நண்பர்களே ! இதுவரை தொடுத்த சரங்களில் இருந்த பூக்கள் எல்லாம், எல்லோரும் நன்கு அறிந்த வலைப் பூக்கள். ஆனால் வலைச்சரத்தின் நோக்கமே புதிய பதிவர்களை அறிமுகப் படுத்துதலும், அதிகம் அறியப்படாத பதிவர்களை அரங்கத்திற்கு கொண்டு வருவதுமே ஆகும். அவ்வடிப்படையில், இவ்விடுகையில் சில பதிவர்களை அறிமுகப் படுத்துகிறேன்.
அருமை நண்பர் சேவியர் அலசல் என்றொரு வலைப்பூ வைத்திருக்கிறார். அதில் பல்வேறு பயனுள்ள தகவல்களையும், பல்வேறு ஆய்வு முடிவுகளையும், பல்வேறு ஒளிப் படங்களையும் ( புகைப் படங்கள் அழிந்து விட்டதால் இப்போதெலாம் Digital Camera தான் அதன் மூலம் எடுக்கும் படங்களை இவ்வாறு அழைக்கலாமா), சில நகைச்சுவை இடுகைகளையும் தருகிறார். இவரது இடுகைகளில் பல்வேறு செய்திகள் இருக்கும்.வலைப்பூ ஆரம்பித்து 15 மாதங்கள் ஆகின்றன. ஏறத்தாழ 250 இடுகைகள் இட்டிருக்கிறார். அதிக பட்ச பதிவர்கள் இவ்விடுகைகளுக்கு வருவதில்லை. 90 விழுக்காடு - இடுகைகள் என்னால் படிக்கப் பட்டவை. இவரது கிரிக்கெட் கலாட்டா - சிட்னி ஸ்பெஷல் ஒரு நகைச்சுவைப் பதிவு. அனைவரும் ஒரு முறை இவ்விடுகைக்கு வருகை புரியலாமே!
மற்றொரு நண்பர் கலை அரசன் மார்த்தாண்டம். இவர் தூறல் என்ற வலைப்பூவின் உரிமையாளர். நெல்லைச் சீமையைச் சார்ந்தவர். குமரி முனையை ரசித்தவர். காவிரிக் கரையில் வசிப்பவர். கவிதைகளில் களிப்பவர். மும்பை, மராத்திய முரசு ஏட்டில் பத்துக்கும் மேற்பட்ட பைந்தமிழ்க் கவிதைகளைத் தந்தவர். 2006 சூலை முதல் இடுகைகள் இட்டு வருகிறார். கவிதைகள், சிறு கதைகள், நடப்புகள், தொடர் கவிதை, ஹைக்கூ கவிதைகள் என்று கலக்குகிறார். பேனாவைப் பற்றிய நல்லதொரு கவிதை. சென்று தான் பாருங்களேன்.
அடுத்த நண்பர் சிவமுருகன் மதுரையைச் சார்ந்தவர். பெங்களூரு பணி செய்யுமிடம். நிகழ்வுகள் என்ற வலைப்பூவில் ஈராண்டுகளாக நிறையச் செய்திகளை உள்ளடக்கிய இடுகைகள் படங்களுடன் படைத்துள்ளார். குறும்பு என்ற இடுகை அவரது பள்ளிப் பருவத்தைப் பற்றியது. குறும்பு வாரமாக ஒரு வாரத்தை, பல்வேறு குறும்புகளுடன் கொண்டாடி இருக்கிறார். படியுங்களேன். இவர் ஒரு பன்முகப் படைப்பாளர். பாராட்டி மகிழலாம். குறளை 11 மொழிகளில் ( சௌராஷ்ட்ரா உட்பட) பதிந்திருக்கிறார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைப் பற்றி அரிய படங்களுடன் சுமார் 50 இடுகைகள் இட்டிருக்கிறார்.
இனிய நண்பர் கபீரன்பன் கோவையில் வேதியியல் பொறியாளர். இவர் கபீரின் கனிமொழிகள் என்ற வலைப்பூவில், கபீர்தாஸின் இரண்டடி தோஹாக்களை தமிழ்ப் படுத்தி இருக்கிறார். சில நாட்களின் சிறைவாசம் அரவிந்தரை ஆன்மீகத்திற்குத் திருப்பியது. தீவிரமான கருத்துகளோடு சுதந்திரப் போராட்டத்தில் இருந்தவரை திசை திருப்பியது. அந்நிகழ்வை அவரது சொற்களிலேயே படைத்துக் காட்டுகிறார். அரவிந்தரின் அனுபவத்தை கபீரின் கருத்துகளோடு ஒப்பிட்டுக் கூறுகிறார். நாமும் படித்து மகிழலாமே !
