Saturday, January 19, 2008

மிக்ஸ்ட் மசாலா

ஆண் பெண் நட்பென்பது பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான ஒரு போராட்டம்.
முக்கியமாகப் பெண் பிள்ளைகள். இவர்கள் கலாச்சாரம், பண்பாடு என்ற இருவிடயங்களால் பெற்றோருடனும் ஒட்ட முடியாமல், ஐரோப்பிய வாழ்க்கையுடனும் ஒட்ட முடியாமல் ஒரு வித மன உளைச்சலுடன் வாழ்கிறார்கள்.இதே நேரம், பிள்ளைகள் பால் வேற்றுமையின்றி நட்புடன் பழகுவதை, நட்பு என்ற கண் கொண்டு பார்க்காமல் `எங்கே பிள்ளைகள் தவறி விடுவார்களோ..! என்று அச்சப் பட்டு அச்சப்பட்டே பெற்றோர்களும் தமக்குத்தாமே மன உளைச்சலை ஏற்படுத்திக்கொண்டு வாழ்கிறார்கள். இது தப்பு என்கிறார் சந்திரவதனா ஆண் பெண் நட்பு இந்த பதிவில் இது ஐரோப்பா அல்ல எல்லா ஊர்லயும் இதே கதைதான்.

பெண்ணடிமைத்தனம் என்றால் என்ன? குடும்பத்து மேம்களிடம் டன் கணக்கில் பட்ட அறிவுடன், ஆண்வர்க்கத்தை அவர்கள் வீட்டுக்குள்ளேயே கும்மு கும்முன்னு கும்மி எடுக்கும் பெண்களை, ஆணீய பித்தளைகள் எல்லாம் பெண்ணடிமைத்தனம் செய்தனர் எனும் பரவலான புரட்டை புட்டுவைக்கும் எனது சின்னஞ் சிறு முயற்சி. உண்மையில் தன்னடிமைத்தனமான . பெண்ணடிமைத்தனத்தை made easy to understand விதமாக இப்பதிவு.

பெண்ணடிமைத்தனம் அப்படின்னு ஒரு விசயம் இருக்கா?. அப்படி ஒரு விசயம் இருந்தால் அது ஒரு பெண்ணின் மனசு இன்னொரு பெண்ணுக்குத்தான் தெரியும் என்றவாறே பெண்களால் நடைமுறைப்படுத்தப்படும் அடிமைத்தனம்தானே?. இந்த பெண்ணடிமைத்தனம் என்கிற விஷ(ய)த்திற்கு ஆண்களை 100% பொறுப்பேற்கச் சொன்னால் அதைவிட அபத்தம் வேறெதுவும் இருக்கமுடியாது. பெண்களின் இயற்கையான இயல்பே ஆண்களை விட பலமடங்கு அதிகப்படியாக சுயநலமாக இருப்பது. பெண்ணடிமைத்தனத்திற்கு ஆண்கள் மட்டுமா காரணம்

இவருக்கு சின்ன வயதிலிருந்தே ஒரு தேடல் உண்டாம். எப்படி ஆரம்பித்ததோ தெரியவில்லை பிரம்மச்சாரியத்தை பற்றிய தேடல் தான் முதலில் ஆரம்பமானது. புலன்களை அடக்கி சுக்கிலத்தை கபாலத்தில் ஏற்றினால் கபால மோட்சம் கிடைக்குமென நூலக புத்தகங்கள் கூற ஆரம்பித்தன. சுக்கிலம் என்றால் என்ன என்று தெரிந்துக் கொள்ளவே “நான் ஏன் பிறந்தேன்” “நான் எப்படி பிறந்தேன்” ‘மாதிரி’யான புத்தகங்களை நூலகத்தில் தேட ஆரம்பித்தேன். போட்டு தாக்குகிறார் ஹல்வா சிட்டி விஜய் சாமியார்களும் நானும் சில கிளுகிளு தேடல்களும்

கடவுள் எங்கே இருக்கிறார்? ஜிபிஎஸ் சிஸ்டம் மூலமாக அகப்படுமா இறைவன் இருக்கும் இடம்? பெரும்பாலானவர்கள் தேடி அலையும் இந்த இறைவன் பூட்டப்பட்டு இருக்கும் இடத்தின் சாவியைக் கண்டுபிடிக்க புதிய ஜேம்ஸ்பாண்ட் 007 வரணுமா? கடவுள் எங்கே இருக்கிறார்?

4 comments:

  1. sivaaaa, வார இறுதி நெருங்க நெருங்க, பதிவுகள் வந்து கொண்டே இருக்கின்றன். அதிகப் பதிவு பதிந்தவர் என்ற பட்டத்தைப் பெற கடும் உழைப்பு. நல் வாழ்த்துகள்

    ReplyDelete
  2. //
    cheena (சீனா) said...
    sivaaaa, வார இறுதி நெருங்க நெருங்க, பதிவுகள் வந்து கொண்டே இருக்கின்றன். அதிகப் பதிவு பதிந்தவர் என்ற பட்டத்தைப் பெற கடும் உழைப்பு. நல் வாழ்த்துகள்
    //
    வாங்க சார் அப்பிடி எல்லாம் ஒண்ணும் இல்லை. வீக் எண்ட் வேலை அதிகம் மார்க்கெட் வேற படுத்தி எடுத்திடுச்சு, இல்லைனா இன்னும் கொஞ்சம் போஸ்ட் போட்டிருக்கலாம்.

    என் ப்ளாக் காத்து வாங்குது அதை அடுத்த வாரம்தான் கவனிக்கனும்

    ReplyDelete
  3. //
    Baby Pavan said...
    present sir
    //
    அட்டெண்டன்ஸ் போட்டாச்சு!

    ReplyDelete