Monday, December 31, 2007

ரசிகனின் சரம்

அனைவருக்கும் வணக்கம்.

நீ எல்லாம் மாடு மேய்க்கத்தாண்டா லாயக்கு!

நீ எல்லாம் எதுக்கு படிக்க வந்து எங்க உயிரை வாங்குற!

உருப்படவே மாட்டே!

பயந்துடாதிங்க மக்களே.. இதெல்லாம் நான் படிக்கும்போது அடிக்கடி கேட்ட பொன் மொழிகள். எல்லாம் நம்ம வாத்தியாருங்க நம்ம படிப்பு திறமையை பார்த்து சொன்னது. ஆனா காலத்தின் கொடுமையை பாருங்களேன். இன்னிக்கு என்னையே ஒரு வாத்தியாராக ஆக்கியிருக்காங்க வலைச்சர குழு.

இந்த வாரத்தின் வலைச்சர ஆசிரியர் நான் தான்

இதை எல்லாம் காலத்தின் கொடுமைடான்னு நீங்க சொன்னிங்கன்னா அந்த கொடுமை இன்னும் ஒரு வாரம் தொடரும். எவ்வளவோ கொடுமைகளை தாங்கிட்ட தமிழ் உள்ளங்களின் மேல் பாரத்தை போட்டு இந்த வாரத்தை தொடர்க்கிறேன்.

இன்னிக்கு வருடத்தோட கடைசி நாள்...நல்ல‌நாளில் தான் நம்மளை போட்டுருக்காங்க. சரி சுருக்கமாக என்னோட கதையை முடிச்சிடுறேன். நான் படித்த முதல் வலைப்பதிவர்
லிவிங் ஸ்மைல் வித்யா . அவர்களோட பேட்டி ஒண்ணு ஜீனியர் விகடனில் பார்த்து உள்ள‌ வந்தேன். பிறகு அப்படியே ஒவ்வொரு பதிவர்களாக படிச்சி நமக்கும் ஆசை வந்து, மா.சிவக்குமார் அவர்களின் மூலம் கலப்பையை பிடிக்க கத்துக்கிட்டு இன்னிக்கு வரைக்கும் தவறாமல் கலை பை பிடிக்கும் கடமை வீரனாக வந்துக்கிட்டு இருக்கேன்.

அறிமுகப்பதிவுல என்னோட பதிவுகளின் சில பதிவுகளை கொடுக்க வேண்டும் என்று சொன்னாங்க. நானே என்னை ஒரு சின்ன வட்டத்துக்குள்ள அடைச்சிக்க விரும்பவில்லை. அதனால இது தான் என்னோட பதிவு கோபிநாத். போயி பாருங்க எப்படியும் ஒன்னு ரெண்டு தேறும்.

வருஷ‌த்தோட கடைசி நாளுக்கும், அடுத்த வருஷ‌த்தோட முதல் நாளுக்கும் சேர்த்து அனைவருக்கும் என்னோட வாழ்த்துக்கள்.

புதிய வருடத்தில் உங்கள் அனைவரின் முயற்சிகளும் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.

விரைவில் அடுத்த பதிவில் சந்திப்போம்....

28 comments:

  1. //விரைவில் அடுத்த பதிவில் சந்திப்போம்....
    //

    எல்லாரும் போய்ட்டு அடுத்த மாசம் வாங்கப்பா!!

    ReplyDelete
  2. தம்பி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. //புதிய வருடத்தில் உங்கள் அனைவரின் முயற்சிகளும் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

    நன்றி உங்களுக்கும் அதே போல் நடக்கவாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. தல

    வலைச்சரத்தை உண்டு இல்லேன்னு பண்ணீடுங்க.

    கொஸ்டின் டைம்: இதுக்கும் மாதாந்த போஸ்ட் தானா?

    ReplyDelete
  5. கோபி அங்கிள்,

    புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  6. ஆண்டு கடைசியா எதாவது ஒரு மொக்கை போடுங்க!!

