உங்களுடன் ஒரு வாரம்.வலைச்சரம் தொடுக்க இத்தனை சீக்கிரம் அழைப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. முத்துலட்சுமி, மற்றும் வலைச்சரக் குழுவினருக்கு நன்றி.
வலை வயலில் உழ ஆரம்பித்து மாதங்கள் நான்குதான் ஆகின்றன. அகலத்தை ஓரளவு எட்டியிருக்கிறேன். இன்னும் ஆழங்கள் அதிகம் பார்க்கவில்லை.(வலைச்சரத்துக்காகவும் கொஞ்சம் உழுததில் பார்த்த ஆழம்...யப்பா கண்ணைக் கட்டுகிறது சாமி.)
அறிமுக விளம்பரம்:
இன்னும் அதிகம் எழுதிவிடவில்லை. இருந்தாலும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி என் ஆரம்பப் பதிவுகள்சிலவற்றை அறிமுகம் செய்கிறேன். நெல்லுக்குப் பாயும் தண்ணீர் புல்லுக்கும் கொஞ்சம் பாய வேண்டாமா?
மதம்
ஒன்றுக்கொன்று துணை
உவமைகளில் பொய்யும் மெய்யும்
தனிமையை விரட்டத் தஞ்சம் புகுவது வலைத்தோட்டத்தில்தான். அப்படி நான் வலையில் வளைய வந்த போது எனக்குப் பிடித்த பதிவுகள் சில இச்சரத்தில் இடம் பெறும்.
பதிவர்களின் எழுத்து மற்றும் கருத்து வன்மையால் ஈர்க்கப்பட்டுப் படித்தது, பெயர்களால் கவரப்பட்டுப் பின் தொடர்ந்து படித்தது, பிறர் கொடுத்த சுட்டிகள் சுட்டியதைப் படித்தது,பின்னூட்டியவர்களைப் பின்தொடர்ந்துபடித்தது, வலைச்சரத்துக்காக
வலைவலையாய்,வகை வகையாய் வலைவீசித் தேடியது என்று அனுபவங்கள்
பலவிதம்.
சில பதிவுகள் நீங்கள் படித்தவையாக இருக்கக் கூடும்..எனினும் மீண்டும் தந்திருப்பது என்னைக்கவர்ந்தவை என்பதற்காக, புதியவர்களுக்காக. ஏனெனில் வலைச்சரத்தின் வாலைப் பிடித்துக் கொண்டே சென்றதில்தான் பல பதிவுகள் எனக்கு அறிமுகமாயின. சில பதிவுகள் உங்களுக்குப் புதியதாகவும் இருக்கக்கூடும்.
முடிந்த வரை உங்கள் மனதுக்கு மணம் தரும் சரமாய் அமைத்திட ஆசைதான். பார்ப்போம்.
கேடயக்குறிப்பு:
சரப்பூக்களில் எவ்வளவு மணம் இருக்கிறதோ அதற்கு ஏற்றாற்போல் பரிசு கொடுங்கள்(?!) என்ற நாகேஷ் தருமியின் சாயல் வார்த்தைகளுடன் பூக்கடைக்கு உங்களை அழைக்கிறேன்.
வாங்க..வந்து மதுரைப் பெருமையயைப் பரப்புங்கோ...
ReplyDeleteவலைச்சர ஆசிரியர் ஆனதுக்கு வாழ்த்துக்கள் பாச மலரே.. :)
ஐய்யா.நான் தன் முதல் போனி..
ReplyDeleteஒரு முழம் மல்லி என்ன விலை..
ReplyDeleteநெருக்கமா கட்டினாத் தான் மதுரை மல்லி..
ReplyDeleteஏ..இந்தக் கும்மிப் போதும்மா இன்னும் கொஞ்சம் வேனுமா..
ReplyDeleteபார்த்து கும்முங்க என்றுச் சொன்னால் பார்க்காம கும்முங்க என்றுத் தானே அர்த்தம்..
ReplyDeleteஆஹா..போதும் போதும் டிபிசிடி...நன்றி..
ReplyDelete//பார்த்து கும்முங்க என்றுச் சொன்னால் பார்க்காம கும்முங்க என்றுத் தானே அர்த்தம்//
ReplyDeleteஇப்படி வேறு அர்த்தம் வருமா? எதுக்கு வம்பு..கும்முங்க என்ற வார்த்தையை நீக்கி விடுகிறேன்...
கும்மி அலவ்டா....இருங்க கொஞ்சத்துல வர்றேன்.
ReplyDeleteவலைச்சரம் தொடுக்கும் ஆசிரியர் ஆனதிற்கு வாழ்த்துக்கள், பாச மலர்!!
ReplyDeleteநன்றி..திவ்யா..
ReplyDeletevaalthukal paasamalar,
ReplyDeletekumma porangalam. jaakirtha
கலக்குங்க பாசமலர் ஆண்ட்டி
ReplyDeleteகலக்குங்க பாசமலர் ஆண்ட்டி
ReplyDeleteவலைச்சர ஆசிரியைக்கு வாழ்த்து(க்)கள்
ReplyDeleteTBCD ஐயாவுக்கு ஏன் இந்த கும்மி வெறி :)). பாவம் ஊர்க்காரங்க பயப்படப்போறாங்க பாத்து........
ReplyDeleteவலைச்சரத்தின் இந்த வாரம் பாச மலர்ச்சரம்.
