பதிவுலகில் கணினிமுன் அமர்ந்தபடியே உலகம் சுற்றி பார்க்க நமது பதிவர்கள் அழகான படங்களுடன் பயாஸ்கோப் காண்பிப்பதை இன்று காண்போமா ? பயணக்கட்டுரைகள், எழுதுபவருக்கும் இனிமை, படிப்பவர்களுக்கும் இனிமை. உள்ளூர்,வெளியூர் என விரவியிருக்கும் பயணக்கட்டுரைகளில் சிலவற்றை இங்கே சுட்டுகிறேன்.
அருகிலிருக்கும் யாழ்பாணத்திற்கு இன்று செல்லமுடியாதநிலையில், வி ஜே சந்திரன் அவர்கள் தமது அனுபவங்களை யாழ்பாணம்: இரசித்தவையும் இரசிக்க முடியாது போனவையும் என சுட்டுகிறார். யாழ்பாணத்தின் திருவிழாவொன்றிலே கலந்து கொண்ட இன்பம் கிடைக்கிறது நமக்கு. அவரே கனடாவின் வல்மோரின் முருகன் கோவில் பற்றியும் நமக்கு தெரிவிக்கிறார். கனடாவில் அமைதியான ஈழம் போல உள்ளது.
இனி சில பதிவுகளின் பட்டியல்:
கனடாவின் க்யூபெக் மாநிலத்தின் மாண்ட்மொரென்சி அருவி : சினேகிதி
அமெரிக்கா:
கிராண்ட் கன்யான் தேசியப்பூங்கா : நக்கீரன் பரமசிவம்
சிகாகோ: SHEDD AQUARIUM, சிகாகோ - படங்கள் : சிவபாலன்
வாஷிங்டன் - ஒருநகர்வலம் (முதல் பகுதி) கல்யாண மாப்பிள்ளை மு.கார்த்திகேயன்
எழிலின் ஐரோப்பா: எழிலுலா
நார்வே: நாடு நல்ல நாடு - நோர்வே 1 கலை
கிழக்காசியா:
சிங்கப்பூர்: சிங்கப்பூர் சக்கரம் வடுவூர் குமார்
மலேசியா: லங்காவி போகலாம்..வர்றீங்களா? மைஃபிரண்ட்
பாலி : ஒரு புகைப்பட கண்காட்சி எம்கே குமார்
ஆஸ்திரேலியா:
சிட்னி:"Bondi Beach" போனோம்் கானாபிரபா
இவ்வளவு சொன்னபிறகு உலகம் சுற்றும் வாலிபியான துளசி டீச்சரின் பயணக்கதைகளை அனைவருக்கும் தெரிந்தவர் என்று குறிப்பிடாமல் விட்டால் பதிவு முழுமையடையுமா? ஆஸ்திரேலியா: கோல்ட்கோஸ்ட்டில் எட்டுநாட்கள் கிடைச்சா(ல்) என்ன செய்யலாம்? என்று அவர் அடிச்ச லூட்டியைச் சொல்லலாமா? அல்லது நியுசிலாந்து வரலாற்றை கட்டாயக்கல்வியாக்கிய கொடுமையைச் சொல்லலாமா?
நீங்க அங்க போய் செட்டிலாகவும் சொல்லிக் கொடுக்கிறார்: நியூசிலாந்து: பகுதி 68
மண்ணில் மட்டுமா, விண்ணிலும் தொட்டில் கட்டுவோம்...என்று வலைப்பதிவுலகிலேயே முதன்முதலாக பலூனில் பறந்தவரும் அவர்தான். ஆகாயத்தில் தொட்டில்கட்டி........ அவரைத் தொடர்ந்து ஜிரா எனப்படும் ராகவனும் இறக்கைகட்டி பறந்தார் .நான் பறக்கிறேனே மம்மி
என்ன அடுத்துவரும் பண்டிகை விடுமுறையில் சுற்றுலா செல்லத் தயாராகி விட்டீர்களா ? திரும்ப வந்ததும் உங்கள் அனுபவங்களையும் படங்களையும் பகிருங்களேன் !
புனிதவெள்ளி, மிலாது நபி, பங்குனி உத்திரம் மற்றும் ஹோலி கொண்டாடும் அனைவருக்கும் விழாக்கால வாழ்த்துகள் !!
சரம் அருமை எல்லாம் நல்ல பதிவுகள்
ReplyDeleteஹாஆஆஆஆ.....என்ன கொடுமை இது சரவணன்? :-))))
ReplyDelete//நியுசிலாந்து வரலாற்றை கட்டாயக்கல்வியாக்கிய கொடுமையைச் சொல்லலாமா?//
கண்டுகொண்டதுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.
இம்சை:பாராட்டுக்கு நன்றி
ReplyDeleteதுளசி டீச்சர்: மறுமொழி பெட்டிமேலிருக்கும் அறிக்கை எல்லாம் எஸ்சா ?நன்றி நவிலல் தவிர்க்கச் சொல்லியிருக்கிறதே :)
நான் நன்றி சொல்லலாம்,கண்டுகொண்டதை கண்டுகொண்டதற்கு :)