சோதனை மறு மொழி
ReplyDeleteபோய் பார்த்திடுவோம்.
ReplyDeleteஅந்த கண் தானம் பற்றிய பிளாஸ் அருமையாக இருக்கு.
நன்றி , உள்ளேன் அய்யா, பிரசண்ட் சார்...
ReplyDeleteஅறிமுகத்திற்கு நன்றிகளும், பாராட்டுக்கள்!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநீங்கள் எழுதுவதைப் பார்த்தால், பேசாம, நீங்களே இந்த வலைச் சரத்தைத் தொடர்ந்து எழுதலாம் எனத் தோன்றுகிறது.
ReplyDeleteஅட் லீஸ்ட், இனி எழுதப்போறவங்களுக்கு உதவியாகவாவது இருப்பேன் என வாக்கு கொடுங்கள்!
வாழ்த்துகளும், பாராட்டுகளும்!
:))
வலைச்சரத்தை முதல் முறையாக “கண்” திறந்து பார்க்கிறேன். கண் தானத்தைப் பற்றிய வாசகங்களும் அமைப்பும் நன்றாக உள்ளது. வலைப்பூ அமைப்பாளர்களுக்கு பாராட்டுக்கள்.
ReplyDeleteசீனா, கபீரின் வலைப்பூவிற்கு அறிமுகம் கொடுத்ததற்கு நன்றி.
வாங்க வடுவூர் குமார் - நன்றி கண் தானம் செய்ய வேண்டும் - தேவையான ஒன்று
ReplyDeleteடேய் பவன் - வருகைப் பதிவு மட்டும் போதாது
ReplyDeleteஜீவா - வருகைக்கு நன்றி
ReplyDeleteநண்பர் வீஎஸ்கே , நான் பதிவுகளே போடாமல் இருந்தவன் - என்னவோ எப்படியோ என்னைத் தேர்ந்தெடுத்து விட்டார்கள். பொறுப்பை நிறைவேற்றுகிறேன் - அவ்வளவு தான். தொடர்ந்து ஆசிரியராக இருப்பது சிரமமான காரியம். உதவி செய்யலாம். பார்ப்ப்போம்.
ReplyDeleteநண்ப, கபீரன்ப, கண் தானத்தைப் பற்றிய அறிவை, புரிதலுணர்வை வளர்க்க வேண்டும். இன்றைய தினத்தில் மிகத் தேவையான ஒன்று.
ReplyDeleteநன்றி
வரிசையாக சீரிய பதிவுகள் தருவதற்கு என் பாராட்டுக்கள்
ReplyDeleteபல்வேறு வலைத்தளங்களை அலசி ஆராய்ந்து அனைத்திற்கும் சலிக்காமல் விமர்சனம் எழுதும் உங்களை பல நேரங்களில் வியப்புடன் பார்த்ததுண்டு.
ReplyDeleteநீங்கள் படித்ததில் உங்களுக்குப் பிடித்த இன்னும் பல வலைத்தளங்கள் இருக்கக் கூடும் அவற்றையும் வகைப்படுத்தி அறிமுகம் செய்து வைத்தால் பயனுள்ளதாக இருக்கும்.
உதா.
கவிதைத் தளங்கள்
நகைச்சுவைத் தளங்கள்
தனிநபர் தாக்குதல் தளங்கள் :)
இப்படி
மிக்க நன்றி தருமி அண்ணா
ReplyDeleteநன்றி நண்பரே !! எனக்குப் பிடித்தது அனைத்துப் பதிவுகளையும் படிப்பது - மறு மொழி இடுவது.
ReplyDeleteமற்ற தளங்களயும் அறிமுகப் படுத்துகிறேன். தனி நபர் தாக்குதல் தளங்கள் தவிர
இதில் உள்ள சுட்டிகள் எனக்கு புதியவைகள்.( மொக்கை பதிவுகள விட்டா உனக்கு என்ன புண்ணாக்குடா தெரியுமனு யாரோ கேக்கராப்ல கீது:().
ReplyDeleteநல்ல பதிவுகள தெரிஞ்சிக்க தான வலச்சரம் பக்கம் வாரோம். :)
வாடா பொடியா - அப்பப்ப நல்ல பதிவுகளையும் படிச்சிக்கப்பா
ReplyDelete