைப்பை பார்த்தாலே கண்டிப்பாக படிக்கவேண்டும் என்று ஆவலை உண்டு பண்ணும். இவரின் எழுத்துக்களில் நீங்கள் மறவாமல் படிக்க வேண்டியது:
ஒரு பட்டிக்காட்டு இளைஞனின் பட்டணத்து வாழ்க்கை
ஒரு பிச்சைக்காரன் என் நண்பன் ஆகிறான்
சைக்கிள் பயணங்கள்
சாராயம் காய்ச்சுவதை கற்றுக்கொண்ட கதை
டீக்கடை சம்பவமும் பரோட்டாவுக்காக பஸ்ஸை கடத்திய செய்தியும்
நானும் அவளும், ஒரு நீண்ட பயணத்தில்
சூடமாய் கரையும் நினைவுகள்
இவரோட "ஊரே சேர்ந்து என்னை அமேரிக்காவுக்கு அனுப்பி வைத்த கதை"யும் மறவாமல் படிங்க. அதன் சுட்டியை கண்டுபிடிக்கமுடியவில்லை.
என்னுடைய ஆரம்பக்காலத்தில் என் ஆர்வத்துக்கு இன்னொரு தூண்டுகோலாக இருந்தவர் கடல் கணேசன். கடற்கரையில் இருந்து நடுகடலில் பயணம் செய்யும் கப்பல்களை எத்தனையோ தடவை ரசித்து பார்த்திருப்போம். ஆனால், அந்த கடல் வாழ்க்கையில் இருக்கும் நல்லது கெட்டது மற்றும் அவர் வாழ்க்கையில் நடந்த, பார்த்த நிகழ்ச்சிகளை 50 தொடர்களாக தொடுத்து வழங்கியது என்னை பொறுத்த வரை ஒரு பெரிய சாதனை. ஒரு கதை எழுதவே திணறும் எனக்கு, இடைவிடாது 50 தொடர்களையும் விறுவிறுப்பு குறையாமல் எழுதி எல்லாரையும் மூக்கு மேல விரல் வைக்க செய்தவர் இவர்.
அவர் எழுதியதிலேயே என்னை மனம் நெகிழ வைத்த சில எழுத்துக்கள்:
மொழி தெரியாத ஊரில் கடைசி நேரத்தில் கப்பலுக்கு செல்லாம முடியாமல் திண்டாடும்போது ஒரு தென்கொரிய நண்பரும் அவரது மனைவியும் எப்படி உதவினார்கள் என்று படிக்க..
கடல் கொள்ளையர்களால் கேத்தரின்க்கும் வில்லியம்ஸ்க்கும் நடந்த கோரமான முடிவை படிக்க..
இன்னும் தீர்க்கப்படாத மர்மமாய் இருக்கும் ஆனந்தன் காணாமல் போன சம்பவத்தை படிக்க..
விஷ்வமோஹினி கப்பலில் நடந்த பயங்கரமான சம்பவத்தை படிக்க..
நாளைக்கும் வருவோம்ல.. :-)))
அக்காவுக்கு குட்டீஸ்'ன் வாழ்த்துக்கள், கலக்குங்க கலக்குங்க கலக்குங்க...சரி சரி பதிவு படிச்சிட்டு வரென்
ReplyDeleteநானும் அதை கொஞ்சம் ட்ரை பண்ணிவிட்டு ஒரு ஓரமாக வைத்துவிட்டேன். விட்டாரா அவர்! "மை ஃபிரண்ட், நீங்க இன்னும் தமிழில் எழுத தொடங்கவில்லையா? வேறேதாவது உதவி வேண்டுமா?" என்று அவர் திரும்ப அனுப்பிய மடல்தான் இப்போது என்னை இங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.
ReplyDeleteம்ம்ம்ம்....சரி விடுங்க அக்கா அவரு தப்பு பண்ணறொம்னு தெரிஞ்சா பண்ணாரு...
தூள் கிளப்புங்கக்கா
ReplyDeleteவணக்கம்.
ReplyDeleteவாங்க! வாங்க!!
இந்த 'ன' 'ண' பிரச்சனை இங்கிருக்க எனக்கே உண்டு.
நிறைய நிறைய எதிர் பார்க்கிறோம்.
