தொடர் என்று சொன்னாலே முதலில் நம் நினைவுக்கு வருவது நம்ம டீச்சர் துளசி கோபால் தான். தொடர்ந்து தொடர் எழுதுவதில் அவருக்கு நிகர் அவரே! அவரின் நியூஸிலாந்து பற்றிய தொடர் அந்த நாட்டை பற்றி தெரிந்துக் கொள்ள படிக்க வேண்டியது. அதே போல் அவரின் இந்த தொடரையும் படிச்சு பாருங்களேன். லேபிள் கொடுக்காதா காரணத்தால் ஒவ்வொரு பதிவாக போய் தான் படிக்க வேண்டியது இருக்கும்.
துளசி கோபால் - எவ்ரிடே மனிதர்கள்
ராஜேஷ் குமாரின் க்ரைம் நாவலுக்கு இணையாக விறுவிறுப்பாக செல்வன் எழுதிய இந்த தொடர் எனக்கு பிடிச்ச தொடர் கதையில் ஒன்று.
செல்வன் - அஞ்சேல் எனாத ஆண்மை
துறை சம்பந்தப்பட்ட தொடர்களில் வடவூர் குமார் தன் கட்டுமானத்துறையை குறிந்து எழுதிய தொடர்.
வடவூர் குமார் - மின் தூக்கி மேம்பாடு
தேவ் வின் அனைத்து கதைகளுமே நம் வாழ்வோடு பொருத்தி பார்க்கும்படி அமைவது மிகவும் குறிப்பிட வேண்டிய ஒன்று. அவரின் இந்த நண்பனின் காதலி தொடரை படித்து பாருங்களேன்.
தேவ் - நண்பனின் காதலி
பங்கு துறை பற்றி நம்ம செல்லமுத்து குப்புசாமி எழுதிய தொடர் பதிவுகள் எல்லாம் ரொம்ப எளிமையாக இருக்கும். சாமானியரும் புரிந்துக் கொள்ள கூடிய வகையில் உதாரணம் கூறுவது அவரின் தனித்திறமை. இப்பொழுது நம்ம மங்களுர் சிவாவும் பங்கு துறை பற்றி பதிவு எழுதி வருகின்றார்.
செல்லமுத்து குப்புசாமி - ராகுல் திராவிட் - பங்கு முதலீட்டுத் தத்துவம்
வெட்டிப்பயலில் இந்த தொடர் கண்டிப்பாக சாப்ட்வேர் துறையில் நுழைய உள்ளவர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.
வெட்டிப்பயல் - சாப்ட்வேர் இஞ்சினியர் ஆகலாம் வாங்க
ஒரு தொடர் எழுதுவது என்பது எவ்வளவு கஷ்டமான விசயம் என்பது எனக்கு தெரியும். அதையும் மீறி ஆர்வக் கோளாறுல ஆரம்பிச்சு இன்னமும் தொடர முடியுமா நிக்குது என் கன்னி வெடி தொடர். அதை முடிச்சுட்டு ஹைத்தி, சூடான் பற்றிய தொடர்கள் எழுதலாம் என்று எண்ணம், பாக்கலாம்.
நாகை சிவா - கண்ணி வெடி
இதில் பலருடைய துறை சார்ந்த பதிவுகள் குறிப்பிட முடியவில்லை அதுக்கு வருந்துகிறேன், முக்கியமாக மா.சிவக்குமாரின் பதிவுகள்.
ReplyDeleteகண்ணி வெடி வேண்டாம்,சிவா.
ReplyDeleteஅது எங்கு போய் முடியுமோ என்ற பயம்.
கன்னி வெடி ஏதாவது இருக்கா??
கன்னியை விட கண்ணி தான் பிரச்சனை இல்லாது என்று நான் நினைக்குறேன் குமார் :)
ReplyDelete