Tuesday, January 29, 2008

ஆன்மீகச் சரம் - 2

ஆன்மீகச் சரத்தினைத் தொடர்வது எனத் தீர்மானித்து இப்பதிவினைத் தொடங்கினேன். முந்தைய பதிவினில் சில ஆன்மீகப் பதிவர்களை அறிமுகப் படுத்தினேன். அறிமுகம் என்ற ஒன்று தேவை இல்லாதவர்கள் அவர்கள் அனைவரும். அவர்களை வலையுலகம் நன்கு அறியும். இருப்பினும் அவர்களை அறியாதவர்களுக்கும், புதியவர்களுக்கும், சுட்டி கொடுத்து, அவர்களது வலைப்பூவினை காணச் செய்தேன். முதல் ஆன்மீகச் சரம் தொடுத்த பின்னர் தான், இன்னும் அதிக பதிவர்கள் இருக்கிறார்கள் ஆன்மீகம் பரப்புவதற்கென்றே என்ற எண்ணம் நினைவிற்கு வந்தது. அதன் விளைவு இப்பதிவு.

அமெரிக்காவில் வசிக்கும் மாணவி ப்ரியா (எ) செண்பகலட்சுமி ( பிரியா வெங்கடகிருஷ்ணன்) ஆன்மீகம் என்ற வலைப்பூவில் ஆன்மீகம் பற்றி எழுதி வருகிறார். அப்பூவினில், ஆன்மீகத்தை பற்றிய செய்திகளை, சிறு சிறு வினா விடைகளாக, தருகிறார்.அதன் மூலம் ஆன்மீகத்தினைப் பரப்புகிறார்.

இவர் தமிழ்க் கல்வி என்ற ஒரு வலைப்பூவிலும் மற்ற சில குழுப்பூக்களிலும் கூட எழுதி வருகிறார். இவர் ஒரு தமிழ்மண நட்சத்திரப் பதிவரும் கூட என்பது மகிழ்ச்சியான செய்தி.

கைலாஷி என்ற சு.முருகானந்தம் சென்னையில் வசிப்பவர். சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் படித்து, சென்னையிலேயே ஒரு பெரிய நிறுவனத்தில் பணி புரிபவர். நரசிம்மர், நடராசர், நவராத்ரி நாயகி, திருமயிலை, வைகுந்த ஏகாதசி, காரைக்காலம்மையார், திருப்பாவை, திருவெம்பாவை எனப் பல பூக்கள் மூலம் பக்தியைப் பரப்புகிறார். அனைத்துப் பூக்களும் படித்துப் பயன் தரத் தக்கன. புகைப்படங்களும் இலவச இணைப்பாக இணைக்கப் பட்டிருக்கிண்றன.

சென்ற பதிவில் குறிப்பிட்ட மதுரையம்பதி என்ற பதிவர் சௌந்தர்யலஹரி என்ற வலைப்பூவில், ஆனந்த லஹரி பற்றி அழகாகச் சொல்கிறார்.

நண்பர் தி.ரா.ச பல குழுப் பதிவுகளிலும் தனிப்பதிவுகளிலும் எழுதி வருகிறார். கௌசிகம் என்ற வலைப்பூவில் படங்களுடன், பாடல்களுடன், வளமான கருத்துகளைத் தருகிறார்.

சகோதரி கீதா சாம்பசிவம் பல வலைப்பூக்களில் பதிவுகள் இட்டாலும், ஆன்மீகப் பயணம் என்ற வலைப்பூவில், தன்னுடைய பயணக்கட்டுரையைத் தொடர்வதோடு, சிதம்பர ரகசியம் என்ற தலைப்பில், தில்லைச் செய்திகளை, ஆடல் வல்லானைப் பற்றிய செய்திகளை, அள்ளித் தருகிறார்.

