எந்த படம் வந்தாலும் பார்க்கிற ஆளுங்க நாம. அது மொக்கையோ இல்ல சூப்பரா இருக்கோ. எல்லா படத்தையும் பார்த்துடணும்.
கப்பி
ஜாவா பாவலர் கப்பி அவர்கள் ஒரு மிகச்சிறந்த கவிஞர்.
கதை எல்லாம பின்னிபெடலடிப்பாருன்னு எல்லாருக்கும் தெரியும். ஆனா கப்பி ஒரு நல்ல சினிமா விமர்சகர். தமிழாகட்டும், ஆங்கிலமாகட்டும் எந்த படத்துக்கும் கப்பியின் விமர்சனம் ஒரு தனி அழகு தான். அவர் எழுதிய Gandhi - My Father மற்றும் Apocalypto விமர்சனம் எனக்கு பிடித்த ஒன்று.
இப்போ விமர்சனத்துக்கு தனியாகவே ஒரு ப்ளாக் ரெடி செய்து கீத்துக்கொட்டாய்ன்னு பேரு எல்லாம் வச்சி கலக்க ஆரம்பிச்சிருக்காங்க நம்ம மக்கள் - தேவ், இளா, கப்பி பய மற்றும் புது மாப்பிள்ளை வெட்டிப்பயல்.
கானா பிரபா
நமக்கும் தல கானாவுக்கும் எப்போதும் சினிமா பத்தி தான் பேச்சு. அதுவும் மலையாள படங்களின் கானாவோட விமர்சனத்தை எப்போதும் எதிர்பார்ப்பேன். கானா சினிமா சார்ந்த ரெண்டு ப்ளாக் வச்சிருக்காரு. பாடலுக்கே ஒரு தனியாக ரேடியோஸ்பதி ன்னு ஒரு ப்ளாக் இருக்கு. தமிழ்மணத்தில் முதல் முதலில் நேயர்கள் விரும்பி கேட்கும் பாடலை ஒலி பரப்பும் முறையை கொண்டுவந்தவார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நேயர்கள் கேட்ட பாடல்கள் அந்த பதிவில் ஒலிக்கும்.
அதே போல வீடியோஸ்பதி என்று ஒரு தனி ப்ளாக் இருக்கு. அதில் சிறந்த குறும் படங்கள், பல பாடல் காட்சிகள், வெவ்வேறு மொழியில வந்த பாடல்கள் என்று பல அற்புதமான காட்சிகளை கொடுத்திருப்பார்.
கவிதாயினி காயத்ரி
கவிதாயினி காயத்ரி ஒரு பெரிய கவிஞர்ன்னு இந்த தமிழ்கூறும் நல்உலகம் அறிந்த விஷயம். ஆனால் பல மொக்கை படங்களை பார்த்து அதனால தமிழ் மக்களுக்கு பல விழிப்புணர்வு பதிவுகள் போட்டு நல்ல உள்ளம் படைத்தவர். அவர் சமீபத்தில் எழுதிய கொலைவெறி ஏனடா? பதிவை பாருங்க அவுங்க எம்புட்டு நல்ல உள்ளம் படைத்தவர்ன்னு தெரியும்.
அய்யனார்
அய்யனாருன்னு பேரை கேட்டாலே பின்நவீனத்தும், புனைவுன்னு தான் எல்லோருக்கும் ஞாபகம் வரும். ஆனா எங்க தல ஒரு சினிமா வெறியார். அவர் பார்க்கதா படங்களே இல்லைன்னு கூட சொல்லாம். அவர் மட்டும் படத்தை பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டாரு அதை எங்களுக்கும் கொடுத்து பார்க்க சொல்லும் உயர்ந்த உள்ளம் படைத்தவர். சில படங்கள் கடைகளில் இல்லமால் கூட இருக்கலாம் ஆனா எங்க தலக்கிட்ட கண்டிப்பாக இருக்கும்.
நான் அவரிடம் கேட்டு கொள்வது சீக்கிரம் திரைப்படத்துக்குன்னு தனியாக ஒரு ப்ளாக் ஆரம்பிங்கன்னு தான். அவர் எழுதிய திரைப்படங்கள் ஒன்றை மட்டும் கொடுக்க மனம் இல்லமால் அத்தனையும் இங்கே கொடுக்கிறேன் திரைப்படம்
தேன்கிண்ணம்
தமிழ்மணத்தில் சமீபத்தில் புகுந்து புயலாக கலக்கிட்டு இருக்காங்க நம்ம நண்பர்கள்.
