அறிவும் ஆற்றலும் கொண்ட பெண் இந்த சமூகத்தில் தனிமனிதராக மதிக்கப்படுகிறாரா என்ற கேள்விக்கு "இல்லை' என்று சொல்லவேண்டிய இடத்தில்தான் நாம் இப்போதும் இருக்கிறோம். பெண்ணின் இருப்பு வெறும் உடலாகவே கணக்கிடப்படுகிறது. இந்திய - குறிப்பாக - தமிழ்ச் சமூகத்தின் கலாசார நடவடிக்கை என்பது பெண்ணுடல் மீதான கண்காணிப்பாகவும் விசாரணையாகவுமே குறுகிக் கிடக்கிறது.
சமூகம், முதலில் தனது அதிகார இயந்திரங்களான மதத்தையும் சாதியையும் கொண்டு பெண்ணின் விருப்பங்களையும் தேர்வுகளையும் கட்டுப்படுத்துகிறது. அடுத்ததாக கற்பு / தாய்மை போன்ற கற்பிதங்களால் பெண்ணின் காதல் / காமம் ஆகிய உணர்வுகளைக் கட்டமைக்கிறது.தொடர்ச்சியாக குடும்பம், உழைக்குமிடம் தவிர்த்த பெண்ணின் வெளியையும் மறுதலிக்கிறது. இந்த வரையறையிலிருந்து விலகி தனித்த அடையாளத்துடன் ஒரு பெண் தனக்கென பாதையை வகுத்துக்கொள்ள முற்படும்போது அது குருட்டுச்சந்தாகவே முடிகிறது என்பதுதான் கசப்பான உண்மை. லயோலா கல்லூரியில் லீனா மணிமேகலைக்கு நடந்த அவமரியாதை. துப்பட்டாவில் படபடக்கும் தமிழ் கலாச்சாரம் - செல்வன்
மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கணவனுடன், பாய்பிரண்டுடன் பீச்சுக்கு போன இரண்டு பெண்களை எண்பது பேர் கொண்ட வெறிநாய் கும்பல் மானபங்கப்படுத்தியுள்ளது. அந்த பெண்களுக்கு இந்த எண்பது நாய்களும் சேர்ந்து இழைத்த கொடுமையை விட அதிக கொடுமையை இனி கற்புக் காவலர் பலரும் சேர்ந்து இழைக்கபோவதை நினைத்தால் தான் வருத்தமாக இருக்கிறது."நைட் 12 மணிக்கு ஏன் பாய்பிரண்டுடன் பீச்சூக்கு போனாய்?" "ஏன் ஜீன்ஸ் போட்டாய்?" என்று அவர்கள் நடத்தையை சந்தேகத்துக்குரியதாக்கி, அவர்கள் கேட்காத அட்வைஸ் மழையை இவர்களாக பொழிந்து தள்ளி,இவர்கள் மானபங்கப்படுத்தப்பட இவர்கள் டிரஸ்ஸூம் நடத்தையும் தான் காரணம் என்று தீர்ப்பெழுதி, இவர்களை அனைத்து பெண்களுக்கும் முன்னுதாரனமாக்கி "ஆண்களின் காம இச்சையை தூண்டும் வண்ணம் ஆடை அணிவது தவறு. பெண்ணியத்தை விட கண்ணியமே முக்கியம்" என்று ஒட்டுமொத்த இந்திய பெண்ணினத்துக்கும் (மேல்நாட்டு பெண்களிடம் பருப்பு வேகாது என்பதால்) அட்வைஸ் கூறுவர். "ஆண்கள் ஏன் பேண்ட் மேல் ஜட்டி போடுவதில்லை" - செல்வன்
நியூ இயர் கொண்டாட்டம்னா என்னாங்க? நாம ஒரு பொது இடத்துல கூடுவோம், நம்ம பைக்க எடுத்துகிட்டு வருவோம். 9 மணியில இருந்து நல்லா கும்முன்னு சரக்கை ஏத்திக்கணும், 12 மணி ஆனதும் இல்லாத கலாட்டா எல்லாம் பண்ணிட்டு அப்பால காலியா இருக்க ரோட்டுல வரலாறு காணாத ஸ்பீட்ல பறக்கணும், எப்ப வீட்டுக்கு வந்து விழுந்தோம்னே தெரியாம வந்து விழணும். அட.. ரோட்லேயே எவன் மேலேயாவது இடிச்சாலும் சரி.. எலும்பு முறிஞ்சாலும் சரி எவனாச்சும் செத்தாலுமே சரி.. இது நம்ம கலாச்சாரம் ஆச்சே, விட்டுக் கொடுக்க முடியுமா?
