Monday, March 31, 2008

செயல்ப் புயலின் சரம் :)

வலைச்சரத்திற்காக தொடர்பு கொள்வதற்கு முன்பு எப்படியோ .. ஒத்துக்கொண்ட பின் ஏறக்குறைய அனைவருக்குமே வேலைச்சுமை வந்து ஒட்டிக்கொள்வது என்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது. சரி யார் தான் சும்மா இருக்கிறார்கள் அவரவருக்கு அவர் வேலை இருக்கத்தானே செய்கிறது. நந்தா, மூச்சுவிடக்கூட நேரமில்லை அதற்கும் ஒரு ஆளைத்தான் போடவேண்டும் என்ற நிலையிலும் நீள நீள மாக எழுதித்தள்ளிவிட்டார். ஒவ்வொரு சரத்திலும் அவர் இணைப்புகளை கொடுப்பதற்கு முன் நம்மோடு மிகப்பெரிய உரையாடலை நடத்திவிட்டிருக்கிறார்.
சுட்டிகளும் சிறப்பு விமர்சனங்களும் சிறப்பு.. நன்றி நந்தா.
-----------------------------
இந்த வாரம் வலைச்சரம் தொடுக்க இருப்பவர் இம்சை என்னும் பேபி பவனின் அப்பா. இம்சையை பவனின் அப்பா என்றால் தான் சிலருக்குத் தெரியுமாம். அத்தனைக்கு அவர் பதிவில் எழுதுவது குறைவாக இருக்கிறது. எனினும் இவர் "செயல் புயலாக" இருப்பார் என்று தோன்றுகிறது.( யார் யாரோ தானாகவே பட்டமெல்லாம் குடுத்துக்கிறாங்க நல்லது செய்யறவங்களுக்கு குடுத்தா என்ன தவறு ?) இவரது பதிவுகளிலும் நீங்கள் காண்பது பல வித்தியாசமான பொதுநல நிறுவனங்கள் பற்றிய அறிமுகங்கள். "ஃப்ரெண்ட்ஸ் ஆப் சில்ட்ரன்" ஒவ்வொரு குழந்தையிடமும் ஒரு கனவு ; உங்களிடம் அதை நிறைவேற்றும் சக்தி;
என்கிற அமைப்பினை ஆரம்பித்து அவர்களின் குழு தொடர்ந்து இதுவரை 450 குழந்தைகளின் மேற்படிப்புக்கு உதவுகின்றதாம்.

7 comments:

  1. நண்பர் இம்சை என்கிற பவன் அப்பா வெங்கியை ஆசிரியராக்கிய வலைச்சரம்-க்கு ஒரு பெரிய 'ஓ' போட்டுக்கிறேன்.

    ReplyDelete
  2. வாங்க வந்து கலக்குங்க!!

    ReplyDelete
  3. ///மங்களூர் சிவா said...
    நண்பர் இம்சை என்கிற பவன் அப்பா வெங்கியை ஆசிரியராக்கிய வலைச்சரம்-க்கு ஒரு பெரிய 'ஓ' போட்டுக்கிறேன்.
    ////


    நானும் ஒரு பெரிய ஓஓஓஓஓஓஓஓ போட்டுகிறேனுங்க.

    ReplyDelete
  4. பவன் அப்பா வந்து கலக்கோ கலக்குனு கலக்குங்க.

    ReplyDelete
  5. ஒருவாரத்துக்கு நம்ம ஜாகை இங்கனதான்.

    ReplyDelete
  6. சங்கத்து சிங்கம் பவனோட அப்பா இம்சைக்கு வாழ்த்துக்கள். கலக்குங்க சமூக சேவகரே. :))

    ReplyDelete
  7. நண்பரே !! - பவன் அப்பாவே !! வெங்கி,

    ஒரு வாரம் வலைச்சர ஆசிரியராக இருந்து, பொறுப்பை அடுத்தவரிடம் ஒப்படைக்கும் நேரத்தில், வருக வருக என வாழ்த்துகிறேன்.

    பணிச்சுமை - நேரமின்மை - வர இயலவில்லை - வருந்துகிறேன்.

    ReplyDelete