வேதா, ஜி3, நாகை சிவா, ராம், மை ஃபிரண்ட், கப்பி பய, J.K, காயத்ரி, இம்சை அரசி, கோவை ரவி மற்றும் நாமக்கல் சிபி.
தேண்கிண்ணத்துல 1950 வெளிவந்த பாடல் முதல் சமீபத்தில் வந்த திரைப்பாடல்கள் வரை இருக்கிறது. பாடல் வரிகளுடன் நன்றாக தொகுத்து வழங்குகிறார்கள்.
ஜமால்
ஜமால் அவர்கள் நட்சத்திரமாக இருந்த போது அவர் எழுதிய ஹேராம் படம் குறித்த விமர்சனம் என்னை கவர்ந்த ஒன்று. நன்றாக அலசி ஆராய்ந்து விமர்சனம் செய்திருப்பார். அந்த பதிவு ஒளிரும் பாரதத்திற்காக பலியிடப்பட்ட மகாத்மா - ஹே ராம் எனும் அழித்தெழுதப்பட்ட பிரதி.
சின்ன குட்டி
இவரை வலையுலகத்தின் வீடியோ கடை அதிபர்ன்னு சொல்லாம். அவரோட இந்த
அப்பன் மவனே சிங்கன்டா வலையில எல்லா விதமான வீடியோகளும் கிடைக்கும். போயி பாருங்கள்
நாளை ஒரு ஸ்பெசல் தொகுப்பு.....
தல
ReplyDeleteஎன்ன சொல்றதுன்னே தெரியல,
நா தழுதழுக்குது....
தெய்வமே எங்கேயோ போய்ட்டீங்க
;-)
அய்யனாருக்கு குடுத்த திரைப்படம் சுட்டியில ஒண்ணுமே இல்லியே கோபி. கொஞசம் பாருங்களேன்.
ReplyDelete//நாளை ஒரு ஸ்பெசல் தொகுப்பு.....//
ReplyDeleteஆஹா.. ஆர்வமாய் வெயிட்டிங் :))
//
ReplyDeleteதமிழ் மக்களுக்கு பல விழிப்புணர்வு பதிவுகள் போட்டு நல்ல உள்ளம் படைத்தவர்.
//
ஏலே இது உனுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல
:-)))))
//கவிதாயினி காயத்ரி
ReplyDeleteகவிதாயினி காயத்ரி ஒரு பெரிய கவிஞர்ன்னு இந்த தமிழ்கூறும் நல்உலகம் அறிந்த விஷயம். ஆனால் பல மொக்கை படங்களை பார்த்து அதனால தமிழ் மக்களுக்கு பல விழிப்புணர்வு பதிவுகள் போட்டு நல்ல உள்ளம் படைத்தவர். அவர் சமீபத்தில் எழுதிய கொலைவெறி ஏனடா? பதிவை பாருங்க அவுங்க எம்புட்டு நல்ல உள்ளம் படைத்தவர்ன்னு தெரியும்.//
:))
மாப்பி... நீ எங்கயோ போயிட்டடா.. இரு குலதெய்வத்துக்கு பூசய முடிச்சுட்டு வர்றேன்..
//எந்த படம் வந்தாலும் பார்க்கிற ஆளுங்க நாம. அது மொக்கையோ இல்ல சூப்பரா இருக்கோ. எல்லா படத்தையும் பார்த்துடணும்.//
ReplyDeleteஇப்படித்தானே பொறி கோபின்னு அடைமொழியெல்லாம் வச்சி கூப்பிட ஆரம்பிச்சாங்க.. மறக்க முடியுமா? ஹீஹீஹீ...:-))
அறிவுஜீவி கப்பி எழுதிய காந்தி மை அபாதர் சூப்பர்ண்ணே.. ஆனா இன்னும் அந்த படம்தான் பார்க்கவே இல்ல.. நீங்க பார்த்தூட்டீங்களா?
ReplyDeleteகானா பிரபா பத்தி தனியா சொல்லணும் நீங்க... அவரோட ரேடியோஸ்பதி, வீடியோஸ்பதி எல்லாமே தனித்தனியா ஜொலிக்குது.. நானும் சில சமயம் மலயாள படங்கள் பார்க்கனும்ன்னா, இவர் விமர்சனம் எழுதியிருக்காரான்னுதான் முதல்ல பார்ப்பேன்.. அப்படித்தான் ஒரு நாளு போலிஸ் படத்துல இருந்து ஒரு அருமையான மெலோடி போட்டிருந்தாரு.. உடனே போய் படத்தையே டவுன்லோட் பண்ணி பார்த்துட்டோம்ல. ;-)
ReplyDeleteஹாஹா.. அழுகாச்சி காவியம் படைக்கும் கவிதாயினி பாட்டியின் பெயர் கவிதைச்சரத்துல மிஸ் ஆனதுக்கு இதுதான் காரணமா?
