இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை!"
இசை என்பது நம் ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதோ ஒரு வகையில் கூடவே இழைந்து வரும் ஒன்று.
தாயின் தாலாட்டில் தொடங்கி இறுதிவரை கூடவே வருவது.
நமது பதிவர்களில் பலர் இந்த ஒரு துறைக்குத் தாங்கள் கொடுக்கவேண்டிய மதிப்பைக் கொடுப்பதில்லையோ எனும் எண்ணம் வரும் அளவுக்கு, உரைநடைப் பதிவுகளை எழுதிக் குவிக்கிறார்கள்...அல்லது அவ்வப்போது மட்டுமே இதைத் தொட்டுச் செல்கிறார்கள்.
ஒரு சிலர் மட்டுமே இது ஒன்றையே, விடாது நமக்கெல்லாம் அளித்து மகிழ்விக்கிறார்கள்.
இங்கு குறிப்பிட்டிருக்கும் பதிவர்களின் பதிவுகள் அத்தனையும் ஒரு இசைக் களஞ்சியம்.
அடிக்கடி வரமாட்டார்கள் என்றாலும் நம்ம ரஜினி ஸ்டைலில் சொல்லணும்னா.. 'லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா' வருவாங்க! அப்படி வரும் போதெல்லாம் இவர்களைக் "கேட்டு ரசிக்க" நான் தவறுவதில்லை.
நீங்களும் ரசித்துவிட்டுச் சொல்லுங்களேன்!
"கானா ப்ரபா":
வேறு சில பதிவுகள் எழுதி வந்தாலும், இவரது கவனம் முழுவதும் இசை மீது மட்டுமே! யாழ் பதிவர் வரிசையில் இவர் வந்திருந்தாலும், இவர் இருக்க வேண்டிய இடம் இதுதான்! இசை மீது தனக்கிருக்கும் ஆர்வத்தை வாய்ப்பு வரும் போதெல்லாம், தெரிவிக்க இவர் தயங்குவதே இல்லை. கர்நாடக இசை தொடங்கி, திரை இசை வரை இவர் தொடுக்கும் இசைமாலைகளை இங்கே சென்று கேட்டு மகிழுங்கள்!
"பெப் சுந்தர்" என்கிற பத்மநாபன் சுந்தரேசன்:
'பாடும் நிலா' திரு. எஸ்.பி. பாலசுப்ரமணியன்!
தமிழ் கூறும் நல்லுலகம் அனைத்தும் அறிந்த ஒரு பெயர்!
தன் கந்தர்வ கானக் குரலால் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மக்களைத் தன் இசை என்னும் இன்ப வெள்ளத்தால் நனைத்து, குளிப்பாட்டி மகிழ்த்தி வரும் ஒரு அற்புத இசைக் கலைஞர்!
இவருக்காக மட்டுமே தன் வலைப்பூவை அர்ப்பணித்து, இவரது பாடல்களைத் தொடர்ந்து அளித்து வரும் 'பெப்' சுந்தரின் சேவை மகத்தானது! பிரமிக்க வைப்பது!
தனக்குப் பிடித்த ஒருவரை மதிப்பது வேறு! அவரை அனைவரும் அறியும்படிச் செய்வது வேறு!
இதனை ஒரு தவம் போலச் செய்து வரும் [இது எப்படி என்பது எனக்கும் தெரியும்!] இவரைப் போற்றி, இவரது பதிவுகள் மூலம், 'மணி'க்குரலோனை இங்கு சென்று கேளுங்கள்!
"CVR"
"CVR" என்கிற புனைப்பெயரில் ஒளிந்து,
உங்கள் முகத்தில் புன்னகை மட்டுமே பார்க்க விரும்பும் ஒரு எளிய நண்பன்!! :) A Simple friend who wants to put a smile in your face!! :)
என ஒரு அப்பாவி போலச் சொல்லி, அடுத்து,
உங்களுக்கு என்னதான்டா வேணும்?? ;-(
என ஒரு அதிரடி கொடுக்கும் வித்தியாசமான பதிவர்.
இத்தனை இளைய வயதில், இசையில் இவருக்கு இருக்கும் புலமை என்னை எப்போதும் அதிசயிக்க வைக்கும்!