நண்பர்களே சுட்டிகளைச் சுட்டி பயனடையுங்கள்

அன்புடன் சீனா

11 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. சிதம்பர ரகசியம் இல்லாத ஆன்மீக வலைச்சரமா என வியப்பில் ஆழ்த்துட்டேன்!!! போன பதிவிலே!!! எனக்கும் ஒரு வாய்ப்பு வ்வராமலா போயிடும் வலைச்சரத்தில் அப்ப வச்சிக்கரேன் கச்சேரியை!!!!:-))

    ReplyDelete
  3. வாங்க அபி அப்பா - கச்சேரிய எப்ப வேணும்னாலும் வைச்சிக்கலாம் - சரியா

    ReplyDelete
  4. ஆன்மீகச் சரம் காண மிக்க மகிழ்ச்சி!

    ReplyDelete
  5. நன்றி நண்பரே - வருகைக்கும் மகிழ்ச்சிக்கும் நன்றி

    ReplyDelete
  6. சீனா அவர்களே நன்றி, தங்கள் பட்டியலில் இந்த அடியேனையும் இணைத்ததற்கு.

    எங்கே பதிவுகள் அதிகம் பார்க்கப்பதுவதில்லையோ என்ற ஐயம் இருந்தது. ஒத்த மனமுடையவ்ர்கள் பார்க்கின்றனர் என்ற செய்தி உங்கள் பதிவின் மூலம் கிடைத்தது. நன்றி

    ReplyDelete
  7. இரண்டாம் சரமும் அருமை! கிட்டத்தட்ட அனைவரையும் தொட்டுச் சென்று விட்டீர்கள் சீனா சார்!
    ஜீவா, கைலாஷி ஐயா, கீதாம்மா, திராச, வல்லியம்மா, மெளலி, ப்ரியா என்று அனைவரும் ஒரு ரவுண்டு வந்து விட்டார்கள்!

    எல்லாரையும் குறிப்பிட்டுச் சொன்ன நீங்கள் - ஒருத்தரை மட்டும் எப்படி விடலாம்? - சிந்தாநதி மன்னியுங்கள் -இதைச் சொல்லியே ஆக வேண்டும்!

    இத்தனை பதிவுகளையும் ஆழமாக வாசித்து ரசிக்கும் ரசிகமணி "சீனா" என்ற பதிவரின் பெயரை நீங்கள் சொல்ல மறத்தல் நியாயமா? :-)
    ஆன்மீகச் சரங்களில், அவர் பின்னூட்டக் கருத்துகளுக்கும் பெரும் பங்கு உண்டு!

    ReplyDelete
  8. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கைலாஷி

    ReplyDelete
  9. கேயாரெஸ் - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி - ஆமா அது யாரது சீனா ? அவரெப் பத்தி நான் ஏன் எழுதணும் ? ( நன்றி நன்றி நன்றி)

    ReplyDelete
  10. மீண்டும் ஆன்மீகத்தில் விருப்பம் உள்ளவர்களுக்கு பயனுள்ள பதிவு..

    //அபி அப்பா said...

    சிதம்பர ரகசியம் இல்லாத ஆன்மீக வலைச்சரமா என வியப்பில் ஆழ்த்துட்டேன்!!! போன பதிவிலே!!! எனக்கும் ஒரு வாய்ப்பு வ்வராமலா போயிடும் வலைச்சரத்தில் அப்ப வச்சிக்கரேன் கச்சேரியை!!!!:-))//

    ஆஹா. அபியப்பா.. இப்படி கூட மனசுல இருக்கிறத வெளிப்படுத்தலாமோ..:)) சைக்கிள் கேப்ல பிட்டு போட்டுட்டிங்களே.. அடுத்த வாரம் வலைச்சரம் ஆசிரியர் ரெடி :P.. முத்துலட்சுமி அக்கா கவனிப்பார்களாக :P

    ReplyDelete
  11. அபை அப்பாவை அடுத்த வார ஆசிரியராக்க வலைச்சர பொறுப்பாளர்களுக்கு பரிந்துரைக்கிறேன்.

    ReplyDelete