ReplyDeleteஆமா.. பரட்டை, ஆர்யா படம் விமர்சனம் எல்லாம் சூப்பர்.. ஆனா இவங்க பார்க்கிற எல்லா படத்தையும் மொக்கையா ஆக்கிடுறாங்க.. மொக்கை அரசின்னு பட்டம் கொடுத்திரலாம்.. சரியா அண்ணா? :-)
அய்யனாரின் அந்த சீனப்பட விமர்சனங்கள் அருமை.. அண்மையின் தேரே ஜமீன் பார் விமர்சனம் மிக மிக அருமை.. :-)
ReplyDeleteஆஹா.. தேன்கிண்ணம். :-)
ReplyDeleteஜமால் அவர்களுடைய பதிவு மட்டும்தான் இதுல படிச்சதுல்ல.. இன்னைக்கு படிச்சிடுவோம். :-)
ReplyDeleteசின்ன குட்டி ஒரு யூ டியூப் ராஜா.. சொந்தமா யூ டியூப்ல தேடுறதுக்கு இங்கே இவரோட ப்ளாக்ல ஒரு கஷ்டமும் இல்லாமல் பார்க்கலாம்.. அழகா வரிசைப்படுத்தி வச்சிருப்பார்..
ReplyDeleteஇத்தனை கமேண்டு பார்த்து அண்ணன் மலைச்சு போயிடக் கூடாது..
ReplyDeleteவேலை முடிஞ்சிடுச்சு.. அதான் எங்கே கும்மி ஸ்டார்ட் மியூஜீக்ன்னு தேடினேன்.. இதுதான் மாட்டிச்சு.. :-)))
//G3 said...
ReplyDelete//நாளை ஒரு ஸ்பெசல் தொகுப்பு.....//
ஆஹா.. ஆர்வமாய் வெயிட்டிங் :))
//
என்ன ஒன்னும் தெரியாத மாதிரி கேட்குறீங்க.. நாளைக்கு என்ன ஸ்பெஷல்ன்னு உங்களுக்கு தெரியாதா?
கோழி பிரியாணி, மட்டன் பொறியல்.. மறந்துடாம வந்தூடுங்க. :-)
//.:: மை ஃபிரண்ட் ::. said...
ReplyDeleteஇத்தனை கமேண்டு பார்த்து அண்ணன் மலைச்சு போயிடக் கூடாது..
வேலை முடிஞ்சிடுச்சு.. அதான் எங்கே கும்மி ஸ்டார்ட் மியூஜீக்ன்னு தேடினேன்.. இதுதான் மாட்டிச்சு.. :-)))//
சேம் பிளட் :))
//இப்படித்தானே பொறி கோபின்னு அடைமொழியெல்லாம் வச்சி கூப்பிட ஆரம்பிச்சாங்க.. மறக்க முடியுமா? ஹீஹீஹீ...:-))//
ReplyDeleteரிப்பீட்டே :))
@ கானா பிரபா
ReplyDelete\\தல
என்ன சொல்றதுன்னே தெரியல,
நா தழுதழுக்குது....
தெய்வமே எங்கேயோ போய்ட்டீங்க
;-)\\
தல உங்களை விட்டு நான் எங்க போயிட போறேன்...;))
@ சின்ன அம்மிணி
\\அய்யனாருக்கு குடுத்த திரைப்படம் சுட்டியில ஒண்ணுமே இல்லியே கோபி. கொஞசம் பாருங்களேன்.\\
எனக்கு சரியாக வருகிறதே...சரி இங்கே அந்த சுட்டியை கொடுத்திருக்கிறேன் பாருங்கள்
http://ayyanaarv.blogspot.com/search/label/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
@ ஜி3
ReplyDelete\\//நாளை ஒரு ஸ்பெசல் தொகுப்பு.....//
ஆஹா.. ஆர்வமாய் வெயிட்டிங் :))\\
கண்டிப்பாக பாருங்கள்...ஆமா இன்னிக்கு பதிவில் கடைசி வரியை மட்டும் தான் படிச்சிங்களா!? ;)
@ மங்களூர் சிவா
\\//
தமிழ் மக்களுக்கு பல விழிப்புணர்வு பதிவுகள் போட்டு நல்ல உள்ளம் படைத்தவர்.