என்ன இது...அனைவரும் காணாம போய்டாங்க....பயப்படாதீங்க...
ReplyDeleteகலக்குங்க மை பிரண்ட்:)
ReplyDeleteயக்கோவ்! வாங்க கலக்குங்க! வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள்!!!
ReplyDelete:)
@Baby Pavan:
ReplyDelete//அக்காவுக்கு குட்டீஸ்'ன் வாழ்த்துக்கள், கலக்குங்க கலக்குங்க கலக்குங்க...சரி சரி பதிவு படிச்சிட்டு வரென்//
வாடா ராசா. நீதாண்டா இன்னைக்கு ஃபர்ஸ்ட்டூ. ;-)
//ம்ம்ம்ம்....சரி விடுங்க அக்கா அவரு தப்பு பண்ணறொம்னு தெரிஞ்சா பண்ணாரு...//
ம்ம்.. அதே அதே.. பாவம்.. இது அவருக்கு சொ.சொ.சூ.. :-P
@நிலா:
ReplyDelete//தூள் கிளப்புங்கக்கா//
தூள் விக்ரம் வந்தாலும் நம்மளை ஒன்னும் அசைகக்முடியாதுடா செல்லம். வாடா.. எல்லாரும் சேர்ந்து கலக்கலாம். :-)
@மங்களூர் சிவா:
ReplyDelete//வணக்கம்.
வாங்க! வாங்க!!//
வந்துட்டேன் வந்துட்டேன்.. ;-)
//இந்த 'ன' 'ண' பிரச்சனை இங்கிருக்க எனக்கே உண்டு.
நிறைய நிறைய எதிர் பார்க்கிறோம்.//
என்ன? இந்த மாதிரி எழுத்துபிழையை நிறைய எதிர்ப்பாக்குறீங்களா சிவா? ;-)
@Baby Pavan:
ReplyDelete//என்ன இது...அனைவரும் காணாம போய்டாங்க....பயப்படாதீங்க...//
உன்னை மாதிரி தைரியசாலி இங்கே யாருடா.. :-)
//
ReplyDelete.:: மை ஃபிரண்ட் ::. said...
@மங்களூர் சிவா:
//வணக்கம்.
வாங்க! வாங்க!!//
வந்துட்டேன் வந்துட்டேன்.. ;-)
//இந்த 'ன' 'ண' பிரச்சனை இங்கிருக்க எனக்கே உண்டு.
நிறைய நிறைய எதிர் பார்க்கிறோம்.//
என்ன? இந்த மாதிரி எழுத்துபிழையை நிறைய எதிர்ப்பாக்குறீங்களா சிவா? ;-)
//
பிழையோ எதுவோ நிறைய மொக்கை இல்லாத பதிவுகள் ஏன்னா மொக்க போடத்தான் நாங்க இருக்கம்ல்ல
@குசும்பன்:
ReplyDelete//கலக்குங்க மை பிரண்ட்:)//
கரண்டி கொடுங்க குசும்பா, :-P கலக்கிடுவோம் பாயாசத்தை. :-P
@வேதா said...
ReplyDelete//வாம்மா மின்னல் :) வாழ்த்துக்கள் :)//
மின்னல் இல்ல. மைஃபிரண்ட். :-) நன்றி..
//வந்தவுடன நம்ம தலைவரை பத்தி எழுதி மறந்துப்போயிறந்ததை நினைவுப்படுத்திட்ட. இதை பார்த்தப்புறமாவது அவர் திரும்ப எழுத வருவார்னு நம்பறேன் :)//
இதை படிச்சு அவர் திரும்பி வந்தா நான் கூடா ரொம்ப மகிழ்ழி அடைவேன். ;-)
வலைச்சரத்திலே பதிவு போடுவீர்கள் என்றுப் பார்த்தால், பின்னுட்டம் போடுவதிலே ஒரு நாள் போயிரூச்சே...
ReplyDeleteபரவாயில்லை...மை ஃபிரண்டு
வலைச்சரத்தின் புதிய ஆசிரியயைக்கு என் வாழ்த்துக்கள்....
@வித்யா கலைவாணி:
ReplyDelete//யக்கோவ்! வாங்க கலக்குங்க! வாழ்த்துக்கள்.//
பாட்டி, உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றிங்கோ. :-)
@ஜெகதீசன்:
ReplyDelete//வாழ்த்துக்கள்!!!