ரவி கண்ணபிரான் தொடங்கி, வெட்டிப்பயல் வரை ஒரு பாடலைப் பதிவு செய்ததுமே இவரை அழைத்து "பாருங்க சார்'னு சொல்வதில் இருந்தே இவரது பெருமை புலப்படும்.
இவரை இங்கே சென்று கேட்டு மகிழுங்கள்!
"ரவி கண்ணபிரான்":
'இசை இன்பம்' என்னும் தலைப்பில் ஒரு வலைப்பூ, இவரது பன்முகங்களில் ஒன்று!
இசையில் ஈடுபாடுள்ள மற்றும் சிலரைக் கூட்டு சேர்த்து, இந்தப் பதிவை நடத்தி வருகிறார்!
பலவிதமான இசை அனுபவங்கள் இங்கு உங்களுக்கு கிடைக்கும்!
"ஸிமுலேஷன்':
திரை இசை அல்லது அதை ஒட்டிய இசையையே சொல்லிவரும் இசைப் பதிவர்கள் நடுவே, இவர் ஒரு வித்தியாசமான பதிவர்!
கர்நாடக இசை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று!
இதை ரசிக்கும் "தமிழ்மணப் பதிவர்"களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
இந்த ஒரு சில பதிவர்களை மகிழ்விக்கப் பதிவிடும் இவர், என் மதிப்பில் மிகவும் உயர்ந்தவர்!
இவரது ப்ரொஃபைலுக்கும் சென்று, மேலும் சில வலைப்பூக்கள் மூலம் இவர் ஆற்றி வரும் பணியைப் போற்றி, கேட்டு, மகிழுங்கள்!
மனமிருந்தால், ஒரு பின்னூட்டமும் போடுங்கள்!
"CA. CHANDRASEKARAN ramaswamy" என்கிற "கௌசிகம்"
60 வயது இளைஞர்!
தி.ரா.ச. என பலருக்கும் தெரிந்த ஒரு மிகச் சிறந்ந்த மனிதர்!
அருந்தமிழ் இசைகாக மட்டுமே தன்னை அர்ப்பணித்திருப்பவர்!
இவரது வலைப்பூக்களைப் பார்த்தாலே தெரியவரும், இவருக்கு இசை மீது இருக்கு ஆர்வம் எவ்வளவு என!!
சொல்லித் தெரிவதல்ல இசைக்கலை!
அனுபவிக்கணும்! அனுபவிங்க... இவரது பதிவுகளை!
"யாழ் சுந்தர்"
பாட்டுடைத் தலைவனென்று இவரைக் கடைசியில் வைத்தேன்!
இசை ஒன்றே இவரது மூச்சு!
திரை இசை பற்றி இவருக்கு இருக்கும் காதலைப் பார்க்கும் போது, பொறாமையாக இருக்கும் எனக்கு!
இவரைப் படிக்கப் புகுவதற்கு முன், இதைப் புரிந்து கொள்ளுங்கள்!
வெளிவரவே மனமிருக்காது உங்களுக்கு!
என்றும் மங்காத, எவரும் ஈடு சொல்ல இயலாத டி.எம்.சௌந்தர்ராஜனைப் பற்றிய இவரது பதிவுகள் இனிக்க இனிக்க இன்பம் தருபவை!
எனது இனிய நண்பர் சுல்தான் சொன்னது போல விடுப்பு எடுத்து படிக்கவேண்டிய பதிவர் இவர்!!
எண்டெர் அட் யுவர் ஓன் ப்ளெஷர்!!!!!! [எப்போதும்.... எப்ப வேண்டுமென்றாலும்!!]
என்ன சொல்லிப் பாடிடுவேன்!
மன்னுதமிழ் இசையினையே
தன்னுடைய தவமெனவே
பின்னூட்டம் ஏதும் பாராது
இங்கெமக்கு வழங்கிவரும்
இவர்களது சேவையினை!
இசையென்பது இவர்கள் மூச்சு!
வசை பாடும் பதிவர்க்கு நடுவினிலே
இசை ஒன்றை இசைவாய்க் கொண்டு
தசையினைத் தீ சுடினினும் கருதாது
அசையாது இசைபாடும் இவர் சேவை
இசைவாகப் போற்றிடுவேன் வாழ்க இவரென்று!