//
ஏலே இது உனுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல
:-)))))\\
என்ன அண்ணே இப்படி சொல்லிட்டிங்க....;))
@ சென்ஷி
ReplyDelete\\:))
மாப்பி... நீ எங்கயோ போயிட்டடா.. இரு குலதெய்வத்துக்கு பூசய முடிச்சுட்டு வர்றேன்..\\
அய்யனார் பதிவை படிக்க போறியா!? ;)
@ மை ஃபிரண்ட்
ReplyDelete\\இப்படித்தானே பொறி கோபின்னு அடைமொழியெல்லாம் வச்சி கூப்பிட ஆரம்பிச்சாங்க.. மறக்க முடியுமா? ஹீஹீஹீ...:-))\\
இதெல்லாம் டக்குன்னு ஞாபகத்துல வந்துடுமே! ;))
\\அறிவுஜீவி கப்பி எழுதிய காந்தி மை அபாதர் சூப்பர்ண்ணே.. ஆனா இன்னும் அந்த படம்தான் பார்க்கவே இல்ல.. நீங்க பார்த்தூட்டீங்களா?\\
சேம் பிளட்..;)
\\கானா பிரபா பத்தி தனியா சொல்லணும் நீங்க... \\
எனக்கும் ஆசை தான் ஆனா என்ன செய்யுறது டைம் இல்ல...;)
அய்யனாரோட சுட்டி இப்பத்தெரியுது. நான் புது சன்னல்ல திறக்க முயற்சி பண்ணினேன். ஒருவேளை அதனால ஒண்ணும் தெரியாம போயிருக்கும்.அடுத்த ஸ்பெஷல் தொகுப்புக்கு வெயிட்டிங்.
ReplyDelete@ மை ஃபிரண்ட் - Part 2
ReplyDelete\\ஹாஹா.. அழுகாச்சி காவியம் படைக்கும் கவிதாயினி பாட்டியின் பெயர் கவிதைச்சரத்துல மிஸ் ஆனதுக்கு இதுதான் காரணமா?\\
எப்படி பாட்டியோட எல்லா புகழையும் சொல்லவது தானே சரி அதான் சினிமாவுல போட்டுட்டேன்..;)
\\மொக்கை அரசின்னு பட்டம் கொடுத்திரலாம்.. சரியா அண்ணா? :-)\\
தங்கச்சி வார்த்தைக்கு மறுவார்த்தை ஏது அப்படியே செய்திடலாம் :))
\\அய்யனாரின் அந்த சீனப்பட விமர்சனங்கள் அருமை.. அண்மையின் தேரே ஜமீன் பார் விமர்சனம் மிக மிக அருமை.. :-)\\
அய்யனாரோட விமர்சனம் எப்போதும் ஒரு தனித்துவம் வாய்ந்த ஒன்னு பினநவீனத்துவம் போல..! ;)
\\சின்ன குட்டி ஒரு யூ டியூப் ராஜா.. சொந்தமா யூ டியூப்ல தேடுறதுக்கு இங்கே இவரோட ப்ளாக்ல ஒரு கஷ்டமும் இல்லாமல் பார்க்கலாம்.. அழகா வரிசைப்படுத்தி வச்சிருப்பார்..\\
சரியாக சொன்னாய்...பழைய யூ டியூப் வீடியோ எல்லாம் இங்கே கிடைக்கும்..;)
\\இத்தனை கமேண்டு பார்த்து அண்ணன் மலைச்சு போயிடக் கூடாது..
வேலை முடிஞ்சிடுச்சு.. அதான் எங்கே கும்மி ஸ்டார்ட் மியூஜீக்ன்னு தேடினேன்.. இதுதான் மாட்டிச்சு.. :-)))\\
நாம எல்லாம் யாரு!? ஒரே குடும்பம் இல்லையா!;))
@ சின்ன அம்மிணி
ReplyDelete\\அய்யனாரோட சுட்டி இப்பத்தெரியுது. நான் புது சன்னல்ல திறக்க முயற்சி பண்ணினேன். ஒருவேளை அதனால ஒண்ணும் தெரியாம போயிருக்கும்.\\
அவருடைய திரைப்பட labelஐ அப்படியே கொடுத்தேன்...சில சமயம் அதிலும் பிரச்சனை வரும்.