பொம்பளைங்களுக்கு என்ன தெரியும்? சும்மா படிச்சுட்டாப்பல ஆச்சா? எப்பப்ப ஆம்பளைங்களோட உணர்ச்சி தூண்டப்படும்னு தெரியுமா? கலாச்சாரத்தை அவங்களால தனியா காப்பாத்த முடியுமா? முதல்ல கலாச்சாரம்னா என்னன்னு அவங்களுக்குத் தெரியுமா? இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளை - பெனாத்தல் சுரேஷ்
இன்றைய காலகட்டத்தில் கலாசாரம் என்பதற்குச் சரியான விளக்கமோ, அளவுகோலோ தனியாக விதிக்க முடியாத நிலைமைதான்.அவரவர்க்கு எது சௌகரியமோ,எது பிடிக்குமோ அதுவே கலாசாரம் என்று பொத்தாம் பொதுவாக ஒரு விளக்கம் சொன்னாலும் மனிதனுக்கு மனிதன் வேறுபடுகிறது இதன் விளக்கம். கலாசாரம் அவரவர் பார்வையில், புத்தாண்டு சம்பந்தமாக கலாசாரம் - பாசமலர்.
இந்த சினிமாவிலே சான்ஸ் கேட்டு அலையறதுங்கிறது நம்மிடையே உள்ள பெரும்பாலான இளைஞர், இளைஞிகளுக்கு ரொம்ப சர்வ சாதார்ணமான விஷயம்! அதுவும் சினிமாங்கிற கனவுத் தெழிற்சாலையிலே சாதிக்கணுங்கிற வெறியோட இன்னைக்கு முகம் தெரியாத எத்தனையோ பேருங்க அலைஞ்சிக்கிட்டிருக்காங்க!. திரை உலகில் நுழையும் பெண்கள், திரைக்கு பின்னால் இருக்கும் கலாச்சாரம் - வெளிகண்ட நாதர்
யப்பாடி!! இது மங்களூர் சிவா எழுதினதா?....நம்பவே முடியலையேப்பா!!
ReplyDeleteவாழ்த்துக்கள்
அருணா
<==
ReplyDeleteஅருணா said
யப்பாடி!! இது மங்களூர் சிவா எழுதினதா?....நம்பவே முடியலையேப்பா!! ==>
அதானே.
வாரக் கடைசியில் - இப்படி ஒரு தலைப்பில் - உள்ளே போனால், ஒரு சிந்தனையைத் தூண்டும் பதிவுகளின் சுட்டிகள். அருமை அருமை. போடும் பதிவுகள் வலைச்சரத்திற்காக என்ற நினைப்பு சிவாவின் கைகளைக் கட்டிப் போட்டு விட்டதோ. கலாச்சாரத்தைப் பற்றி ஒரு ஆதங்கம் வெளிப்படுகிறது.
ReplyDelete//யப்பாடி!! இது மங்களூர் சிவா எழுதினதா?....நம்பவே முடியலையேப்பா!!
ReplyDelete//
Me too :)))))
//
ReplyDeletearuna said...
யப்பாடி!! இது மங்களூர் சிவா எழுதினதா?....நம்பவே முடியலையேப்பா!!
வாழ்த்துக்கள்
அருணா
//
ஹாஹா எழுதினது நான் இல்லை!!
தொகுத்து சுட்டி குடுத்தது மட்டும்தான் நான்.
நன்றிங்க அம்மிணி. உங்க ப்ளாக் பேரை மாத்தீட்டீங்களா??
//
ReplyDeleteசாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...
<==
அருணா said
யப்பாடி!! இது மங்களூர் சிவா எழுதினதா?....நம்பவே முடியலையேப்பா!! ==>
அதானே.
//
சிவப்ரகாசம் அண்ணே ரிப்பீட்டா?
சரி அருணா அவங்களுக்கு சொன்னதே உங்களுக்கும் ரிப்பீட்டு
//
ReplyDeletecheena (சீனா) said...
வாரக் கடைசியில் - இப்படி ஒரு தலைப்பில் - உள்ளே போனால், ஒரு சிந்தனையைத் தூண்டும் பதிவுகளின் சுட்டிகள். அருமை அருமை. போடும் பதிவுகள் வலைச்சரத்திற்காக என்ற நினைப்பு சிவாவின் கைகளைக் கட்டிப் போட்டு விட்டதோ. கலாச்சாரத்தைப் பற்றி ஒரு ஆதங்கம் வெளிப்படுகிறது.
//
ஐயா வாங்க,
உங்க கருத்துக்கு நன்றி.
@என்றென்றும் அன்புடன் பாலா
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி