Monday, February 4, 2008

ஆடுமாடாகிய நான்...

மொழிக்குள் விழுந்து, மொழிக்குள் புதைந்து, மொழிக்குள் தொலைந்து போவது பிடித்துப்போனதிலிருந்து எழுதுவது சுகமாகிப்போனது. மாடு மேய்க்கிற பள்ளி விடுமுறை நாட்களில், கம்யூனிச புத்தகங்களை அறிமுகப்படுத்திய சித்தப்பா என் தோழர். அவரின் தேடலில் என்னையும் இழுத்து, புத்தகங்களுக்குள் விழ வைக்க, அவர் பட்ட சிரமமும், இருக்கிற காசுக்கு புத்தகங்கள் வாங்கிவிட்டு திருநெல்வேலியிலிருந்து திருட்டுத்தனமாக, ரயிலில் ஊருக்கு வந்த காலங்கள் மறைந்து போகாமல் இன்னும் மனதுக்குள் இருக்கிறது.

அவரது தோழமையிலேயே சில எழுத்தாளர்களின் சந்திப்பும் அறிமுகமும் கிடைத்தது. அவர்களுக்காக வாங்கப்படுகிற சாராயத்திலும், விருந்தினர்களுக்காக உயிர்விடத் தயாராக இருக்கிற, வீட்டுக் கோழிகளின் பிரியாணியிலும் வளர்ந்தது என் வாசிப்பு ஆர்வமும் எழுத்தார்வமும்.
பதினாறு வயதில் திக்கி திக்கி தொடங்கிய எழுத்து இன்னும் போதை மாறாமல் இருக்கிறது. வாசிக்க கிடைக்கிற ஏதாவது ஒன்றைப் பொருத்து போதை மாறுகிறது அல்லது ஏறுகிறது.

தினமும் ஒரு ரகசியத்தைச் சொல்லிப்போகும் மொழியின் கைகளில் நான் ஒரு குழந்தை. அதன் விளையாட்டில் பயணிக்கும் இந்த வழித்தடத்தில், அறிந்தும் அறியாமலும் இருக்கிற கணினியின் நட்பு கிடைத்த பின், எழுத்துக்கு அடிமையாகிப் போன அவஸ்தை, உங்களைப் போலவே எனக்கும் ரசனையாகவே இருக்கிறது.

வலைப்பதிவு பற்றி பேசுகின்ற/ எழுதுகின்ற நண்பர்களின் அறிமுகத்துக்குப் பிறகு எனக்குள்ளும் விதையொன்று விழுந்து ஆக்கிரமிக்க, ஆரம்பமானது
ஆடுமாடும் கடனாநதியும்.

பிரியமான புத்தகத்தின் சில குறைகளை எழுதியதற்காகவே எனது புத்தகத்தை பிரித்து மேய்ந்த நண்பர்களிடம் கற்ற இலக்கிய அரசியலுக்குப் பிறகு, ஆடுமாடுக்குள் அடங்கிக்கொண்டு கிராமத்தையும் ஆடுமாடுகளைப் பற்றியும் அது தொடர்பானதையும்தான் எழுத வேண்டும் என்று ஆரம்பிக்கப்பட்ட பதிவு இது. என் ஆரம்ப பதிவில் இதை கண்டிருக்க முடியும். ஆனால் இப்போது மனமும் எழுத்தும் அதை மாற்றிப்போட்டிருக்கிறது.

அரைமணி நேரமோ/ஒரு மணிநேரமோ ஓசியில் கிடைக்கின்ற இணையத்துக்குள் என்னால் முடிந்தளவுக்கு வாசித்திருக்கிறேன். சில சுவாரஸ்யங்களையும் சுகங்களையும் தந்த அந்த பதிவுகளை அறிமுகப்படுத்துவதில் கொஞ்சம் கர்வமும் இருக்கிறது.

வணக்கத்துடன் ஆடுமாடு.

29 comments:

  1. இந்த வாரம் கனக்க மேயணும்:-))))

    ReplyDelete
  2. டீச்சர், வாங்க வாங்க... நல்லா மேய்ஞ்சிர வேண்டியதுதான்.

    ReplyDelete
  3. வாங்க ஆடுமாடு. வித்தியாசமான உங்க எழுத்துகளைப் போலவே வித்தியாசமானவற்றை அறிமுகம் செய்யுங்கள்.

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. 'ம்ம் ........மே....ஏஏ' ஐ கம் இன் ?
    :)

    ReplyDelete
  5. ஆடுதொடா இலைகள் கூட மாடு தொடும்...அதுனாலே..

    ஆடு பதிவு, மாடு பதிவு..எல்லாம்..கலந்துக் கட்டி அடிங்க..பார்ப்போம்..

    தே..தே...செவலைக் காளை கயித்த அத்துக்கிட்டு ஓடுது..பிடிங்க..பிடிங்க..

    ReplyDelete
  6. நன்றி சுந்தர்ஜி.

    ReplyDelete
  7. ஆடுமாடு நல்லா மேய ஆரம்பிச்சிருக்கீங்க... வலைச் சரத்துல பசுமைக்கு பஞ்சமில்லை... நீங்க மட்டுமே சாப்பிடாம எங்களுக்கும் கொடுங்க...

    ஆமா, ஆட்டுப்பால் குடிச்சா நல்லதாமே?! மகாத்மா கூட ஆட்டுப்பாலை குடிச்சார்னு சொல்றாங்களே நிசமா?

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. கோவி கண்ணன் குசும்பு ஜாஸ்தி...பாத்துக்குங்கு மாடு வெறைக்குது...

    ReplyDelete
  9. //தே..தே...செவலைக் காளை கயித்த அத்துக்கிட்டு ஓடுது..பிடிங்க..பிடிங்க...//

    நீங்க கொஞ்சம் குடையை மடக்குங்கய்யா... மாடு களையுதுலா.

    ReplyDelete
  10. //ஆமா, ஆட்டுப்பால் குடிச்சா நல்லதாமே?! மகாத்மா கூட ஆட்டுப்பாலை குடிச்சார்னு சொல்றாங்களே நிசமா?//

    பைத்தியக்காரன் முதல்ல சிகரெட்டை குடிங்க. அப்புறம் வசதிக்கு ஏற்ப ஸ்காட்ச், ரெமி மார்ட்டின்...இப்படி ஏதாவது தினமும் குடிச்சா மனசம் உடம்பும் ஏறுமாம். எங்க ரெண்டு விட்ட தாத்தா சொல்லியிருக்காரு.

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் ஆடுமாடு
    இருக்கறதிலே இம்சையான வேல இதான்..அனுபவிங்க :)

    ReplyDelete
  12. //இருக்கறதிலே இம்சையான வேல இதான்..அனுபவிங்க//

    அய்யனார் ரொம்ப...நன்றி.

    ReplyDelete
  13. நல்வாழ்த்துகள் ஆடுமாடு - தொடர்க ஆசிரியப் பணியிணை

    ReplyDelete
  14. "வாசிக்க கிடைக்கிற ஏதாவது ஒன்றைப் பொருத்து போதை மாறுகிறது அல்லது ஏறுகிறது"...
    சத்தியமான வார்த்தைகள்... சில சமயம் வாசிப்புக்கள் நம்மடிமீது ஏறி அமர்ந்து வம்பு செய்யும் குழந்தையைப்போல்.. நம்மை வேறு எந்த உலகத்திலும் இருக்கவொட்டாமல் தன்னுள்ளே புதைத்துக்கொள்ளும். ஒத்த அலைவரிசை உள்ள வரிகளை கண்டதும் உவகை பொங்குகிறது.. வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  15. இந்த வாரம் நீங்கதானா ஆடு'மாடு,

    கரெக்ட்டா மேஞ்சிட்டு நேரத்திற்கு வீட்டுக்கு வந்திரணும்... ஆளு இல்ல ஓட்டிக்கிட்டு திரியறத்துக்கு :-).

    வாழ்த்துக்கள், நண்பரே!

    ReplyDelete
  16. அட! ஆடுமாடு அண்ணாச்சியா? அப்ப அட்டகாசம் தான் இனிமே.

    ReplyDelete
  17. ஸ்டாக் சிவா, கிருத்திகா வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி.

    ReplyDelete
  18. //கரெக்ட்டா மேஞ்சிட்டு நேரத்திற்கு வீட்டுக்கு வந்திரணும்... ஆளு இல்ல ஓட்டிக்கிட்டு திரியறத்துக்கு//


    இது உழவு மாடு. வேற எங்கயும் போகாது. தெகா நாட்டுலதான் இருக்கீங்களா?

    ReplyDelete
  19. வெயிலான் ஐயா, தார்க்குச்சியை உள்ள வையுங்க.

    ReplyDelete
  20. கதைகளிலும், படங்களிள் மட்டுமே கிராமங்களை அறிந்த எனக்கு உங்க வலைப்பதிவுகள் மீது ஒரு தனி "கிரேஸ்". கிராமத்தான்
    முகமூடிக்கு பின்னால் நல்ல வாசகன் மற்றும் எழுத்தாளன் இருக்கிறான் என்பது நிச்சயம் :-) யாரூன்னுதான் தெரியலை :-))

    ReplyDelete
  21. இந்த வாரம் உங்க கூடவே வந்து மேஞ்சிர வேண்டியதுதான் ...

    ReplyDelete
  22. //கதைகளிலும், படங்களிள் மட்டுமே கிராமங்களை அறிந்த எனக்கு உங்க வலைப்பதிவுகள் மீது ஒரு தனி "கிரேஸ்".//

    நன்றி ராமச்சந்திரன் உஷா.

    //முகமூடிக்கு பின்னால் நல்ல வாசகன் மற்றும் எழுத்தாளன் இருக்கிறான் என்பது நிச்சயம் :-) யாரூன்னுதான் தெரியலை//

    உங்க நம்பிக்கைக்கு நன்றி. நீங்க நினைப்பதி்ல் உண்மையில்லை. நான் ஆடுமாடுவேதான்.

    ReplyDelete
  23. //இந்த வாரம் உங்க கூடவே வந்து மேஞ்சிர வேண்டியதுதான் ...//

    தருமி ஐயா,

    கொஞ்சம் கடலை புண்ணாக்கு கொண்டு வந்தீங்கன்னா நல்லாயிருக்கும்.

    ReplyDelete
  24. உங்கள் மொழியை வெகுவாக அனுபவித்து வாசிக்க முடிகிறது ஆடுமாடு. தொடர்ந்து நிறைய எழுதுங்கள்.

    ReplyDelete
  25. நன்றி செல்வநாயகி.

    ReplyDelete
  26. ஆடுமாடுக்குத் தான் தராதரம் தெரிந்து மேயத் தெரியும்னு சொல்லுவாங்க.

    அதனால் இங்க வந்து மேயறதில துன்பமில்லை.மகிழ்ச்சியே.

    ReplyDelete
  27. வல்லிம்மா என்னை மறந்துட்டீங்கன்னு நினைச்சேன்.


    வருகைக்கு நன்றி.

    ReplyDelete