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் கோபி...

    //எல்லாரும் போய்ட்டு அடுத்த மாசம் வாங்கப்பா!!//

    :-)))))))))

    ReplyDelete
  8. /எல்லாரும் போய்ட்டு அடுத்த மாசம் வாங்கப்பா!!//

    ம்ம்.... நாளைக்கு வர்றோம்... :)

    ReplyDelete
  9. @ காயத்ரி - நன்றி ;)

    @ குசும்பன்

    \நன்றி உங்களுக்கும் அதே போல் நடக்கவாழ்த்துக்கள்\\

    நன்றி அண்ணே ;)))

    ReplyDelete
  10. @ கானா பிரபா

    \தல

    வலைச்சரத்தை உண்டு இல்லேன்னு பண்ணீடுங்க.

    கொஸ்டின் டைம்: இதுக்கும் மாதாந்த போஸ்ட் தானா?\\

    இல்லை தல...பின்னிடுவோம்ல. ;)

    @ குட்டிபிசாசு

    \புத்தாண்டு வாழ்த்துக்கள்!!\\\

    உங்களுக்கும் வாழ்த்துக்கள் அங்கிள் ;)

    \\\ஆண்டு கடைசியா எதாவது ஒரு மொக்கை போடுங்க!!\\

    குருவே சொல்லிட்டிங்க....கண்டிப்பாக போட்டுடுவோம் ;)

    ReplyDelete
  11. @ மங்கை
    \\வாழ்த்துக்கள் கோபி...\\ -

    நன்றி அக்கா ;)

    @ராம்

    \\ம்ம்.... நாளைக்கு வர்றோம்... :)\\

    கண்டிப்பாக வா மாப்பி

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் கோபி :))

    உங்களையும் வாரம் முழுக்க பதிவு போட வைச்சு புது வருஷ ஆரம்பத்துலயே சாதனை பண்றாங்களா வலைச்சரத்துல?? சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)

    இன்று போய் நாளை வருகிறேன் :D

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் அண்ணே.. நீங்கதாஅன் இந்த வார ஆசிரியர்ன்னு சொலியிருந்ந்தா தார தப்பட்டைகளுடன் இங்கே வந்து சேர்ந்ந்திருப்போம்ல. :-)


    சரி சரி.. வந்துட்டீங்க.. ஒரு பதிவு போட்டுட்டு கோட்டா முடிஞ்சு போச்சுன்னு அடம் பிடிக்க கூடாது.. சரியா? ;-)

    ReplyDelete
  14. நீங்கதானே இயால் ஸ்டார்.. வருச கடைசியிலும் வருட ஆரம்பத்திலும் ஸ்டாரா நிக்குறீங்க.. :-)

    ReplyDelete
  15. //காயத்ரி said...
    //விரைவில் அடுத்த பதிவில் சந்திப்போம்....
    //

    எல்லாரும் போய்ட்டு அடுத்த மாசம் வாங்கப்பா!!//

    :)))

    ReplyDelete
  16. //
    .:: மை ஃபிரண்ட் ::. said...
    வாழ்த்துக்கள் அண்ணே.. நீங்கதாஅன் இந்த வார ஆசிரியர்ன்னு சொலியிருந்ந்தா தார தப்பட்டைகளுடன் இங்கே வந்து சேர்ந்ந்திருப்போம்ல. :-)


    சரி சரி.. வந்துட்டீங்க.. ஒரு பதிவு போட்டுட்டு கோட்டா முடிஞ்சு போச்சுன்னு அடம் பிடிக்க கூடாது.. சரியா? ;-)

    //
    repeateeeeeeeey

    ReplyDelete
  17. மாப்பி, நீங்க தான் இந்த வார ஆசிரியரா...? கலக்குங்க :)