ReplyDeleteபுதுகைத்தென்றல்,தமிழ்ப்பிரியன்,
ReplyDeleteஅதெல்லாம் என் பதிவுக்குதான்...இனிமே கும்ம மாட்டாங்க..
தமிழ்ப்பிரியன், நிலாக்குட்டி, சுல்தான்,
ReplyDeleteவாழ்த்துகளுக்கு நன்றி..
அக்கா நீங்களா??
ReplyDeleteவாங்க வாங்க
வலைச்சர ஆசிரியைக்கு வாழ்த்து(க்)கள்
ReplyDelete//
ReplyDeleteநிலா said...
கலக்குங்க பாசமலர் ஆண்ட்டி
//
செல்லம் மாம்ஸ்க்கு முன்னாடியே வந்துட்டியா!!
//
ReplyDeleteசுல்தான் said...
வலைச்சரத்தின் இந்த வாரம் பாச மலர்ச்சரம்.
//
ஆமாங்க வழுக்காத 'பாச'சரம்தானுங்க!
என்ன சிவா..பாசத்துக்கு அப்படி ஓர் அர்த்தம் சொல்லிட்டீங்க..
ReplyDeleteவாழ்த்துகளுக்கு நன்றி..
//
ReplyDeleteபாச மலர் said...
என்ன சிவா..பாசத்துக்கு அப்படி ஓர் அர்த்தம் சொல்லிட்டீங்க..
வாழ்த்துகளுக்கு நன்றி..
//
ச்சும்மா ஒரு வெள்ளாட்டுக்கு!!
ச்சின்னப்பையன் தப்பு பண்ணா கண்டுக்காதீங்க (காபி ரைட்,டீ,பூஸ்ட், ஹார்லிக்ஸ் ரைட் ரிசர்வ்ட்)
பாச மலர் அக்காவுக்கு வாழ்த்துக்கள்...கலக்குங்கள் ;))
ReplyDelete\\தனிமையை விரட்டத் தஞ்சம் புகுவது வலைத்தோட்டத்தில்தான். அப்படி நான் வலையில் வளைய வந்த போது எனக்குப் பிடித்த பதிவுகள் சில இச்சரத்தில் இடம் பெறும்.\\
ReplyDeleteஅதே...அதே....அப்படியே உங்க கவிதைகளையும் கொடுத்திருக்கலாம் ;))
வாழ்த்துக்கள் பாசமலர்,
ReplyDeleteபாசமலர் எடுத்து-இவ்வார
வலைச்சரம் தொடுத்து-எங்கள்
பார்வைக்கு கொடுத்து...
அப்பப்பா ஏன் இப்படி படுத்துறீங்க...என்பதற்கு முன் ஜூட்...
மலர்,
ReplyDeleteவருகை மட்டும் பதிவு இப்போது
இரு தினங்கள் பணியின் காரணமாக தேனி செல்கிறேன்.
வியாழன் தொடர்கிறேன்
சீனா
நன்றி கோபி..
ReplyDeleteகீழை ராஸா, இந்தப் பகுதிக்கு ஜூட் விட்டாப் பரவாயில்லை..அடுத்த பகுதிகளுக்குப் படித்து விட்டுப் பின் ஜூட்..
சீனா சார்..உங்க சௌகரியம் போல் வந்து படிங்க..இதெல்லாம் சொல்லணுமா..
நான் எப்பவுமே எதிலயும் லேட் தான் மேடம்; ஆனா எதையும் மிஸ் பண்ணினதில்லை.
ReplyDeleteஇதையும் . . .
வாழ்த்துக்கள்.
டிசிபிடி அய்யா, ஏன் இத்தன கொலவெறி! ஊர்ப்பாசமா, நடத்துங்க!!
ReplyDelete//சரப்பூக்களில் எவ்வளவு மணம் இருக்கிறதோ அதற்கு ஏற்றாற்போல் பரிசு கொடுங்கள்(?!) என்ற நாகேஷ் தருமியின் சாயல் வார்த்தைகளுடன் பூக்கடைக்கு உங்களை அழைக்கிறேன்//
ReplyDelete:)))
லேட் ஆனா என்ன ரத்னேஷ் சார்..வந்துட்டிங்கள்ல...
ReplyDeleteவாங்க அபி அப்பா..அதெல்லாம் ஊர்ப்பாசம்தான்..
சென்ஷி..உங்க நாகேஷ் சொன்னதும் புன்னகையா..
ஆகா.. நீங்களா...சூப்பர். கும்பி சூப்பரா நடக்குது போல :D
ReplyDeleteவாங்க ராகவன்..ஆமா.ஆமா..இதுல வந்தது என் பதிவாச்சே..
ReplyDeleteபாசமலர் மேடம்,
ReplyDeleteநீங்கள் தான் வலைச்சரம் ஆசிரியர் என்று டிபிசிடி கூட என்னிடம் சொல்லவில்லை.
:(
வாழ்த்துக்கள் !
:)
நன்றி கோவி கண்ணன் சார்..
ReplyDelete//நீங்கள் தான் வலைச்சரம் ஆசிரியர் என்று டிபிசிடி கூட என்னிடம் சொல்லவில்லை.//
உங்களைக் காப்பாற்றும் நல்ல எண்ணமாக இருக்கலாம்..
ஆகா ஆகா - சுய அறிமுகமா
ReplyDeleteஉவமைகளில் பொய்யும் மெய்யும் அருமை. மொழி மாற்றக் கவிதையில் சொல்லாட்சியின் சிறப்பு பாராட்டத்தக்கது. நல் வாழ்த்துகள்.