\\அடுத்த ஸ்பெஷல் தொகுப்புக்கு வெயிட்டிங்.\\
காலையில் வெளிவரும்...;))
///கவிதாயினி காயத்ரி ஒரு பெரிய கவிஞர்ன்னு இந்த தமிழ்கூறும் நல்உலகம் அறிந்த விஷயம். ///
ReplyDeleteஇதுபோல சில விச கிருமிகள் பரப்பிவிட்ட வதந்தியால்தான் அவுங்க தன்னை கவிஞராக நினைத்து எல்லாரையும் கொடுமை படுத்திக்கிட்டு இருக்காங்க!!! ஆமா அப்படின்னா இவுங்க கவிஞர்கள் லிஸ்டில் அல்லவா வந்து இருக்கனும் நீங்க ஏன் சினிமா லிஸ்டில் இவுங்க பேரை சேர்த்தீங்க:)))
என்ன சொல்றதுன்னே தெரியல,
ReplyDeleteநா தழுதழுக்குது....
:))
@ குசும்பன்
ReplyDelete///கவிதாயினி காயத்ரி ஒரு பெரிய கவிஞர்ன்னு இந்த தமிழ்கூறும் நல்உலகம் அறிந்த விஷயம். ///
இதுபோல சில விச கிருமிகள் பரப்பிவிட்ட வதந்தியால்தான் அவுங்க தன்னை கவிஞராக நினைத்து எல்லாரையும் கொடுமை படுத்திக்கிட்டு இருக்காங்க!!! ஆமா அப்படின்னா இவுங்க கவிஞர்கள் லிஸ்டில் அல்லவா வந்து இருக்கனும் நீங்க ஏன் சினிமா லிஸ்டில் இவுங்க பேரை சேர்த்தீங்க:)))\\
அண்ணே பதிவை இன்னொரு முறை நன்றாக படியுங்கள்..;))
@ அய்யனார்
\\\என்ன சொல்றதுன்னே தெரியல,
நா தழுதழுக்குது....
:))\\\
கடமை வீரன்னு நிருபிச்சிட்டிங்க..நன்றி அய்ஸ் ;)
நன்று கோபி - நல்ல பதிவர்களைப் பற்றிய நல்லதொரு அறிமுகம். பல பதிவுகள் பார்த்திருக்கிறேன். விட்டுப் ப்ப்னதையும் பார்த்து விடுவோம்
ReplyDelete//என்ன ஒன்னும் தெரியாத மாதிரி கேட்குறீங்க.. நாளைக்கு என்ன ஸ்பெஷல்ன்னு உங்களுக்கு தெரியாதா?
ReplyDeleteகோழி பிரியாணி, மட்டன் பொறியல்.. மறந்துடாம வந்தூடுங்க. :-)//
நான் பிறவிச் சைவமுங்க - தனியா கவனிங்க ஆமா சொல்லிப்புட்டேன்
//சின்ன குட்டி ஒரு யூ டியூப் ராஜா.. சொந்தமா யூ டியூப்ல தேடுறதுக்கு இங்கே இவரோட ப்ளாக்ல ஒரு கஷ்டமும் இல்லாமல் பார்க்கலாம்.. அழகா வரிசைப்படுத்தி வச்சிருப்பார்.//
ReplyDeleteரிப்பீட்ட்ட்ட்டேய்ய்ய்ய்ய்ய்.
@ சீனா
ReplyDelete\\நன்று கோபி - நல்ல பதிவர்களைப் பற்றிய நல்லதொரு அறிமுகம். பல பதிவுகள் பார்த்திருக்கிறேன். விட்டுப் ப்ப்னதையும் பார்த்து விடுவோம்\\
நன்றி ஐயா..உங்கள் வருகை எனக்கு புதிய உற்சாகத்தை தருகிறது ;))
ஒரே சரவெடியா கொளுத்திருக்க போல! தீபாவளிக்கு உன்ன போட்டுருக்கலாம்.
ReplyDelete@ தம்பி
ReplyDelete\\ஒரே சரவெடியா கொளுத்திருக்க போல! தீபாவளிக்கு உன்ன போட்டுருக்கலாம்.\\
செல்லம் இப்பவாது வந்தியே...நன்றியோ நன்றி ;))
அண்ணாச்சி / தங்கை மாரே புதுசா தமிழ் விடீயொ பக்கம் ஒன்னு
ReplyDeleteஆரம்பித்து இருக்கேய்ன். கொஞ்சம் லின்க் பண்ணி ஆதரவு தரவேணும்.
பக்கம் பெயர் தமிழ்விடீயொ.ORG
முடிந்த அளவு பண்ணி இருக்கேன். இன்னும் நிறைய வேலை இருக்கு.
Tamil Videos