Thursday, January 31, 2008

கவிஞர்கள் அறிமுகம் - வலைச்சரம்

நண்பர்களே, சில கவிஞர்களை அறிமுகம் செய்கிறேன்.

முதலில் அருமை நண்பர் புகாரி பற்றி எழுதுகிறேன். வானூறி மழை பொழியும், வயலூறி கதிர் விளையும், தேனூறி பூவசையும், தினம்பாடி வண்டாடும், காலூறி அழகுநதி கவிபாடிக் கரையேறும், பாலூறி நிலங்கூட பசியாறும் உரந்தையில்(ஒரத்தநாடு - தஞ்சை மாவட்டம்) பிறந்தவர். தற்போது கனடாவில் வசிக்கிறார். தஞ்சாவூரையும் பட்டுக்கோட்டையையும் இணைத்து ஒரு கோலம் போட்டால், சிரிக்கும் பூசணிப்பூவை நீங்கள் ஒரத்தநாட்டின் கொண்டையில்தான் செருகவேண்டும். தென்னங்கீற்றைப் போல வாரி வகிடெடுத்த தெருக்கள் ஒரத்தநாட்டிற்குப் பேரழகு. உரந்தை என்று சுருக்கமாக அதன் பெயர் கொஞ்சப்படும். இவை அனைத்தும் கவிஞர் கைவண்ணம். எது என் ஊர் என ஒரு அழகுக் கவிதை, எளிய சொற்களில், நச்சென்ற முடிவுடன் படைத்திருக்கிறார். அவரது அருமைக் கவிதைகளில் இதுவும் ஒன்று. வெளிச்ச அழைப்புகள் என்றதொரு புத்தகமும் கவிப்பேரரசின் முன்னுரையோடு வெளி வந்துள்ளது.
செல்லுங்களேன் அவரது கவிதையைச் சுவைக்க.

நண்பர் நந்து, அருமை நிலாவின் தந்தை. பலவித ஒளிப்படங்கள் படைத்திருக்கிறார். அருமை அருமை. பார்க்க வேண்டிய பதிவொன்று. கண்ணுக்கு விருந்து படையுங்கள்.

நண்பர் கருப்பன் நெதர்லாண்ட்ஸில் பணியாற்றுகிறார். மாலைப் பொழுதின் மயக்கத்திலே என்ற ஒரு வலைப்பூவில் எழுதுகிறார். நகைச்சுவை மிளிர புதிய திரைப்படம் "ரோபோ" பற்று எழுதி இருக்கிறார். படியுங்களேன்.

செல்வி ஷங்கர் என்ற ஒரு பெண் பதிவர் அழகுத் தமிழில் அருமையான ஒரு வலைப்பூ வைத்திருக்கிறார். பட்டறிவும் பாடமும் என்ற வலைப்பூ. பல வித கவிதைகளும் கட்டுரைகளும் எழுதி இருக்கிறார். பயனுள்ள பதிவு.

நாளை சந்திப்போமா ?








11 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. இதில் ஆசான் புகாரி மற்றும் நந்து அண்ணா நீண்ட நாட்களாக பழக்கம் உள்ளவர்கள். மற்றவர்கள் புதியதாக தெரிந்துக் கொண்டேன்.

    .....

    ஹய்யா... சீனா சாரோட எல்லா பதிவுகளுக்கும் பின்னூட்டம் போட்டுட்டேன். ரொம்ப சந்தோஷம். நான் போடற டுபாக்கூர் பதுவுகளுக்கு கூட வந்து பின்னூட்டம் போடறார். இங்க எல்லா பதிவுகளும் ரொம்ப பயனுள்ளதா தொகுத்து தறார். நாம் பின்னூட்டம் போடலனா எப்டி?. நன்றிக் கடன் பட்டிருக்கோம்ல. :P

    ReplyDelete
  3. நல்ல தொகுப்பு சீனா

    ReplyDelete
  4. பொடியன் சஞ்செய் - நன்றிக்கடனுக்கு நன்றி. புகாரியின் எழுத்துகள் எனக்குப் பிடித்தவை. நன்றி

    ReplyDelete
  5. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சேதுக்கரசி

    ReplyDelete
  6. சீனா ஐயா,

    நல்ல முறையில் அருமையான எழுத்துக்களையும், படைத்தவரையும் அறிமுகப்படுத்துகிறீர்கள். வாழ்த்துக்கள்.

    சில பதிவுகள், தலைப்பைப் பார்த்தால் உள்ளே ஈர்க்கும், சென்றபின் பல் இளித்து ... "வணக்கமுங்க இது மொக்கைப் பதிவுங்க எனும்போது" அட என்று ஒரு எரிச்சல் வரும். இதனாலேயே பல நல்ல பதிவுகள் நம் கண்களை விட்டுச் செல்லும். ஆனால் நீங்க சொன்னால் போய்ப் பார்க்காம இருக்க முடியுமா ? பார்த்தாச்சு, பிடிச்சதுக்கெல்லாம் பின்னூட்டம் போட்டாச்சு ...

    ReplyDelete
  7. அன்பிற்கினிய சீனா, சஞ்சய், சதங்கா ஆகியோருக்கு என் நன்றிகள் பலப்பல

    அன்புடன் புகாரி

    ReplyDelete
  8. நன்றி சதங்கா மற்றும் புகாரி - வருகைக்கும் கருத்துக்கும்

    ReplyDelete
  9. கவிஞர்கள் பட்டியலில் நானா? உங்களுக்கு குறும்பு ஜாஸ்தி சீனா சார் :P

    ReplyDelete
  10. அரைகுறையாய் போட்டோ எடுக்க கத்துக்கொண்டிருப்பதால் அந்த ப்ளாக் டெஸ்ட்டுக்காக வைத்திருந்தேன். அதையும் தேடி கண்டுபிடித்து விட்டீங்களா?

    கழுகுப்பார்வைதான் உங்களுக்கு :)

    ReplyDelete
  11. நந்து, ஒளிப்படம் எடுப்பதும் ஒரு கவிதை தான். அதைப் படைப்பதும், கலை அழகோடு பதிவதும் ஒரு கவிதை தான். அதனால் தான் இங்கு அறிமுகம்.

    வலைச்சர பொறுப்பாளர்களின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க, புதிய, மற்றவர்களுக்கு அதிகம் அறிமுகமில்லாத வலைப்பூக்களைத் தேடி சுட்டி தருகிறேன். அவ்வளவு தான்

    ReplyDelete