:)
//
நன்றி ஜெகதீசன். ;-)
@மங்களூர் சிவா:
ReplyDelete//பிழையோ எதுவோ நிறைய மொக்கை இல்லாத பதிவுகள் ஏன்னா மொக்க போடத்தான் நாங்க இருக்கம்ல்ல//
நான் இங்கேயும் மொக்கைகளாய் போட்டாலும் நல்ல நல்ல பதிவுகளை சுட்டி காட்டுவேன் என் நம்புறேன். ஆமாவா இல்லையான்னு நீங்கதான் சொல்லணும். ;-)
வாழ்த்துக்கள் அத்தை..
ReplyDeleteகுட்டீஸ் கார்னரின் வாழ்த்துக்களும்.. :)
@TBCD:
ReplyDelete//வலைச்சரத்திலே பதிவு போடுவீர்கள் என்றுப் பார்த்தால், பின்னுட்டம் போடுவதிலே ஒரு நாள் போயிரூச்சே...//
:-P இவ்வளவு பெரிய பதிவு உங்க கண்ணுக்கு பின்னூட்டமா தெரியுதா? அப்போ நாளைக்கு பின்னூட்ட சைஸ்ல ஒரு பதிவெழுதுறேன். ஓகேவா TVCD.. சாரி.. TBCD.
அட.. TVCDக்கு மீனிங் கிடைச்சுடுச்சு..
T= திருட்டு
VCD = VCD..
திருட்டு வீசிடீயா? :-P
//பரவாயில்லை...மை ஃபிரண்டு//
நல்லா யோசிக்கிறேன்ல. ;-)
//வலைச்சரத்தின் புதிய ஆசிரியயைக்கு என் வாழ்த்துக்கள்....//
நன்றி நன்றி.. :-)
இந்த வார வலைச்சர நாயகிக்கு வாழ்த்துக்கள் :)
ReplyDeleteஅடி தூள் கிளப்புங்க, மலேசியாவே அதிரணும் ;-)
ReplyDeleteadada monkey kaila kuduthacha valacharatha :-)) cha cha teacher a poi apidi ellam solla kodathu!!
ReplyDeleteஅடிப்பாவி இங்கயும் கும்மியா? வலைச்சரத்தையும் விட்டு வைக்கலயா நீயி? கொஞ்சம் லேட்டாய்டுச்சு.. வாழ்த்துக்கள் டா!
ReplyDelete(தங்கச்சி நான் எம்.ஏக்கு அப்புறம் ஒரு வருஷம் கஷ்டப்பட்டு படிச்சி ஆராய்ச்சியெல்லாம்(?!) பண்ணி எம்.ஃபில்னு ஒரு சர்ட்டிபிகேட் வாங்கி வெச்சிருக்கேன்... அநியாயமா அதை விட்டுட்டியே??) :(
\\விட்டாரா அவர்! "மை ஃபிரண்ட், நீங்க இன்னும் தமிழில் எழுத தொடங்கவில்லையா? வேறேதாவது உதவி வேண்டுமா?" என்று அவர் திரும்ப அனுப்பிய மடல்தான் இப்போது என்னை இங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.\\
ReplyDeleteஎனக்கு ஏற்பட்ட அதே அனுபவம், ஊக்கம் உங்களுக்கும் கிடைத்திருக்கிறது !!ஆச்சரியமாக உள்ளது!
வலைச்சர ஆசிரியர் ஆனதற்கு வாழ்த்துக்கள் .::மை ஃபிரண்ட்::.
ReplyDeleteதீபாவளி வாழ்த்துக்கள்.
நான் தற்போது கப்பலில் உள்ளதால் தொடர்ந்து இணைய தொடர்பு கிடைப்பதில்லை. நேரம் கிடைக்கும் போது உங்கள் அனைவரின் படைப்புகளையும் வாசித்துவிட்டுத் தான் செல்கிறேன்.(நீங்கள் அடிக்கும் கும்மிகளை மிகவும் ரசித்து அனுபவிப்பது உண்மை.. )
என் பதிவுகளை வாசித்ததுடன், இங்கே மீண்டும் நினைவு படுத்தியதற்கு நன்றி..
உங்களின் 'மீ த ஃபர்ஸ்ட்' வார்த்தைகளை மறக்கமுடியாது யாராலும்.
உற்சாகமான உங்கள் தமிழ் எழுத்துக்களால் எப்போதும் போல் கலக்க வாழ்த்துக்கள்.
வாய்ப்பு கிடைக்கும்போது உங்கள் பதிவுகளை கண்டிப்பாக வாசிக்கிறேன்.
வாழ்த்துக்களுடன் - கடல்கணேசன்.
@கோபிநாத்:
ReplyDelete//இந்த வார வலைச்சர நாயகிக்கு வாழ்த்துக்கள் :)//
நன்றி அண்ணே. :-)
@கானா பிரபா:
ReplyDelete//அடி தூள் கிளப்புங்க, மலேசியாவே அதிரணும் ;-)//
கிளப்புவோம்.. இருக்கிறவங்அ எல்லாரும் ஓடுற மாதிரி. :-)))
@சினேகிதி:
ReplyDelete//adada monkey kaila kuduthacha valacharatha :-)) cha cha teacher a poi apidi ellam solla kodathu!!//
சரியா சொன்னீங்க தோழி.. வலைச்சரம் என் கையில படாத பாடு படுது. :-P
@காயத்ரி:
ReplyDelete//அடிப்பாவி இங்கயும் கும்மியா? //
ஹீஹீ.. இதெல்லாம் கண்டுக்கப்படாது. கும்மிக்கு உங்களுக்கும் ஒரு சீட்டு கொடுத்துடுவோம். ;-)
//வலைச்சரத்தையும் விட்டு வைக்கலயா நீயி? கொஞ்சம் லேட்டாய்டுச்சு.. வாழ்த்துக்கள் டா!//
நன்றி நன்றி. ;-)
//தங்கச்சி நான் எம்.ஏக்கு அப்புறம் ஒரு வருஷம் கஷ்டப்பட்டு படிச்சி ஆராய்ச்சியெல்லாம்(?!) பண்ணி எம்.ஃபில்னு ஒரு சர்ட்டிபிகேட் வாங்கி வெச்சிருக்கேன்... அநியாயமா அதை விட்டுட்டியே??) :(//
ஆஹா.. இது நான் மறந்துட்டேனே! என்ன படிச்சீங்கன்னு சொன்னா அதுக்கு ஒரு பதிவு போட்றலாம். சரியா? ;-)
@Divya:
ReplyDelete//எனக்கு ஏற்பட்ட அதே அனுபவம், ஊக்கம் உங்களுக்கும் கிடைத்திருக்கிறது !!ஆச்சரியமாக உள்ளது!
//
:-) உண்மைதான் திவ்யா. :-)
@கடல்கணேசன்:
ReplyDelete//வலைச்சர ஆசிரியர் ஆனதற்கு வாழ்த்துக்கள் .::மை ஃபிரண்ட்::.
தீபாவளி வாழ்த்துக்கள்.//
நன்றி. உங்களுக்கும் என் தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணா. :-)
//நான் தற்போது கப்பலில் உள்ளதால் தொடர்ந்து இணைய தொடர்பு கிடைப்பதில்லை. நேரம் கிடைக்கும் போது உங்கள் அனைவரின் படைப்புகளையும் வாசித்துவிட்டுத் தான் செல்கிறேன்.(நீங்கள் அடிக்கும் கும்மிகளை மிகவும் ரசித்து அனுபவிப்பது உண்மை.. )//
ஹீஹீ..
//என் பதிவுகளை வாசித்ததுடன், இங்கே மீண்டும் நினைவு படுத்தியதற்கு நன்றி..//
நல்ல பதிவுகளை என்றும் மறக்க முடியாது அண்ணா. :-)
//உங்களின் 'மீ த ஃபர்ஸ்ட்' வார்த்தைகளை மறக்கமுடியாது யாராலும். //
அட ஆமா.. :-)
//உற்சாகமான உங்கள் தமிழ் எழுத்துக்களால் எப்போதும் போல் கலக்க வாழ்த்துக்கள்.//
நன்றி அண்ணா. :-)
வாய்ப்பு கிடைக்கும்போது உங்கள் பதிவுகளை கண்டிப்பாக வாசிக்கிறேன்.
வாழ்த்துக்களுடன் - கடல்கணேசன்.