இசைமாலை தருகின்ற இவர்களுக்கு
இசைசரம் தொடுத்து வாழ்த்தி வணங்குகிறேன்!
////என்ன சொல்லிப் பாடிடுவேன்!
ReplyDeleteமன்னுதமிழ் இசையினையே
தன்னுடைய தவமெனவே
பின்னூட்டம் ஏதும் பாராது
இங்கெமக்கு வழங்கிவரும்
இவர்களது சேவையினை!////
இதுபோன்ற ஆத்மார்த்தமான பாராட்டுக்கள் எப்பவாவது கிடைக்கும். அது போதும் அவர்களுக்கு!
நேற்று 'யாழ்' இனிது, இன்று 'குழல்' இனிது.
ReplyDeleteஇனிது இனிது தொகுப்பு இனிது,
பின்னிரவு நேரம் ஆகிவிட்டது
இனியாவது தூங்கச் செல்லுங்கள் !
வந்தாச்சே!
ReplyDeleteஇசை இன்பம் வலைப்பூவினை இங்கு மாலையில் சேர்த்துத் தொடுத்தமைக்கு நன்றி SK!
ReplyDeleteதாங்கள் அடியேன் பெயரை மட்டும் அதில் சொல்லி இருந்தாலும்...
அதில் பெரிதும் கலக்குவது என்னவோ நண்பர் ஜீவா, மற்றும் திராச!
பெரிதும் கலக்கியது சீவீயார்! அவர் நேரமின்மையால் இப்போது வலைப்பூவில் இல்லாவிடினும் அவர் பங்கும் மிகப் பெரிது!
கானா அண்ணாச்சியின் றேடியோஸ்பதி என்ற இன்னொரு வலைப்பூவையும் இதில் சேர்த்துக் கொள்ளுங்கள் SK! திரையிசைப் பாடல்களின் ரசனைக் குழுமம் அது!
ReplyDeleteசுந்தரின் பாடும் நிலா பாலு தொன்று தொட்டு இருக்கும் அழகிய வலைப்பூ! எனக்கு மிகவும் பிடிக்கும்!
சிமுலேஷன் - ஒரு நிபுணரின வலைப்பூ...எளிமையோடு கூடிய அருமையான பொக்கிஷம்!
யாழ் சுந்தர் - அடிக்கடிச் செல்வதில்லை! உங்கள் பரிந்துரைக்குப் பின் இனி செல்வேன்! :-))
Hi,
ReplyDeleteFrequently, I used to read many blogs including ur blog too. It is simply superb. Now i need a small favour from you. Few weeks before, i had read someone blog page related to tamil music song which contains blogspot link for downloading AR Rahman songs.
Do you have any idea about that blogspot? If yes. please help me to know the same. I would like to download all AR Rahman mp3 songs.
Cheers,
Kaman
அனைத்து இசைப் பதிவர்களின் பதிவுகளுக்கும் செல்ல ஆசை. சில் பதிவுகள் ஏற்கனவே சென்று வந்தவைதான். மற்றவற்றையும் பார்த்து விடுகிறேன். நன்றி
ReplyDeleteஇவர்களை எத்தனை பாராட்டினாலும் தகும் ஆசானே! நன்றி.
ReplyDeleteகோவி டச் பின்னூட்டம்!
ReplyDeleteஅக்கறைக்கு நன்றி!:))
படிப்பவர்கள் நிச்சயம் நல்ல இசை கேட்க பதிவிற்குச் செல்வார்கள். அதில் இவர்கள் பெயர் இருக்கும். மேலும், இவர்களைப் பற்றி தனியாகவும் குறிப்பிட்டிருக்கிறேனே ரவி!
ReplyDeleteஉரிய இடத்துக்கு நான் பாராட்டை அனுப்பியாச்சு! அதை யாருக்குக் கொடுக்கனுமோ அதை நீங்களும் கொடுத்தாச்சு! கணக்கு சரியாப் போச்சு!
:))
விரைவில் உங்களுக்கு மடல் அனுப்புகிறேன், திரு.காமன்.
ReplyDeleteமற்ற எவருக்கவது இந்த அன்பர் தேடும் சுட்டி கிடைத்தால் இங்கு வந்து சொல்லலாமே!
நன்றி திரு. சீனா அவர்களே!
ReplyDelete