    ReplyDelete
  18. @ ஜி3

    \\வாழ்த்துக்கள் கோபி :))\\ - நன்றி

    \\உங்களையும் வாரம் முழுக்க பதிவு போட வைச்சு புது வருஷ ஆரம்பத்துலயே சாதனை பண்றாங்களா வலைச்சரத்துல?? சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)\\

    ;-)))

    @ மை ஃபிரண்ட்

    \\வாழ்த்துக்கள் அண்ணே..\\

    நன்றி..நன்றி ;))

    \\சரி சரி.. வந்துட்டீங்க.. ஒரு பதிவு போட்டுட்டு கோட்டா முடிஞ்சு போச்சுன்னு அடம் பிடிக்க கூடாது.. சரியா? ;-)\\

    கண்டிப்பாக இல்லை இந்த வார முழுக்க பதிவு தான் ;))


    \\நீங்கதானே இயால் ஸ்டார்.. வருச கடைசியிலும் வருட ஆரம்பத்திலும் ஸ்டாரா நிக்குறீங்க.. :-)\\

    ஆகா...எம்புட்டு செலவாச்சின்னு கேட்க போறாங்க..;))

    ReplyDelete
  19. @ டீரீம்ஸ்
    \\Happy New year!\\

    உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் ;)

    @ சென்ஷி

    \\எல்லாரும் போய்ட்டு அடுத்த மாசம் வாங்கப்பா!!//

    :)))\\

    உன் சிரிப்புக்கு நன்றி மாப்பி ;)

    ReplyDelete
  20. @ மங்களூர் சிவா

    //repeateeeeee\\ - நன்றி சிவா ;)


    @ பிரேம்குமார்

    \\மாப்பி, நீங்க தான் இந்த வார ஆசிரியரா...? கலக்குங்க :)\\

    நன்றி மாப்பி..இந்த வாரம் கண்டிப்பாக வாங்க ;))

    ReplyDelete
  21. புத்தம்புது வருசத்தில் சரம் தொடுக்க வந்திருக்கும் கோபிக்கு மனமார்ந்த வாழ்த்து(க்)கள்.

    நல்லா நெருக்கமாத் தொடுப்பீங்கதானே? :-))))))

    ReplyDelete
  22. @ துளசி கோபால்

    \\புத்தம்புது வருசத்தில் சரம் தொடுக்க வந்திருக்கும் கோபிக்கு மனமார்ந்த வாழ்த்து(க்)கள்.\\

    மகிழ்ச்சி டீச்சர்...நன்றி ;)


    \\நல்லா நெருக்கமாத் தொடுப்பீங்கதானே? :-))))))\\

    இதுக்கு பதில் பதிவுகளை பார்த்துட்டு சொல்லுங்கள் ;)

    ReplyDelete
  23. ரசிகனின் சரத்துல உள்ள பின்னூட்டங்கள் நெசமாவே ரசிக்க வைக்குதுப்பா...

    மை ஃப்ரெண்டு கலக்கல்!

    ReplyDelete
  24. @ காட்டாறு
    \\ரசிகனின் சரத்துல உள்ள பின்னூட்டங்கள் நெசமாவே ரசிக்க வைக்குதுப்பா...\\

    அப்போ பதிவு காலின்னு சொல்லுறிங்க...;)


    \\மை ஃப்ரெண்டு கலக்கல்!\\

    எல்லாம் கூட்டணி தானா! ;)

    ReplyDelete
  25. புது வருசத்துல கொஞ்சம் வேலை அதிகம். உடனடியா பின்னூட்டம் போட முடியலை. வாழ்த்துக்கள் கோபி!

    ReplyDelete
  26. @ சின்ன அம்மிணி

    \\புது வருசத்துல கொஞ்சம் வேலை அதிகம். உடனடியா பின்னூட்டம் போட முடியலை. வாழ்த்துக்கள் கோபி!\\

    நன்றி ;)

    ReplyDelete