முல்லைப்பூ சிரிக்கையில்
ரசிக்கலாம்
அழகும் நல்மணமும்.
இப்பதிவுகள் படிக்கையில்
ரசிக்கலாம்
நகையும் சுவையும்!
வெட்டிப்பயல் நகைச்சுவைப் புதையலே வைத்திருக்கிறார் தன் பதிவில்..எப்போதெல்லாம் மனம் கனக்கிறதோ..அப்போதெல்லாம் அவர் பதிவுக்குப் போய் வாருங்கள்..
மாதிரிக்கு ஒன்று..கண்ணில் தண்ணீர் வரும் வரை, வயிறு வலிக்க வலிக்கச் சிரிக்கலாம்..
அரை பிளேடு இதெல்லாம் கவிதையாடா என்று கேட்கிறார்..இவர் எழுதியிருக்கும் கவிதைகள் பாருங்கள்..அவர் கதை எழுதுவதுதானே வழக்கம்..
மஹாராஜா 2020 செய்திகள் எப்படி இருக்கும் என்று ஒரு கற்பனை செய்கிறார் பாருங்கள்!
ஒரு யூகமாய் எழுதியிருந்தாலும் இதெல்லாம் கூட நடந்தாலும் நடக்கும்..
உண்மைத்தமிழன் கூறும் தமிழனின் தத்துவங்கள் முற்றிலும் வித்தியாசமானவை..
மெக்கானிக்கல் இஞ்ஜினியர்? சாப்ட்வேர் இஞ்ஜினியர்?
கப்பிபய வ.வா.சங்கத்துக்காக எழுதிய தாரே கோடம்பாக்கம் பர் பதிவு...எத்தனை தடவை படித்தாலும் மீண்டும் மீண்டும் சிரித்துக் கொண்டேயிருப்பீர்கள்..
டுபுக்குவின் கல்யாணம் பதிவு பாருங்கள்..ஒரு கல்யாணத்துக்கு நேரில் போய் வந்தது
போல் உணர்வீர்கள்...கல்யாண வீட்டு உரையாடலில்தான் எத்தனை நகைச்சுவை!
முல்லைப்பூன்னு பேர் பாத்ததும் ஓடி வந்தேன்.
ReplyDeleteஅட்டெண்டென்ச் மார்க் பண்ணிக்கோங்க.
சுட்டிகளை படிச்சுட்டு வர்றேன்.
பாச மலர், நகைச்சுவைச் சுட்டிகள் அனைத்துமே அருமையான இடத்தைக் காட்டுகின்றன. வாழ்த்துகள். கல்யாணம் சூப்பரோ சூப்பர். ஒண்ணு விட்ட அத்தை - சித்திப் பாட்டி - ஹா ஹா ஹா ஹா
ReplyDeleteபுதுகைத் தென்றல், சீனா சார்,
ReplyDeleteநன்கு சிரித்தீர்களா?
சீனா சார், ஒரே நாளில் இத்தனையும் படித்து அசத்திவிட்டீர்கள்..
சோகத்திற்குப் பிறகு நகைச்சுவை. நன்றாகத் தான் உள்ளது.
ReplyDeleteநகைச்சுவையை ரசித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் தமிழ் பிரியன்.
ReplyDeleteசுட்டிகள் அருமை.
ReplyDeleteபூவுக்கும் உணர்வுகளுக்கும் சம்பந்தம் ஏதாவது இருக்குதுங்களா? விளக்கம் கொடுங்களேன்.
நல்ல அறிவியல்பூர்வமான கேள்வி காட்டாறு..இலக்கியப்பூர்வமாகப் பார்த்தால்...நாம சம்பந்தப்படுத்திக்க வேண்டியதுதான்..ஒரு பில்டப்போட பூவாப் போட்டிருக்கேன்...கவிதைக்கு/இலக்கியத்துக்குப் பொய்யழகு..
ReplyDeleteபாசம்ம்ம்ம்ம்...
ReplyDeleteஇம்புட்டுப் பாசம் இருக்கும்னு நான் நினைக்கலியே..?
எப்படிம்மா இதைத் தேடிக் கண்டுபிடிச்ச..?
நன்றி.. நன்றி.. நன்றி..
உண்மைத்தமிழன் சார்,
ReplyDeleteமுன்னாடி ஒரு தரம் படிச்சிருக்கேன்..இந்தப் பகுதி வந்ததும் நினைவு வந்துச்சு..